சமீபத்தில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நான்கு சக்கர வாகனத்தில் உள்ள முகப்பு மற்றும் ஜன்னல் கண்ணாடிகளில் ஒளி புகு தண்மையை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தது, அதன் மூலம் கண்ணாடிகளின் மீது ஒட்டப்படும் Sun Film க்கு தடைவந்தது.இதன் சாதக பாதகங்கள் Facebook சென்னை மாநகர காவல் பக்கத்தில் அலசப்பட்டது.மீறப்படும் வாகனங்கள் மீது முதன் முறை 100 ரூபாய் அபராதமும் அதற்கு மேல் 300 ரூபாயும் என்று சொல்லப்பட்டது.
என்னுடைய கண்ணாடியிலும் இவ்வகை Film ஒட்டப்பட்டிருந்ததால் அதை எடுக்க சரியான நேரம் எதிர்பார்த்திருந்தேன்,அதற்கு முன்னால் அதை நாமே எடுக்கமுடியுமா என்று கூகிளில் தேடிய போது இரண்டு மணி நேரம் வெய்யில் காரை வைத்துவிட்டு அதை எடுத்தால் சுலபமாக இருக்கும் என்றும் Mr Muscle என்ற கண்ணாடி சுத்தப்படுத்த பயண்படும் Solution இருந்தால் இன்னும் வேலை சுலபமாக முடியும் என்று சொல்லப்பட்டது.இன்று காலை அந்த வேலையில் இறங்கினேன் சுமார் 1 மணி நேரத்தில் அவ்வளவும் முடிந்தது.
பிலிம் எடுத்ததும் எடுக்காததும்
சின்ன பிளேட் மூலம் பிலிமின் முனையை நெம்மிவிட்டுக்கொள்ளுங்கள்.
பிரிக்கும் போது Mr Muscle solution ஐ தெளிக்கவும்.
மொத்தமாக எடுத்த பிறகு.
2 comments:
குமார்,
டூ இட் யுவர் செல்ஃப் கைட் போடலாம் ;-))
உத்தரவு வந்ததும் எடுத்துட்டிங்களே,நாளைக்கே இருக்கலாம்னு தீர்ப்பை மாத்திட்டா என்ன செய்வீங்க :-))
சன் கண்ட்ரோல் பில்ம் இல்லைனா கார் ரொம்ப சூடா இருக்கே, உள்ள, ஏ.சி போட்டாக்கூட சரியா குளிர்ச்சியாகலை. ரொம்ப நாளா பில்ம் அஹ் ஒட்டாம இருந்து 6 மாசம் முன்ன தான் ஒட்டினேன். அதுக்கே ஐஎஸ்.ஐ எல்லாம் சொன்னான்.
இப்போ பிய்க்கிறதா வேண்டாமானு மண்டையை பிச்சுக்கிறேன் :-))
ஐ10 பெட்ரோல் தானே உங்க வண்டி?
வாங்க வவ்வால், இந்த வண்டியை வாங்கும் போதே விற்றவர் சொல்லிட்டு தான் கொடுத்தார்.இந்த தீர்ப்புக்கே இவ்வளவு நாள் ஆனது இதை மாற்றி எழுதும் போது அது இன்னும் பல வருடங்களாகியிருக்கும்.
என் வண்டி ஐ10 பெட்ரோல் தான். இன்னும் நல்ல வெய்யிலில் ஓட்டிப்பார்க்கவில்லை அப்போது தான் குளிர்சாதனத்தின் திறன் தெரியக்கூடும்.
Post a Comment