Thursday, October 01, 2009

ரோஜா பூங்கா

மஸ்கட்டில் இப்படி ஒரு இடமா? என்று ஆச்சரியப்பட வைக்க கூடிய விஷயங்கள் காதில் விழுந்தன...
1.ஓமனிலேயே பெரிய பூங்கா.
2.இதன் பெயர் Rose Garden (ஒரு ரோஜா கூட கண்ணில் படவில்லை).
3.இயற்கை பூங்கா
இவற்றில் முதல் அய்டம் மாத்திரம் உண்மையாக இருக்கக்கூடும்.
சாயங்கால வேளையில் போனால் கொஞ்சம் வெப்பம் குறைந்த நிலையும் சூரிய அஸ்தமன காட்சியிம் காணலாம் என்று யோசித்து 5.30 மணிக்கு போனோம்.

முகப்பில் பொதுவாக இரு மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஆனால் இதில் அரபி மாத்திரமே இருந்தது.வெளிநாட்டினர் எப்படி அடையாளம் கண்டு கொள்வார்கள் என்ற குழப்பத்துடன் முகப்பு சுவரை பார்த்தால் அதில் நிறைய ஓட்டைகள்.புரிந்தது,ஏதோ காரணத்தால் ஆங்கிலத்தில் இருந்திருக்ககூடிய எழுத்துக்களை நீக்கியிருக்கிறார்கள்.



நுழைந்த உடனேயே ஒரு பெரிய திறந்தவெளி ஹால்.இடது பக்கம் குழந்தைகளுக்கான பார்க் அதற்குள் செல்ல கட்டணம் செலுத்த வேண்டும்.





ஹாலை கடந்தால் மத்தியில் ஒரு பெரிய குளம் அதன் மத்தியில் ஒரு கட்டிடம். நம்மூர் தெப்பக்குளம் மாதிரி இருக்கு.அதை சுற்றி வரும் போது ஒரு கலை நிகழச்சி மேடையும் அதன் முன்னால் ஒரு செயற்கை நீரூட்டும் இருந்தன.பெரிய குளம் என்பதால் அதை சுற்றி நடப்பதே ஒரு நல்ல உடற்பயிற்சி போலாகிவிடும்.அங்கங்கே இப்படி ஒரு டூம் கட்டி உட்கார வசதி செய்துகொடுத்துள்ளார்கள்.





நிறைய புல்வெளிகள் போட்டு இடத்தை பசுமையாக்கி வைத்துள்ளார்கள்.பல குடும்பங்கள் சாய்ங்கால வேளையில் வந்து பொழுதை கழிக்க ஒரு நல்ல இடம் என்று சொல்லாம் என்று பார்த்தால் முடியாது என்றே தோன்றுகிறது ஏனென்றால் இந்த குளத்தின் உள்ள நீர் மறுசுழற்சி பண்ணப்படாமல் இருப்பதால் அதன் மூலம் உருவாகிற கொசு நம்மை உட்காரவிடாமல் துரத்துகிறது.அங்கு விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை பார்க்க பரிதாபமாக இருக்கு.

நானும் நண்பர்களும் ஒரு சாய் குடிக்கான் சமயத்துனுள் வல்லிய கொசு அடிச்சிக்களஞ்சி.ஐயோ! நடுவில் என்னுடைய மலையாளம் கலந்திடுச்சி.எல்லாம் இங்கு வந்த பழக்க தோஷம் தான். பொருத்துக்கொள்ளுங்கள்.



தாஜ்மஹால்,ஈபில் டவர் போன்ற உருவங்களை சிறிய அளவில் செய்து பார்வைக்கு வைத்துள்ளார்கள்.அதற்குள் சூரியன் மேற்கில் விழ விளக்குகளுக்கு உயிர் வந்தது.

3 comments:

Unknown said...

அழகா இருக்கு ...

திவாண்ணா said...

ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு பதிவுகளை படிக்க நேரம் கிடைச்சது. நடுவிலே விட்டுட்டதாலே எங்கே திடீர்ன்னு மஸ்கெட் போயிட்டீங்கன்னு புரியலை! படங்களை அப்புறமா பாக்கிறேன். ஓ துரைசாமி அய்யங்காருக்கு பக்கத்து வீடா? சில புத்தகங்கள் ரொம்ப நாள் முன்னே படிச்சு இருக்கேன்.

வடுவூர் குமார் said...

வாங்க‌ திவா
இங்கு வ‌ந்து 3 வார‌மாகிற‌து.எழுத‌ நிறைய‌ இருக்கு ஆனா இணைய‌ இணைப்பு தான் க‌ஷ்ட‌மாக‌ இருக்கு.இப்ப‌ கூட‌ ம‌ஸ்க‌ட் விமான‌ நிலைய‌த்தில் இருந்து தான் ப‌தில் எழுதுகிறேன்