Monday, May 02, 2016

இதுவும் புலம்பல் தான்.

சமீப காலத்தில் ஒரு சின்ன நிறுவனத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது அதுவும் நண்பனின் ரெபரன்ஸ் மூலமாக. நுழையும் போதே தெரியும் இங்கு பெரிதாக எதுவும் எதிர்பார்க்க முடியாது அதே சமயத்தில் வாங்கிற காசுக்கு ஏதாவது உருப்படியாக செய்யவேண்டும் என்ற முடிவுடன் தான் உள்ளே நுழைந்தேன்.ஏனென்றால் தல கட்டுமானத்துறையை படித்தவர் அல்ல பணத்தை முதலீடு செய்தவர்.

முதல் நாள் நிறுவனத்தில் நுழைந்தும் அறிமுகம் செய்துவைக்க யாரும் இல்லை பிறகு நானாகவே செய்துகொண்டேன்.எதிர்பார்த்தது தான் என்பதால் இழப்பு ஒன்றும் இல்லை.

எனக்கு என்று ஒரு வேலை கொடுக்கப்பட்டது, நீ தான் சகலத்தையும் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது.உனது ஆணை தான் இந்த பிராஜக்டை எடுத்துச்செல்ல வேண்டும் எனப்பட்டது.

இந்த பிராஜக்ட் பற்றி சின்ன அறிமுகம்; வயதானவர்களுக்கான சாப்பாடு மற்றும் மருத்துவ வசதியுடன் கூடிய வீடு. எல்லா இடங்களில் உள்ள மாதிரி அஸ்திவாரம்,பிளிந்த் பீம்,கட்டுவேலை அதன் மீது சிலாப்(கூரை) இவ்வளவு தான். இதற்கான வரைப்படம் மற்றும் டிசைன் எல்லாம் பொத்தாம் பொதுவாக போட்டு வேலை நடந்துகொண்டிருந்தது.60 மற்றும் 70 களில் வீட்டு கட்டுமான வரைப்படத்தில் பார்த்தால் அஸ்திவாரத்துக்கு மண் தோண்டி முதலில் ஆற்று மணல் ஒரு 4’ - 6” வரை போட்டு அதன் மீது Lean Concrete போடுவார்கள். இந்த ஆற்று மணல் எதற்கு என்றால் அஸ்திவாரம் தோண்டும் போது சேறும் சகதியாக இருக்கும் என்பதால் ஒரு மணல் லேயர் போட்டு அதன் மீது கான்கிரீட் போட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு நிலை அஸ்திவாரம் இருக்கும் இடத்தில் நீர் இருந்தால் மட்டுமே. இதை அப்படியே காப்பி / பேஸ்ட் பண்ண ஒரு மேஸ்திரி அப்படியே  எல்லா இஞ்ஜினியரும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.அதுவே சரியான நிலைப்பாடு என்று நினைத்து பல கன்சல்டிங் பொறியாளர்களும் வரை படத்தில் போட்டுவிட்டார்கள். மேலே வருகிற எடையை தாங்கக்கூடிய மண் வரை அஸ்திவாரம் இருக்க வேண்டும் என்பது தான் நியதி. Lean Concrete மற்றும் மண் இடையே ஒரு Soft Layer என்பது தேவையில்லாத அம்சம் -பல இடங்களில் பல நேரங்களில்.

சின்னச்சின்ன வீடு கட்டுமானத்தில் இது ஒரு பெரிய செலவு வைக்கும் ஐட்டம் இல்லை ஆனால் அதுவே பெரிய கட்டுமானம் என்றால் அதுவும் நல்ல மண் அஸ்திவாரம் இருக்கும் போது இந்த மாதிரி Cushion Layer என்பது தேவையில்லாத செலவையும் நேர விரயத்தையும் கொண்டு வரும்.இந்த மாதிரி வேலை தான் அந்த பிராஜக்ட்டில் நான் போவதற்கு முன்பு செய்துவந்திருக்கிகார்கள். இதை மாற்ற எண்ணி Consulting Engineer ஐ வேலை இடத்துக்கு கூட்டி வந்து என்னுடைய ஐயத்தை எழுப்பினேன்.நல்ல பண்பாளரான அந்த பொறியாளர் நான் கேட்டத்தின் உள் அர்த்ததை புரிந்துகொண்டு அதை நீக்கிவிட்டு  கிட்டத்தட்ட சுமார் 16 லட்சம் கம்பெனிக்கு மிச்சப்படுத்தினார்.

இப்படி செய்த எனக்கு 4 மாதத்திலேயே வெளியே போகும் வழியை காட்டினார்கள்.நல்ல வேளை எனக்கு.

இதை இப்போது எதற்கு சொல்கிறேன் என்றால் நான் இருக்கும்(பொறியாளர்/கட்டுனர்கள்) ஒரு குழுமத்தில் இதே மேட்டர் வந்த போது நான் எழுப்பிய கேள்விக்கு பதில் கொடுக்காமல் 4” 6” என்று சொல்லும் போது மனது வலிக்கிறது.


7 comments:

மனோவி said...

அப்போ நிஜமாவே மணல் தேவை இல்லையா? - இது தெரியாம ஆற்றை எல்லாம் சுரண்டிகிட்டு இருக்கோமே?

மனோவி said...

சமூக வலையில் பகிரும் வசதியை நிறுவுங்கள் நண்பரே.. நான் என்னோட முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து விட்டேன்...

வடுவூர் குமார் said...

எல்லா இடங்களிலும் தேவையில்லை தான் மனோஹர் வீிரா.In between hard strata why do u need soft media? No logic isn't?

வடுவூர் குமார் said...

Copy the address then u can share anywhere.

பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ் said...

Please write at least one post per month sir

வடுவூர் குமார் said...

I'll give a try.Thanks

பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ் said...

Your article published in this builders line Issue June 2016