Sunday, February 12, 2012

தலைவலி ஆரம்பம்.

வீடுகளில் மராமத்து வேலைகள் ஆரம்பம் ஆகிறது என்றால் தலைவலி ஆரம்பிக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம் ஏனென்றால் எப்போது வரும் எப்போது போகும் என்பது தெரியாது.ஒரு வேலை ஆரம்பித்தால் அதன் தொடர்ச்சி எலி வலை போல் எங்கு முடியும் என்று தெரியாது. செலவுக்கு இவ்வளவு தான் என்று முடிவாக ஒதுக்கமுடியாது.

சில வருடங்களுக்கு முன்பு மேற்கூரையில் ஏதோ டொம் டொம்  என்று சத்தம் வந்தவுடனே தெரிந்தது அங்கு பிரச்சனை என்று.
 
கூரையில் முதன் முதலில் விரிசல் ஏற்பட்டவுடன் தெரிந்தவர் மூலம் வந்த பூச்சு வேலைக்காரர் கடையில் கிடைக்கும் துறு நீக்கியை உபயோகித்து கம்பி மேல் இருக்கும் துறுவை நீக்கிவிட்டு கொஞ்சம் அதிக ஸ்ட்ராங்க் உள்ள சிமிண்டை உபயோகித்து  பூசினேன்.அந்த பூச்சு சுமார் 1.5 வருடம் தாங்கியது,அதே இடத்தில் திரும்பவும் டொம் சத்தம் கேட்க நானே அதை உடைக்க சின்ன தாம்பாளம் அளவுக்கு பூசிய கான்கிரீட் வந்தது.உள்ளே இருந்த கம்பி துறுபிடித்து விரிவாக அதன் கீழ் பக்கம் இருக்கும் கான்கிரீட்டை வெளியே தள்ளிவிட்டது. ஒரு ஓரத்தில் கம்பியின் கீழ்பக்கம் வைக்கப்படும் சிறிய கான்கிர்ரீட் துண்டு எவ்வித ஆட்சேபனை இன்றி கையாலேயே எடுக்க முடித்தது. 18 வருடத்துக்கு முன்பு எப்படி கான்கிரீட் போட்டார்கள் என்பதை இது தெளிவாக காட்டியது.


ஒரு சின்ன பகுதி தானே விழுந்திருக்கு என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது மேலும் சில இடங்களில் வீக்கம் தெரிய வரவேற்பறை முழுவதும் கைவைக்க வேண்டிய நிலை வந்தது.


இம்முறை தெரிந்தவர் ஒருவரே குத்தகைக்காரரை அனுப்பி அவர் செய்யும் வேலையில் உபயோகிக்கும் முறையை அமல்படுத்தினார்.கீழே உள்ள துறு நீக்கியை பிரஸ் கொண்டு கம்பி மீது அடிக்கவேண்டும். இது ஒருவித அமிலம் என்பதால் கம்பி மீது படும் போது சிறிது நுரை வரும்.

இம்முறையில் கம்பி மீது அந்த கெமிகலை அடித்துமுடித்து இரண்டு மணி நேரம் கழித்து கீழே காண்பித்துள்ள Compound ஐ சிமிண்டுடன் கலந்து விரிசல் உள்ள இடங்களில் போடவேண்டும் அதன் பிறகு குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு அதன் மீது தண்ணீர் தெளித்து அது இருக வழிசெய்ய வேண்டும்.

எல்லாம் செய்து முடிக்க சுமார் 3 நாட்கள் ஆனது. பெயிண்ட் அடிக்க இந்த கான்கிரீட் இருக வேண்டும் என்பதால் காத்திருக்கோம்.


Compound கலக்கும் விதம் மற்றும் விகிதம் அந்த உரிமையாளர்கள் சொல்லியிருக்கும் படி செய்யவேண்டும். எல்லாம் சரி, இனி இப்பிரச்சனை வராதா? என்று கேட்டால் பதில் கிடையாது. ஏனென்றால் மறுபடியும் விரிசல் வர பல காரணிகள் நம் கண்ணுக்கே தெரியாமல் கூட இருக்கலாம்.இம்முறை வெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே.

6 comments:

வவ்வால் said...

வடுவூர் குமார்,

புதிதாக கட்டுவதை விட , பழைய வீட்டில் மராமத்துப்பணி செய்வது தலைவலியானது.சீலின்கில் தண்ணீர் இறங்கினால் தான் அப்படி துருப்பிடிக்கும், மேலே காலியாக இருக்கா? டைல்ஸ், வாட்டர் புருஃபிங் செய்யவில்லை எனில் மீண்டும் கொட்டும்.

ஏன் வீட்டுக்கு பாலங்கள் கட்டும் போது பயன்படுத்துவதது போல கோட்டட் ரீபார்ஸ் பயன்ப்படுத்த மாட்டேன்கிறார்கள்.

வடுவூர் குமார் said...

வாங்க வவ்வால்
இந்த வீடு 18 வருடங்களுக்கு முன்பு கட்டியது, கான்கிரிட் கூட அதிர்வான் இல்லாமல் சும்மா கட்டையை வைத்து தட்டி போட்டிருக்கிறார்கள் போலும்.கட்டிய புதிதில் ஒருவேளை நீர் இறங்கி கம்பியை பாதித்திருக்கலாம் அது இப்போது கைவரிசையை காண்பிக்கிறது.பழைய கால முறைப்படி டைல்ஸ் இருக்கு ஆனா அதற்கு கீழ் இருக்கும் சுண்ணாம்பு மற்றும் செங்கல்லில் ஊறும் தண்ணீர் அப்படியே காத்து கான்கிரீட்டை பாதித்திருக்ககூடும்.
கோட்டட் கம்பியெல்லாம் இப்போது தான் சந்தையில் உள்ளது அதோடு அதற்கு ஆகும் செலவு ஒரு காரணமாக இருக்ககூடும்.எல்லாம் போட்டுக்கொடுத்தா அவர்களுக்கு பிஸ்னஸ்? அரசாங்க விதிப்படி பாலங்கள் மற்றும் பெரிய கட்டுமானங்களுக்கு 75 வருடத்தில் இருந்து 120 ஆண்டுகள் என்ற விதிமுறை இருக்கு ஆனால் நாம் இருக்க வாங்கும் வீட்டுக்கு யார் வயதை நிர்மாணிக்கிறார்கள்? இன்றைய கட்டத்தில் ஒரு வீடு 25 வருடங்கள் நல்ல நிலமையில் இருப்பது என்பது அவரவர் அதிர்ஷ்டத்தை பொருத்தது.

ராஜ நடராஜன் said...

வடூவூரார் & வவ்வால்!

இரண்டு பேருமே இப்படி தனியா ரகசியம் பேசற விசயமா இது:)

நாலு பேருக்கு தெரிய வேண்டிய ரகசியம்ல்லவா இது!

வடுவூர் குமார் said...

வாங்க ராஜ நடராஜன், ரகசியமா!அதான் பொதுவில் போட்டிருக்கோம் ஆனால் பொதுமக்களுக்கு இதிலெல்லாம் ஆர்வம் இருப்பதில்லை.

தருமி said...

இதையும் படிச்சி பாருங்க ...

Anonymous said...

We had this problem 2 years back. Water was oozing out all over the terrace walls. We spent a lot of money and lot of noise and headache to set it right. Then onwards, we are careful to see that water does not stay on the terrace.

http://www.gardenerat60.wordpress.com