Sunday, July 22, 2012

ராட்சஷன்.

கட்டிய கட்டிடத்தை இந்த ராட்சஷன் துப்பி எறியும் போது  நரம்புகள் புடைத்தாலும் அந்த தொழிற்நுட்பம் வியக்கவே செய்கிறது .அலுவலகத்துக்கு பக்கத்தில் இருக்கும் இக்கட்டிடம் ஒரு காலத்தில் ஷூட்டிங் கட்டிடமாகவும் பிறகு அச்சுத்தொழில் நடந்ததாகவும் சொல்லப்பட்டது.மெட்ரோ கபளீகரம் செய்யும் சில நிலங்களால் சுற்றுவட்டாரத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு வழிவிடும் பல கட்டிடங்களில் இதுவும் ஒன்று.





என்னுடைய கணிப்பில் இக்கட்டிடம் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கட்டியதாக இருக்ககூடும் என்பதோடில்லாமல் அவ்வப்போது பல மேம்பாடு பணிகளையும் செய்திருக்ககூடும் என்பதை இடிபாடுகளில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

15 அங்குல சுவர்கள்,உருண்டு கம்பிகள் கொண்ட 3 அங்குல கான்கிரீட் மீது செங்கல் சிலாபுகள் என்று கேள்விப்பட்டிராத தொழிற்நுட்பங்களை காணமுடிந்தது.கீழே உள்ள படம் சிலாபே செங்கல்லில் கட்டியிருப்பதை காட்டுகிறது.


பாதி உடைந்த நிலையில் வசந்த மாளிகை எடுத்த  கட்டிடம்....கீழே.


 

7 comments:

வவ்வால் said...

குமார்,

//15 அங்குல சுவர்கள்,உருண்டு கம்பிகள் கொண்ட 3 அங்குல கான்கிரீட் மீது செங்கல் சிலாபுகள் என்று கேள்விப்பட்டிராத தொழிற்நுட்பங்களை காணமுடிந்தது.கீழே உள்ள படம் சிலாபே செங்கல்லில் கட்டியிருப்பதை காட்டுகிறது.//

இந்த முறை கொஞ்சம் ஆச்சரியமா தான் இருக்கு, பிரிக்&மார்ட்டர் வச்சு மேசனரி முறையில கட்டினதுல எப்படி கான்கிரிட்னு பார்க்கிறேன்.

என்னோட கணிப்பு என்னவெனில் , மேசனரி ஒர்க்ல கட்டிய தளத்துக்கு அடியியில பின்னாளில் கான்கிரிட் ரீஇன்ஃபோர்ஸ்மெண்ட் செய்து இருக்கலாம். இப்படி பழைய வீடுகளை வலுவாக்கும் வேலைகளை செய்கிறார்கள்.

பாண்டியில் விடுதலைக்கு முன்னர் கட்டிய கட்டிடங்களை இடிக்க தடையுள்ளது ,எனவே வீடு சேதமடைந்தாலும் இடிக்க முடியாது,அங்கே எல்லாம் பழைய தளத்துக்கு அடியில் பில்லர் போட்டு புது கான்கிரீட் தளம் போட்டுவிடுவார்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

யார் கட்டியதோ...? அவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்...

வடுவூர் குமார் said...

வாங்க வவ்வால், உங்கள் அனுமானம் வித்தியாசமாக இருந்தாலும் அப்படி நடந்திருக்க வாய்பில்லை என்று தோனுகிறது ஏனென்றால் இந்த உருட்டு கம்பி தொழிற்நுட்பம் வந்து சக்கை பொடு போட்ட காலம் 1970 வாக்கில்.
பாண்டி விதிமுறையை இப்போது தான் கேள்விப்படுகிறேன்.

வடுவூர் குமார் said...

வாங்க தனபாலன், கட்டியவர் இன்னும் இருந்தால் அதிசியம் தான்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் இன்று திரு சொக்கன் அவர்களால் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_2.html) சென்று பார்க்கவும். நன்றி !

நேரம் கிடைத்தால் என் தளம் வாங்க... நன்றி.

Anonymous said...

இராட்சசன் என்று கூறுவது சரி .வியக்கத் தகுந்த வேலை தான் செய்கிறான்.
படங்களோடு போட்டதற்குப் பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.

வடுவூர் குமார் said...

நன்றி வேதா.