Saturday, September 20, 2008

ஒரு கடலை வறுபடப்போகிறது..

கடலையை மணலோடு வறுத்தால் தான் எரிபொருள் மிச்சம் என்றாலும் சுவையை கூட்ட உதவியாக இருக்கும்,அதே மணல் மனிதனை வறுத்தால்?? அதைத்தான் இனிமேல் உணரப்போகிறேன்.

படங்கள் உதவி: திரு நா.கண்ணன் & திரு.பி.எல்.முத்தையா



மணல் இருப்பது வேறொரு ஊரில்..
அங்கு இந்த மாதிரி முருகன் படமெல்லாம் வைத்திருக்க முடியாது (வெளிப்படையாக). :-)



அந்த மணல் இங்கு தான் கிடைக்குது.



”கடலை” யாரு என்று சொல்லவும் வேணுமோ??

Wednesday, September 17, 2008

தட்டச்சு

நகைச்சுவைக்கு வருட கணக்கு எதுவும் கிடையாது போலும்.மனிதர்களை ஒரு வழியில் இழுத்துக்கொண்டு வந்துவிட்டு “சிரி” என்று சொல்வதற்கு முன்னால் அந்த மனிதரை சிரிக்க வைக்க மிகப்பெரிய தந்திரம் வேண்டும், அதுவும் எழுத்தின் மூலம்.

முடியுமா? முடியாதா?



அந்த காரியத்தை திறம்பட செய்துள்ள தேவனை எவ்வளவு முறை தட்டிக்கொடுத்தாலும் தகும்.

மேலே படியுங்க.








படம் எடுக்கும் போது அப்படி இப்படி என்றாகிவிட்டது.பொருத்துக்கொள்ளுங்கள்.

Sunday, September 14, 2008

இந்த நிகழ்வைப் பற்றி தெரியுமா?

இது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய கதை...

ஹூம்ஸும் இந்திய தேசிய காங்கிரசும்.

மேல்விபரங்களுக்கு நகர் படத்தை பார்க்கவும்.



நன்றி:பி பி சி

புகைப்படப் போட்டிக்காக

எவ்வளவு தடவை போட்டி வைத்திருக்காங்க? இங்கிருக்கும் போது ஒரு படம் கூட நாம் அனுப்பவில்லையே என்ற மனக்குறையை போக்க கீழே உள்ள படம்.போன தடவை பதிவர் மீட்டிங் நடந்த போது அங்கிருக்கும் ஒரு ஹோட்டலை எடுத்தேன்.இதன் மின்தூக்கி வித்தியாசமாக கட்டிடத்துக்கு வெளியில் இருக்கும்.








Posted by Picasa

Friday, September 12, 2008

தேவன் வாரம்

அலுவலகத்தில் செம வேலை,என்ன பண்ணுவது என்று தெரியாமல் இருந்த நேரத்தில் போன வாரம் ஒருவர் பதிவில் தேவனை பற்றி சொல்லியிருந்தார்.அதை படித்தவுடன் வந்துவிட்டது தேவன் ஜுரம்.
ஓடு,பக்கத்தில் உள்ள நூலகத்துக்கு.
DEV - என்ற பகுதியில் ஒரு 10 புத்தகங்கள் இருந்தது,பல அழுக்காக இருந்தது.பலர் படித்துப்போட்டதால் போலும்.ஒரு நாளைக்கு ஒன்று என்று முடிவெடுத்து படிக்க ஆரம்பித்தேன்.பல இடங்களில் சிரிப்பை அடக்க படாதபாடு படவேண்டியிருந்ததை சொல்லவும் வேண்டுமா?

இவரின் கதைகளை படிக்கும் போது,எப்படி இவரால் 1957 வருடங்களில் இந்த மாதிரி கதைகளை எழுதமுடிந்தது என்று உள்ளுக்குள்ளே எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும்.இவர் வாழ்ந்ததே வெறும் 44 வருடங்கள் தானாம்.44 யெல்லாம் வயதா?




போன வாரம் படித்த சில நூட்கள்.





இந்த மாதிரியெல்லாம் எழுதினா,அலுவலகத்தில் படிக்கமுடியுமா?



வாங்க இ.கொத்தனார்,உங்களுக்காகவே இந்த பதிவு.உங்களை மாதிரியே இவரும் சந்துல சிந்து பாடியிருக்கார்.:-)))அவர் எழுதிய ஒரு கதை; ஒருவர் தட்டச்சு இயந்திரம் வாங்கி அதன் மூலம் அதன் கஷ்டங்களை சொல்லியிருப்பது,வயிறு வலி இருப்பவர்கள் படிப்பது உசிதம்.

Wednesday, September 10, 2008

மார்பக புற்று நோய்

நம்மில், மறைந்த பதிவர் அனுராதாவை தெரியாமல் இருக்கமுடியாது.இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கு செய்தியில் போட்ட இந்த நகர்துண்டை பார்த்தபோது அவர்கள் ஞாபகம் தான் வந்தது.அது உங்கள் பார்வைக்கு இங்கு.

சிலர் மீண்டுவருவதாக சொல்கிறார்கள் அதில் அனுராதா இல்லாதது தான் சோகம்.




நன்றி:வசந்தம் சென்ரல்.

Tuesday, September 09, 2008

இந்த பையன் அழகா?

சமீபத்தில் என் மனைவி ஒரு கல்யாணத்துக்கு போன போது எடுத்தார்களாம்,முதலில் பார்த்தபோதே மிகவும் கவர்ந்துவிட்டது.
இதை பார்க்கும் போது இந்த பாட்டு தான் ஞாபகம் வந்தது.

ஆறும் அது ஆழமில்லை
அது சேரும் இடமும் ஆழமில்லை
ஆழம் எது ஐயா?

பதில்

இந்த படத்தில் இருக்கும் பெரிய பையனின் பார்வை தான் என்று சொல்லத்தோனுகிறது,உங்களுக்கு?



கிட்டத்தில் பார்க்க படத்தின் மீது சொடுக்கிப்பாருங்கள்.

Sunday, September 07, 2008

செட்... ரெடி... கோ....

இந்த கட்டுமான வேலையிடம் ஜூரோங் ஈஸ்ட் என்று சொல்லப்படும் இடத்தில்,மின்வண்டி போகும் இடத்துக்கு பக்கத்தில் இருக்கு.அங்கிருந்து டவுனுக்கு போகும் வழியில் மின் வண்டியில் இருந்து எடுத்த படம் இது.

ஒரு கட்டுமானத்துறை வேலையில் தரைக்கு கீழ் உள்ள வேலை முடிந்து சமதளத்து வரும் போது தான் அப்பாடா என்று பெருமூச்சு விடமுடியும்,அதற்குப்பிறகு பல சமயங்களில் ஒரே மாதிரியான வேலை என்பதால் அவ்வளவாக பிரச்சனை இருக்காது.எல்லா சைட்களில் இந்த நிலைக்குப்பிறகு தான் கட்டுமானத்தில் வேகத்தை பார்க்கமுடியும்.



அந்த வேகம் மேலெழும்ம்பி வருவதால் கூட இருக்கலாம்.

படத்தின் வலது கோடியில் இந்த வேலைக்கு தேவையான அலுவலக வசதிகளை காணலாம்.

எப்படி மூடனும்??

சாலையை தோண்டினால் எப்படி மூடனும், தெரியுமா?

கீழே உள்ள படத்தை பாருங்கள்,இந்த மாதிரி உள்ள இயந்தரத்தை பல முறை உபயோகித்து மண்ணை இறுக்கவேண்டும்,அதற்குப்பிறகு சாலை பிட்டுமனை போடவேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையை கடக்க நிறுகும் வேளையில் தொலைப்பேசி வழியாக எடுத்தது.





படத்தின் தரம்.... எடுத்த படி.

Wednesday, September 03, 2008

காதல் ----> காட்டாளானது

திரு.ராகி ரங்கராஜனுடைய கதைகளை அவ்வளவாக படித்த ஞாபகம் இல்லாததாலும் அட்டை பக்கம் புதிதாக இருந்ததாலும் நூலகத்தில் இருந்து எடுத்துவந்தேன்.செம விருந்து.


ஒவ்வோரு கதையிலும் நகைச்சுவை இழைந்தோடியிருக்கு அதில் ஒரு கதையில்,சில வருடங்களுக்கு முன்பு திருப்பதி பஸ் நிலையத்தில் ஒரு இளம் பெண் தெலுங்கில் ஏதோ சொல்லிச் சொல்லி சிரித்துக்கொண்டிருப்பதை பார்த்து, அவள் பேசும் பாஷை புரியாததால் ஏற்பட்ட உசுப்பேத்தலில் சுமார் 8 மொழிகள் கற்றுக்கொள்கிறாராம்.சில வருடங்களுக்கு பிறகு ஒரு சமயத்தில் அந்த பெண்ணை குடும்பப்பெண்ணாக சந்திக்க நேரும் போது அன்று எதற்காக அப்படி சிரித்தாய் என்று தெலுங்கிலேயே கேட்கிறார்.

அதற்கு அந்த பெண் “உங்க சட்டையின் முதுகில் ஒரு பெரிய ஓட்டை இருந்தது,அது கூட தெரியாமல் ஸ்டைலாக அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தீர்கள்” என்று போட்டு உடைக்கிறார்.

அவர் எழுதிய கதையில் தான் நகைச்சுவை என்று பார்த்தால்... கீழே நூலகத்தில் கொடுக்கும் Receipt யில் ஆங்கிலப் படுத்தியிருக்கிறார்கள்.

இங்கே பார் “சிரி”. :-))

Tuesday, September 02, 2008

கனியன்

கனியன் - இவர் நம்மைப்போல் தமிழில் ஒரு பிளாக்கர் வைத்துள்ளார்,பிறர் பதிவுகளை படிப்பதோடு சரி,பின்னூட்டம் எல்லாம் அவ்வளவாக போடாததால் பலருக்கு அவரைப்பற்றி தெரியாது.

இவரின் அறிமுகம் எனக்கு சில வருடங்கள் ”முத்தமிழ் மன்றம்” மூலமாகத்தான் கிடைத்தது.அவரும் சிங்கையில் இருந்ததால் தொலைப்பேசி எண்களை பரிமாறிக்கோண்டோம் ஆனால் பேசியதோ ஒரே ஒரு முறை தான்,அதுவும் சுமார் 1.5 வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன்.போன வாரம் திடிரென்று அழைத்தார்,அலுவலக தொலைப்பேசி எண் வந்ததால் யாரென்று முதலில் கண்டுபிடிக்கமுடியவில்லை,பிறகு அவரே சொன்னார்.பேசிக்கொண்டிருக்கும் போது இந்த வார இறுதி என்ன பண்ணப்போகிறீர்கள் என்றார்.சனிக்கிழமை சன் டெக் சிட்டி போய் கணினி பொருட்காட்சிக்கு போகலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கேன் என்றேன்,சரி நானும் வருகிறேன் அங்கு சந்திக்கலாம் என்றார்.சனிக்கிழமை நான் கிளம்பும் முன்பு தொலைப்பேசுகிறேன் என்று சுத்தமாக மறந்துவிட்டேன்.சுமார் 2 மணிக்கு அவரே திரும்ப அழைத்தார்,அதற்குள் கோவியார் வேறு 8 பேருடன் அங்கு வருவதாக சொல்லியிருந்தார்.அதன் பதிவை இங்கு பார்க்கலாம்.

கனியன் மீடியா துறையில் இருப்பதால் பெறும் தலைகளை அவ்வப்போது சந்திக்க நேரிடலாம் அப்படி மிக முக்கியமான ஒருவரை சந்தித்ததை கீழே பார்க்கலாம்.நம்ம முன்னாள் ”தலை” திரு அப்துல் கலாமுடன் அவர் கண்ட பேட்டியை கீழே கொடுத்துள்ள்ளேன்,பார்த்து மகிழுங்கள்.திரு கலாம் நல்லாவே பாடம் எடுக்கிறார்.:-)
பாகம் 1


பாகம் 2





நன்றி:வசந்தம் சென்ரல்