Thursday, May 31, 2012

நாகை செடில்


 வேண்டுதல்களில் எவ்வளவோ ரகம் அதில் இதுவும் ஒன்று ஆனால் இவ்வகை வேண்டிதல் வேறு எந்த கோவிலிலும் கண்டதில்லை.நாகை மாரியம்மன் கோவிலில் நடந்த செடிலின் நகர்படம் கீழே.

கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கி பார்க்கலாம்.

செடில்- மாரியம்மன் கோவில்


 நகர் படம் கொடுத்த பத்ரிக்கு நன்றி.

6 comments:

sury siva said...

நாகை மாரியம்மன் கோவில் செடில் உற்சவத்தின் படம் இட்டமைக்கு நன்றி.

முப்பத்திரண்டு வருடங்கட்கு முன்பு நாகை யில் நான்கு வருடங்கள் இருந்த நாட்களை எல்லாம் நினைவு படுத்திக்கொள்ள‌
நல்ல தோர் வாய்ப்பினை நல்கியமைக்கும் நன்றி.

சுப்பு ரத்தினம்.

வடுவூர் குமார் said...

நானும் பல வருடங்களுக்கு பிறகு செடிலை பார்க்கிறேன் சூரி ஐயா.வருகைக்கு நன்றி.

கோவி.கண்ணன் said...

ஒரு காலத்தில் மூன்று முறை சுற்றுவார்கள், மூன்று நாளைக்கு காத்திருப்பில் இருந்து சுற்றுவார்கள், அதாவது திருவிழா ஞாயிற்றுக்கிழமை முடிந்து அடுத்த அடுத்த நாளும் செடில் சுற்றிக் கொண்டு இருக்கும். ஐந்து ஆண்டுக்கு முன்பு தெரிந்தவர் ஒருவர் செடில் சுற்றில் அடிபட்டு இறந்துவிட்டார்.

வவ்வால் said...

குமார் ,

இதுக்கு பேரு தான் செடில் ஆ, செடல் திருவிழானு எங்க ஊர்ப்பக்கம் காவடி ,அலகு குத்து, அப்புறம் தசாவதாரம் ல கமலை படுக்கை வாட்டுல கொக்கில மாட்டி தொங்க விட்டாப்போல தொங்கிட்டு போறது எல்லாம் செய்றாங்க.

பார்க்கவே கொஞ்சம் பயமா இருக்கும்.

மோஷன் பிக்சருக்கு நகர்ப்படமா (முதலில் டவுன் படம்னு நினைச்சுட்டேன்),நல்லாத்தான் இருக்கு, ஆனால் சலனப்படம்னு ஒன்று புழக்கத்தில் இருக்கு ,அதை விட பதிவுகளில் "காணொளி" என்ற சொல்லாடல் பிரசித்தம்.

------

மேலும் உங்களது தலைவலி ஆரம்பம் என்றப்பதிவில் இருந்து ,வீட்டு மேற்கூறை பெயர்ந்து விழும் படம் ஒன்றினை உங்கள் பெயருடன் எனதுப்பதிவில் பயன்ப்படுத்தியுள்ளேன். ஹி..ஹி நீங்க எதுவும் சொல்லமாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கையில் முன் அனுமதி வாங்கலை.

நன்றி!

link:
பசுமை மாடி- வீட்டுத்தோட்டம்

வடுவூர் குமார் said...

தாராளமாய் எடுத்துக்கொள்ளுங்கள்.
சில வருடங்களுக்கு முன்பு மாடி தோட்டம் என்று யாரோ போட்ட பதிவை இன்றுவரை ஒரு விபரத்துக்காக தேடினேன் கிடைக்கவில்லை, நல்ல வேளை அந்த விபரங்கள் உங்கள் பதில் கிடைத்தன.மிக்க நன்றி.

வடுவூர் குமார் said...

கோவியாரே, 3 முறையா? சரியாக ஞாபகம் வரமாட்டேன் என்கிறது.