கட்டுமானத்துறையில் கிரானைட் புகுந்து பல வருடங்களாகிவிட்டது.முதன் முதலில் வழுவழுப்பான தரை என்ற நியதியில் உள்ளே வந்து அதன் பிறகு பெரிய பெரிய கட்டிடங்களின் வெளிப்பகுதி அலங்கரிப்புக்காக பெரிய சட்டத்துடன் இணைத்து உபயோகித்தார்கள்.தற்போது வெளிப்புற அலங்கரிப்புக்கு கிரானைட்டை விட கண்ணாடியில் பல அனுகூலங்கள் இருப்பதால் பலரும் கண்ணாடியையே விரும்புகிறார்கள்.கான்கிரீட்டை விட பளபளப்புக்கு கிரானைட் உகந்ததாக இருப்பதால் பலரும் விரும்புகிறார்கள்.சுத்தம் செய்வது மிக எளிதாக இருப்பதால் பன்னாட்டு விமான நிலையங்களில் மக்கள் குழுமும் இடம் என்று அடையாளம் காண்பிக்கப்படும் இடங்களில் இது புழக்கத்தில் உள்ளது.
தரைக்கு இக்கற்களை பதிக்கும் போது பரப்பும் தளத்தில் சிமிண்ட் பரப்பி அதன் மேல் இக்கற்களை பதிப்பார்கள்.சரியான லெவலில் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை செய்திருப்பார்கள்,இதுவே நெடுக்கில் கிரானைட் கற்களை வைக்க என்ன செய்கிறார்கள்? விளக்கப்படங்கள் கீழே.
நான் தங்கியிருக்கும் பக்கத்தில் உள்ள Qurm Beach யில் நடைபாதைக்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உட்கார்ந்து கடலழகை பார்க்க வசதி செய்துள்ளார்கள்.அது இப்போது வெறும் கான்கிரீட் போடப்பட்டு அப்படியே உள்ளது.நிறைய காசு இருக்கோ என்னவோ அதையெல்லாம் கிரானைட் போட்டு அலங்காரப்படுத்த அரசாங்கம் உத்தரவு போட்டு ஒரு குத்தகைக்காரர் வேலை தொடங்கியுள்ளார்.வெய்யில் காலத்தில் சூரியன் மறைந்ததும் சுமார் 1 மணி நேரம் அந்த வெப்பம் இந்த கிரானைட் சிலாப் மீது உட்காரவிடாமல் பண்ணும் மற்றபடி குளிர் காலத்தில் அவ்வளவு பிரச்சனை இருக்காது.
கற்கள் வேண்டிய அளவில் வெட்டப்பட்டே வரும் தேவையென்றால் உரிய உபகரனங்கள் மூலம் நம்மாலும் வெட்டிக்கொள்ளமுடியும்.வேலைக்கு தகுந்த மாதிரி அதன் Thickness இருக்கும்.
தகுந்த உயரத்தில் அல்லது இடத்தில் வைத்து அதன் நேர் தன்மையை சரிசெய்துக்கொண்டு படத்தில் உள்ள மாதிரி சிறிய ஸ்குரு மற்றும் இருகும் தண்மை கொண்ட கெமிகல் மூலம் அதை நிலை நிறுத்துவார்கள்.கான்கிரீட் மற்றும் இந்த சிலாபுக்கு இடைப்பட்ட பாகத்தை தேவையென்றால் சிமிண்ட் கலவை மூலம் நிரப்பிவிடுவார்கள்.
Alignment with Thread
ஸ்குரூ மற்றும் கெமிகல் மூலம் நிலை நிருத்தப்படுகிறது.
வேலை என்னவோ சுலபமாக தெரிந்தாலும் சில இடங்களில் கலர் மாற்றம் ஏற்பட்டால் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.கிரானைட்டிலும் நகாசு வேலை செய்து வித்தைகாட்டுகிறார்கள்,இந்த மாதிரி வித்தைகளை மத்திய கிழக்கில் அதிகமாக பார்க்கலாம்.
2 comments:
ட்ரை க்ளாடிங்கில் என்ன தான் விரைவில் வேலை முடித்தாலும்,ஐந்தே வருடங்களில் கிளாம்ப் துரு பிடித்து கல் தொங்கிவிடுகிறது,அல்லது கல் உடைந்து விடுகிறது.இதற்கும் மாற்று நிச்சயம் வேண்டும்.
வாங்க கீதப்பிரியன்,Galvanized போட்டாக்கூடவா?
Post a Comment