Sunday, May 29, 2011

இதுவும் ஒரு வகை

எச்சரிக்கை:இது தொழிற்சார் பதிவு.

கட்டிடத்தின் தாங்கும் சக்தியை அதிகரிக்க பெரிய பெரிய கட்டிடங்களுக்கு மண்ணுக்கு கீழே தாங்கும் தூண்களை இறக்குவார்கள். எடைக்கு ஏற்ற மாதிரி பலவித அளவுகளில் இந்த தூண்கள் இருக்கும்.இதை மேலும் அலசாமல் சமீபத்தில் நான் பார்த்த ஒரு வித்தியாசமான தூண் கட்டுமானத்தை பார்க்கலாம். தூண் தூண் என்று சொல்லும் போதெல்லாம் சப்ஜெக்ட் தெரிந்தவர்கள் Pile என்று அர்த்தம் செய்துகொள்ளுங்கள்.



மொத்தமே 5 பேர் தான்.நெகிழான மண் உள்ள இடம் மற்றும் அளவான தூரம் மண்ணுக்கு கீழே இருக்குமானால் இம்முறை சரியாக வரும். மேலே உள்ள படத்தில் 350 மி மீட்டர் விட்டம் உள்ள தூண்,மண்ணுக்கு கீழே 5 மீட்டர் மட்டுமே போகக்கூடிய தூண் அமைக்கும் வேலையை செய்கிறார்கள்.இது அனேகமாக சுற்றுச்சுவர் கட்டுவதற்கான அஸ்திவாரத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும்.

மண்ணில் துளை போடும் போதே உள்ளே இருக்கும் மண்ணை எடுக்கும் விதத்தில் அமைந்துள்ள துருத்தியை செக்க்கு மாடு போல் 4 ஆட்கள் சுற்றுவார்கள்.அனுபவத்தில் சில சுற்றுகள் முடிந்த்த பிறகு அது சேகரிந்த மண்ணை வின்ஞ் மூலம் தூக்கி மண்ணை வெளியில் கொட்டுவார்கள்.இதே மாதிரி தேவையான ஆழத்துக்கு மண்ணை தோண்டிவிட்டு கம்பி போட்டு கான்கிரீட் போட்டுவிடுவார்கள்.



எவ்வளவோ தொழிற்நுட்பம் வளர்ந்த நிலையில் இம்மாதிரி மனித உழைப்பை நம்பி செய்யும் வேலையும் அவ்வப்போதும் நடந்துவருகிறது,இதுவே ஒரு சில இடங்களில் Economical ஆகவும் இருக்கக்கூடும்.

2 comments:

geethappriyan said...

ஆமாம்,நான் சைட் சூபர்வைசராக இருக்கும் போது இப்படி போரிங் பைல் காம்பவுண்டு சுவர் போன்ற லோட் வராத கட்டுமானங்களுக்கு இதே முறையில் செய்வோம்,நல்ல விளக்கம்

வடுவூர் குமார் said...

நன்றி கீதப்பிரியன்.