சென்னை வெய்யில் மண்டையை பிளக்கும் நேரத்தில் வீட்டுக்காரம்மா எங்கேயாவது போய்வரலாம் என்று “பிளான்” போட்டு ஒரு மலைவாசஸ்தலம் போய் வந்தோம்.இங்கிருந்து ரயிலில் மதுரை பிறகு அங்கிருந்து வாடகை மகிழுந்தில் கொடைக்கானல்.கொடைக்கானலை நெருங்கும் நேரத்தில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள எல்லோரும் நிற்கும் இடம் தான் “டும் டும் பாறை”.இங்கிருந்து பார்த்தால் எலி வால் நீர் வீழ்ச்சி தண்ணீர் இல்லாமல் தெரிகிறது.
படங்களை பெரிதுபடுத்தி பார்க்க அதன் மீது சொடுக்கவும்.
இப்படி பார்க்கும் அழகை இன்னும் உயரத்திலிருந்து பார்த்தால் அழகாக இருக்கும் அத்துடன் சுற்றுப்பயணிகளை கவற முடியும் என்ற நோக்கத்துடன் ஒரு பார்வை கோபுரம் அமைத்துள்ளார்கள்.
கீழிருந்து படங்கள் எடுத்துவிட்டு அந்த கோபுரத்தின் மேல் ஏறும் போது சிறிய ஆட்டம் எனக்கு மட்டும் உணரப்பட்டது.ஒருவேளை காற்றின் சீற்றத்தில் அப்படி நேருகிறதோ என்ற எண்ணத்துடன் படங்களை எடுத்து கீழ்வந்தவுடன் கட்டுமானத்துறை அறிவு விழித்துகொண்டது.கட்டிட்டத்தை சுற்றி வந்தவுடன் பார்த்து அசந்துவிட்டேன்.கட்டிடம் சரியாமல் இருக்க கொடுக்கப்பட்டுள்ள பக்கவாட்டு முட்டு கான்கிரீட் பெயர்ந்து அதன் கம்பிகள் வெளியில் தெரிய அதோடு அதன் நிலையில் இல்லாமல் வளைந்தும் காணப்பட்டது,ஆதாவது அந்த முட்டின் மீது அளவு அதிகமாக வெயிட் ஏறி அதன் நிலையை குலைத்துள்ளது.
இந்த நிலமை இப்படியே நீடித்தால் கொடைக்கானலில் என்றோ ஒரு நாள் இது இடிந்து விழ மிக அதிக வாய்ப்புள்ளது.சுற்றுப்பயணிகள் இதன் மீது ஏறி பருந்துப்பார்வை பார்பதை தவிர்க்கவும்.இதை அங்குள்ள நகராட்சியிடம் தெரிவிக்கலாம் என்றிருந்தேன் கால நேரம் சரிவர அமையாததால் முடியவில்லை.
இதை படிப்பவர்கள் அங்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லிவிடவும்.
கட்டிடங்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதிக்க வேண்டும் என்ற நியதி இருக்கையில் இது எப்படி அரசாட்சியின் கண்களில் இருந்து தப்பியது என்று தெரியவில்லை.சீக்கிரமே சரி செய்யப்படவில்லை என்றால் சில உயிர்களை தானம் செய்யவேண்டியிருக்கும்.
6 comments:
வேலையை முடிச்சுட்டாப் பின்னே திரும்பியும் பார்க்கமாட்டாங்க.
மக்களும் 'இங்கெல்லாம் இப்படித்தாங்க'ன்னு முழுமனசோடு ஏத்துக்குறாங்க.
விபத்து நடந்தபிறகுதான் விழிப்பே வருது(-:
வாங்க துளசி
இப்படி பொதுவில் போட்டு யார் கண்ணில் பட்டு நல்லது நடந்தால் சரி.
இதை பத்திரிக்கைகள் கவனத்திற்கு கொண்டு சென்றால் நன்றாக இருக்கும்
வாங்க கிரி
2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் நகராட்சி கமிஷ்னருக்கு மின் அஞ்சல் அனுப்பினேன் பதில் வந்தது - “இப்பகுதி எங்கள் நகராட்சி எல்லைக்குள் இல்லை” என்று. :-(
awareness post.
Thanks தமிழ் நெஞ்சம்.
Post a Comment