பலருக்கு தோட்டம் துரவு மீது ஒரு ஆர்வம் இருக்கும் ஆனால் இட மற்றும் பண பிரச்சனை போன்றவைகளால் அது கூடாமல் இருக்ககூடும்.எனக்கும் இந்த பசுமை மீது ஆர்வம் இருந்தாலும் மிகப்பெரிய ஈடுபாடு எல்லாம் கிடையாது ஆனால் மனைவிக்கு கொஞ்சம் ஆர்வம் உண்டு தேடிப்பிடித்து மண்,செடி & உரம் வாங்கி வந்து வளர்ப்பார்கள்.நான் இணையம் மூலம் கிடைக்கும் விபரங்களை கொடுத்து உதவுவேன் மற்றபடி அவ்வப்போது தோட்டக்காரன் வேலையும் கிடைக்கும்.
மிக எளிதாக வளர்க்க கூடியதாக தோன்றிய தக்காளி செடியை வளர்க்கலாம் என்று யோசித்து பல்லாவரம் மேம்பாலத்துக்கு கீழே போட்டுவைத்திருக்கும் நெகிழி பெட்டி இரண்டு ரூபாய் 140 க்கு வாங்கினேன்.செடி வளர்ப்புக்கு ஏற்ற மாதிரி மேற் மூடியை அவர்களே வெட்டி கொடுத்தார்கள்.
மனைவி தக்காளியை சமையலுக்காக வெட்டிய போது கிடைத்த விரைகளை நன்றாக தண்ணீரில் அலசிய பிறகு மண் மீது தூவி அதன் மேல் சிறிது மண் போட்டு மூடினேன்.கொஞ்ச நாளில் செடி முளைத்தது ஆனால் இரண்டு அங்குலம் உயரம் வந்தது வளர்ச்சி சுணங்குவது போல் தோன்றியதால் செடியை பிடிங்கி வேறு தொட்டியில் நட்டு தண்ணீர் விட்டேன்.தொட்டி பெரியதாக இருப்பது போன்று தோனியதால் மேலும் இரண்டு செடிகளை நட்டேன்.கொஞ்ச நாளில் பெரிதாகி இப்போது பூவும் வந்துவிட்டது ஆனால் வேர் மண்ணிற்கு மேல் புறம் தெண்படுவதால் மண் தேவையான அளவு இல்லையோ என்று தோனுகிறது.
இது ஒரு முயற்சி என்பதால் தவறுகளை திருத்தி மேலும் முயலவேண்டும்.
இரண்டாவது தொட்டியில் இப்போதே காய்கறி கழிவுகளை போட்டு தொழு உரம் தயாரிக்க தயார் செய்துவருகிறேன்.மொட்டை மாடியில் வைத்திருப்பதால் மண்,சட்டி எல்லாம் கீழிருந்து கொண்டு வரவேண்டியுள்ளது.
கருதுளசி மற்றும் மல்லிகை செடிகள்.
ரோஜாவும் இருக்கு, இப்போது தான் மொட்டு வருகிறது.

6 comments:
மொட்டை மாடி பூங்கா.... நன்றாக இருக்கிறது. இங்கே எனது வீட்டில் இதற்கும் வழியில்லை!
வீட்டிலும் ரோஜா செடி, செம்பருத்தி செடி உண்டு... அதில் பூக்கள் பூக்கும் போது, மனதிலும் பூக்கும்... அந்த சந்தோசத்திற்கு ஈடு இணை இல்லை...
வாங்க வெங்கட் நாகராஜ்,மிக்க நன்றி.இப்ப டெல்லி சீசனில் தான் பூத்துக்குலுங்குமே பிறகு எதுக்கு தனி ஆவர்த்தனம்? :-)
வாங்க தன்பாலன்,தரை வீடாக இருந்தால் இன்னும் முயற்சி செய்யலாம்,தொட்டி என்பதால் நாம் நினைக்கிற மாதிரி கொண்டு வருவதில் சிக்கல் இருக்கு.
மாடியில் இருப்பவங்களுக்கு தொட்டி பூங்காதான் சரி வரும் கண்ணுக்கும் மனதிற்கு குளுமையாக இருக்கும். வீட்டிற்கும் உபயோகமாக இருக்கும்.பகிர்வுக்கு நன்றி
மிக்க நன்றி திருமதி லக்ஷ்மி.
Post a Comment