Tuesday, February 14, 2012

சரியான படம்!

இதுவரை 4 கேமிரா வாங்கியிருப்பேன் அதில் நூற்றுக்கணக்கான படங்கள் எடுத்திருப்பேன் ஆனால் இது போல் இதுவரை வரவில்லை.

நடு சாலை என்றாலும் என்னை வேடிக்கை பார்த்த ஆட்டோகாரரையும் உதாசீனப்படுத்திவிட்டு நன்றாக சிரித்துவிட்டு வந்தேன்.

அரசாங்க வண்டி “No Parking" க்கு அருகில்!! சாலை ஆக்கிரமிப்பு வேறு.


படத்தின் மேல் சொடுக்கி பெரிதுபடுத்தி பார்த்து அனுபவியுங்கள்.

இது திநகர் மற்றும் நந்தனம் இருக்கும் ஒரு கிளை சாலையில்(சதுல்லா சாலை) உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவருடன் ஒரு சின்ன விவாதம்..

“ஆவிச்சி(விருகம்பாக்கம்) பள்ளி அருகே என்ன தூசி, பாவம் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வர இதுவே ஒரு காரணமாக அமையும்”

இதுக்கு பொதுமக்களா காரணம்? சாலையை தோண்டிவிட்டு அப்படியே விட்டுவிட்டு போன குத்தகைக்காரரை யார் தண்டிப்பது?

இப்படியே இந்த விவாதம் சுமார் 30 நிமிடங்களையும் கடந்து நம் அரசாங்கத்தின் கையாலாகதனத்தின் விளைவு என்று தான் முடிவுக்கு வரமுடிந்தது.

திருவாளர் சோ.. இந்த ஆண்டு விழாவில் சொன்ன அந்த அரசாங்க  வண்டி இது தானா? இது இன்னும் சில வருடங்கள் இங்கேயே இருந்தால் விஜயகாந்துக்கு ஒரு நல்ல துருப்புச்சீட்டு வாய்ப்பு தன்னாலே கிடைத்த சந்தோஷம் வரும்.

3 comments:

வடுவூர் குமார் said...

நேற்று FB யில் போட்டவுடன் சென்னை போக்குவரத்து போலீஸ் அதை தூக்கி பக்கத்து சாலையில் வைத்துவிட்டார்கள்.

கோவி.கண்ணன் said...

முதியோர்களைப் போல் தெருவில் விடப்பட்ட முதிய வாகனம் :)

வடுவூர் குமார் said...

முதியோருக்கான காப்பீடு திட்டம் உதவாதா?
இதை எப்படி புக்கில் இருந்து எடுப்பது என்று தெரியவில்லையோ என்னவோ!