Sunday, June 28, 2009

தரம்.

எப்போதோ திரு அப்துல் கலாம் பேசிய பேச்சு ஞாபகத்துக்கு வந்து போகுது.. ஆதாவது வெளிநாட்டவர்கள் கூட இந்தியாவில் தான் பொருட்களை வாங்க வேண்டும் அதன் மூலம் நம்மவர்களை ஊக்கப்படுத்தலாம் என்று.

நம்மூர் தயாரிப்பு இப்படி இருந்தால் இனி அதே மாதிரி செய்யலாம் என்ற எண்ணத்தையும் மிக மிக பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்துக்கு வரவேண்டியது தான்.மேலே படியுங்கள்.

இம்முறை சென்னை போன போது இங்குள்ள வீட்டு முதலாளி அம்மா ஒரு Non-Stick Pan வாங்கி வர முடியுமா? என்றார்.அங்கிருந்து வரும் போது அவ்வளவு எடை பிரச்சனை இருக்காது என்பதால் தயக்கம் இல்லாமல் ஒத்துக்கொண்டேன்.

இங்கு வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் Big Bazzar போன போது இது கண்ணில் பட்டவுடன் வாங்கிக்கொண்டு வந்து விட்டேன்.சுமார் 670 ரூபாய் ஆனது.





சிங்கை வந்ததும் அவர்களிடம் கொடுத்துவிட்டு அதைப்பற்றி மறந்துவிட்டேன் அவர்களும் இரண்டு நாள் கழித்து பிரித்து பார்த்துவிட்டு என்னை கூப்பிட்டார்கள்.என்ன தம்பி! இந்த நடுவில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை எடுத்தவுடன் அதனுடன் அந்த Taflon ம் வந்துவிட்டதே என்று காண்பித்தார்கள்.இந்த மாதிரி சட்டிகளின் முக்கியத்துவமே அந்த கோட்டிங் தான் அதில் ஓட்டை விழுந்தால் “ஓசோன்” ஓட்டை மாதிரி தான்.இனி அச்சட்டியை உபயோகப்படுத்த முடியாது.




ஊரில் இருந்தால் திரும்பக்கொண்டு கொடுக்கலாம் இங்கு வந்த பிறகு அதுவும் முடியாது.So,waste of money.

பல நூறு தயாரிக்கும் போது இப்படி ஒன்றிரண்டு போகக்கூடும் என்று எனக்கு தெரியும், இருந்தாலும் ஸ்டிக்கருடன் ஒட்டிக்கொண்டு வரும் அளவுக்கு Taflon பூச்சு இருந்தால் நாம் சமைக்கும் போதே அதனுடன் கலக்க வாய்ப்பு இருக்குமல்லவா?
என்ன சொல்லி என்ன - இந்தியாவின் தரம் இவர்களிடம் பல் இளிக்க ஆரம்பித்துவிட்டது.ஏற்றுமதிக்கு ஆகும் பொருளில் இப்படிப்பட்ட தரக்குறைபாடு மிக கடினமாக பார்க்கப்படும்,உள்ளூர் உபயோகம் என்பதால் அதையெல்லாம் காற்றில் விட்டு விட்டார்களா என்று தெரியவில்லை.

அடுத்த முறை நீங்கள் வாங்கும் போது அந்த ஸ்டிக்கரை பிய்த்துவிட்டு வாங்கவும்,மறுபடி அலையும் பிரச்சனை இருக்காதல்லவா?

9 comments:

jeevagv said...

நல்ல யோசனை, நன்றி!

வடுவூர் குமார் said...

நன்றி ஜீவா.

கிரி said...

:-)

Unknown said...

Hi,

I need a software for taking quantity survey for buildings,commercial Buildings,etc.,
Please send me all software's related to Civil engg.,.

Awaiting for your favorable reply.

துளசி கோபால் said...

அட ராமா!!!!

ப்ரஸ்டீஜ் நல்ல ப்ராண்ட் ஆச்சே!

அவுங்களுமா இப்படி?

க்வாலிட்டிக் கண்ட்ரோல்(-:

Unknown said...

நல்ல யோசனை... !!! அந்நாள் இந்த நான்ஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீய விளைவுகள் ஏராளம்...!!

1 . இந்தியாவில் குறைந்த விலையில் கூட நான்ஸ்டிக் குக்கர் , தோசை கல் , சட்டி , குண்டா என ஏராளமான வகைகள் . இதில் சரியான இண்டோளியம் கலைப் பூச்சு இல்லாமல் தரமற்றதாக இருப்பதால் . இதில் சமையல் செய்து உண்ணும்போது உடலுக்கு கேடு விளைவிக்கிறது..


2 . இந்த இண்டோளியம் பூச்சு உள்ள பாத்திரங்கள் எல்லாமே தரமான நிறுவன பொருட்களாக இருந்தாலும் , எல்லாமே ( use and throw ) பொருட்களே...!! இந்த பொருட்களை ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு மேல் உபயோகப் படுத்தக் கூடாது.. !! பாத்திரம் நன்றாக இருந்தாலும் , அந்த இண்டோளியப் பூச்சு தன்மை மாறி உடலுக்கு கேடு விளைவிக்கும். நம் இந்தியர்கள் பெரும்பாலானோர் அதை நெறைய வருஷத்துக்கு உபயோகம் செய்துகொண்டிருக்கிறார்கள்.!!



ஆதலால் வசதி படைத்தவர்கள் , முடிந்தவரை இரும்புச் சட்டி , மண் சட்டி உபயோகப் படுத்தி பழகினால் நமக்கும் சுகம் , உடலுக்கும் நலம்..!!!



இங்ஙனம் ,

லவ்டேல் மேடி........

வடுவூர் குமார் said...

வருகைக்கு நன்றி கிரி.
வாங்க துளசி
என்னை மாதிரி எவ்வளவு பேர் நொந்திருக்காங்களோ!!

வடுவூர் குமார் said...

வாங்க அஷ்ரப்
சாதரணமாக excel போதுமே!! என்னிடம் அந்த மாதிரி மென்பொருட்கள் இல்லையே.

வடுவூர் குமார் said...

வாங்க மேடி
வர வர எல்லாவற்றிலுமே விஷம் இருக்கும் போல் இருக்கு....என்ன செய்வது இதனூடே தான் வாழவேண்டி இருக்கு.