Saturday, June 20, 2009

சென்னை பதிவர் சந்திப்பு( 20.06.09)

நேற்று கோவி கண்ணன் அழைத்து நமது அமெரிக்க மருத்துவர் VSK ஐயா சென்னையில் இருப்பதாகவும் அவரை தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணையும் கொடுத்தார்.

சிறிது நேரம் கழித்து அழைத்து அளவளாவியது போது இன்று மெரினாவில் காந்தி சிலை அருகே மாலை 5 மணியில் இருந்து 7 மணி வரை சிலரை அழைத்துள்ளதாகவும் முடிந்தால் வரவும் என்றார்.இன்று முடிய வேண்டிய வேலைகள் நினைத்ததை காட்டிலும் முன்னமே முடிந்துவிட்டதால் மனைவியையும் அழைத்துக்கொண்டு மெரினாவிற்கு சென்றேன்.நம் பதிவர்களுக்காக வீட்டில் தயாரித்த ரவா உருண்டையும் கொண்டு சென்றேன்.

நான் போன போது VSK , திரு அதியமான் மற்றும் ஒரு பெண் பதிவர்(கவிதாயினி?) மட்டுமே இருந்தனர்.நேரம் நெருங்க நெருங்க ஒவ்வொருவராக கூடி முடிவில் 15 பேருக்கும் அதிகமாகி இருந்தனர்.

அங்கு எடுத்த சில படங்கள் கீழே,மற்ற படங்களை “விழியன்” வலை ஏற்றுவார் என்று நினைக்கிறேன்.





10 comments:

Unknown said...

நெம்ப நாலாருக்குதுங்க தோழரே....!!!! ஆனா ஈரோட்டுல இந்த மாதிரி நடக்க வாய்ப்பே இல்லா.... நம்ம வாழ் பையன் இருக்குற வரைக்கும் அது அப்படித்தான்.... !! ஒரே கிரேன்ட் மீடிங்குதான் .......!!!

வடுவூர் குமார் said...

வாங்க மேடி
பேசியவை இன்னும் அதிகம் அதை மற்றவர்கள் எழுதட்டுமே என்று விட்டுவிட்டேன்.
வாழ் பையன் -ஈரோடு மீட்டிங்கா? பதிவு எங்கே இருக்கு?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆகா சென்னையிலா இருக்கிறீர்கள்!
பதிவர் சந்திப்பு நன்று!
முதல் முறையாக சென்னை பதிவர் சந்திப்பில் பெண் பதிவர்களை காணமுடிகிறது.(நான் கேள்விப்பட்ட வரையில்)
மற்றபடி வழக்கமாக பார்க்கும் பல முகங்களைக் காணவில்லை.

வடுவூர் குமார் said...

வாங்க ஜோதிபாரதி
நான் படம் எடுத்த பிறகு நிறைய கவிஞர்கள் வந்திருந்தனர் அதை விழிஞன் போடுவார் என்று நினைக்கிறேன்.

Tech Shankar said...

gr8 anna.. welcome

வடுவூர் குமார் said...

நன்றி தமிழ்நெஞ்சம்.

dondu(#11168674346665545885) said...

மீட்டிங்கை நான் எப்படி மிஸ் செய்தேன் என தெரியவில்லை. அது நடக்கப் போவதாக நான் எங்குமே படித்த நினைவில்லையே. அதியமானாவது எனக்கு கூறியிருக்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வடுவூர் குமார் said...

நானும் நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் சார்.

கோவி.கண்ணன் said...

இந்தப் பதிவை தவற விட்டு இருக்கிறேன்.

பதிவர் படங்களுடன் போட்டு இருப்பதற்கு நன்றி. ஒரு சிலரைத் தவிர யாரையும் தெரியவில்லை

வடுவூர் குமார் said...

எனக்கும் பலர் புதியவர்களாகவே இருந்தது.