ஒரு சில வாரங்களாகவே மகிழுந்துவில் நெடுந்தூரம் செல்லாமல் இருந்ததை நிவர்த்தி செய்யும் விதமாக காலையில் முடிவு செய்து மதியம் 2.50க்கு வீட்டை விட்டு கிளம்பி மத்திய கைலாஸ் வழியாக சென்று கிழக்கு கடற்கரை சாலை மூலம் மாமல்லபுரம் போனோம்.சுமார் 1.45 மணி நேரம் ஆனது.மிக மோசமான சாலை என்று சொல்ல முடியாவிட்டாலும் அபாயகரமான சாலை என்றே சொல்லலாம்.இம்முறையில் இரண்டு முறை மாடுகளை இடிக்கப்பார்த்தேன் நல்ல வேளை தப்பித்தேன். சாலை தடுப்பு என்ற முறையில் அங்கங்கே கம்பி போர்ட்டுகளை வைத்திருப்பது வேகத்தை கட்டுப்படுத்தினாலும் ஒருபக்க வாகனங்களை மற்றொரு பக்க வாகனம் கவனித்து வழிவிட்டாலொழிய அவ்விடமும் விபத்து ஏற்படுதக்கூடிய நிலையிலேயே தான் உள்ளது.
பின்காலை பொழுதிலேயே சிறிதாக தலைவலி ஆரம்பித்திருந்தாலும் வெளியில் போனால் சரியாகிவிடும் என்று நினைத்ததற்கு நேர் எதிராக சதிராட்டம் போட்டது.சிற்பங்களை அனுபவித்து பார்க்கவிடாமல் கவனத்தை சிதரடித்தது.நாங்கள் பார்த்த சில படங்கள் உங்களுக்காக...
கடற்கரை கோவிலை பார்ப்பதற்கு முன்பு குளிர் ஜூரம் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதாலும் ஒரு வழிச்சாலை என்று திருப்பித்திருப்பி ஒரே சாலையில் பயணித்த வெறுப்பும் கூடியதால் அதை பார்க்கமாலேயே வெளியேறினோம்.
வண்டியில் எனக்கு குளிர மனைவிக்கு வேர்க்க மாற்றி மாற்றி குளிர்விப்பானை போட்டு கிண்டி வந்த நேரத்தில் தொண்டை வரை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த வாந்தி பக்கென்று வெளியே வந்தது.அவசரமாக வண்டியை ஓரம்கட்டி பார்க்கிங் விளக்கை போட்டுவிட்டு வெளியே ஓடி தலையை பிடித்து கொஞ்சம் கொட்டிவிட்டு மறுபடி வண்டியை எடுத்து வீட்டுக்கு வந்தோம்.
4 comments:
வெய்யில் காலத்தில் பிற்பகல் பயணம் அப்படியே வயித்தைப் புரட்டி எடுக்கும்.
காலையில் சீக்கிரம் கிளம்பிப் போயிருக்கணும் நீங்க.
இப்ப உடம்பு தேவலையா?
பரவாயில்லை.நன்றி துளசி.
ம்ம்ம்ம் அது சரி காலியிலே கிளம்பிபோய் உச்சி வெய்யிலிலா சுத்தி பார்க்கமுடியும்?
வைரஸ் பிரச்சினைன்னு முன்னேயே தலைவலி வந்தப்பவே தெரிஞ்சிருக்கனும்.
I don't know what type of virus is this but its affecting frequently.Need to learn to live with it.
Post a Comment