Tuesday, October 06, 2009

சில படங்கள்.

என்ன தான் விடியற்காலை மெதுவாக எழுந்திருக்கலாம் என்றாலும் சரியாக 5 மணிக்கெல்லாம் சுவிச்சு போட்டா எரிகிற விளக்கு மாதிரி பொசுக்கு முழிப்பு வந்துவிடுகிறது.தூங்கிற அளவு குறைந்துகொண்டு வருவது அப்பட்டமாக தெரிகிறது.வயது ஏற ஏற தூக்கம் இன்னும் குறையும் என்று தெரிகிறது.எதிர்பார்த்து காத்திருக்கவேண்டியது தான்.குறைவான தூக்கம் என்றாலும் அலுப்பு தெரிவதில்லை.

சிங்கை & துபாயில் இருந்த போது பெரும்பாலும் மாலையில் மெதுநடை ஒரு வழக்கமாக இருந்தது.மஸ்கட் வந்த போதும் இன்னும் தங்கும் இடங்கள் நிரந்தரமாக இல்லாத காரணத்தால் இம்மெது நடை தள்ளிப்போய்கொண்டிருந்தது.நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு புதுவீடு பார்த்துக்கொடுத்தது நிறுவனம்.சின்னச்சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டிருக்கிறது.மெது நடையை எப்படியும் ஆரம்பித்துவிட வேண்டும் என்ற நினைப்பில் சக நண்பர்களில் ஒரு பிலிப்பினோவை கேட்டேன்,உடனே சரி என்று ஒத்துக்கொண்டு மறு நாள் காலை 6.30 மணி என்று முடிவானது.

எல்லாம் சரியாக நடந்ததால் கடற்கரை வரை மெது நடைபோய் விட்டு கீழ்கண்ட படங்களை எடுத்தேன்.








இப்படி காலை வேளை நடை தொடர்ந்து நடப்பது கஷ்டம் என்று தெரிகிறது,பார்ப்போம்.

3 comments:

துளசி கோபால் said...

காலையும் சரி மாலையும் சரி நடக்கப்போகவே முடிவதில்லை. பயங்கரச்சூடு. ராத்திரியில் தூக்கம் சரியா இல்லை. அதனால் கலை எழுந்துக்கத் தாமதம். கொஞ்சம் லேட் ஆனாலும் சூரியன் வந்து சூடு அப்படியே பொங்கிவருது.

எல்லாத்தையும் மீறி நடக்கலாமுன்னா தெருமுழுசும் அழுக்கு, குப்பை, தெருநாய்கள், திடுக் திடுக்குன்னு குறுக்கும் நெடுக்கும் பாயும் இருசக்கர வாகனங்கள், தேவையில்லாமல் ஒலி எழுப்பிக்கிட்டே இருக்கும் நாலு சக்கரங்கள்...... எல்லாத்துக்கும் மேலே கசகசன்னு கூட்டம்....போதுமுன்னு ஆகிக்கிடக்கு(-:

வடுவூர் குமார் said...

தமிழகத்தின் அதுவும் சென்னையின் அடையாளங்களை பட்டியல் இட்டுள்ளீர்கள்.வேறு வழியில்லை அனுபவிப்பதை தவிர.நீங்கள் இருக்கும் ஏரியாவே இப்படி என்றால் மற்ற இடங்களை கேட்கவே வேண்டாம்.

வடுவூர் குமார் said...

அமைதி வேண்டும் என்றால் ஒருதடவை மஸ்கட் வந்து போங்கள்.அமைதியான கடற்கரை.