Saturday, July 30, 2011

என்ன செய்கிறார்கள் இவர்கள்?

படத்தை பாருங்கள்...ஏதோ கான்கிரீட்டை உடைக்கிறார்கள் அவ்வளவு தான் என்று இத்துறையில் இல்லாதவர்களுக்கு தெரியும், ஆனால் இதனுள் பல ரகசியங்கள் ஒளிந்திருக்கு.



கட்டிடம் தாங்கும் திறனை அதிகரிக்க Pile எனப்படும் கான்கிரீட் தூண்களில் வரும் பலவகைகளில் இதுவும் ஒன்று. சில நாட்களுக்கு முன்பு Driven Pile என்னும் முறையைப்பற்றி சொல்லியிருந்தேன் அது போல் போடப்பட்டது தான் இது.இம்முறையில் போடும் போது சாதாரன நிலையில் இருக்கும் இடத்தின் மீது இவ்வியந்திரத்தை நிறுத்தி செய்வார்கள். வேலை முடிந்ததும் தேவையான அளவுக்கு இந்த Pile ஐ உடைத்துவிட்டு அஸ்திவாரத்துக்கு தேவையான கம்பி கட்டி கான்கிரீட் போடுவார்கள்.

தேவையான் அளவுக்கு உடைத்து...இந்த வேலை தான் மேல் உள்ள படத்தில் பார்க்கிறீர்கள்.இந்த வேலையில் இவர்கள் செய்வது துளிகூட பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காமல் செய்துவருகிறார்கள்.அவர்களிடம் சிறிது நேரம் பேச்சுக்கொடுத்த போது...

ஏம்பா! இப்படி கண்ணுக்கு பாதுகாப்பு கண்ணாடி போட வேலை செய்கிறீர்கள்?

சார்,கண்ணாடி போடலாம் ஆனால் வேலை செய்யும் போது வியர்வை வழிந்து என் பார்வையை மறைக்கும் நான் உளி மீது அடிக்கவேண்டிய அடி தவறுதலாக கீழே உள்ளவர் மீது விழலாம். இது சம்மட்டி வைத்திருப்பவர் சொன்னது.

அப்படி என்றால் கீழே நிற்பவர் கண்ணாடி போடலாமே?

பதில் இல்லை.

கண் எவ்வளவு முக்கியமானது இவ்வளவு தூரத்தில் நிற்கும் நானே பல முறை யோசித்து தான் நிற்கிறேன் நீங்கள் இப்படி கவனம் இல்லாமல் வேலை செய்கிறீர்களே என்றேன்.

சார்,(இந்த சாரை எப்பத்தான் விட போகிறார்களோ!!) இதெல்லாம் எங்களுக்கும் புரிகிறது ஆனால் அதெல்லாம் வேலக்காகாது என்று முடித்துவிட்டு அவர்கள் வேலையை ஆரம்பித்தார்கள். தலைக்கவசம் போட வேண்டும் என்று தெரியும் ஆனால் இப்படி குனிந்து சம்மட்டி அடிக்கும் போது அது தலையில் இருந்து நழுவும் வாய்ப்பு உள்ளதால் எங்கள் நிலை தடுமாற வாய்ப்பு உள்ளது என்றார்கள்.

இந்த வேலையை பாதுகாப்பாக செய்ய பல முறைகள் இருந்தாலும் முழுமையாக மனித வளம் கொண்டு இவ்வேலையை செய்யும் போது இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்.குத்தகைகாரர்கள் இயந்திரங்களை வைத்து வேலைபார்பதற்கு ஆகும் செலவை கணக்கிட்டு மனித வளத்தை நாடுகிறார்கள் என்றே தோன்றுகிறது.

மேலே உள்ள படத்தை சொடுக்கி பெரிதாக்கி பார்த்தால் இவர்களின் தொழிற் திறமை தெரியும். முதலில் Pile ஐ சுற்றி இருக்கும் சுழற்கம்பியை எடுத்துவிட்டு பிறகு நேர் கம்பிகளை வெளியே எடுத்துவிட்டு எந்த இடத்தில் Pile ஐ உடைக்கவேண்டுமோ அங்கு சிறிது உடைத்துவிட்டு மேலே தட்டினால் கேக் மாதிரி விழுந்துவிடும்.

5 comments:

  1. நல்ல பகிர்வு குமார்,
    நல்ல படமும் விளக்கமும்,இங்கே பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதே இல்லை,சென்னை மெட்ரோவிலேயே நிறைய பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. ஆமாங்க கீதப்பிரியன்.போட்டித்தன்மை நிறைந்துவிட்டதால் குறைவான விலைக்கு வேலை எடுத்துவிட்டு இப்படி பழங்கால முறைகளை கடைப்பிடிக்கிறார்கள்.

    ReplyDelete
  3. mmm டிரிவென் பைல் படிச்சுட்டு வரேன். இது புரியுது ஆனாலும் ஏன் அனாவசியமா கான்க்ரீட் போட்டு அப்புறம் உடைக்கனும்ன்னு புரியலை.

    ReplyDelete
  4. திவா
    இதற்கு ஓரிரு காரணிகள் இருக்கு.
    முதல் காரணி கான்கிரீட் எதுவரை தேவையோ அந்த நிலையில் பைல் அடிக்கும் இயந்திரம் இருக்காது.ஏன் இருக்காது என்று கேட்டீர்கள் என்றால் பைல் கேப் ஒரு பெரிய பரப்பளவில் சிறிய சதுர/செவ்வக அளவிலேயே இருக்கும் என்பதால் அந்த மட்டத்துக்கு மண்ணை எடுத்து பிறகு மூடி.... தேவையற்ற செலவு.
    மற்றொன்று ஒரு பைல் போட்ட பிறகு ஏதோ ஒரு நிலையில் மண்ணுக்கு கீழே புட்டுகிச்சு என்றால் இப்படி போடும் எக்ஸ்ரா கான்கிரீட் ஓரளவு உதவும்.
    இந்த வேலையில் இப்போதைக்கு மாற்று இல்லை.

    ReplyDelete
  5. திரு சுப்பிரமணியம் - படித்துவிட்டு வருகிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?