Thursday, September 13, 2007

உருட்டுப் பந்து

அதாங்க Bowling,

இது கிரிக்கெட் அல்ல, underarm bowling மாதிரி உள்ள விளையாட்டு.இதைப்பற்றி நான் முதலில் கேள்விப் பட்டது மலேசியாவில் தான்.அங்கிருந்த ஒரு கிளைன்ட் பொறியாளர் ஒரு நாள் என்னிடம் நாம் பௌளிங் விளையாட போகலாமா ? என்று கேட்டுவிட்டு, எப்படி பௌலிங் பண்ணுவது என்று தெரியுமா? என்று கேட்டு நிறுத்தினார்.

நான் கிரிக்கெட்டில் பௌலிங் போடுவது போல் செய்துகாண்பிக்க... சிரித்து மகிழ்ந்தார்கள்.
அப்போது போக முடியவில்லை,அதற்குப்பிறகும் அதை விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.அவ்வப்போது ஏதாவது படத்தில் காண்பிப்பார்கள்.அதோடு சரி என்னுடைய அறிவு இந்த விளையாட்டை பற்றி.

இந்த பின்னனியில் 3 மாதங்களுக்கு முன்பு எங்கள் கம்பெனியில் உருட்டுப்பந்து போட்டி வைக்கப்போகிறோம்,பெயர் கொடுப்பவர்கள் கொடுக்கலாம் என்று சொன்னார்கள்.பொதுவாகவே நான் இந்த மாதிரி எந்த விளையாட்டுக்கும் போவதில்லை.முதல் காரணம் இரவு வீடு திரும்ப வெகு நேரம் ஆவது அடுத்து மரக்கறி உணவு கிடைப்பதில் உள்ள பிரச்சனை.இவற்றை விட மறுநாள் காலை செய்யவேண்டிய வேலைகளில் சுணக்கம் ஏற்படுவது.என்னை மாதிரி பல பேர் செய்வதால் என்னவோ இம்முறை கட்டாயப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.வேறு வழியில்லாமல் என் பெயரும் கொடுக்கப்பட்டது.

நேற்று இரவு நடந்த போட்டிக்கு போகும் முன்பே இந்த விளையாட்டை பற்றிய ஒரு சில விஷயங்களை தெரிந்துகொண்டேன்.

அலுவலகத்தில்,பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நண்பரிடன் கார் இருந்ததால் போகும் போது என்னுடன் வந்து விடு என்றார்.அலுவலக கூட்டத்தில் சிக்காமல் இருக்க மாலை சுமார் 5.15 க்கும் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டோம்.அதற்கு முன் மனைவிக்கு தொலைபேசி இன்று இரவு சேட்டிங் வரமுடியாது என்று சொன்னேன்.இந்த மாதிரி ஏதோ ஒரு காரணம் சொல்லி சென்னை போனதை ஞாபகம் வைத்துக்கொண்டு அங்கு வரப்போகிறீர்களா என்று கேட்டார்.

நாங்கள் விளையாடப்போகும் இடம் புக்கிட் மேரா என்ற இடத்தில் உள்ள சாபரா கிளப்.சும்மா இழைத்து வைத்துள்ளார்கள்.தரைக்கு கீழே கார் நிறுத்தும் இடம்,முதல் மாடியில் நீச்சல் குளம்,இரண்டாம் மாடியில் பௌளிங் சென்டர் மற்றும் சில அறைகள,் பல பயண்பாட்டுக்காக இருந்தது.

பௌளிங் செனட்ரில் உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய வரவேற்பறை போல் இருந்தது.மொத்த இடமும் குளிரூட்டப் பட்டு இருந்தது. வேர்வை வரவே வாய்ப்பு இல்லை.என் நண்பர் ஒருவர் ரொம்ப குளிருதில்ல? என்றார். எனக்கு அப்படி தெரியவில்லை.

நான் போன போது ஒரு சிலர் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.எங்கள் நிறுவனத்துக்கு என்று ஒரு குறிப்பிட்ட லேன்கள் ஒதுக்கியிருந்தார்கள்.என் குழுவில் இருக்கவேண்டிய ஒருவர் வராததால் வேறு ஒருவரை போட்டிருந்தார்கள்.

எங்கள் நிறுவனத்தில் இருந்த ஒருவர் தாங்கள் விளையாட வேண்டிய இடத்தில் வெவ்வேறு கலரில் உள்ள பந்துகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள்."ஏன் அப்படி வைக்கிறார்கள்?" என்று ஒருவரிடம் கேட்ட போது,அந்த பந்தின் எடையும் அதன் துவாரம் கை விரல் அளவுக்கு தகுந்த மாதிரி இருப்பது நல்லது என்பதால் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி எடுத்து வைத்துக்கொன்டிருக்கிறார்கள் என்று விளக்கம் தந்தார்.



என்னுடைய விரல்/எடை க்கு தேவையானதை எடுத்துவைத்துக்கொண்டிருக்கும் போது, பௌலின் போடும் இடத்துக்கு போவதற்கு முன்னால் அந்த கிளப்பில் உள்ள ஷூவை உபயோகபடுத்த வேண்டும் என்றார்கள்.இது தான் அந்த ஷூ.வழ வழப்பான தரைக்கு அது கொஞ்சம் பிடிப்பு கொடுக்கும் என்று நினைத்தேன்.அப்படி ஒன்றும் இல்லை.



இந்த முன்னேற்பாடுகள் நடந்துகொன்டிருக்கும் போதே எங்கள் உயர் அதிகாரிகள் பக்கத்தில் உள்ள ஒரு லேனில் பயிற்சி செய்ய ஆரம்பித்தார்கள்.எனக்கும் ஆசை தொற்றிக்கொள்ள "நானும் முயலலாமா?" என்றேன்.

"தாராளமாக" என்றார்கள்.

முதல் பந்து வீசிய போது கையில் இருந்து கொஞ்சம் உயரத்தில் இருந்து விழுந்தது போல் சத்தம் கொடுத்து உருண்டோடி இடது பக்கத்தில் இருக்கும் பின்னை அடித்தது.போடுவதற்கு முன்பு கால் கொஞ்சம் வழுக்கியமாதிரி இருந்தது. சிறிது நேரத்தில் அதன் நேர்த்தி பிடிபட்டது. பந்தின் எடை அதிகமாக இருப்பதால் கையில் எங்கோ ஒருவித வலி ஏற்படுபவது போல் தோன்றியது ஆனால் சில நிமிடங்களில் காணாமல் போனது.

போட்டி ஆரம்பிக்கும் போது,ஆட்டம் ஓரளவு பிடிபட்டது.டிவி திறையில் யார் எந்த லேனில் விளையாடவேண்டும் எனபதையும் & ஆட்ட முடிவுகளையும் காண்பிக்கிறது.போட்ட பந்து திருப்ப நாம் இருக்கும் இடத்துக்கே வருகிறது.கை ஈரம் காய ஒருசின்ன துவாரம் வழியாக காற்று வந்துகொண்டிருக்கிறது. சிலர் பவுடர்களையும் கையில் போட்டுக் கொள்கிறார்கள்.

போட்ட பந்து இங்கு தான் திரும்பி வரும்.



4 ஆட்டம்.2 வீச்சுக்குள் எல்லா பின்களையும் வீழ்ந்த முடிந்ததை பார்த்த எங்கள் தலைவர் "நிஜமாகவே சொல்லு! இது தான் முதல் தடவையா? " என்றார்.எப்படி முடிந்தது என்று கேட்கிறீர்களா? பதிலுக்கு கடைசி வரை வாருங்கள்.

4 பேர் உள்ள எங்கள் குழூ ஒவ்வொரு கேமில் முன்னேறி கடைசி கேமில் 573 பாயிண்ட்ஸ் எடுத்தோம்.கீழே எங்கள் குழு. என்னை படம் எடுக்கும் போதா மின்கலம் தீர்ந்துபோகவேண்டும்?வெளிர் பச்சை நிற சட்டையில் ் போடுபவரும் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களும் தான் எங்கள் குழு.



7.30 மணிக்கு ஆரம்பித்து 9.30 மணிக்கு முடித்தோம்.மற்றவர்கள் முடிக்க நேரம் ஆனதால் சிறிது நேரம் மற்றவர்களின் ஆட்டத்தை காணும் போது மேலும் சில விஷயங்கள் புரிபட்டது. அதுவும் பெண்கள் எடையில் சிறிய பந்துகள் மூலம் வேகம் குறைந்த அளவில் வீசி அத்தனை பின்களையும் வீழ்த்திய போது ஆச்சரியமாக இருந்தது.

அங்கிருந்து வீட்டுக்கு வர சுமார் 1.30 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் எனபதால் என் சக ஊழியரிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.வீடு வந்து சேரும் போது இரவு 11.

மறு நாள் காலை அலுவலகத்துக்கு வந்து மேசையின் மீது பையை வைக்கும் போது பார்த்தால் அழகான ஒரு பின்... கீழே உள்ள மாதிரி. ஆதாவது எங்கள் குழுவுக்கு மூன்றாவது பரிசாம்.

இந்த விளையாட்டு ஒன்றும் பெரிய விளையாட்டு அல்ல,நீங்கள் கோலி குண்டு ஆடியிருந்தால்.
நம்ம வலைப்பதிவர் ஹரிஹரன் எழுதிய(இதை அங்கு துழாவி கண்டுபிடிக்கவே வெகு நேரம் ஆனது-லாக் &போந்தா) பதிவு இங்கு.

பலர் ஆச்சரியப்பட்டு கேட்கும் போது நான் சொன்ன பதில் "I used to play marbles during my early days,I used that technic".





கிடைத்த பரிசு.

இதனால் சொல்வது என்னவென்றால் கோலி குண்டு விளையாட தெரிந்தால் உருட்டுப்பந்து விளையாடிவிடலாம்.கொஞ்சம் தெம்பாக இருப்பது நலம். என் நண்பரும் இதே மாதிரி முதல் தடவை வந்து உருட்டும் போது கொஞ்சம் பயந்துவிட்டேன் "எங்கே பந்து அவரையும் தூக்கிட்டு போயிட போகுதே!!" என்று.

12 comments:

வடுவூர் குமார் said...

டெஸ்ட் செய்கிறேன்

வடுவூர் குமார் said...

துளசி
கை வலியா? உங்களுக்கென்றே சிறிய எடையுடன் கூடிய பந்துகள் இருக்கின்றன்வே!
உங்கூரில் கிடையாதா?
பின்னூட்டம் எனக்கு வேலை செய்கிறதே?

வெங்கட்ராமன் said...

சென்னையில கூட இதெல்லாம் இருக்கு.

பணக்கார விளையாட்டு.

வடுவூர் குமார் said...

வாங்க வெங்கட்ராமன்.
பணக்கார விளையாட்டா?அப்ப ஒரு சென்டர் நம்ம ஆரம்பித்து விடவேண்டியது தான்.
சென்னையில் இருப்பதாக ஒரு பத்திரிக்கையில் படித்த ஞாபகம்,எங்கென்று தெரியவில்லை.
இங்கு ஒரு கேமிற்க்கு 3 வெள்ளியாம் (ரூபாய் 81).

Hariharan # 03985177737685368452 said...

குமார்,

சில ஆண்டுகள் முன்பு டென்மார்க் கோபன்ஹேகனுக்கு அலுவல் காரணமாகச் சென்ற போது கம்பெனியில் மாலை நேரத்தில் அனைத்து நாட்டிலும் இருந்து வந்த சக Colleaguesஉடன் சென்று இந்த ஸ்நோ பௌலிங் விளையாடியபோது இரண்டாவது பரிசு பெற்றேன்!

எல்லாம் லாக் & பேந்தா கோலி விளையாட்டு பாலபாடம் உறைவில் இருந்து வெளிப்பட்டதே :-))

வடுவூர் குமார் said...

வாங்க ஹரி
இதை விளையாடும் போதும் இங்கு எழுதும் போதும் உங்கள் பழைய பதிவின் நினைவும் நான் விளையாடிய கோலியும் தான் ஞாபகம் வந்தது.
மிக்க நன்றி.

Unknown said...

குமார்

பவுலிங்க்கில் ஜெயித்து சிறுவயதில் நாம் ஆடிய கோலி எல்லாம் வீணாக போகவில்லை என்பதை நிருபித்து விட்டீர்கள்:)

பவுலிங் இன்டெர்னெட்டில் ஆடுவதுடன் சரி.நிஜத்தில் ஆடியதில்லை.இனிமேல் தான் ஆடி பார்க்கணும்

வடுவூர் குமார் said...

வாங்க செல்வன்.
அந்த ஒரு பின் மட்டும் தனியா நிற்கும் போது அடிக்கிறது இருக்கே அதுவே தனியான சுகம்.
வாலிப காலத்தில் கூட்டத்தின் நடுவே நம்மாள் நமக்கு மட்டுமே தெரிகிற மாதிரி சிரிச்சா எப்படி இருக்குமோ அது போல்.
சீக்கிரம் முயலுங்கள்.நேரம் போவதே தெரியாது.

காட்டாறு said...

இந்த முறைய பயன்படுத்தி, அடுத்த முறை கோப்பையை கைப்பற்றுறேன்... விளக்கமா சொன்னதுக்கு நன்றி! ;-)

வடுவூர் குமார் said...

வாங்க காட்டாறு
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

இங்கு மங்களூரிலும் இந்த விளையாட்டு இருக்கிறது. ஆனால் அந்த திரையில் வரும் POINTS புரியவில்லை.

ஒரு ஆட்டத்திற்கு 100 ரூபாய் இங்கே. ஒரே ஒரு தடவை ட்ரை செய்தேன். அடுத்த முறையிலிருந்து யாராவது கண்ணுக்கு குளிர்ச்சியா (பொண்ணூங்க)விளையாடினா பாக்கிறதோட சரி

வடுவூர் குமார் said...

என்ன? உங்கூரில் 100 ரூபாயா? இங்கே 78 ரூபாய் தான்.
உங்கூரு சிங்கப்பூரை விட உசந்திருக்கு என்று பெருமைபட்டுக் கொள்ளலாம். :-))