Sunday, May 25, 2008

தமிழ் பேச்சாளர்கள்.

சிங்கையில் தமிழ் வாசிக்க வைக்க ஒரு கூட்டம் என்று வைத்து அதற்கு இந்தியாவில் இருந்து பிரபலங்களை கூட்டி வந்து மேலும் மெருகேற்றுகிறார்கள்.அதோடு பேச்சாளர்களையும் உருவாக்குவதிலும் சில இம்மாதிரியான நிகழ்வுகளை நடத்தி மக்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.

மீதியை நகர் படத்தில் காணலாம்.



நன்றி:வசந்தம் சென்ரல்.

Saturday, May 24, 2008

பாதுகாப்பான நடைபாதை

தினமும் இந்த இடத்தை கடந்து தான் வேலைக்கு போக வேண்டிவரும்,அதனால் இங்கு நடைபெரும் வேலைகளை தினமும் கண்காணித்துக்கொண்டிருப்பேன்.இன்றைக்கும், 13 வருடங்களுக்கு முன்பு நான் இங்கு வந்தபோது இருந்த நிலைமையை பார்க்கும் போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

கீழே உள்ள படத்தை பாருங்கள்.



வெவ்வேறு நிலையில் வேலைசெய்யவேண்டி வரும்போது இந்த மாதிரி நடைப்பாதை அமைப்பது தான் வேலையை சுலபமாக செய்ய ஏதுவாகும்.அப்படி வேலை செய்தாலும் செங்கல் மற்றும் வேலை சாதனங்கள் தவறி விழாமல் இருக்க அந்த "Toe Board".

ஓரளவு தூசி மற்றும் சாமான்கள்/ஆட்கள் கீழே விழாமல் இருக்க சுற்றுப்புற வலை.

ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு போக ஏணி.

இவ்வளவும் எதற்கு? இங்கு வேலை செய்ய வரும் பல நாட்டு பணியாளர்களின் நலனை காப்பாதற்கு, அதோடு உலகலவில் சிங்கையின் பாதுகாப்பு தரத்தை உயர்த்தவும் இது உதவும்.

நான் வந்த போது (13 வருடங்களுக்கு முன்பு) இந்த மாதிரி எதுவும் இல்லை,விபத்துகளின் எண்ணிக்கை ஏற ஏற அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுத்து இன்று இந்த நிலைமைக்கு கொண்டுவந்துள்ளது.

இதே மாதிரி சிலவற்றை சென்னையில் சில கட்டுமானத்துறை இடங்களில் பார்க்கமுடிந்தது.

"ழ” வரவில்லை என்றால்??

இந்த ”ழ” தமிழ்நாட்டில் மட்டுமல்ல இங்கும் பலரையும் பழிவாங்குகிறது.கவலை வேண்டாம் அதை திறமையாக சமாளிக்க வழி இருக்கு.

அப்படி வராது என்று தெரிந்தால் எப்படி சமாளிப்பது??

குழந்தையை "Baby" ஆக்கிடவேண்டியது தான்.

கீழே உள்ள சிறிய நகர் படம் ஒன்றை பாருங்கள்.

so,but,because போன்ற வார்த்தைகள் தமிழாகிப்போய்விட்டதால் இதையும் நாம் அதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.




நன்றி:வசந்தம் சென்ரல்

Monday, May 19, 2008

சிங்கையில் நூறு ரயில் நிலையங்கள்.

இன்றைய நிலையில் சிங்கப்பூரில் உள்ள ரயில் நிலையங்களை பாருங்கள்,இதை 2010 க்குள் 100 க்கு மேலாகப்போகிறது.

தொலைப்பேசி மூலம் எடுத்ததால் கை அசைவில் படம் அவ்வளவாக சரியாக வரவில்லை.



அதற்கான கட்டுமானப்பணிகள் வெகு வேகமாக நடந்துவருகிறது.

Sunday, May 18, 2008

இணையம் மூலமே பணம் அனுப்ப..- இந்தியன் வங்கி

இததனை நாளும் சிங்கையில் வாழும் இந்தியர்கள் தாங்கள் பணம் அனுப்பவேண்டும் போது உள்ளூரில் உள்ள பல நம்நாட்டு வங்கிக்கிளைகளுக்கு போய் அனுப்பவேண்டியிருந்தது அதை முறியடிக்கும் விதமாக இந்தியன் வங்கி புதிய முறையை கொண்டுவந்துள்ளது.

IBe Remit

ஆதாவது சில உள்ளூர் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் இணையம் மூலமாக பணம் அனுப்பமுடியும் என்பதே.அதற்கான சேவை கட்டணம் என்னவோ நீங்கள் நேரிடையாக போனால் எவ்வளவு ஆகுமோ அதே தான்.

இதில் நான் பார்த்த வரை நிறைகளை விட குறைகளே அதிகமாக இருக்கு.

1.உச்சபட்ச கட்டணம் 20000 ரூபாய் (அதாவது கிட்டத்தட்ட 700 வெள்ளி).நேரிடையாக போனால் எவ்வளவு பணமும் அனுப்பலாம் இதே சேவைக்கட்டணத்துக்கு.
2.உங்களை ரிஜீஸ்டர் செய்துகொள்ள ரேபிள் பிளேஸ் அலுவலகத்து போகனும்.அரை நாள் விடுப்பு போச்சு.அத்தோடு பாஸ்போர்ட் படத்துடன்.(என்ன பாஸ்போர்ட்டா கொடுக்கப்போகிறார்கள்?).சிங்கையில் வங்கியில் கணக்கு திறக்கக்கூட போட்டோ தேவையில்லை.நம் காலுக்கு நாமே விலங்கு போட்டுக்கொள்வதில் நம்மவர்கள் சிறந்தவர்கள் போலும்.
இப்படி பல இருந்தாலும் வீட்டில் உட்கார்ந்துகொண்டு பணம் அனுப்பலாம் என்பது மட்டும் நிறை.

முகவர் கட்டணம்

இங்கு (சிங்கையில்) வீடு வாங்க / விற்க முகவர்கள் உண்டு அவர்களுக்கு எவ்வளவு சேவைக்கட்டணம் எவ்வளவு கொடுக்கனும் என்று பல விபரங்கள் பல இடத்திலும் இருந்தாலும்,
இந்த நகர் படத்தை பாருங்க,எளிமையாக அதே சமயம் விவரமாக சொல்லியுள்ளார்கள்.

சிங்கையில் புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.




நன்றி: வசந்தம் சென்ரல்

எஸ். ராமகிருஷ்ணன்- சிங்கையில்

போன வாரம் செய்திகள் கேட்டுக்கொண்டு இருக்கும் போது சொன்னது.

இங்கு நடைபெரும் " வாசிப்போம் நேசிப்போம்" நிகழ்ச்சிக்காக சிங்கை திரு ராமகிஷ்ணனை அழைத்துள்ளது.ஜூலை மாதத்தில் அவர் சிங்கை வரக்கூடும். அவரை சில புத்தகங்களை தேர்ந்தெடுத்துக் கொடுக்கச்சொல்லியுள்ளதாகவும் அதில் சொல்லியுள்ளார்கள்.



நன்றி: வசந்தம் சென்ரல்

சிங்கையில் தமிழ் வாசிப்பை பரவலாக்கும் முயற்சிகளில் இவரை மாதிரி பிரபலங்களை இந்தியாவில் இருந்து கூட்டிவந்து இந்த நிகழ்ச்சிக்கு மெருகேற்றுகிறார்கள்.

போன வருடம் திரு சா.கந்தசாமியை அழைத்துவந்து பெருமைபடுத்தினார்கள்.

அந்த நகர்படம் இங்கே..






இம்முறை போகமுடியுமா என்று தெரியவில்லை.போனால் பதிவிடுகிறேன்.

Saturday, May 17, 2008

சற்று முன்

அட!!

ஹூம்!!!!

உணவைத் தேடி

கொஞ்ச நாட்களுக்கு முன்பு யோகன் பாரீஸ் ஒரு பதிவை இங்கு போட்டிருந்தார்.

சற்று முன் இந்த நகர் படத்தை பார்க்கும் போது அது தான் ஞாபகம் வந்தது அதை நீங்களும் பாருங்களேன்.


Searching For Food - For more of the funniest videos, click here

குழந்தைகள் உலகில் நமக்கு இடமில்லை. :-))

Tuesday, May 13, 2008

தடுப்புச்சுவர்

தடுப்புச்சுவர் - இது கட்டுமானத்துறையில் உள்ள ஒரு முக்கியமான வேலை.

சரிவில் வீடு கட்டுவதற்கோ,மண் சரிவை தடுப்பதற்கோ,சாலை,ஆற்றை கடக்கும் இடம் அல்லது ஆற்றின் கரை மேலும் சரியாமல் இருக்க கான்கிரீட் மூலம் தடுப்புச்சுவர் அமைப்பது தான் கடந்த கால வரலாறு.ஆனால் இப்போதெல்லாம் விதம் விதமான முறைகள் வந்துவிட்டது.தமிழ்நாட்டில் இப்போது நடந்துகொண்டிருக்கும் சாலைப்பணிகளை பார்வையிட நேர்ந்தால் பாருங்கள்,செங்கல் சுவர் மாதிரியே கான்கிரீட் பலகை போன்ற அமைப்பில் தடுப்புச்சுவர்கள் கட்டுகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு நண்பர் காண்பித்த கீழ்கண்ட முறை அதிசியக்க வைக்கிறது.எந்த இடத்தில் தடுப்புச்சுவர் கட்டவேண்டுமோ அங்கு கிடைக்கும் மண்ணை வைத்து இந்த மூட்டையில் கட்டி இப்படி அடுக்கடுக்காக வைத்துவிடவேண்டும்,அவ்வளவு தான்.மூட்டைகளுக்கு நடுவே சிறிய பிடிப்பு ஏற்படுத்த இரும்பு வலை ஒன்றைவைத்துவிடுவார்கள்.

இந்த மூட்டை கூட நெகிழி கிடையாது,சுற்றுப்புறத்துக்கு கேடு விளைவிக்காத ஒரு பொருள்.இந்த மூட்டை கருப்பாக இருப்பது பிடிக்கவில்லை என்றால் அதன் மீது செடிகளின் விதைதூவி பச்சையாகவும் மாற்றலாம்.

இங்கு சொடுக்கி அவர்களைப் பற்றிய மேல் விபரங்களை காணலாம்.

எனக்கு கிடைத்த சில படங்களை இங்கு பாருங்கள்.



Friday, May 09, 2008

கடவுச்சீட்டு

கடவுச்சீட்டு இப்படி இருந்தால்.... நன்றாக இருக்கும் அல்லவா? :-)



கடவுச்சீட்டு மேல் படம் இப்படி கிடந்த போது வந்த யோஜனை இது.

Thursday, May 08, 2008

மைக்ரோசாப்டுக்கு ஆப்பு??

கீழே உள்ள நகர் படத்தை பாருங்க



வீட்டில் சும்மாவே இருக்கமாட்டாங்க போல் இருக்கு. :-))

Wednesday, May 07, 2008

குட்டியின் “குறள்”

உணர்ச்சிப் பிரவாகத்தை பார்த்து மகிழுங்கள்.




நன்றி: வசந்தம் சென்ரல்

Saturday, May 03, 2008

காவிரி கரை மீது (3)

ஆமாம் இந்த பீம் எல்லாம் மேலே வைத்து கான்கிரீட் போடுகிறார்களா? இல்லை என்றால் அதை எப்படி மேலே கொண்டு வருகிறார்கள்?

பார்ப்போமா?

இந்த பால வேலை - Design இடத்துக்கு தகுந்த மாதிரியா அல்லது இந்த டிசைன் தான் வேறு இடத்தில் கடைபிடிக்கப்பட்டு ஒன்றும் பிரச்சனையில்லாத்தால் இங்கும் கடைபிடிக்கப்படுகிறதா? என்று தெரியவில்லை.

இன்றைய நிலமையை பார்க்கும் போது கட்டுமான வேலைகள் ஆரம்பித்து 1 வருட காலம் ஓடியிருக்கும் போல் தோனுகிறது.கோடைகாலம் முடியும் வரை ஒப்பந்தக்காரர்களுக்கு பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன்,ஏனென்றால் தண்ணீர் வரத்து இருக்காதல்லவா!!

இந்த பீம்களை - precast முறையில் போட்டு Derrick கொண்டு தூக்கி அந்த தூணின் மேல் உள்ள சின்ன மேடைமீது வைக்கிறார்கள்.

முதலில் இந்த Derrick இரு தூண்களின் மீது இப்படி வைக்கிறார்கள்.



இந்த Derrick ஐயும் அடுத்த தூணுக்கு மாற்றுவதற்கு எளிதாக அதையும் சக்கரத்தின் உதவியோடு தண்டவாளத்தின் மீது வைத்துள்ளார்கள்.இது அந்த கான்கிரீட் பீம்களை மேலே தூக்குவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
கான்கிரீட் மீது உட்காரும் இடத்தில் அதை போல்ட் போட்டு இணைத்துவிடுவார்கள்.கீழே பாருங்கள்.



இப்போது இரு முனையிலும் நிலைநிறுத்திவிட்டதால் இதைக்கொண்டு அந்த பீம்களை பாதுகாப்பாக மேலே கொண்டுபோக முடியும்.

அடுத்த அந்த பீம்களை எப்படி தூக்குகிறார்கள் என்று பார்ப்போம்.

இந்த Derrick க்கு பக்கத்தில் (தரையில் பாருங்கள்) இன்னொரு தண்டவாளம் போட்டிருக்கிறார்கள்.அதன் மூலம் தான் தேவையான இடத்துக்கு அந்த பீம்களை கொண்டுவருவார்கள்.



Derrick யின் மேற்பக்கத்தில் ஒரு சிறிய தூண் தெரிகிறதே அது தான் Hydralic Jack,அதன் மூலம் தான் தூக்குவார்கள்.சரியான உயரத்துக்கு வந்ததும் அப்படியே இழுத்து தேவையான இடத்துக்கு கொண்டு செல்வார்கள்.

கீழே உள்ள படம் தான் பீம்கள் கான்கிரீட் போடும் இடம்.



எல்லாம் சரி தான்... இந்த வேலை எப்ப முடியும்??

தண்ணீர் வருவதற்கு முன்பு பீம் வேலைகள் முடிந்தால் சீக்கிரம் முடிய வாய்புள்ளது,இல்லாவிட்டால் இன்னும் கொஞ்ச நாட்கள்ள்ள்ள்ள்ள்ள் ஆகும்.

Thursday, May 01, 2008

காவிரி நதி மீது (2)

இது பால பீம்களை தாங்கும் சப்போர்ட்கள்



இது கான்கிரீட் போட்டுள்ள சப்போர்ட்கள்.



மேலே உள்ள படத்தில் பல பாதுக்காப்புக்குறைகள் உள்ளன.மேலே வேலை செய்யும் தொழிலாளர்கள் வெளியே தவறி விழ பல வாய்ப்புகள் உள்ளது.அதே போல் த்ரையில் இருந்து மேலே வர அவ்வளவு நீளமான ஏணி கூட சரியான அனுகுமுறை அல்ல.

கீழே உள்ள படத்தில் உள்ளது,பீமும் அதன் சப்போர்ட்டும் நெருக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது.அதென்ன பீமின் கடைசியில் ஓட்டை ஓட்டையாக!!

அது தான் Pre- tension என்று சொல்லப்படுகிற முறை,இதைப் பற்றி ஏற்கனவே ஒரு முறை இங்கு சொல்லியுள்ளேன்.சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால்...

கான்கிரீட் பீம்களிம் அளவை குறைக்கவும் அதிக நீளத்தில் இருக்கவும் உதவுகிறது.



இந்த Pre-tension கேபிள் போகும் duct ஐ இன்னும் கிட்டக்கப்பார்த்தால் கீழே உள்ள மாதிரி இருக்கும்.



கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கினால் இன்னும் பல விஷயங்கள் தரையில் கொட்டிக்கிடப்பதை பார்க்கலாம்.



இன்னும் பார்க்கலாம்...அடுத்த பதிவில்.