Wednesday, January 16, 2013

ஒரு விபத்து நடக்க காத்திருக்கிறது.

ஓரிரவு எங்கள் குடியிருப்பில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது பக்கத்தில் உள்ள கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதியை காண் நேரிட்டது.சமீபத்தில் அதன் ஒரு பகுதியை மேலும் ஒரு Floor அதிகப்படுத்தியிருந்தது தெரிந்தது ஆனால் என் பார்வையோ கீழே உள்ள பீம் மீதும் அதன் முகப்பில் ஏற்பட்டிருந்த வெடிப்பும் மீதும் இருந்தது

Beam யில் அதுவும் அதை தாங்கும் தூணுக்கு அருகில் என்றாம் அது அபாயகரமானது.இரவு நேரம் என்பதால் என்னுடைய ஆராய்சியை பகலுக்கு ஒத்திப்போட்டேன்.மறு நாள் காலை பார்த்த போது அதன் வீரியம் தெரிந்தது.நிலமை மோசம் என்று புரிந்தது ஆனால் உடனடியாக அல்ல.

 மேலே உள்ள படத்தில் தூணுக்கும் பீமும் இணையும் இடத்தில் இருக்கும் 45 டிகிரி கோண வெடிப்பை பாருங்கள்.இவ்வெடிப்பு அக்கட்டிடத்தின் மேற்பகுதி நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கும் போது ஏற்பட்டிருக்க கூடும்.நம்மூரில் இப்படி நீட்டிப்புக்கு அனுமதி பெற வேண்டும் அதெல்லாம் செய்தார்களா என்று தெரியவில்லை அப்படியே செய்திருந்தாலும் ஏற்கனவே இருந்த கட்டிடத்தில் உறுதித் தன்மையை சோதித்தார்களா என்று தெரியவில்லை.

வண்ண பூச்சு செய்தாத பகுதி தான் நீட்டிக்கப்பட்டது.

இதுமட்டுமல்ல சென்னையில் இப்படி பல கட்டிடங்கள் இப்படி யார் கண்காணிப்பும் இல்லாமல் நீட்டிக்கப்படுகின்றன.ஏதாவது ஒரு பெரிய விபத்து ஏற்பட்ட பிறகு அதைப் பற்றி சில நாட்கள் பேசிவிட்டு அதற்கடுத்த பிரச்சனையை ஓடிவிடுகிறோம்.

இந்த மோசமான நிலமையை பார்த்ததும் மனது கேட்காமல் பக்கத்து கட்டிடத்தின் நிர்வாகியிடம் போய் நிலமையை விவரித்து அவர்களுக்கு தெரிந்த கட்டுமான பொறியாளரை கேட்டு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்,செய்வார்களா என்று தெரியவில்லை.நான் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர்களுக்கு தெரிந்த வரையில் அந்த ஓரத்தில் தாங்கும் தூண் இல்லை அதை போட்டுவிடலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஆண்டவன் விட்ட வழி.

5 comments:

 1. மிக நல்ல காரியம் செய்தீர்கள்.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 2. தில்லியில் நேற்று ஒரு ஐந்து மாடிக் கட்டிடம் சாயத் துவங்கி இருக்கிறது. என்று விழுமோ தெரியாது....

  பல கட்டிட உரிமையாளர்கள் விதிமுறைகளைப் பற்றிய கவலையோ, கட்டிடங்களின் தாங்கும் திறன் பற்றியோ கவலையில்லாது பணம் வந்தால் போதும் என செயல் படுகிறார்கள்.. என்று மாறும் இந்நிலை!

  ReplyDelete
 3. வாங்க வெங்கட் நாகராஜ்,அந்த 5 மாடி கட்டிடத்தை இடித்துவிடுவது தான் நலம்.
  நிலம் யாருடையது என்பதை நிரூபிக்கவே தகினத்தோம் போட வேண்டியிருக்கு இதில் கட்டிட விதிமுறையெல்லாம் காற்றில் விட காரணமா கிடைக்காது?
  ஒரு உதாரணம் போதும்..மார்ச் 31 2012 கடைசி நாள்,காரில் உள்ள அவ்வளவு ஸ்டிக்கரை (sun film)எடுக்க ஆனால் இன்று சாலைகளில் பல வண்டிகள் இதை பொருட்படுத்தாமல் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் அதையும் அரசாங்கம் பார்த்துக்கொண்டு தான் இருக்கு.இப்படி பல உச்ச நீதிமன்ற உத்தரவுகளே முழுமையாக அமல்படுத்த முடியாமல் இருக்கு.

  ReplyDelete
 4. இதோ தானே' யில் ஏழு மாடியே இடிந்திருக்கிறது.பகவான்தான் காப்பாற்றணும்.

  ReplyDelete
 5. கட்டுமானத்தில் ஒரு கட்டுப்பாடு வேண்டும் இங்கு.நன்றி வல்லிசிம்ஹன்.

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?