இரண்டு மாதங்களாக அம்மிணிக்கு காளஹஸ்தி ஜுரம் ஆனாலும் தள்ளிப்போய்கொண்டே இருந்தது. போன வாரம் ஞாயிறு எல்லாம் சரியான திசையில் போய்கொண்டிந்ததால் காலை 10.30 க்கு கிளம்பலாம் என்று முடிவு செய்துகொண்டோம் அதற்கு முன்னால் எப்படி போகனும் என்று கூகிள் மூலம் தெரிந்துகொண்டேன்.
விருகம்பாக்கம்---->கோயம்பேடு----->புழல்------>கல்கட்டா நெடுஞ்சாலை---->தடா------> காளஹஸ்தி
என்ன தான் நெடுஞ்சாலை என்றாலும் பல உள்ளூர்கள் குறுக்கிடுவதால் பல இடங்களில் வேகம் எடுக்கமுடியவில்லை.தடா வரை அவ்வளவு பிரச்சனையில்லை. தடாவில் இருந்து காளஹஸ்தி வரை உள்ள சாலையில் நிறைய வேகத்தடைகள் உள்ளன. நெடுஞ்சாலையில் ஓட்டிய பிறகு இங்குள்ள அறிவுப்புகளை பார்க்கனும் என்றே தோன்றுவதில்லை.111 கி.மீட்டர் தூரத்தை 2.15 மணி நேரத்தில் போனேன்.ஊருக்கு உள்ளே தெலுங்கில் பெரும்பாலான அறிவுப்புகள் இருப்பதால் என்னவோ கோவில் இருக்கும் இடத்தை கேட்டுக்கேட்டு போகவேண்டியுள்ளது.ஓரளவு விஸ்தாராமான கோவில், சிறப்புக்கட்டணம்/சாதாரண கட்டணங்கள் மக்களை இறை அருள் கிடைக்கும் நேரத்தில் கொண்டுவிடுகிறது.கோவில் உள்ளேயே ஏற்படுத்தி இருக்கும் நடைபாதைகள் மிகவும் குறுகலாகவும் நடக்கமுடியாத முதியவர்களுக்கு ஏற்றதாகவும் இல்லை.வரும் காலத்தில் யாரோ நெருக்கடியில் உயிர்விட சாத்தியம் அதிகமாக உள்ளது.வெளியேரும் வழியும் குறிப்பில்லாமல் இருக்கிறது.ஜனத்தொகை மிக அதிகமாகிவிட்ட இக்காலத்தில் கோவிலுக்கு போவது என்பது இரண்டாம்பட்சமாகவே இருக்கிறது.
அங்கு எடுத்த சில படங்கள் கீழே.
கல்கி ஆஸ்ரமாம்!!
கோபுர தரிசனம்.
சரவண பவன் என்ற ஹோட்டல் இருந்தாலும் சுவை ஏதோ மாதிரி இருந்தது பசிக்கு ஓகே.
11 comments:
படங்கள் அருமை.
இன்னும் போகலை. பார்க்கலாம். திருப்பதி போனால் அப்படியே இங்கேயும்.
குமுதம் ஆஸ்ரமம் எப்போ கட்டுவாங்க?
நன்றி துளசி.
விகடன் ஆஸ்ரம் மற்றும் நக்கீரன் ஆஸ்ரமம் கட்டிய பிறகு. :-)
கோபுரம் இடிஞ்சுடுச்சுன்னு செய்தி வந்ததே. சரி பண்ணியிருக்காங்களா?
இடிந்ததே தெரியாமல் சரி பண்ணிட்டாங்க.
ஆஹா............
துளசி அக்கா. டிஸபாய்ன்ட் ஆகிட போறீங்க! காசு பிடுங்குற கும்பல்கிட்டே மாட்டக்கூடாது. போனோமா சாமி தரிசனம் ஆச்சா வந்தோமான்னு இருக்கணும்!
துறை சார் பதிவுகள் அவ்வப்போது வரும்! //
:-)))))))))))))
//சரவண பவன் என்ற ஹோட்டல் இருந்தாலும் சுவை ஏதோ மாதிரி இருந்தது பசிக்கு ஓகே.//
நானும் உங்கள மாதிரிதான் ஏமாந்து போனேன்.நெய்யுக்கு பதிலா வனஸ்பதி வெச்சு நல்ல கல்லாகட்ரங்க
ஓ! அப்படியா விஷயம்? பருப்பு பொடிக்கு மாத்திரம் நெய் நினைத்து போட்டு சாப்பிட்டேன்.
இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே...
ஞாபகம் வைத்துக்கொள்கிறேன், பார்வையாளன்.
Post a Comment