நமது VSK ஐயா இதைப்பற்றிய பதிவு போட்ட போது, இன்னும் ஆர்வம் அதிகமாயிற்று.இன்று மெகாவீடியோ வில் தேடு என்று போட்ட போது சிக்கிய வீடியோ இது.பார்த்து மகிழுங்கள்.
அதில் ஏதோ வெள்ளையாக வைக்கிறார்கள் என்னவென்று தெரியவில்லை.பேஸ் மேக்கராக இருக்கலாமோ என்னவோ?
இதை பார்க்கும் போது இளையராஜா இசை போட்ட ஒரு பாட்டு தான் ஞாபகத்துக்கு வந்தது.படத்துடன் இப்பாடலை கேட்டுப் பாருங்கள்.
தவிக்குது தயங்குது ஒரு மனது..
தினம் தினம் தூங்காமலே..
பாட்டு போடலாம் என்று பார்த்தால் கிடைக்கமாட்டேன் என்கிறது.
கானாபிரபா... இந்த பாடல் இருக்கா? (கொடுத்துவிட்டார்,கானாபிரபா- மிக்க நன்றி)
|
இந்த இசையில் பாருங்கள் இதயம் துடிக்கும் ரிதம் இருக்கும்.அதான் இளையராஜா.
6 comments:
அழைத்தமைக்கு மிக்க நன்றி திரு.குமார்.
குறிப்பிட்ட அறுவை சிகிச்சை , இதய பலவீனம்[] ஆனவர்க்கு நிகழும் இடது வெண்ட்ரிக்கிள் வீக்கத்தைக் குறைக்கச் செய்யும் ஒரு முயற்சி.
இதய ஓட்டத்தை நிறுத்தாமலேயே, இது செய்யப்படுகிறது.
இடது வெண்ட்ரிக்கிளில் ஒரு சிறு துளை மூலம் மையோஸ்ப்ளிண்ட்[Myosplint] எனும் இந்த சாதனம் ஒரு பக்கம் வழியாகச் செலுத்த்ப்பட்டு, மறுபக்கம் வழியாக ஒரு எலாஸ்டிக் கம்பி மூலம் வெளிக் கொணரப்பட்டு, இடது வெண்ட்ரிக்கிள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் விரியாதபடி இருக்கச் செய்கிறது.
அந்த வெள்ளைப் பொருள் இந்தக் கம்பி தொய்வில்லாமல் இருக்கச் செய்யும் ஒரு ஸ்டாப்பர்[Stopper].
ventricular shape change by Myosplint implantation என இந்த சிகிச்சைக்குப் பெயர்.
இது ஒரு தாற்காலிக ஏற்பாடு[temporary measure] எனக் கருதுகிறேன்.
இதய மாற்ற அறுவை சிகிச்சை []Cardiac transplant]செய்ய வேண்டியவர்க்கு, மாற்று இதயம் கிடைக்காதவரை, இதயம் மேலும் பலவீனமாகாமல் இருக்கு இது உதவலாம்.
அல்லது, இதய மாற்று சிகிச்சை செய்யமுடியாமல் போனவர்க்கும் கூட இது செய்யப்படலாம்.
மேல்விளக்கம் வேண்டுமெனில் கேட்கவும்.
இது தான் வேண்டும் என்கிறது.
ஒன்று கேட்டால் பத்து கொடுக்கிறார் நம் VSK, மிக்க நன்றி அய்யா.
முன்பு பாடல் இணப்பு கொடுத்தேனே கிடைத்ததா?
Kana Praba
கானா பிரபா
கிடைக்கவில்லை.
என்ன துடிப்பு துடிக்குது பாருங்க.... ம்ம்ம்...
வாங்க காட்டாறு
துடிப்பு,சலனப்படத்திலா? பாட்டிலா?
அந்த சலனப்படத்தில் இல்லாத பின்னிசை பாடலில் கொடுத்துள்ளேன்.
Post a Comment