Tuesday, September 01, 2015

கேரம்

பள்ளி நாட்களில் குடும்பத்துடன் விளையாடிய ஒரே விளையாட்டு இந்த கேரம் தான்.முகத்துக்கு போடும் பவுடர் தான் இந்த போர்டுக்கும் அதன் பிறகு தான் போரிக் பவுடர் எல்லாம் இருக்கு என்று தெரிந்தது.

இதிலும் பல வகையான விளையாட்டுக்கள் இருந்தாலும் கை கண்ட்ரோல் கிடைப்பதற்காக எங்களுக்கு அந்த காலத்தில் சொல்லிக்கொடுக்கப் பட்ட விளையாட்டு (படம் பார்க்க) இது.இதில் ஸ்டிரைக்கர் ஒரு காயின் மேல் மட்டுமே படலாம் அதற்கு தகுந்த மாதிரி எல்லா காயினையும் போடனும். நடுவில் இரண்டு காயின் மேல் பட்டுவிட்டால் மறுபடியும் முதலில் இருந்து ஆட வேண்டும்.



இப்படிப்பட்ட விளையாட்டை இன்றைய இளைய சமுதாயத்துக்கு சமீபத்தில் சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தேன், இரண்டு காயினுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் எழுந்து போய்விட்டான். அவ்வளவு பொருமை பொறுமை.

3 comments:

இலவசக்கொத்தனார் said...

பொறுமை. பொறுமை!! :)

வடுவூர் குமார் said...

மிக்க நன்றி. இலவசக்கொத்தனார். என்ன ஒரு மோசமான புரூஃப் ரீடிங் எனக்கு.

Saravanakumar said...

இப்படி கூட விளையாட முடியுமா ? very interesting..will try out