Sink Hole இதுக்கு தமிழாக்கம் என்னவென்று தெரியவில்லை ஆனால் கீழ்கண்ட படங்களை பாருங்கள்.முதல் படம் குவாண்டமாலா எனும் இடத்தில் ஏற்பட்டது ஆனால் இரண்டாம் படம் விருகம்பாக்கம் பூங்காவுக்கு அருகில் உள்ள தெருவில் ஏற்பட்டுள்ளது,அதிசியமாக யாரோ புண்ணியவான் அதை சுற்றி பாதுகாப்பு பட்டையை கட்டியுள்ளார்கள்.
முதல் படம் குவாண்டமாலாவில் ஏற்பட்டது.
நம்மூர் சாலைகளில் பயணிப்பவர்களுக்கு இந்த மாதிரி பூமி உள்வாங்குவது என்பது சாதரண நிகழ்வு தான் ஆதாவது தொலைப்பேசி அல்லது கழிவு நீர் பாதைகளை ஏற்படுத்திவிட்டு பிறகு அதை முறையாக மூடாமல் விட்டால் அந்த இடமே செயற்கையாக தாழ்ந்திருக்கும்.இவ்விடம் அப்படியில்லாமல் மொத்தமாக இறங்கியிருப்பது பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்படுமா என்று அஞ்சவேண்டியிருக்கு.
12 comments:
நம்ம ஊருல இது போல நிறைய இடத்துல இனி நீங்க பாக்கமுடியும் பயப்படுற அளவுக்கு பெரிய விசயமில்ல நம்ம ஊரு கட்டுமான குவாலிட்டி கண்ட்ரோல் இலட்சணமே இனி இப்படி ஓட்டைகளா தெரியும்!
எங்க ஊர்ல பாதாளச்சாக்கடை புராஜெக்ட் நடந்தப்ப நேர்ல பார்த்து தெரிஞ்சுகிட்ட பாடம் !
ஹூம்! என்று பெரு முச்ச்சுதான் விடமுடியுது ஆயில்யன்.
பணத்தாசை பிடிச்சவர்களிடம் வேலையை கொடுத்தால் ,இதுவும் நடக்கும்,இதுக்கு மேலும் நடக்கும்
ஒரு பெரிய ஆபத்தினை சுட்டி காட்டியிருக்கின்றீர்கள், நன்றி!@
கீதப்பிரியன்-இவ்வேலையை யாராவது மேற்பார்வை செய்கிறார்களா?? அதுதான் கொடுமை.
நன்றி ஜெகதீஸ்வரன்.
சென்னையில் பொதுவாவே நிறைய இடங்கள்ல இந்த மாதிரி பூகம்ப பாதிப்பு இருக்கு...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
வாங்க RVS,அது தானே நம்முடைய தனித்திறமை??!
குமார் , இது நில சுனாமி மாதிரி இருக்கே.. திடிர்ன்னு உள்வாங்குமா .குவாண்டமாலா ரொம்ப ஆபத்தா இருக்குது.. இன்னமும் சுற்றியும் போதுமான பாதுகாப்பு இல்லாத மாதிரி இருக்கு. தகவல் நல்ல எச்சரிக்கை.
வாங்க பத்மநாபன்,எனக்கெனவோ அடுத்த குத்தகைக்கு ரோடே கீழே தானகவே இறங்கியிருக்கும் என்று தோன்றுகிறது.:-)
ஏதோ வேலை செய்து சரியாக மூடாம விட்டிருப்பாங்க.
அதிகாரிகள் பணத்தை,’உள் வாங்கி’ரோடு போட ஆரம்பித்தால், நிலம் என்ன ஆகாயம் கூட உள்வாங்கும் .
ஹா!ஹா! கொஞ்ச நாட்களுக்கு முன்பு திரும்பவும் அவ்விடத்தை பார்க்க நேர்ந்தது...பழைய கட்டுமான பொருட்களை போட்டு மூடி வைத்து அப்பகுதி வழியாக போய் வரும் வாகனங்கள் மூலம் சம்படுத்திக்கொண்டிருந்தார்கள்.
Post a Comment