கடந்த ஒரு வருடமாக வீடு வாங்க சுற்றி சுற்றி வந்த பல இடங்களிலும் நான் கண்டது இருவகைகளை கொண்ட சுவர்களை மட்டுமே,ஒன்று சுட்ட/பாரம்பரிய செங்கல் மற்றொன்றுஃபிளை ஆஸ் மூலம் செய்யப்படும் செங்கல்.முந்தையது அளவில் சிறியது அடுத்தது அளவில் பெரியது ஆனால் மற்றது சுவர் வேலைகள் சுலபமாக முடிக்கக்கூடியது.இரண்டிலும் சாதக பாதகங்கள் இருக்கின்றன.இந்த இரண்டு மட்டுமே மனதில் இருந்த வேலையில் இன்று மதியம் படப்பை அருகே ஒரு வீடு கட்டுமானத்தளத்துக்கு போன போது எதேச்சையாக கண்ணில் பட்டது அவர்கள் செய்திருந்த சுவர் வேலை.
கீழே உள்ளது ஒரு கல்லின் நீள,அகல உயரங்கள்,சுமாராக 18x18x36 செ.மீட்டர்.
இதனுள் இருக்கும் ஓட்டைகள் அப்படியே இருக்கும் என்பதால் வெளிப்புற சூடு உள்ளே வராது அதோடு உள்ளிருக்கும் குளுமையும் அவ்வளவாக வெளியே போகாது.அவசியம் ஏற்பட்டால் ஒழிய மேற்பூச்சு கூட தேவைப்படாது என்றே நினைக்கிறேன்.
இப்படம் முகப்பில் எடுக்கப்பட்டது.
நிலை வாசலில் சுவர் முடியும் பாகம் இது,இதன் மூலம் அதன் வேலை முறையை அறிந்துகொள்ளலாம்.
17 comments:
பெங்களூர்லே பார்த்து இருக்கேன். விலை கொஞ்சம் அதிகம்தான். ஆனா சுலபமான கட்டு வேலை. ப்ளாஸ்டர் வேண்டாம். எனக்கு பிடிச்சது.
சில மாதங்களுக்கு முன் நீங்கள் வீடு தேடுவது பற்றி எழுதியிருந்தீர்கள்.
எதாவது பைனலைஸ் பன்னுனீர்களா ?. நானும் சென்னையில் வீடு வாங்கலாம் என்று தற்போது முடிவு செய்திருக்கிறேன். வீடு தொடர்பா சில ஆலோசனைகள் கேட்க உங்களை மெயில் -ல் தொடர்பு கொள்ளலாமா
ஓ! இது பங்களூரா தயாரிப்பா திவா? நானும் முதல் முறையாக பார்க்கிறேன்.
வாங்க ரிஷபன்,நான் வங்கியை தான் நம்பியிருந்தேன்.தேடல் இன்னும் முடியவில்லை,நிறைய Compromise செய்யவேண்டியுள்ளது அதோடு சென்னையில் வீடு என்பது நியுயார்க்கில்வாங்குவது போல் உள்ளது - மத்திய வர்கத்துக்கு.மேல் விபரம் வேண்டும் என்றால் தயங்காமல் vaduvurkumar அட் ஜிமெயிலுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
அருமையான பதிவும் படங்களும்,
செங்கலுக்கும்,ஹால்லோ ப்லாக்குக்கும்-இதற்கும் கூட்டிக்கழித்துபார்த்தால் இதுதான் எகனாமிக்,இப்போது சிமெண்ட் மணல் கூலி எல்லாம் அதிகம்,ஆட்கள் வேலைக்கு வருவதும் அபூர்வம்,வேலையை குறித்த நேரத்தில் முடிக்க இது ஏதுவாயிருக்கும்.என்ன இந்த கட்டுவேலையை போடத்தெரிந்த ஆட்கள் கிடைக்கனும்.நன்றி
நல்ல ஐடியா! ஆனால் ஆணி தேவை பட்டால் எப்படி ஆணி அடிப்பார்கள் ?
நல்ல ஐடியா! ஆனால் ஆணி தேவை பட்டால் எப்படி ஆணி அடிப்பார்கள் ?
சந்தானம்
நன்றி கீதப்பிரியன்.
வடுவூர் குமார் இது உடைந்து விடாதா! ஆணி அடித்தால் என்ன ஆகும்?
கிரி,நல்ல கேள்வி.உடைய நிறைய வாய்ப்பு உள்ளது இருந்தாலும் அது அடிக்கும் ஆணியின் அளவை பொருத்தும் இருக்கும்.வீடு வாங்கும் போதே இதுக்கு ஒரு கண்டிஷன் போடுவார்கள் என்று நினைக்கிறேன்.
பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!
தங்கள் பதிவுக்கு நன்றி. நான் சிவில் இரண்டாம் ஆண்டு படிக்கின்றேன். உங்கள் கட்டுரை "BUILDERS LINE" தமிழ் இதழில் வெளிவந்துள்ளாது அது மிகவும் பயனுள்ளாதக இருந்தது மிக்க நன்றி.....
தகவலுக்கு மிக்க நன்றி.
whats is the price
I am not sure, let me enq.
kumar Mani - உங்கள் மின்னஞ்சலை பாருங்கள்.
Pl search Mangalore Clay Hollow bricks for the supplier.
Post a Comment