கடந்த 21ம் தேதி வேலை விஷயமாக பெங்களூரு வழியாக கோவா செல்லவேண்டியிருந்தது. தலையும் நானும் ஒரே விமானத்தில் பயணம் செய்தாலும் கூடிய வரை அவர் கண்ணில் படாமல் இருக்கவே முயற்சித்தேன், காரணம் பயமில்லை தேவையில்லாமல் பேசவேண்டிவ்ருமே என்பது தான்.
சென்னையில் இருந்து 50 நிமிடங்களில் பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது ஜெட் ஏர்வேய்ஸ்.புது விமான நிலையம் வெளிப்பார்வைக்கு ஓடு பாதையில் இருந்து அவ்வளவு வசீகரமாக இல்லை ஆனால் உள்ளே நுழைந்ததும் சர்வதேச தரத்துக்கு இழைத்து வைத்திருக்கிறார்கள் மிக முக்கியமாக வழுக்கும் தரையில்லை.மின்சாரத்தை சேமிக்கும் விதமாக North Light முறையில் அமைக்கப்பட்டிருக்கும் உயர் ஜன்னல் மூலம் நிலையத்துக்கு தேவையான வெளிச்சம் உள் வரும் வகையில் அமைத்திருக்கிறார்கள்.நான் இருக்கும் வரை ஒரு விளக்கு கூட எரியவில்லை அதனல் எவ்வித குறைபாடும் தெரியவில்லை.
இவ்வேலை L&T- ECC நிறுவனம் செய்ததாக என் தலைவர் சொன்னார்.Folded Plate என்னும் முறைப்படி அமைத்திருப்பதாகவும் சொன்னார்.தரமும் நன்றாகவே இருந்தது. என்ன தான் அத்தனை வேலைகளையும் அருமையாக செய்திருந்தாலும் மழை நீர் செல்லும் குழாயை வெளியே தெரியும் படி செய்து ஒரு திருஷ்டி வைத்திருக்கிறார்கள்.இத்தனை வேலை செய்து அதை எப்படி கடைசியில் இப்படி வைத்துவிட மனது வந்தது என்று தெரியவில்லை.
மரக்கறி உணவு கிடைக்கும் இடம் நன்றாக இருந்தாலும் மிச்சம் மீதி இருக்கும் உணவுகளை சாப்பிட சென்னையில் இருந்து காலி செய்துவிட்டு போன சிட்டுக்குருவிகள் அவ்விடத்தை இருப்பிடமாக மாற்றிக்கொண்டுவிட்டன. செல்போன் டவரினால் குருவி காணாமல் போகும் என்ற கொஞ்ச நாளுக்கும் முன்பு வந்த தியரி இங்கு அடிப்பட்டு போகிறதே??
11 comments:
Delhi airport is very nice. Been to domestic terminal. It is almost like Singapore airport.
Sorry no tamil font.
at the moment we are in Chennai for xmas
விமான நிலயத்தின் வடிவமைப்பு கவர்கிறது; மகிழ்வாக உள்ளது.
ஓ! சென்னை விஜயமா?
டெல்லி விமான நிலையத்தையும் பார்த்திருக்கேன்.என்ன! நடையா நடக்க வைத்துவிடுகிறார்கள்.இன்னும் பல இடங்களை கடைகள் அடைக்காமல் இருக்கு. வயதானவர்கள் நடக்க கஷ்டப்படும் போது பாவமாக இருக்கு. ப்லருக்கு அந்த நடக்கும் மேடையை உபயோக்கிக்க தெரியவில்லை.
நன்றி ஹுசைனம்ம்மா. பலர் இதை ஏதோ ஃபேக்டரி மாதிரி இருக்கு என்று சொல்கிறார்களாம்.
பலர் இதை ஏதோ ஃபேக்டரி மாதிரி இருக்கு என்று சொல்கிறார்களாம்.//
எல்லாம் கொஞ்ச நாளிலே பழகிவிடும்!
aahaa...super !
முதல் வருகைக்கு நன்றி ஆரண்ய நிவாஸ் -திரு ஆர்.ராமமூர்த்தி.
விமான நிலைய ஆணையத்தின் நல்ல முயற்சி,
டிசைனில் ஃபன்க்ஷன் தான் முக்கியம்,ஃபார்ம் அல்ல,ஆகவே அது ஃபேகடரி போலவே இருக்கட்டும்.
நீங்கள் சொன்ன பைப்பை வெளியே சேஸ் செய்து போயிருக்கவேண்டும்,அல்லது,ஏதாவது column துக்குள் டம்மி செய்திருக்க வேண்டும்.இது போல நடக்க முக்கிய காரணம்.
lack of coordination.
ஆர்கிடெக்ட்+ப்ராஜக்ட் மேனஜர்+காண்ட்ராக்டர் ஒருங்கிணயவேண்டும்,அப்போது தான் பிழையில்லாத ரிசல்ட் கிடைக்கும்.உங்கள் ரெய்டு தொடரவேண்டும்.
இது பகலில் விளக்கில்லா விமான நிலையம்,க்ரீன் பில்டிங் என்றும் சொல்லலாம்.,
Yes Geethapriyan, now a days most of the big projects has mandatory LEED certification. A good move by Govt.
its a private airport by siemens & l&T ..thats the reason you can see the quality
Post a Comment