Sunday, February 15, 2009

ஆச்சியின் கைப்பதம்

இங்கு (துபாய்) வந்த நாள் முதலாக நான் சிங்கையில் என் உணவு வழக்கங்களை எப்படி வைத்திருந்தேனோ அப்படியே இருக்க முயற்சி செய்துகொண்டிருந்தேன்.ஒரு சில பொருட்கள் அங்கு கிடைத்தது இங்கு கிடைக்காமல் இருந்தது,இதனாலே இச்சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறிக்கொண்டு வந்தேன்,இருந்தாலும் தேடலை மட்டும் விடவில்லை.

போன வெள்ளியன்று பர் துபாய் போயிருந்த போது அங்கு சில இந்திய கடைகள் கோவிலுக்கு பக்கத்திலேயே இருந்தன.இக்கடைகளுக்கு இங்கு வந்த புதிதில் போனதால் அவ்வளவாக கவனத்தில் எடுத்துக்கொள்ளலாமல் உள்ளே போய் வந்தேன்.இம்முறை போன போது நிறைய அவகாசம் இருந்ததால் நிதானமாக பார்த்த போது நான் தேடிக்கொண்டிருந்த பல பொருட்கள் இந்த கடைகளில் கிடைத்தது.உ-ம்: புளியோதரை மிக்ஸ் மற்றும் வத்தக்குழம்பு மிக்ஸ.



சிங்கை- வத்தக்குழம்பு மிக்ஸை வென்னீரில் கலந்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துகொதிக்க விடவேண்டும் ஆனால் இங்கு கிடைக்கும் ஆச்சி மிக்ஸ் அப்படியே சாதத்தில் கலந்து சாப்பிடமுடியும்.

இன்று மதியம் (சற்று முன்) பக்கத்து கடையில் வெறும் சாதம் மட்டும் (4 திராம்) வாங்கிக்கொண்டேன்.விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் அளவில் அதிகமாக இருந்தது.
இந்த ஆச்சி மிக்ஸை போட்டு கலந்து சாப்பிட்டேன்,அட்டகாசமாக இருந்தது.இங்கு தனியே என்னைப்போல் யாராவது சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டால் இதை உபயோகிக்கலாம்.



சாதத்தில் ஒரு பாதி வத்தக்குழம்புக்கும் மறு பாதி தயிர்சாதமாகவும் சாப்பிட்டேன் அதனால் தூக்கம் வருகிற மாதிரி இருக்கு.....வரே...

6 comments:

Tech Shankar said...

க்ளைமாக்ஸ் அசத்திட்டீங்க

//சாதத்தில் ஒரு பாதி வத்தக்குழம்புக்கும் மறு பாதி தயிர்சாதமாகவும் சாப்பிட்டேன் அதனால் தூக்கம் வருகிற மாதிரி இருக்கு.....வரே...

வடுவூர் குமார் said...

இப்ப எழுந்திட்டேன்.
நன்றி.

இலவசக்கொத்தனார் said...

சமைத்து சாப்பிடறது இல்லையா? அதுதானே உடல்நலத்துக்கு நல்லது?

Anonymous said...

குமார், நலமா? ஊர் மாறியாச்சா? நானும் தற்சமயம் பெங்களூரில் நிரந்தரமாக...

உஙகளைப் போல எமக்கு சாப்பாட்டுக்கு மட்டும் கஷ்டம் இல்லை

வடுவூர் குமார் said...

வாங்க இ.கொத்தனார்
சமைத்து சாப்பிடத் தான் எனக்கும் ஆசை ஆனால் சூழ்நிலை,வேலை நிலவரம் போன்றவை தற்போதைக்கு தடுப்பு போட்டிருக்கிறது.போகப்போக பார்ப்போம்.

வடுவூர் குமார் said...

அட! வாங்க ஜான் போஸ்கோ,நலமா?
திரும்ப பெங்களூர் வந்தது பற்றி சந்தோஷம்.
உங்களுக்காவது சாப்பாடு பிரச்சனையில்லாதது பற்றி சந்தோஷம்,வேலை நிலவரம் எப்படியுள்ளது?