Tuesday, April 24, 2007

சென்னையில் வலைப்பதிவர்கள்

கடந்த 22ம் தேதியை பலர் பல விதமாக பதிவிட்டதின் தொடர்ச்சி இது.
எழுதப்போவது அதிகம் இல்லாத்தால்... வீடியோவாக கீழே.
நம்மக்கள் யாருக்கேனும் இதில் வருத்தம் இருந்தால்,தயவு செய்து சொல்லவும்.

நன்றி: மக்கள் தொலைக்காட்சி

Friday, April 06, 2007

எனக்கு கிடைத்தது.

நண்பர்களே!!
இத்துனை நாள் என் பதிவுகளை படித்து எனக்கு அவ்வப்போது ஊக்கம் கொடுத்த பல நண்பர்களுக்கு என் நன்றி.
நான் தமிழ்மணத்தில் இணைந்த போது அவ்வப்போது பலர் இங்கிருந்து வெளியேறிக்கொண்டிருப்பதை அதிசியமாக பார்த்தேன்,அதுவே இன்று எனக்கு வந்து விட்டது.
நான் பிறவி எழுத்தாளன் அல்ல.. எனக்கு தெரிந்த சில கட்டுமானத்துறை நிகழ்வுகளை பதிவு செய்யவே வந்தேன்.

இங்கு நிலவும் ஜாதி மற்றும் தனிமனித தாக்குதல் அதற்குள் குடும்பத்தை இழுப்பதும் மிக சாதாரணமாக நடந்து வருகிறது.

கீழே படத்தை பார்க்கவும்.இந்த படத்தை கூட ஏற்றுவதில் எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை இருந்தாலும் அதன் வீரியம் என்னவென்று தெரியவே செய்கிறேன்.

மன்னிக்கவும்.

குழலி வேண்டுகொளுக்கு இணங்கி இங்கு போடப்பட்ட படம் தூக்கப்பட்டது.

எதற்கு இங்கு வரவேண்டும்,இப்படி வாங்கிக்கட்டிக்கொள்ளவேண்டும்?தேவையா என்ற கேள்வி பல காலமாக ஓடிக்கொண்டிருந்தது.இன்று அதற்கு முடிவு வந்து விட்டது.
இது தான் என்னுடைய கடைசி பதிவு.

எனக்கு என்னுடைய பணிகள் அதிகம் இருப்பதால் இதில் என் நேரத்தை இங்கு விணடிக்க விரும்பவில்லை. பயந்து ஓடுவதாக நினைக்கவேண்டும்.எங்கள் பெயர் வரும் இடம் சுத்தமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.அவ்வளவு தான்.

நாளையே தரமாக எழுதும் களம் அமைந்தால் அங்கு எழுதுவேன்.

கட்டுமானத்துறையில் சந்தேகம் இருந்தால் கேட்பவர்களுக்கு தனி மெயிலில் பதிலளிக்கிறேன்.

தமிழ்மணம் தயவு செய்து என் பதிவுகளை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.தனி மெயிலிலும் அவ்வழைப்பை தெரிவிக்கிறேன்.

பல நல்ல பதிவர்களை அறிமுகபடுத்தியதற்கு தமிழ்மனத்துக்கு நன்றி.

DVD Recorder

ரொம்ப நாட்களாக இதன் மேல் ஒரு கண். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கணினி ஷோவில் இதை வைத்து இதன் அருமை பெருமைகளை சொன்னார்கள்.அப்போது இதன் விலை சுமார் 1200 சிங்கப்பூர் வெள்ளி.

2 மாதங்களுக்கு முன்பு இங்கு நடந்த மற்றொறு கணினி ஷொவில் இதையே 599 வெள்ளிக்கு கூவி விற்க ஆரம்பித்ததும்,சரி நாம் பிடிக்கும் நிலைக்கு வந்தது என்று எண்ணி செயலில் இறங்கினேன்.

போன வாரம் முஸ்தாபா மற்றும் ஏல விளம்பரங்கள் பார்த்த போது,பிலிப்ஸ் மாடல் 3360H ஐ ஒருவர் 470 வெள்ளிக்கு கொடுக்க ஒப்புக்கொண்டார்.இத்தனைக்கும் அதனுடன் 1 வருட கியாரண்டி மற்றும் 160GB கொள்ளலவுடன் கூடிய வன்பொருள் (Harddisk).
நம்பக்கூடிய கம்பெனி மற்றும் வன்பொருள் அளவு நமக்கு தேவைக்கு மேல் இருப்பதால்,இதை வாங்கலாம் என்று முடிவு செய்தேன்.

இந்த மாடலைப்பற்றி ஏதாவது யாராவது கம்ளெயின் செய்துள்ளார்களா என்று பார்த்தால்,சுமார் 75% சதவீதம் மக்கள் யூரோப்பில் உள்ளவர்கள் தான் கொடுத்திருந்தார்கள்.இது ஏனோ எனக்குள் உதைத்தது.கொஞ்சம் ஆரப்போடலாம் என்று முடிவெடுத்தேன்.

நேற்று கொஞ்சம் அலுவலகத்தில் இருந்து முன்னமே கிளம்பி, இங்கு நாங்கள் செல்லமாக அழைக்கும் சிங் கடைக்கு போனேன்.சேம்சங் புகைப்பட கருவி 6 Mega Pixel 200 வெள்ளிக்கு தருவதாக போட்டிருந்தார்கள். வாங்கி முன்னோட்டம் பார்த்த போது தேவலை என்று தோனியது மற்றும் பட்ஜெட் உள்ளேயும் இருந்ததால் வாங்கினேன்.இங்கு போட்டுள்ள படங்கள் அதில் எடுத்தவை தான்.

அப்படியெ கடையை அளந்த போது அவர்களிடமும் DVD recorder இருப்பதாகச் சொல்லி 850 வெள்ளி என்றார்கள்.அதில் வெறும் 80GB தான் கொள்ளலவு.வெளி விபரமே தெரியாது போல் இருக்கிறது.நமக்கும் தெரியாவிட்டால் சுமார் 300 வெள்ளி இழக்கவேண்டியது தான்.

வேலை முடிந்ததும் அப்படியே முஸ்தாபாவுக்குப்போய் திரும்பவும் ரெக்கார்டர்களின் பகுதியில் நேட்டம் இட்டபோது இந்த பிலிப்ஸ் மாடல் நன்றாக இருந்தது.விபரங்கள் கேட்டபோது..

1 வருட உலக உத்திரவாதம்,160 GB கொள்ளலவு என்று அடுக்கிக்கொண்டு போனார்.

எனக்கு தெரிந்த ஒரு விஷயத்தை அவரிடம் கேட்டேன்,ஆதாவது இந்த வன்பொருள் அளவு எனக்கு அதைகம் தேவைப்படும் போது,கணினியில் உள்ள மாதிரி வெளியில் வாங்கி மாற்றிக்கொள்ள முடியுமா? என்றேன்.

முடியாது என்றார்.

ஆனால் JVLab என்னும் மாடலில் இந்த மாதிரி செய்யமுடியும் என்று ஒரு ஃபோரமில் படித்தேன்.அதோடில்லாமல் DVD drive ஐயும் மாற்றிக்கொள்ள முடியுமாம்,என்ற மேல் விபரத்தையும் கொடுத்தேன்.

என்னை அவர் அதிசியமாக பார்த்தார்.:-))

அவரை மேலும் கலாய்காமல் கீழே உள்ள மாடலை வாங்கினேன்.(549 வெள்ளி)

சும்மா அட்டகாசமாக இருக்கிறது.
சில அட சமாச்சாரங்கள்.
இதை ஆனில் வைத்துவிட்டால் நீங்கள் வைத்திருக்கும் சேனலில் நிகழ்வுகளை 6 மணிநேர அளவில் சேமித்து வைத்திருக்கும்- தற்காலிகமாக.

நீங்கள் பதிக்கும் நிகழ்வுகளை வன் தட்டிலும் அல்லது வன் பொருளிலும் பதியலாம்,அதை எடிட்டும் செய்யலாம்.விளம்பரங்களுக்கு டாட்டா சொல்லலாம்.வன் தட்டை வேறு பிளேயரிலும் போடலாம்.இப்போது தான் மடிக்கணினியில் முயற்சித்தேன். No Probem.

மேல் உள்ள படம்,அதன் பக்கத்தில் உள்ள பகுதி,இதன் மூலம் உங்கள் Thumb drive மற்றும் வீடியோ கேமராவை Firewire போர்ட்டுடன் இணைத்து தரவிரக்கம் செய்யலாம்.
நம்மூரில் இதன் விலை சுமார் ரூபாய் 23000 என்று அவர்கள் வலைத்தளம் சொல்கிறது.வரி வேறு இருக்கும் என்று தோனுகிறது.
அனுபவிங்க..

Thursday, April 05, 2007

CVR யின் கடத்தல்

நமது சிவியாரின் "பார்க்காத அதிசியங்கள்" பதிவு எப்படி தெரிகிறது பாருங்கள்.



தமிழ் மணத்தையே கடத்திவிட்டாரா?:-)))

இதைச் சொல்ல பின்னூட்டம் கூட தெரியவில்லை,அதனால் இப்படி ஒரு பதிவு.

CVR கோபித்துக்கொள்ளாதீர்கள்.

Wednesday, April 04, 2007

பொட்டிக் கஷ்டம்.

இந்த படத்தை கொஞ்சம் பொட்டி தட்டுகிறவர்கள் பார்த்து உதவுங்களேன்.


இதற்கு முன் இந்த ஜாவா ஸ்கிரிப்ட் உபயோகிக்கும் போது சரியாக மாற்றிய பொட்டி இப்போது
"ம்" என்று அடித்தால் "ம 3021" என்று காண்பிக்கிறது.

என்ன காரணம்?

என்னுடைய ஸ்கிரிப்டில் எங்காவது,ஏதாவது விட்டுப்போயிருக்குமா?

தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கம்.

முடியாவிட்டால்.. இந்த மாதிரி பொட்டி ஏற்படுத்த தேவையான நிரலை அனுப்பவும்.

மிக்க நன்றி.

Sunday, April 01, 2007

அன்கலேஷ்வர்

போன பதிவில் புட்டபர்த்தி வேலை முடிந்ததும்,சென்னைக்கு வரச்சொல்லியதையும் எழுதியிருந்தேன்.
அங்கிருக்கும் போதே என்னுடைய பெயர் மலேசியாவில் அப்போது நடந்துகொண்டிருக்கும் பாலம் கட்டும் பணிகளில் இருப்பதை தொட்டும் தொடாமலும் கசியவிட்டிருந்தார்கள்.
அப்போதெல்லாம் எங்கள் கம்பெனி வெகு சில வெளிநாட்டு வேலைகளே செய்து வந்தார்கள்.அதனால் அங்கு போவதற்கு தேர்ந்தெடுக்கபடுபவர்கள் Hand Pic ஆக இருப்பார்கள்.சில சமயம் தெரிந்தவர்கள் என்ற போர்வையுடன் செல்பவர்களும் இருந்தார்கள்.என்னிடம் நேரடியாக சொல்லாததால் நான் அதைப்பற்றி அவ்வளவாக கவலைப்படவில்லை.முதலில் ஒரு தடவை ரஷ்யா வில் வேலை நடக்கும் போது கேட்டு நிராகரிக்கப்பட்டேன்.வந்தால் வருது,வரவிட்டால் போகுது என்ற மன நிலையில் இருந்தேன்.ரஷ்யா போகலாம் என்ற எண்ணத்தை வீட்டில் சொல்லிய உடன் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டார்கள். இப்போது என்ன நடக்கும்? என்ற பயத்தில் அவர்களிடம் சொல்லவில்லை.

சென்னை வந்து மனிதவள துறைக்கு போன போது தான் விபரங்கள் முடிவானது.கடவுச்சீட்டு மற்றும் ECNR ஐ வாங்கி வைக்குமாறு பணிக்கப்பட்டேன்.அதெல்லாம் ரெடியாக்க ஒரு வாரம் ஆனது.அப்படியும் கிளம்பும் தேதி முடிவாகாகதால் தினமும் அலுவலகம் வந்து போய்கொண்டிருந்தேன்.

ஒரு நாள்,அலுவலகம் போன போது மலேசியா போவதற்கான தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்றும் அதற்குள் முக்கியமான ஒரு வேலை சூரத் பக்கத்தில் உள்ள ஒரு சைட்டில் இருக்கிறது,ஒரு 15 நாள்,முடித்து விட்டு வா என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.அந்த இடம் தான் "அங்கலேஷ்வர்".

அங்கு போவதற்கு முன்பே அதன் தொடர்பில் உள்ள வரைப்படங்களை கொடுத்து படிக்கச்சொன்னார்கள்.இது நான் முன்பே காக்கிநாடா வில் பண்ணியிருந்த சிமினி போன்ற அமைப்பில் இருந்த்து.

காகிநாடாவில் வேலை செய்யும் போதே அதன் சிஸ்டத்தை மேம்படுத்த முடியும் என்று கணக்கு போட்டுவைத்திருந்தேன். இந்த மாதிரி வேலை இனிமேல் எங்கு செய்யப்போகிறோம் என்ற எண்ணத்தினால்,அதை யாரிடமும் சொல்லவில்லை.

இப்போது அதற்கு அடித்தது சான்ஸ்.

வரைபடத்தை பார்த்ததும்,என்னுடைய எண்ணத்தை அந்த சிஸ்டத்தின் முதன்மை அதிகாரி,திரு.நடராஜனிடம் சொன்னேன்.அவரும் அதை அக்கக்காக ஆராய்ந்துவிட்டு,சரி முயற்சிக்கலாம் என்றார்.

இது ஒரு Float Glass தொழிற்சாலை,இதில் ஒரு சிமினி வேலை ஆரம்பித்து போய் கொண்டிருக்கிறது.அது போகும் வேகத்தை பார்த்தால் அது மொத்த பிராஜக்ட்டை கிழே இழுத்துவிடும் போல் இருக்கிறது என்றும் அதன் பொறியாளருக்கு முன் அனுபவம் இல்லாத்தால் வேலை போவதில் சுணக்கம் என்று சொல்லி என்னை அனுப்பிவிட்டார்கள்.

வண்டி ஏறி அங்கலேஷ்வர் வந்தேன்.அறை வசதியில்லாத்தால் பக்கத்தில் உள்ள லாட்ஜில் வாசம்.

முதல் நாள் அப்படி இப்படி என்று ஓடியது.மறுநாள் காலை எழுந்த போது....

இது ஊர் தானா? இங்கு எப்படி மக்கள் வாழிறார்கள் என்று தோனிற்று.

மீதி அடுத்த பதிவில்.