Tuesday, July 31, 2007

சிங்கைத்தமிழ்

தமிழ் சிங்கப்பூரில் ஒரு அரசாங்க மொழி.
இங்குள்ள தமிழர்கள் வீடுகளில் அவ்வளவாக பேச்சுத்தமிழ் இல்லை என்றாலும்,பள்ளிகளிலும் மற்ற பொது இடங்களிலும் அதை மறக்காமல் இருக்க இங்குள்ள அரசாங்கம் பல பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இங்குள்ள மக்களுக்கு தமிழ் மொழி மறந்து போகாமல் இருக்க வானொலியின் பங்கு மறக்க/மறுக்க முடியாதது.24 மணி நேரமும் ஒலி 96.8 பண்பலையில் தமிழ் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
வெளிநாட்டு தமிழர்களுக்கு இதைவிட்டால் தமிழை கேட்பதற்கு ஒரு நல்ல விடயம் கிடையாது.
பாட்டுக்கு பாட்டு,உலக நடப்புகள்,உள்ளூர் விஷயங்கள் என்று கலந்து கட்டி கொடுப்பதால் 400 வெள்ளி போட்டு ipod வாங்க வேண்டியதை தவிர்க்க முடிந்தது.
உலகத்திலேயே சிறந்த MP3 பிளேயர்- வானொலிதாங்க.
இப்படிப்பட்ட வானொலி "வெளிச்சம்" என்ற நிகழ்ச்சியில் தெள்ளத்தெளிவான தமிழை நாம் அருந்த கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.அதில் ஒன்றை இங்கே கேட்போம்.
இனங்களுக்கிடையே நல்லுறவு
நன்றி: ஒலி 96.8.

Get this widget | Share | Track details

Wednesday, July 25, 2007

இது தான் இந்தியா!!!

கூகிள் வீடியோவில் சும்மா பார்த்துக்கொண்டிருக்கும் போது இது கண்ணில் பட்டது.
அழுவதா?சிரிப்பதா? என்று தெரியவில்லை.
ஆனா,செம திரில்லிங்கா இருந்தது. நீங்களும் பாருங்கள்.

Tuesday, July 24, 2007

தில் தில் மனதில்

சிங்கப்பூர் தமிழ் மக்கள் அதுவும் தமிழுக்கென்றே இருக்கும் ஒரே ஒரு சேனலை(வசந்தம் சென்ரல்) பார்க்கும் மக்களுக்கு இந்த வார்த்தை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
சின்டா எனப்படுகிற (Singapore Indians Development Association) குழுமம் சார்ப்பில் வெளியிடப்படுகிற நிகழ்ச்சி தான் இது.உள்ளூர் இந்தியகளின் நிலமையை மேம்படுத்த, அவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த,குறைந்த சம்பளம் பெறுபவர்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்த,கணினி இல்லாதவர்களுக்கு குறைந்த விலையில் கணினி கொடுப்பது போன்ற பல சிறந்த வேலைகளை செய்துவருகிறார்கள்.அவர்கள் செய்யும் பல பணிகளில், பள்ளியில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு தேர்வில் இன்னும் நன்றாக செய்து அவர்களை மென்மேலும் உயர்த்த "Project Gift" என்ற திட்டத்தை உருவாக்கி குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களை அதில் சேர்த்து தக்க ஆசிரியர்கள் மூலம் தேவையான பாடங்களை சொல்லிக்கொடுத்தும்,தேர்வுகளை எப்படி கையாளவேண்டும் போன்ற பல நல்ல விஷயங்களை சொல்லி மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துகிறார்கள்.அதற்கான பலன்கள் நன்றாகவே தெரிய ஆரம்பித்தது.என் மகனும் இதில் படித்தான்.

இந்த மாதிரி விஷயங்களை வெறும் சில விளம்பரங்கள் மூலம் மட்டும் இந்தியர்களை கவரமுடியாது என்று நினைத்து, மீடியா கார்ப் தொலைக்காட்சி மூலம் சனிக்கிழமை இரவு 7.30 யிலிருந்து 8.30 மணி வரை ஒரு நிகழ்ச்சியை படைக்க ஆரம்பித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியின் ஹீரோ யார் தெரியுமா? அதில் வரும் பிள்ளைகள் என்றாலும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் திரு.கலைச்செல்வன். சும்மா சட்டை கலரே ஆளை அடிக்கிற மாதிரி இருக்கும் அதோடு அவர் சொல்லும் பாங்கு தூங்குகிறவனை கூட எழுப்பிவிட்டு விடும்.நாற்பத்தையை தாண்டிய எனக்கே ரத்தம் சும்மா ஜிவ்வுன்னு ஏறும் என்றால் பாருங்களேன்.அதோடு ஒவ்வொரு வாரமும் ஒரு தனித்துவனமான ஒரு மாணவனை தேடிக்கண்டு பிடித்து அவனுடைய நேர்காணலையும் ஒளி பரப்புவார்கள். வாழ்கையில் விழுந்தவர்கள் எப்படி எழுந்து நின்றார்கள் என்று சொல்வார்கள்.பல கதைகள் பல மனிதர்கள்.

கடந்த 2 வருடங்களாக வருகிறது.போன வருடம் தவறாமல் பார்ப்பேன்.சமீபத்தில் நேரமின்மை காரணமாக பார்க்கமுடியவில்லை. 2 வாரங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியை காணமுடிந்த போது சொல்லவொன்னா ஆச்சரியம்.அவ்வளவு நன்றாக இருந்தது.முன்னேற துடிக்கும் இளைஞர்கள் நிச்சயமாக பார்க்கவேண்டும்.அதோடில்லாமல் அவ்வப்போது இந்த நிகழ்ச்சியைப்பற்றி உங்கள் கருத்துக்களை இந்த எண்ணில் சொல்லுங்கள் என்று வேறு வரி விளமபரம் ஒடிக்கொண்டிருந்தது.

போன வருடம் என்று நினைக்கிறேன்.. இந்த நிகழ்ச்சியை புகழ்ந்து அந்த தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மின்மடல் அனுப்பினேன்,பதிலே இல்லை.ஏகப்பட்ட மின் அஞ்சல் போகும் போல் இருக்கு அதான் கண்டுக்கவே இல்லை.ஒரு படைப்பாளிக்கு,ரசிகனின் கைத்தட்டல் மற்றும் தோளில் ஒரு செல்ல தட்டு போல ஊக்கம் எதுவும் கிடையாது.அது நான் கொடுக்க நினைத்தபோது சரியான நபருக்கு போகவில்லையோ என்ற மனக்குறை இருந்தது.காலப்போக்கில் மறந்துவிட்டேன்.

இந்த முறை சின்டாவை தொடர்ப்பு கொள்ளவும் என்று போட்டிருந்ததால் அவர்களை தொடர்பு கொண்டு என் எண்ணங்களை சொல்லி ஒரு மின் அஞ்சல் போட்டேன்.சில நாட்களிலேயே பதிலும் கிடைத்தது.அதில் நான் சொன்ன ஒரு விஷயம் இது தான்.
தன்னம்பிக்கை அதுவும் மாணவர்கள் "நாளை தலைவர்கள்" க்கு ஏற்படுத்துவது மிக மிக அவசியம்.அதுவும் சிங்கை இந்திய மாணவர்களுக்கு அதைவிட அவசியம்.நிகழ்ச்சியின் தரம் கருதி அதன் வீச்சு சிங்கையுடன் நின்றுவிடாமல் போக அதை ஒரு VCD/DVD யாகவோ போட்டால் இன்னும் பல பேர் பயண்பெற முடியுமே! என்றும் , அப்படி இயலாத போது youtube/google Video வில் ஏற்றிவிட்டால் அதன் வீச்சு உலகம் முழுவதும் பரவுமே! என்று கேட்டிருந்தேன்.(என் மகனுக்கும் அனுப்பலாம் அல்லவா?)

அதற்கான பதிலும் கொடுத்திருந்தார்கள்.கூடிய விரைவில் இதை இணையத்திலும் ஏற்றப்போகிறார்களாம்.

சுட்டி கிடைத்தவுடன் சொல்கிறேன்.பார்த்து மகிழுங்கள்.

இந்தியருக்கு உதவும் சின்டா.. உங்கள் பணி வாழ்க வளர்க.

Saturday, July 21, 2007

உதவவில்லையா? வெளியே போ!!

கீழே உள்ள படத்தை பாருங்கள்.இங்கு நடந்த நிகழ்ச்சி.
பேருந்தில் இருந்து இறங்கிய ஒரு பயணிக்கு தலையில் அடி,அதுவும் பேருந்து நிறுத்தத்தில் உள்ள இருக்கைகளில் மோதியதால ஏற்பட்டதாம்.
முகம் மற்றும் பல இடங்களில் ரத்த சொட்டலுடன் இறங்கிய பேருந்து ஓட்டுனர் (இங்கு கேப்டன்) யிடம் உதவி கேட்க,அவர் கண்டுகொள்ளாமல் விர் என்று ஓட்டிப்போய்விட்டாராம்.
பிறகு அங்கு வந்த பிலிபைன் சுற்றுப்பயணி ஆம்புலன்ஸ்க்கு கூப்பிட்டு உதவி செய்தாராம்,இதற்கிடையில் அடுத்த வந்த பேருந்து ஓட்டுனர் தன் பேருந்தில் இருந்த முதல் உதவிப்பெட்டியில் இருந்து தேவையான பொருட்களை கொடுத்து உதவியிருக்கிறார்.
இது எப்படியோ அந்த பேருந்து கம்பெனிக்கு தெரியவந்து,உதவி கேட்டும் மறுக்கப்பட்ட அந்த ஓட்டுனரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.
அடிபட்டவர் இதை கேட்டு மிகவும் வருத்தப்பட்டு அவரை மீண்டும் வேலைக்கு சேர்த்துக்கொள்ளுமாறு விண்ணப்பத்தை பஸ் நிறுவனம் நிராகரித்துவிட்டதாம்.
எப்படி இருக்கு பாருங்க !!

படத்தை பெரிதாக்கி பார்க்க அதன்மீது சொடுக்குங்கள்.


நன்றி: தி ஸ்டிரெய்ட்ஸ் டைம்ஸ்.

Friday, July 20, 2007

சீன காளி?

இந்த சலனப்படத்தை பல மாதங்களுக்கு முன்பு சீன நண்பர் தன் தொலைப்பேசியில் காண்பித்தார்.அப்போது அதை தரவிரக்கம் செய்து கொடுக்கமுடியுமா என்று கேட்டேன்.அது எந்த இடம் என்று தெரியவில்லை என்று சொன்னார்.
கொஞ்ச நேரத்துக்கு முன்பு வலையில் இதை பார்த்தேன்.
நீங்களும் ரசியுங்கள்... இங்கு.

Friday, July 13, 2007

உணர்ச்சிகள்

என்ன உணர்ச்சிகள் இந்த சின்ன வயதில்.

பார்த்து ரசியுங்கள்.

Wednesday, July 11, 2007

தமிழ் வெறும் பேச்சு மொழி?

நடந்த உண்மை கதை கொஞ்சம் படியுங்கள்.
நாங்கள் படித்த காலங்களில் தமிழ் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு கட்டாயமாக தமிழ் எழுத தெரிந்திருக்கும்,ஆனால் தற்போது பள்ளியில் இருந்து வெளியேறும் சில மாணவர்களுக்கு தமிழ் பேச மட்டும் தான் தெரியுமாம்.எனக்கு இது அதிர்சியாக இருந்தது.மேலே போவோம்.

நான் இருக்கும் ஒரு தமிழ் குழுமத்தில் ஒரு செய்தி, அதை முழுவதும் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள்,தமிழ் பேச்சு வழக்கில்.இப்படி

"naan 10 naalaga msgs padikavillai. velai palu matrum neram podamai. anaal indha 10 naalum naan kuzhuvinarin msgs padikamal thavittu ponen enbadu unmai. eppoda vaaipu kidaikum mail thirandu parpom endre irunden."

இதில் எனக்கு பாதிக்கு மேல் படிக்க முடியவில்லை.உடனே,எனக்கு தோனியதை இப்படி போட்டேன்.

Hi Friends
Pl do not kill Thamiz this way
Its really irritating to read this way as you have
many ways to write in Thamiz it self.
If its between yourself.. god sake don't put in public
forum.
Do need suggestion in writing thamiz? Just state what
operating system and browser you use,I can help.
Thanks for understanding.

அப்படியோவ்!! மக்கள் கொதித்து எழுந்துவிட்டார்கள்.அவர்களில் ஒருவர் தன் நிலையை இப்படி சொல்லி..

Thamizhai entha mozhiyilaavathu eluthi padikka vendum endra aaval anaega peridam nirainthu iruku.

Thamizhey theriyatha palar, intha romanised thamizhil pesum pothu, manam
kulinthu pogirathu, ithanai thadauppathu entha vithathil nyaayam?

Yaam arintha mozhigalileh Thamizhai pola inimai niraintha mozhiyillai endru
antha meesai karar sonnar, antha mozhiyai pala non-thamizhs padippathu, eluthuvathai naan kandu perumai kondu irukkein.

Thamizhai thamizhil thaan elutha vendumendraal, nichayam internettil
athai ethirpaarka mudiyaathu. Eppadiyaavathu thamizh vaazhattum,
pizhaithu irukkatum, athai thadukka vendaam.

தமிழை வாழ வைக்க நினைக்கிறார்.அவரால் முடிந்தது.அடுத்து இன்னொருவர், இப்படி

Nanum ingu Sahothari.Thirumathi .... avarhal sonnathai amothikkiren.

Unmaithan. Ellorum aringarhalahavo, panditharhalahavo irukka mudiyathu. Anal endtha vidatthilavathu Tamilai padikkumpothum, ketkumpothum manathirku evvalavu mahilchi erpaduhirathu theriyuma.

Athuvum engalaip pol veli naduhalil vazhum thamilarhalukku Tamilai padippathum ketpathum apoorvamathu. Thayavu seithu tamilil eluthum nanbarhalai uookappadutthungal, maraha veruppadaiya seiya vendam.

முடிந்தால் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கடைசியாக ஒருவர்,தற்போதைய நிலையை சொல்லியிருந்தார்.

my reason for writing thamizh in that way is simple i want the members who do not know to read thamizh script also to read the message and contribute their view points.

இப்படியே போனால் தமிழ் வெறும் பேச்சு மொழியாக மாறக்கூடிய சாத்தியம் அதிக தூரத்தில் இல்லை.

ஆமாம்,இதற்கு யாரை குறை சொல்வது?

Tuesday, July 10, 2007

சிங்கப்பூர் வண்டி

சிங்கப்பூரில் உள்ள மின்சார வண்டி உள்ளே பார்க்கனுமா?
கீழே உள்ள சலனப்படத்தை பார்கவும்.



நான் இங்கு வருவதற்கு முன்பு (1995)ஓரளவு சிங்கப்பூரை ரயிலிலேயே சுற்றி வர முடிகிறமாதிரி செய்திருந்தார்கள்.அதற்கு பிறகு ஒரு டவுன்ஷிப் உள்ளே மட்டும் ஓடக்கூடிய இலகு ரயில் திட்டம் வந்தது.இப்போது மேலும் பல தடங்களுடன் புதிய பாதைகளும் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த இலகு ரயிலில் ஒரு விசேஷம்...ஆதாவது இது போகும் தடத்தின் பக்கத்தில் மக்கள் வசிக்கும் வீடுகள் உள்ளதால் அந்த இடத்தை கடக்கும் போது வெளிப்புற கண்ணாடி புகை படிந்த மாதிரியாகி விடும். இதனால் வீட்டில் உள்ளவர்களும் வெளியில் உள்ளவர்களும் ஒருவரை ஒருவர் பார்க்கமுடியாது.மற்றொன்று இதற்கு ஓட்டுனர் இல்லை.கன்டெக்டர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

Saturday, July 07, 2007

பொம்பளை... பெரிய பொம்பளை!!

தலைப்பு பார்த்து பயந்திடாதீங்க...

சுமார் 2 வருடங்களுக்கு முன்பு எனது சொந்தகாரர் சிங்கப்பூர் பறவைப்பூங்கா சென்ற போது வீடியோ எடுத்து வந்தார்.
அப்படி எடுத்த வீடியோவில் இதுவும் இருந்தது.இவ்வளவு பெரிய பெண் அதுவும் பறவையிடம்...!! என்ன சொல்வது நீங்களே பாருங்க.



என்னவோ தெரியலை 256 MB உள்ள இந்த AVI கோப்பை wmv க்கு மாற்றும் போது ,அதன் தரம் இந்த அளவுக்கு வந்துவிட்டது.

Monday, July 02, 2007

1960 களில்

கட்டுமானத்துறை 1960 களில் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப்பார்த்தால் ஆச்சரியமாக இருக்கு.நடந்தது இங்கு அல்ல,அமெரிக்காவில். கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்.நமக்கு நன்கு பரிட்சயமான உலக வர்த்தக மையம்.1970 டிசம்பர் மாதம், கடைசி பீமை வைக்கிறார்கள்.



எவ்வளவு மனிதர்களின் உழைப்பு?? மண்ணானது சில கிறுக்கு புத்தி மனிதர்களால்!!

1970 களில் இவர்கள் உபயோகப்படுத்திய இந்த தொழிற்நுட்பங்கள் ஆசியாவை வந்தடைய சுமார் 10 ஆண்டுகள் ஆயின.ஆனால் நேற்று ஐபோன் அங்கு வந்தால் சில நாட்களில் உலகம் முழுவதும் பரவி விடுகிறது.

நிஜமாகவே உலகம் சுருங்கிவிட்டது.