Wednesday, October 26, 2016

தீர்வு

என்ன செய்வது ? என் மூளை இப்படியெல்லாம் யோசிப்பது இன்று நேற்று அல்ல. பல முறை பல்பு வாங்கினாலும் விக்கிரமாதித்யன் போல் மேலே ஏறிக்கொண்டே இருக்கிறது.

புதிய வீடு. ஒவ்வொன்றாக சரி செய்துகொண்டிருக்கும் போது பல Tap கள் பூஞ்சானம் பிடித்து விகாரமாக தெரிந்தது. தண்ணீரில் உள்ள கடினத்தன்மையோ அல்லது அமிலத்தன்மையோ இந்த வேலையை செய்கிறது என்று தெரிந்தவுடன் அதற்கான முன்னேற்பாடுகளை செய்தேன் ஆனால் பலனில்லை. வன்பொருள் கடையில் கேட்ட போது ரூ 80 கொடுத்து ஒரு சொலுசனை வாங்கினேன் ஆனால் அதுவும் திருப்திகரமாக இல்லை.இந்த பிரச்சனை புது மாதிரியாக குளியறையில் உள்ள சூடு/குளிர் நீர் கலப்பானிலும் வந்தது. என்ன காரணம் என்று பார்த்த போது அதற்கு மேலுள்ள ஷவரில் இருந்து அதிக அழுததம் காரணமாக தண்ணீர் சொட்டு சொட்டாக அதன் மேல் விழுந்துகொண்டிருந்தது.

ஷவரில் இருக்கும் நெடுக்கு பைப்பின் நீளம் 6”, அதை 8” ஆக மாற்றிவிட்டால் தண்ணீர் அதன் மேல் விழாதல்லவா? இதை மனதில் வைத்துக்கொண்டு வேறு வேலையாக சென்ற போது கடையில் கேட்டேன்.

“ரூ 146 என்றார்”

சரி பிறகு வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

ஒரு நாள் ஏதோ ஞாபமாக இருக்கும் போது கையில் இருந்த ஒரு லிட்டர் நெகிழி பாட்டில் எடுத்தேன் 2 பாகமாக வெட்டினேன்.தலைப்பகுதியையும் அடிப்பகுதியையும் தூக்கிப்போட்டேன். அதன் விட்டத்தையும் ஷவரின் விட்டத்தையும் அளந்தேன். பாட்டிலின் விட்டம் அதிகமாக இருந்தது. அதிகமாக இருக்கும் காரணத்தால் அதை இரண்டாக வெட்டி ஷவரின் உள்ளே நுழைத்து நன்றாக இறுக்கிப்பிடித்து இரண்டு முனையிலும் ஸ்டேப்ளர் பின் அடித்தேன்.





இப்போது தண்ணீர் அந்த  Mixer மீது தண்ணீர் விழவில்லை.

சரி ஒரு பிரச்சனை தீர்ந்தது.

பூசானத்துக்கு இந்த பகுதியில் உள்ள  வன் பொருள்  கடையில் கேட்டேன். இம்முறை வேறு ஒரு சொலூஷனை கொடுத்து தண்ணீரில் கலந்து உபயோகப்படுத்த சொன்னார். அதை உபயோகித்த போது ரிசல்ட் அருமையாக இருந்தது.

அந்த திரவம் இது தான்.

முன்பு




பிறகு.