ஒன்னும் பெரிசா வேலை இல்லை என்னும் போது வீட்டு மாடியில் என்னென்ன பயிரிடலாம் அல்லது எப்படி மேம்படுத்தலாம் என்று இணையத்தில் மேய்ந்துகொண்டிருப்பேன் அல்லது பொதிகை மற்றும் மக்கள் தொலைக்காட்சி பார்பேன். ஒரு நாள் மக்கள் தொலைக்காட்சியில் ஒருவர் அவர் வீட்டு மாடியில் பயிர் வளர்ததையும் அதற்கு தேவையான விதைகளை அண்ணா நகரில் உள்ள தோட்டக்கலை வாரியத்தில் வாங்கியதாக சொன்னார்.அட! அண்ணா நகர் என்றால் பக்கத்தில் தானே என்று இணையத்தில் முகவரி எடுத்துக்கொண்டு கூகிள் எர்த் மூலம் இருப்பிடத்தையும் மனதில் வைத்துக்கொண்டு கிளம்பினேன். இணையத்தில் உள்ள முகவரிபடி சென்றால் அது வேறெங்கோ போனது பிறகு குறிப்பெடுத்து போன தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அவ்விடத்தை அடைந்தேன்.
நான் போன போது அங்கு சுமார் 30 பேர் ஒரு அறையில் இருந்தார்கள் அவர்களுக்கு ஒருவர் மண்வளம் மற்றும் பயிரிடும் முறை பற்றி சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார்.விஜாரித்த போது இதே மாதிரி பல நிகழ்வுகளை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என்று தெரிந்தது.விபரங்கள் அவர்கள் இணைய பக்கத்தில் உள்ளது.தொலைப்பேசி மூலமும் விபரங்கள் பெற்றுக்கொள்ளலாம்.உங்கள் சௌகரியத்துகாக கீழே படத்தில் அவர்கள் இருப்பிட முகவரியை கொடுத்துள்ளேன்.
விதைகள் பற்றி கேட்டவுடன் பக்கத்தில் உள்ள ஒரு அறைய காட்டினார்கள்.ஓரமாக ஒரு இடத்தில் போட்டு வைத்திருந்த விதைகளை காட்டினார்கள் அதிலிருந்து எனக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டேன்.
இவ்விதைகளுக்கு Expiry Date உள்ளது அதனால் அதற்குள் உபயோகிக்க வேண்டும்.

அசல் விவசாயிக்கு வேண்டிய வேறு சில விபரங்கள் அட்டையின் பின் பக்கத்தில் போட்டுள்ளார்கள்.எனக்கெல்லாம் புரிபட இன்னும் சில காலம் ஆகலாம்.
8 comments:
எங்கள் ஊரிலும் இந்த சேவை தற்போது சிறிது சிறிதாக 'வளர' ஆரம்பித்துள்ளது...
வாங்க திண்டுகல் தனபாலன்,கேட்கவே சந்தோஷமாக இருக்கு.
எனக்கும் ஆசை மொட்டை மாடியில் செடி வளர்க்கணும்னு ஆசை.
வீட்டில் மற்றவர்களிடம் அப்ரூவல் கிடைக்கல.
உங்கள் தோட்டம் வளர என் ஆசிகள்.
நன்றி வல்லிசிம்ஹன் அவர்களே.
antha inayathala mugavariyai sollunga nanba
Entha inayathalam Karthi?
Arumai vaduvur kumar
Thanks flutebala.
Post a Comment