Monday, January 16, 2012

தரமான கட்டுமானம்- ஸ்ரீராம் சங்கரி

சில வருடங்களாகவே ஒரு வீடு என் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி தேடிக்கொண்டிருக்கிறேன், இது வரை சரியாக அமையவில்லை.வளசரவாக்கம்/வடபழநி/விருகம்பாகம் வீடுகள் சுமார் 6000 முதல் 8000 வரை ஒரு சதுர அடிக்கு கேட்கிறார்கள்.லோக்கல் வீடு கட்டுபவர்கள் செய்யும் வேலை பார்த்து அவர்கள் பக்கம் போவதையே நிறுத்திவிட்டேன்.வீட்டு இடத்துக்குள் இருக்கும் ஆக்கிரமிப்பை தவிர்த்து வீட்டு முன்புறம் வண்டி ஏறுவதற்காக சாலையை ஆக்கிரமிப்பு பணியை நிறைவாகவே செய்கிறார்கள்.இதையெல்லாம் யாராவது கண்காணிக்கிறார்களா அல்லது தெரிந்தே விட்டுவிடுகிறார்களா என்று தெரியவில்லை.ஆக்கிரமிப்பு என்ற ஒரு வார்த்தையை வைத்தே ஒரு பெரிய வால்யூம் புக் போடலாம், அதுவும் சென்னையில்.

பின்புலம் இப்படி இருக்க, அடிக்கடி வானொலியில் இவர்களின் விளம்பரம் கேட்க கேட்க, சரி போய் பார்த்தால் என்ன என்ற முடிவு எடுத்து அதுவும் போன வாரம் தான் போக முடிந்தது.GST சாலையில் பல  துணை சாலைகள் இருந்தாலும் கூடுவாஞ்சேரியில் இருக்கும் சாலைக்கு பெயர் எதுவும் கண்ணில் படாததால் சிறிது திணறி பயணித்தோம். சுமார் 4 கி.மீட்டர் பயணிந்த பிறகு இவர்களின் கட்டுமான இடத்தை அடைந்தோம் . G+4 முறையில் அமைந்த 3 கட்டிடங்கள் கான்கிரீட் முடிந்த நிலையில் சுற்றுச்சுவர்கள் வேலை நடந்துவருகிறது.கட்டுமான இடத்திலேயே Batching Plant அமைத்து கான்கிரீட் போடுவதால் குறை எதுவும் கண்ணில் படாமல் அட்டகாசமாக இருந்தது.தாங்கும் தூண்கள் கூட நேர்த்தியாக வரிசையில் இருந்தது.இவ்வளவு நாள் பல கட்டுமான வேலைகளை பார்த்திருந்தாலும் இவர்களின் Finish மிக அருமையாக இருக்கிறது.கட்டுமான வேலைகளை இவர்கள் நேரடியாக மேற்கொள்ளாமல் ஒரு துணை நிறுவனத்திடம் கொடுத்துள்ளார்கள்.Middle East நிறுவனம் என்று சொன்னதாக ஞாபகம்.

அங்கிருந்த முகவர் எங்கள் விவரங்களை கேட்ட பிறகு மாதிரி வீட்டை காண்பிக்க அமைத்துப்போனார்.ஒரு ஏரிக்கு பக்கத்தில் இருந்ததால் எல்லோருக்கும் ஏற்படும் சந்தேகம் போல் எனக்கும் எழுந்தது. மழை காலத்தில் ஏரி தண்ணீர் எங்கு போகும் என்று கேட்டேன். சமீபத்தில் ”தானே” புயல் கொண்டு வந்து கட்டிய மழையில் இதன் விளைவு தெரிந்திருக்குமே என்று கேட்டேன். நிலம் மேட்டுப்பகுதியில் இருப்பதாலும் இதன் கீழ் பகுதியில் இன்னொரு ஏரி இருப்பதாலும் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்றார்கள்.

ஒரு Model House, 3 அறை வீடுக்குள் அழைத்துப்போனார்கள்.வெளிவெளிச்சம் நன்றாக நுழையும் அளவுக்கு வீடுகள் இருந்தன.வீட்டு விலையை கேட்ட போது,சதுர அடிக்கு 2150 ரூபாய் என்றும் மற்ற செலவுகளை கூட்டினால் 2500 வரும் என்று சொன்னார்.கூடவே கிளப் ஹவுசும் நீச்சல் குளமும் வரப்போவதாகவும் பிற்காலத்தில் நல்ல தங்கும் இடமாகவும் விளங்கும் என்ற விளக்கமும் சொல்லப்பட்டது.தற்போதைக்கு பள்ளிக்கூடமும்,மருத்துவனையும் பக்கத்தில் இல்லை.மக்கள் அதிகம் வந்தால் இவையெல்லாம் தன்னால் வந்துவிடும் என்று நம்பலாம்.இப்போதைக்கு முதல் Phase ஐ வரும் ஜூன் மாதம் முடியப்போவதாகவும் அடுத்த Phase இரண்டு வருடம் ஆகும் என்றார்கள்.மற்ற விவரங்களுக்கு இங்கு போய் பாருங்கள்.

புது வீடுக்காக 95% விழுக்காடு பணத்தை கட்டிய பிறகும் கடைசி 5% பணத்தை மட்டும் விட்டு வைத்துவிட்டு வீட்டை Handing Over பண்ண வருடக்கணக்காகும் நிலை போய், வீட்டை கட்ட கட்ட நம்மிடம் பணம் கறக்கும் காலமும் போய் கட்டியவீடுகள் பணம் கட்டிய உடன் கிடைக்கும் வீடுகள் சந்தையில் வர ஆரம்பித்திருப்பது இப்போது தான். இது கட்டுமானத்துறையின் வீழ்ச்சி என்றாலும் மற்ற நகரங்களை விட சென்னையில் வீடுகள் விற்பனை ஆகாவிட்டாலும் விலையை மட்டும் யாரோ தாங்கிப்பிடிக்கிறார்கள்.


கூடுவாஞ்சேரி பக்கத்தில்  இருக்க ஆசைப்படுபவர்கள் இந்த கட்டுமானத்தொகுதியை நேரில் பார்த்து முடிவு செய்யலாம்.

பின்குறிப்பு: நான் இவர்களுக்கு முகவர் அல்ல, அவரவர் தேவையை கருத்தில் கொண்டு முடிவு செய்துகொள்ளவும்.

12 comments:

sury siva said...

From purely an investment angle, this proposition is good, but not from the angle of living. I had considered this even when Shriram properties started the proposal, but you need good infrastructure in and around to live in.
no doubt, this area may develop in the next ten years time, when there might be good roads, markets, emergency hospitals, and a few schools around, and at least autos ply.
For the present, only those who own a couple of cars, one for their use, and another for their family, can think of this proposal.
This is my humble view.
subbu rathinam.

வடுவூர் குமார் said...

நிச்சயமாக.உங்கள் யூகம் சரி தான்.10 வருடங்களுக்குள் வரும் என்றால் கட்டிடம் 10 வருடம் பழையது ஆகிவிடும்.
இப்போது அந்த வெள்ளை ஷேர் ஆட்டோ ஓடுகிறது.
இந்த பக்கம் இப்படி ஓடுகிறது என்றால் OMR/ECR பக்க சாலைகளிலும் இக்கதை தொடருகிறது.
என் நிறுவனத்தில் ஒருவர் L&T-Estansia வில் வீடு வாங்கி இப்போது வாடகைக்குகூட விடமுடியவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.பல இடங்களில் Investment என்ற பெயரில் பலரும் வாங்கிக்தள்ளிக்கொண்டி இருக்கிறார்கள்.

வசந்தவாசல் அ.சலீம்பாஷா said...

கூடுவாஞ்சேரி-திருப்போரூர் சாலையில் பெருமாட்டுநல்லூரில்தான்.. ஸ்ரீராம் சங்கரிக்கும் அருகில், பட்டேல் நகரில் சமீபத்தில் ஒரு இடம் வாங்கியிருக்கிறேன். நான் துபாயில் இருந்துக்கொண்டு நன்பர் மூலமாக இடம் வாங்கியதால், இன்னும் போய் பார்க்கவே இல்லை. நீங்கள் பதிவெழுதியப் பின்னர்.. இடத்தை நேரில் கண்ட மகிழ்ச்சி எனக்கு! நன்றி!!

வசந்தவாசல் அ.சலீம்பாஷா said...

கூடுவாஞ்சேரி-திருப்போரூர் சாலையில் பெருமாட்டுநல்லூரில்தான்.. ஸ்ரீராம் சங்கரிக்கும் அருகில், பட்டேல் நகரில் சமீபத்தில் ஒரு இடம் வாங்கியிருக்கிறேன். நான் துபாயில் இருந்துக்கொண்டு நன்பர் மூலமாக இடம் வாங்கியதால், இன்னும் போய் பார்க்கவே இல்லை. நீங்கள் பதிவெழுதியப் பின்னர்.. இடத்தை நேரில் கண்ட மகிழ்ச்சி எனக்கு! நன்றி!!

வடுவூர் குமார் said...

அப்படியா சலீம்பாஷா? சீக்கிரம் வீட்டையும் கட்டிவிடுங்கள்.வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

வடுவூர் குமார்,

நலமா, உங்க வேடந்தாங்கல் பதிவு முன்னரே பார்த்தேன், கமெண்ட் அப்புறம் போடலாம்னு நினைச்சு தள்ளிப்போய்டுச்சு. நீண்ட நாட்களாயிற்று பார்த்து.

ஷ்ரிராம் சங்கரிக்கு கொஞ்சம் முன்னாடி தான் நான் இருக்கேன். நீங்க போன ரோட் நேரா திருப்போருர் போகுது. நந்திவரம் ரோட்னு சொல்வாங்க. நானும் ஷ்ரிராம் போய்ப்பார்த்தேன். அவ்ளோ தூரம் உள்ள இருக்க ஃப்ளாட் மொத்த விலை 42 லட்சம் வருது. 1450 ச.அ. சூப்பர் பில்ட் அப் ஏரியா, கார்பெட் ஏரியா 1000 ச.அ. தான் வருது. அந்த ஏரியாவுக்கு அந்த விலை அதிகம்.இதுக்கே அந்த ரோட்டில் கூட இல்லை உள்ள 500 மீட்டருக்கு மேல தனி ரோட் போட்டு இல்ல சைட் இருக்கு.

ஜி.எஸ்.டி லவே இருக்கும் ஃப்ளாட் எல்லாம் 50 கு மேல சொல்றாங்க. அந்த பகுதி எல்லா ஃப்ளாட்டும் போய்ப்பார்த்துட்டேன், எதுவும் மிடில் கிளாஸ் மக்களுக்கு கட்டுப்படி ஆகாது.

10-12 ஃப்ளாட்ஸ் இருக்கும் சின்ன அபார்ட்மெண்ட்களில் தான் விலை கம்மியா இருக்கு. இப்போ அப்படியான இடத்தில் தான் இருக்கோம். கொஞ்சம் வாக் போற இடம் இருப்பது போல பார்க்கலாம்னு பார்த்தா விலை எங்கேயோ சொல்றாங்க.இடம் வாங்கி கட்டுவது தான் சரியா வரும் நினைக்கிறேன்.ஒரு கிரவுண்ட் 10-12 லட்சம் சொல்றாங்கனு கேள்விப்பட்டேன்.

அதே ரோட்டில் கன்னிவாக்கம் எல்லாம் நிறைய வீட்டு மனைகள் தான். மாநகரப்பேருந்து, மினி பஸ், ஷேர் ஆட்டோ எல்லாம் போகுது அந்த ரூட்ல. ஒரு பொறியியல் கல்லூரி, நிறைய தொழிற்சாலைகள் எல்லாம் இருக்கு அங்கே.

வடுவூர் குமார் said...

அட! ரொம்ப நாள் கழித்து உங்கள் வருகை. நலமா?
முன்னமே தெரிந்திருந்தால் உங்களையும் பார்த்திருக்கலாம்.
வீட்டுமனை வாங்கி கட்டுவது நல்லது தான் ஆனால் அதிலும் சில சிக்கல்கள் இருக்கு. போன 26ம் தேதி Exotic Ave என்று ஒரு விளம்பரம் வந்தது, முக்கால் கிரவுண்ட் 35 லட்சம் என்று சொன்னார்கள்.முக்கிய சாலையில் இருந்து ஒரு குறுகிய சாலைக்குள் போகிறது.சாலையை விட பள்ளத்தில் மனை உள்ளது. மழைத்தண்ணீர் எங்கு போகும் என்று தெரியவில்லை ஆனால் அதிலும் 3 வீடுகள் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.நிலத்தண்ணீர் கடுமையாக இருக்கும் என்று கேள்வி.

Unknown said...

Even if we buy land and build.. how to find a building contractor. i guess now the cost per sq is around 900 to 1200. But there are some practical problems in going in this route. will be grateful, if you can cover that as well.
rgds/surya

வடுவூர் குமார் said...

கட்டுமான செலவு அவ்வளவு தான் ஆகும் ஆனால் தரமான குத்தகையாளர் கிடைப்பது தான் குதிரை கொம்பாக இருக்கும்.
சென்னை வந்த பிறகு கட்டுமானத்துறையின் அவலங்கள் இன்னும் அதிகமாக தென்படுகின்றன இதுவே ஒரு முடிவை எடுக்க கஷ்டமாக இருக்கு.
இப்பகுதியில் தென்படும் மேலும் சில கஷ்டங்களை கேட்டறிந்து சொல்ல முயற்சிக்கிறேன்.

THINGALG said...

namaskar.i am thingalg from guduvanchery. seen your comments about sriram shankari. whatever u told they are correct. i want to tell some of my view about this, presently this area land cost is around Rs.1000 to 1300/sq.ft if you purcahse half ground land maximum cost around 16 lakhs and if you construct 1000 sq ft building, construction cost may go around to the maximum of 15 Lakhs. total costing will be around 31 Lakhs. if you want to go for maximum loan then you should go through some builder. he will be cahrging interest, tax which is to be paid by him and 10 to 20 % profit. even these all comes around 11 lakhs then for 42 lakhs you will get a individual house. this is my individual view. Kindly think and decide. gtpp@in.com

வடுவூர் குமார் said...

உங்க கணக்கு எல்லாம் சரிதான் ஆனால் சென்னையில் கட்டும் பெரும்பாலான குத்தகைக்காரர்களின் தரம் மிக மிக தாழ்ந்த நிலையில் உள்ளது. சாதாரண மக்களுக்கு இது தெரிய ஞாயம் இல்லை.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

hi . kumar. i ve booked 3 BK at shriram