Monday, August 09, 2010

இது சரியல்ல.

ஒரு காலத்தில் சென்னையில் வீட்டுக்கு குளிர்சாதன வசதி என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையில் தான் இருந்தது ஆனால் இப்போது சுமார் 40 விழுக்காடு வீடுகளில் குளிர்சாதன வசதி வந்துவிட்டது.இரவில் தூங்க காற்றாடி போய் குளிர்சாதனம் அத்தியாவசியமாகிவிட்டது.வீட்டு குளிர்சாதன வசதிக்கு சிறிதும் பெரிதுமாக பல உபகரணங்கள் இருந்தாலும் மத்திய வர்கத்துக்கு கைவசப்படுவது இரண்டு ரகம் தான்,ஒன்று Window Unit மற்றொன்று Split Aircon.

முதல் வகை சுவரில் இருக்கும் ஓட்டையில் அதன் பிரேமுடன் பொருத்தி தேவையான ஆணிகளை கொண்டுமுடுக்கிவிடுவார்கள்.சிங்கையில் இவ்வகையிலும் தரனான Stainless Brackets களை மட்டுமே உபயோகிகவேண்டும் என்ற சட்டம் இருக்கு,ஏனென்றால் இவ்வகை குளிர்சாதன பெட்டி மேலிருந்து கீழே விழுந்து பல விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.நம்மூரில் சரியான முறைகளை அமல்படுத்தாவிட்டால் இன்னும் பல விபத்துக்கள் இதனால் ஏற்பட சாத்தியங்கள் உள்ளது.

இரண்டாம் வகை Split Aircon : இது கொஞ்சம் பவர் அதிகம்என்பதாலும் ஒன்றுக்கு மேற்பட்ட அறைகளுக்கு குளிர்சாதன வசதி கொடுக்க முடியும் என்பதால் ஒரு சிறிய கம்பிரசரை பொருத்தி இவ்வசதியை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.இதை பொருத்தும் இடம் மற்றும் சில நியதிகள் இருக்கின்றன.கொஞ்சம் எடை அதிகம் என்பதால் இதை சரியாக பொருத்த வேண்டும் ஆனால் பல மாடிக்கட்டிடங்களில் இம்முறைகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு சன்ஷேடு மேல் வைத்துவிடுகிறார்கள். இந்த சன்ஷேடு சரியான முறையில் கன்கிரீட் போடப்பட்டிருந்தாலும் இவ்வகை எடைகளை தாக்குப்பிடிக்க ஏற்ற வகையில் டிசைன் செய்திருக்கமாட்டார்கள்,அத்துடன் இதிலிருந்து கசியும் நீர் கம்பியை துருபிடிக்கவைத்து கட்டிடத்தை பலமிழுக்கவைத்துவிடும்.கட்டுமான Knowledge மற்றும் வழிமுறைகள் முறையாக செயல்படுத்தாவிட்டால் தேவையில்லாத உயிரிழப்புகள் என்று நாளிழதர்களில் தினமும் பார்க்க நேரிடும்.

முறையான வழியும்,தவறான முறையும் கீழே படங்களில்.

தவறான முறைகள்.





சரியான முறை கீழே.

10 comments:

துளசி கோபால் said...

முறையை யார் கவனிக்கிறாங்க?

காசு சிக்கனமா இருக்கணும். உயிருக்கு ஒரு மதிப்பும் இல்லாத நாடுன்னா ..... இதுதான்:(

நாகை சிவா said...

மொட்டை மாடியில் வைத்து தண்ணீர் போக தனி குழாய் போட்டு வெளியில் இட்டு இருக்கிறோம். அது சரியா?

நாடோடி said...

ந‌ல்ல‌ த‌க‌வ‌ல் சார்.. ப‌கிர்விற்கு ந‌ன்றி.

வடுவூர் குமார் said...

ஆமாங்க துளசி, பல விஷ்யங்களில் இப்படி தான் இருக்கு. :-(

வடுவூர் குமார் said...

நாகை சிவா,தண்ணீர் போவதற்கு தனிக்குழாய் சரி தான் ஆனால் கம்பிரஷர் மேல் நேரிடையான சூரிய ஒளி விழக்கூடாது என்று கேள்விப்பட்டிருக்கேன்.

வடுவூர் குமார் said...

நன்றி நாடோடி.

geethappriyan said...

சென்னையில் ஏன் இன்னும் செண்ட்ரலைஸ்டு ஏசி ஃப்ளாட் வகை வீடுகளுக்கு அமலுக்கு வரலை?மிகவும் சிக்கனமாயிருக்கும்,அது தான் ஃப்யூச்சர்.

வடுவூர் குமார் said...

கீதப்பிரியன்.
புதுவகை குடியிருப்புகளுக்கு சென்ட்ரலைஸ்டு ஏசி இருக்கலாம் அதுவில்லாமல் பெரிய கபரஸர் வைக்க இடம் வேண்டுமே!!

goma said...

எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ,ஸ்பிளிட் ஏசியின் வெள் உபகரணத்தை காற்ருபுகாமல் பலகையால் மூடி வைத்திருக்கிறார்கள்...ஆபத்துதானே...
படத்தோடு பத்திரிகைக்கு அனுப்ப இருக்கிறேன்

வடுவூர் குமார் said...

வாங்க கோமா, நிச்சயமாக.