Monday, February 16, 2009

திரு.சுகி சிவத்தின் சிங்கை பேச்சு.

இவர் எனக்கு தொலைக்காட்சி மூலம் அறிமுகமானவர் .எப்பவாவது நேரம் கிடைக்கும் போது இவர் பேச்சுக்களை கேட்பேன்.அவ்வளவு பிரமாதம் என்று சொல்லமுடியாவிட்டாலும் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன்.

ஒரு சமயம் நாகை "முகுந்தன்" கலைமாமணி பட்டம் கிடைத்த போது அவருக்கு வாழ்த்து சொன்னது சக கலைஞரை எப்படி மதிக்கவேண்டும் என்று பலருக்கும் சொல்லாமல் சொன்னது புரிந்தது.

சிங்கையில், 2000 வருட வாக்கில் இமயங்கள் மூன்று, சிகரங்கள் மூன்று என்று பல நிகழ்சிகளில் நடத்திய போது அதில் ஒரு நிகழ்ச்சியில் இவரையும் பேச கூப்பிட்டிருந்தார்கள்.அதில் பேசும் போது உள் நாட்டு வழக்கான "நீங்க ஊர் காரங்களா?" என்ற சொற்றொடரை தொட்டு கொஞ்சம் உள் நாட்டு மக்களின் அதிருப்தியை சம்பாதித்துக்கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் இருந்து கொஞ்ச நாள் அங்ஞான வாசம் இருந்து மீண்டும் சமீபத்தில் சிங்கை வந்ததாக கேள்விப்பட்டேன்.

சிங்கையில் 2002 ம் ஆண்டு "உன்னை அறிந்தால்" என்னும் நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சின் நகர்படம் இரண்டு பாகங்களாக "இங்கு" கிடைத்தது,பார்த்து முடித்ததும் அந்த அனுபவத்தை நமது சொந்தம் பந்தங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே என்று தரவிறக்கினேன்.தரவிறக்கியது .wmv கோப்பாக இருந்ததால் பென் டிரைவில் போட்டுக்கொடுத்து கணினி மூலம் பார்க்கட்டுமே என்று ஒரு தம்பதிக்கு கொடுத்தேன்.இதில் உள்ள ஒரு பாகம் (கீழே உள்ள நகர் படம்) அவர்களுக்கு பெரிதும் பொருந்தி வருவதால் இதை பார்த்தாவது திருந்தமாட்டார்களா? என்ற நப்பாசை தான்.

பென் டிரைவில் போட்டுக்கொடுத்தாலும் குடும்பத்தலைவன் பார்த்தாக தெரியவில்லை,தலைவிக்கு கணினியில் அவ்வளவு பரிட்சயம் இல்லை போல் இருக்கு, யாராவது வட்டில் போட்டுக்கொடுத்தால் அதை தொலைக்காட்சி மூலம் பார்க்கலாம் என்றிருந்தார் போலும்.கொஞ்ச நாள் காத்திருந்துவிட்டு எனக்கே பொருக்காமல் ஏதேதோ மென் பொருளை உபயோகித்து VCD யாக மாற்றிக்கொடுத்தேன்.

எதேச்சயாக ஒரு நாள் சாயங்காலம் வீடு திரும்பிய தலைவி ஏதாவது படம் பார்க்கலாமே என்றவுடன் இந்த VCD ஐ பற்றி சொன்னேன்.போடுங்களேன் பார்க்கலாம் என்றார்.சுமார் 1 மணி நேரம் ஓடக்கூடிய நிகழ்சியை ஓடவிட்டேன்.சுமார் 40 நிமிடங்கள் ஓடிய பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி வந்தவுடன், "இன்னும் எவ்வளவு நேரம் ஓடும்?" என்றார்,அவரின் ஆர்வம் வேறொங்கோ இருப்பதை புரிந்துகொண்டு,பிறகு பார்ப்பதென்றால் நிறுத்திவிடுகளேன் என்றேன்.மகனிடம் சொல்லி அதை "Pause" செய்யச்சொல்லிவிட்டு,சன் சேனலில் "அரசி" பார்க்க ஆரம்பித்துவிட்டார்.அந்த "Pause" மூன்று நாட்களாக அப்படியே இருந்தது. நீங்களாவது இந்த சலனப்படத்தை(பகுதி மட்டும்) பாருங்கள்.
(பி.கு:மற்றொரு நாள் முழுவதுமாக பார்த்துவிட்டார்)




நவீனக் கால தம்பதிகளுக்கு வேண்டிய அறிவுரை.

12 comments:

வடுவூர் குமார் said...

HS
அழைப்புக்கு மிக்க நன்றி ஆனால் எந்த திரட்டியிலும் இணையும் எண்ணம் இப்போது இல்லை.

jeevagv said...

சுட்டிக்கு நன்றி குமார்!
நானும் வட்டில் போட முயல்கிறேன்!

//ஏதேதோ மென்பொருளை...//
மேக்கில் iMovie HD, iDVD கொண்டு DVD இல் எழுத முடியும் என நினைக்கிறேன்!

வடுவூர் குமார் said...

வாங்க ஜீவா
இன்னும் ஐமேக்கில் தான் கை வைக்கவில்லை,தமிழில் தட்டச்சுவது அதில் கஷ்டமா?

jeevagv said...

//இன்னும் ஐமேக்கில் தான் கை வைக்கவில்லை,தமிழில் தட்டச்சுவது அதில் கஷ்டமா?//
ஆகா, வெகு எளிது.
தமிழில் தட்டச்ச, கூடதலா எந்த மென்பொருளையும் நிறுவ வேண்டியதில்லை!
Input Source-இல் தமிழ் வேண்டும் எனச் சொல்ல வேண்டியது மட்டுமே!
முரசு அஞ்சல் மூலமாக, அஞ்சல் மற்றும் தமிழ்99 உள்ளீடுகள் உள்ளன.

jeevagv said...

DVD இல், சுகி சிவத்தை பதிவு செய்து விட்டேன்.
ஆனால் என்ன, wmvஐ, மேக் புரிந்து கொள்ள, flip4mac என்கிற இலவச மென்பொருளை பயன்படுத்த வேண்டியதாய் இருந்தது. அந்த trial veர்sion, அசைபடத்தின் நட்டநடுவே, இது flip4mac கொண்டு மாற்றப்பட்டது என்ற செய்தியை எப்போதும் ஓட விடுகிறது! :-(

வடுவூர் குமார் said...

மேல் விபரங்களுக்கு நன்றி,ஜீவா.

வடுவூர் குமார் said...

ஜீவா,இதற்கு முன் (2000 & 2001)நிகழ்த்திய சொற்பொழிவுகளை கூகிள் விடியோவில் யாரோ ஏற்றிவைத்துள்ளார்கள்.மொத்தம் 1 மணி 7 நிமிடம் என்று காட்டினாலும் 35 நிமிடங்களில் நின்றுவிடுகிறது.முடிந்தால் அதையும் பாருங்கள் நன்றாக இருக்கு.

Geetha Sambasivam said...

ரொம்ப நாளாச்சு உங்க பதிவுக்கு வந்து. இப்போ ஒண்ணும் கட்டலை, அதான் வர முடியலை! :D
சுகி சிவம் பேரைப் பார்த்துட்டு வந்தேன். அதென்னமோ நெருப்பு நரி எனக்கு எதையும் காட்டறதில்லை. எக்ஸ்ப்ளோரருக்கு மாறிட்டு வந்து பார்க்கிறேன். நன்றி. பார்க்காமல் என்னத்தைச் சொல்றது?

வடுவூர் குமார் said...

வாங்க கீதா சாம்பசிவம்,நீங்க ஏதாவது புது இயங்குதளம் உபயோகிக்கிறீங்களா?
பயர்பாக்ஸில் தான் நான் எல்லாம் செய்கிறேன்.பிரச்சனை என்னவென்று சொன்னால் முடிந்தால் உதவுகிறேன்.

Geetha Sambasivam said...

நீங்க வேறே குமார், புதுசெல்லாம் இல்லை. விண்டோஸ் தான் இயங்கு தளம். லினக்ஸ் இருக்கு ஆனால் இன்ஸ்டால் பண்ணலை. விண்டோசிலேயே தான் நெருப்பு நரியை உபயோகிக்கிறேன். சிலசமயம் இந்த மாதிரி இணைப்புகள் தெரியறதில்லை. அப்போ எக்ஸ்ப்ளோரருக்கு மாறிக்க வேண்டி இருக்கு. நெருப்பு நரி ஜாவா ஸ்க்ரிப்ட் இல்லைனு சொல்லிட்டு இருக்கு. ஆனால் இப்போத் தான் ஜாவா அப்டேட் பண்ணியது. அப்புறமும் என்னனு புரியலை. :(((((((((((( adobe latest install பண்ணணுமோனு நினைக்கிறேன்.

வடுவூர் குமார் said...

கீதா சாம்பசிவம்
கேட்கவே அதிசியமாக இருக்கு...
லினக்ஸில் எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது இங்கு சொல்லியிருந்தேன்.
பேசாம இங்கு போய் புதியதாக தரவிரக்கி நிறுவிக்கொள்ளுங்கள்,எல்லாம் சரியாகி விடும்.

Geetha Sambasivam said...

நன்றி குமார். முயற்சி செய்துபார்த்துவிட்டுச் சொல்கின்றேன். பதிவில் நீங்கள் போட்ட அப்டேட் கமெண்டும் கிடைச்சது. ரொம்ப நன்றி.