# பசு மஞ்சள்
# தூக்கம்
சுமார் 15 வருடங்களுக்கு முன்பு முழு உடல் சோதனை செய்த பொது தான் என்னுடைய கொலஸ்டிரால் அளவு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது தெரிந்தது.அதன் பிறகு அதற்கு தேவையான மருந்துகள் விட்டு விட்டு எடுத்துக்கொண்டு இருந்தேன் ஆனால் அதை பற்றி பெரிய கவலை எதுவும் கொள்ளாமல்.
2013 யில் நியாண்டர் செல்வன் உடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு முயற்சியில் இறங்கினேன்.நல்ல முன்னேற்றம் தெரிய அப்படியே உணவு வழக்கமும் மாறிவிட்டது.இதன் தொடர்சியில் வைட்டமின் டி குறைவாக இருந்தது, தெரிந்து அதற்கான முயற்சியில் இறங்கினேன் ஆனால் ஏறுவதுக்கு பதில் அளவுகள் இறங்கியது.அதன் காரணம் ஆராயப்பட்ட போது உடல் வைட்டமினை கிரகிக்கும் தன்மையை குறைவாக இருந்தால் இந்த பிரச்சனை ஏற்படும் என்றும் அதற்கு பசு மஞ்சள் தெரபி எடுத்தால் ஓரளவு முன்னேற்றம் தெரியலாம் என்று சொல்லப்பட்டது.பசு மஞ்சள் கிடைப்பதில் இருந்த கஷ்டத்தில் அது தள்ளிக்கொண்டே போனது.
கொஞ்ச நாட்களாகவே என் மனைவிக்கு திடிரென்று தூக்க பிரச்சனை .நான் நன்றாக தூங்கிக்கொண்டு இருக்கும் போது இவர் பால்கனியில் உட்கார்ந்து கொண்டு தூக்கம் வரும் வரை காத்திருப்பார்.என்னென்னவோ வைத்தியம் பார்த்தும் பலனில்லாமல் இருந்தது.என்னுடைய பேலியோவுக்கு தகுந்த மாதிரி சமைத்து கொடுத்திருந்தாலும் அவருக்கு அதில் ஆர்வம் இல்லை.
திரு திருமூர்த்தி சத்தியமங்கலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருபவர். முகநூலில் அதில் வரும் பிரச்சனைகள் மற்றும் பல மேம்பாடுகளை அழகாக சொல்லி வருகிறார்.சமீபகாலமாக சந்தைபடுத்துவதிலிலும் வெற்றி கண்டுவருகிறார்.அவரிடம் பசு மஞ்சள் விறபனைக்கு இருக்கிறது என்ற விபரம் தெரிந்தவுடன் பேசி ஒரு 2 கிலோ வாங்கினேன்.
முதலில் ஒரு வாரத்துக்கு தேவையான கிழங்கை மாத்திரம் எடுத்து தோல் உரித்து பேஸ்ட் செய்து சாப்பிட்டோம்.நான் மட்டுமே சாப்பிட என் மனைவியிடம் நீயும் சாப்பிட்டுப்பார் ஒரு வேளை தலைவலி / தூக்கம் போனாலும் போகும் என்றேன்.அதிசியமாக சாப்பிட்ட முதல் வாரத்திலேயே நல்ல ஆழ்நத தூக்கம் தூங்க ஆரம்பித்து இன்றுவரை தொடர்கிறது.ஆனால் தலைவலிக்கு இது மருந்தாகவில்லை.வாங்கிய 2 கிலோ கிழங்கை பிரிஜ்யில் வைத்து உபயோகப்படுத்தி வருகிறோம்.வேறு ஒரு இடத்தில் வாங்கிய பசு மஞ்சள் சிறிது நாளிலே தண்ணீர் சத்தை இழந்து வீணாகிவிட்டது ஆனால் திருமூர்த்தியிடம் வாங்கிய கிழங்கு சும்மா "கின்" என்று இருந்தது.
பசு மஞ்சள் தெரபி எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கவும்.
தூக்க பிரச்சனை உள்ளவர்கள் முயலலாம்.

1 comment:
பசு மஞ்சள் தெரபி. புதிய தகவல்.
தகவலை பார்க்கிறேன்.
Post a Comment