Thursday, April 29, 2010

எதற்கு இது?

பல மாதங்களாக அலுவலக கண்ணாடி வழியாக இந்தபடிகளை பார்த்திருந்தாலும் பெரிதாக ஒரு எண்ணமும் வரவில்லை ஆனால் ஒரு நாள் ஒருவர் கையில் ஏதோ கருவிகளை வைத்துக்கொண்டு அந்த மொட்டை மாடியில் இருந்து சுவர் வழியாக காலை மாற்றிப்போட்டு இந்த படிகளை உபயோகித்து கிழிறங்கி வந்தார்,அதன் பிறகு தான் எதற்கு இப்படிப்பட்ட ஒரு மாடிப்படி என்ற யோஜனை வந்தது. உங்களுக்கு ஏதாவது தோனுதா?

5 comments:

ஜெய்லானி said...

இது வெளிஆட்கள் அதாவது சிறுவர்கள் யாரும் நேரடியாக மேலே போகாமல் இருக்க இது மாதிரி அமைப்பதுண்டு. ஒன்லி பள்ளிவாசல் மெயிண்ட்னன்ஸ் ஆட்களுக்கு மட்டும். நீங்க பாத்தது இதைதான்.

இலவசக்கொத்தனார் said...

மொட்டை மாடிக்கு போகும் படியாக முதலில் படியமைக்கவில்லை. பின்பு அங்கு இருக்கும் எதோ ஒரு கருவியை (ஏசி யூனிட், சோலார் பேனல், தண்ணீர் டேங்க், வெளிச்சுவற்றின் மேல் பகுதியில் இருக்கும் நியான் லைட்) சரி பார்க்க மொட்டை மாடி வழியாக சென்றால் ஏதுவாக இருக்கும் என நினைத்தார்கள். எப்பொழுதாவது பயன்படப் போகும் வழிதானே என்பதால் கட்டிய சுவற்றினை உடைக்காமல் இப்படி கட்டி இருப்பார்கள்.

வடுவூர் குமார் said...

ஜெய்லானி,இது பள்ளிவாசல் இடம் இல்லை பக்கத்தில் இருக்கும் ஒரு உணவகத்தின் மாடி.படி வச்சிட்டு அது முட்டும்வழியை அடைத்து வைத்திருப்பது புதுமையாக இருக்கு!!

வடுவூர் குமார் said...

வாங்க இ.கொத்தனார்.
இருக்கலாம்,அந்த கடையின் உட்பகுதி எப்படி இருக்கு என்று தெரியவில்லை.ஒருவேளை உட்பகுதியில் இருந்து மேலே போக கூட படி இருக்கலாம்.படிகட்ட செலவு செய்தவருக்கு ஒரு ஆள் போய் வர வழி பண்ண கஷ்டமாகவா இருக்கும்?

ஜெய்லானி said...

//ஜெய்லானி,இது பள்ளிவாசல் இடம் இல்லை பக்கத்தில் இருக்கும் ஒரு உணவகத்தின் மாடி.படி வச்சிட்டு அது முட்டும்வழியை அடைத்து வைத்திருப்பது புதுமையாக இருக்கு!//

பக்கத்தில் மினாரா ( டவர் ) பாத்ததும் அப்படி சொன்னேன்.