Thursday, March 29, 2007
போலி மரியாதை
அதை வைத்து இங்கு பலர் "S" பாஸ் வாங்குவதற்கு விண்ணப்பிக்கிறார்களாம் என்றார்.
8 வருடங்களுக்கு முன்பு ஆன்லைனில் இந்த மாதிரி டிகிரி வித்த விஷயமும் வெளியில் வந்து நாறியது.
சரி,அப்படி செய்தால் சிங்கப்பூர் அரசாங்கம் கண்டுபிடித்துவிடுவார்களே? என்றேன்.
அதற்கு அவர், 2000 வது வருடத்துற்கு பிறகு தேறியவர்களுக்கு மட்டுமே புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் வருகிறது,அதற்கு முன்னால் தேறியவர்களுக்கு அந்த மாதிரி எதுவும் இல்லாத்தால்,இப்படி தயார் செய்வது சுலபமாகிவிடுகிறது,என்றார்.
அடப்பாவி மக்களா! படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் இப்படியெல்லாம் இறங்கி,பிரம்படி வாங்கி,சிறைவாசம் பெற்று நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டுமா? என்ற யோஜனையுடன் இருந்த நான்,நேற்று காலை கீழ் கண்ட பதிவை பார்த்தேன்.கிட்டத்தட்ட அப்படியே நடந்துள்ளது.
ஒரு இந்தியனின் குறுக்கு புத்தி அவனை எங்கு கொண்டு போய்விட்டிருக்கிறது என்று பாருங்கள்.
படத்தை பெரிதாக்க அதன் மேல் சொடுக்கவும்.
கஷ்டமடா சாமி.
நன்றி: தி ஸ்டெரியிட்ஸ் டைம்ஸ்
Wednesday, March 28, 2007
மக்கள் பணத்தில் படித்தவர்கள்
கடவுச்சீட்டு வைத்திருக்கும் மக்களே..இப்படி கூட நடக்குமா? என்ற ஆச்சரியத்தின் உச்சத்துக்கு போனது. எங்கெங்கோ சுற்றிய பிறகு எனக்கு வந்து சேர்ந்த தனி மெயில்.
இதோ அது உங்கள் பார்வைக்காக.
நம்மில் பலர் வெளிநாடுகளில் பணிசெய்து ஊருக்கு திரும்பும் போது அல்லது உள்ளூரில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் போதோ எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று காட்டுகிறது.
தயவு செய்து மற்ற நாடுகள் இதை பிரதி எடுக்கவேண்டாம்,இதன் காப்புரிமை இந்தியர்களுக்கு மட்டுமே என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
பல மென்பொருள்களை தயாரித்து வெற்றிகாணும் இந்திய திருநாட்டில், பல வருடங்களாக மூளையை கசக்கிப் பிழிந்து கண்டுபிடித்ததை இலவசமாக கொடுக்க விரும்பவில்லை.
இப்படியும் நடக்குமா? நடந்ததா? என்றால் என் பதில் "தெரியாது தான்"- இனிமேல் தான் என்னுடைய கடவுச்சீட்டை பார்க்கவேண்டும்.:-))
மூலம் ஆங்கிலத்தில் இருப்பதால் அப்படியே கொடுத்துள்ளேன்.
மக்கள் பணத்தில் படித்துவிட்டு வெளிநாட்டில் பணிபுரிந்து இந்தியாவுக்கு பணம் அனுப்புவதை கொச்சை படுத்துபவர்கள்... இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
இப்படி செய்து நம் நாட்டு மானத்தை நம்மவரிடமே காட்டுபவர்களுக்கு, நம் தேசம் படிப்பு கொடுக்கவில்லையா?
பதில் சொல்லமுடியாட்டி மற்றொருவனை குற்றம் சொல்ல உனக்கு தகுதியில்லை,என்பதை மட்டும் புரிந்துகொண்டால் போதும்.
மெயில் வந்தது இது தான்.
Be Careful At the Indian Airports
This is a well organized conspiracy by Indian Immigration, Police, Customs and Air India staff with networking at all the Indian International Airports. Be watchful when ever you give your passport to Immigration/Customs/Air India staff. The pass port can be easily tampered and can create trouble to you. They have found easy way of making money from NRIs. This is the way it works:
At the time of the passenger's departure, if the passenger is not looking at the officer while he is stamping the exit, the officer very cleverly tears away one of the page from the passport.
When the passenger leaves the immigration counter, the case is reported on his computer terminal with full details. Now all over India they have got full details of the passenger with Red Flag flashing on the Passport number entered by the departure immigration officer. They have made their money by doing above. On arrival next time, he is interrogated. Subject to the passenger's period of stay abroad, his income and standing etc., the price to get rid of the problem is settled by the Police and Immigration people. If someone argues, his future is spoiled because there are always some innocent fellows who think the honesty is the basis of getting justice in India .
Please advise every passenger to be careful at the airport. Whenever they hand over the passport to the counters of Air India , or immigration or the customs, they must be vigilant, should not remove eyes from the passport even if the officer in front tries to divert their attention.
Also, please pass this information to all friends, media men and important politicians. Every month 20-30 cases are happening all over India to rob the NRIs the minute he lands. Similar case has happened with Aramco's Arifuddin. He was travelling with his family. They had six passports. They got the visa of America and decided to go via Hyderabad from Jeddah. They reached Hyderabad . Stayed about a month and left for the States. When they reached the States, the page of the American visa on his wife's passport was missing. At the time of departure from Hyderabad it was there, the whole family had to return to Hyderabad helplessly. On arrival at Bombay back, they were caught by the police and now it is over 2 months, they are running after the Police, Immigration officers and the Courts.
On going in to details with him, he found out the following:
One cannot imagine, neither can believe, that the Indian Immigration dept can play such a nasty game to harass the innocent passengers. All the passengers travelling to & fro India via Bombay and Hyderabad must be aware of this conspiracy. Every month 15 to 20 cases are taking place, at each mentioned airport, of holding the passengers in the crime of tearing away the passport pages. On interviewing some of them, none of them was aware of what had happened. They don't know why, when and who tore away the page from the middle of the passport.
One can imagine the sufferings of such people at the hands of the immigration, police and the court procedures in India after that. The number of cases is increasing in the last 2-3 years. People who are arriving at the immigration, they are questioned and their passports are being held and they have to go in interrogations. Obviously, the conspiracy started about 2 to 3 years ago, now the results are coming. Some of the Air India counter staff too is involved in this conspiracy.
ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!.
Monday, March 26, 2007
விவசாயம் தெரியுமா?
வைக்கோல் போரில் படுத்திருக்கேன்,கடலைக்காட்டில் கடலையை பிடிங்கி அப்படியே பச்சையாக சாப்பிட்டு இருக்கேன்.
இதெல்லாம் மண்டைக்கு ள் ஓடிக்கொண்டு இருக்கும் நேரத்தில்,இப்படி ஒரு படம் கிடைத்தது.
தஞ்சாவூர் பக்கம் எல்லாம் வயலுக்கு தண்ணி வாய்கால் மூலமாகவோ,பம்ப் செட் மூலமாகவோ வரும்.
இந்த படத்தில் "கிணறு" என்று பின் குத்தி வைத்திருக்கும் இடங்களை பார்க்கவும்.இது கிணறு தானா? இல்லை வேறு ஏதாவதா? சொல்லிவைத்த மாதிரி எல்லா நிலங்களிலும் இருக்கு.பெரிதுபடுத்தி பார்க்கவும்.
விவசாயம் தெரிந்த நண்பர்களே முடிந்தால் விளக்கவும்.
இந்த இடம் "அன்னவாசல்"- புதுக்கோட்டை பக்கம்.
பெரிதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்.
இப்படி தமிழ்நாட்டில் உள்ளே மேய்ந்தால் பல அதிசியங்கள் கண்ணில் படுகிறது.
அதில் ஒன்று "கானாடுகாத்தான்"- முடிந்தவர்கள் போய் பார்த்து சீக்கிரமே நிலத்தை வளைத்துப்போடவும்.
Saturday, March 24, 2007
அலங்கார கட்டுமானம்
கீழ் கண்ட படம் எனக்கு தனிமெயில் வந்தது.(நன்றி:ஆர்.பத்மநாபன் - இந்தோனேசியா)
இது டென்மார்க்கையும் ஸ்வீடனையும் இணைக்கிறது.
இது வரை கட்டப்பட்டு வந்த பாலங்கள் நதி/கடலை உபயோகப்படுத்தும் கப்பல்களுக்கு வழி விட கொஞ்சம் தூக்கி கட்டுவார்கள்.
இந்த படத்தில் பாருங்க,எங்க தேவையோ அங்கு அழகாக கடலுக்கு அடியில் Tunnel முறைப்படி கீழே கொண்டு போய்,இரு வழிப்பயணத்தையும் அருமையாக கையாண்டிருக்கிறார்கள்.
பார்பதற்கே எவ்வளவு அழகாக உள்ளது?
அழகாக இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்று சொல்வார்கள்.இங்கு என்ன ஆபத்து இருக்கு?
எனக்கு தெரிந்து "சுனாமி மாதிரி ஏதேனும் வந்தால்,Tunnel உள்ளேயே ஜல சமாதி தான்".
பயப்படாதீங்க... இது ஒரு அனுமானம் தான்.
இந்த மாதிரி விஷயங்களையும் ஆராய்ந்து தான் கட்டியிருப்பார்கள்.ஒரு வேளை அந்த நிலப்பரப்பில்,சுனாமி வர வாய்பில்லாமல் இருந்திருக்கும்.
வர வர, எங்கள் துறையும் பேஷன் ஷோ மாதிரி ஆகிவிட்டது.
Friday, March 23, 2007
பிறந்த இடம்
படத்தின் கீழே உள்ள சாலை தான் தஞ்சாவூருக்கும் மன்னார்குடிக்கும் போகும் வழி.
இரண்டாவது படத்தில் ஒரு வறண்ட ஆறு தெரிகிறதா? அது தான் முதன் முதலில் நீச்சல் கத்துக்கப்போய் ஆத்தோடு போன இடம்.ஒரு சின்ன பாலம்,அது தான் என்னை காப்பாற்றியது.அப்படியே வடக்கால வந்தா ஒரு பின் போட்டு காண்பித்திருக்கேனே,அது தான் நான் பிறந்த வீடு.
கூகிள் எர்த் பணி வியக்கவைக்கிறது.
உங்கள் அனைவரையும் இங்கிருந்தபடியே எங்கூருக்கு கூட்டிப்போன பெருமை அவர்களையே சேரும்.
Thursday, March 22, 2007
கணினி மொழி
அவர்களுக்கு ஒரு சின்ன உதவிக்குறிப்பு.
கீழ் கண்ட புத்தகம் கிடைத்தால் வாங்கி படியுங்கள்.கணினி மொழி பற்றி சுத்தமாக தெரியாவிட்டாலும்,இதன் மூலம் ஒரளவு தெரிந்துகொள்ளலாம்.உங்களுக்கு தேவைபடுவதெல்லாம் "ஆர்வம் மற்றும் சுயமுயற்சி" மட்டுமே.இந்த புத்தகம் வெறும் வார்த்தைகளால் நிரப்பபடாமல் ஒரு சின்ன பிராஜக்ட் எங்கிருந்து ஆரம்பித்து அதை தன்னிடம் படிக்க வரும் மாணவர்கள் மூலம் பாடம் நடத்திக்கொண்டே முடித்துக்கொடுப்பது போல் எழுதியுள்ளார்.
நமக்கும் வகுப்பறையில் படிப்பது போல் இருக்கும் அதே சமயத்தில் ஒரு பிராஜக்ட் பண்ணது போல் இருக்கும்.
கட்டுமானத்துறையில் இருக்கும் எனக்கே 300 பக்கங்களுக்கு மேல் போகமுடிகிறது என்றால்,உங்களாலும் முடியும்.
சரி,இந்த புத்தகம் மட்டும் கிடைத்தால் மட்டும் போதுமா,இதில் சொல்லியவற்றை முயற்சிக்க என்னென்ன வேண்டும்? என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று பார்ப்போமா?
1.வின்டோஸ்/லினக்ஸ் கணினி
2.நோட் புக்கில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
3.முக்கியமாக "கம்பைலர்" வேண்டும்.இதுவும் இலவசமாக கிடைக்கிறது.இங்கு.இது வின்95யிலேயே அழகாக வேலை செய்கிறது.
4.ஓரளவு கணினி அறிவு.
கீழே உள்ளது தேவ் சி++ யில் நான் முயற்சிக்கும் ஒரு பகுதி.
கம்பைல் பண்ணிய பிறகு அதை எப்படி டாஸ் மூலம் எக்ஸிகியூட் என்பதை கீழே பாருங்கள்.
நானே ஆரம்ப நிலையில் உள்ளதால்,மிகவும் விரிவாக எழுதமுடியவில்லை.
என்னுடைய அனுபவத்தில் இந்த மாதிரியான கணினி புத்தகங்களை முழுமூச்சாக உட்கார்ந்து 1 மாதம் அல்லது 2 மாதங்களில் முடிக்க முயற்சி செய்யாதீர்கள்.நிதானமாக படியுங்கள்.மிக முக்கியமாக கம்பைலரில் அவர்கள் சொல்லிய பாடங்களை போட்டு பார்க்கவேண்டும்.அப்போது தான் தவறுகள் புரிபடும்.
இந்த மொழி மற்றும் மென்பொருட்களை பற்றி திரு பாலாஜி மற்றும் பலரும் அவ்வப்போது எழுதியுள்ளார்கள்.
படித்து பயண்பெறுங்கள்.
Tuesday, March 20, 2007
கேட்டவை
பிரபலமான ஒருவரைப்பற்றி நல்லதும் கெட்டதும் வருபவை சகஜம் தான் என்றாலும்,அது கொஞ்சம் மோசமானதாகவே இருக்கிறது.
இதை படிக்கும் மக்களே,தயவு செய்து ஒரு மூன்றாம் மனிதனின் நோக்கத்துடன் படிக்கவும்.
புட்டபர்த்தியில் நான் வேலை நிமித்தம் இருந்த சுமார் 2 வருடகாலங்களில் நான் கேட்ட அனுபவங்களை இங்கு தொகுத்துள்ளேன்.
1.இது நான் வருவதற்கு சில மாதங்கள் முன்பு நடந்தது.அப்போது ஆயுத பூஜை காரணமாக ஆசிரம் உள்ளேயே ஒரு கூடாரம் போட்டு,பெரிய அலங்காரங்கள் செய்து அதற்கு சுவாமிகளையும் அழைத்திருந்தார்களாம்.அவர் வந்து கொஞ்ச நேரத்தில் பூஜைகள் ஆரம்பித்தன.எல்லாவற்றையும் பார்த்துவிட்டு புறப்படும் நேரம் அந்த சைட்டின் ரெசிடென்ட் இஞ்சினியரை கூப்பிட்டு ஒரு வைர மோதிரத்தை பரிசாக கொடுத்தாராம்.பிற்காலத்தில் அதை நானும் வாங்கிப்பார்த்தேன்.மதிப்பு சுமார் 1L என்று கேள்விப்பட்டேன்.
2.இது என் மேல் மேல் அதிகாரிக்கு நடந்தது.இங்கு வேலை நடந்துகொண்டிருக்கும் போது பெரிய தலைகள் வந்து போய் கொண்டிருப்பார்கள்.ஒரு தடவை எங்கள் மேலதிகாரி வந்தபோது அவரை சந்தித்திருக்கிறார்.சந்தித்து முடித்தவுடன்,அவரையும் அழைத்துக்கொண்டு ஒரு கல்யாணத்திற்கு பாபா போனார்.கல்யாணத்தில் தாலிக்கு பதிலாக வெறும் கையில் ஒரு 5 பவுன் சங்கிலியை வரவழைத்து மணமகனிடம் கொடுத்தாராம்.
3.ஒரு நாள் ஒரு பழைய கோபுரம் இடிந்து விழுந்ததில் 3வர் மரணமடைந்தார்கள். அதில் ஒருவர் வெளிநாட்டவர்.அந்தூர் வழக்கப்படி போலீஸ் வழக்கு பதிவு செய்த்தது.வெளிநாட்டவரின் வீட்டுக்கு விஷயம் போய் அவர்கள் இங்கு வந்த பிறகு,போலீஸ் அவர்களிடம் நாங்கள் இந்த மாதிரி வழக்கு பதிவு செய்துள்ளோம்,உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்கள் பெயரை சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்.அதற்கு அவர்கள் எங்கள் மகன் இங்கு இறந்ததில் மிகவும் சந்தோஷப்படுகிறோம்,அதனால் எந்த Complaint தேவையில்லை என்று சொல்லி போய்விட்டார்களாம்.அவன் இங்கு சாக கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று சொல்லிச்சென்றார்களாம்.
4.எங்கள் கம்பெனியின் சில உயரதிகாரிகளுக்கு தனிப்பட்ட சந்திப்பில் மோதிரம் போன்ற பொருட்களை கொடுத்ததாக கேள்வி.
5.இது என்னுடைய நண்பர்,பல இடங்களில் ஒன்றாக வேலை பார்த்தவர் வீட்டில் நடந்தது.இதையே அவர் பலரிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார்.
நடந்தது இது தான்.
நண்பருடைய மனைவி தினமும் காலையும் மாலையும் பஜன்/தரிசனத்துக்கு போய் வருவார்.அப்படி ஒரு நாள் போன போது அவருக்கு முதல் வரிசையில் உட்கார இடம் கிடைத்தது.பாபாவும் வந்தார்,கடிதங்களை வாங்கினார்,சிலருக்கு விபூதி கொடுத்தார்.அப்படி வந்துகொண்டிருக்கும் போது நண்பருடைய மனைவி உட்கார்ந்திருக்கும் பக்கம் வந்து அவருக்கு 2 பேர் தள்ளி உட்கார்ந்திருக்கும் பெண்ணுக்கு விபூதி வரவழைத்துக்கொடுத்தார்.இதை பார்த்ததும் நண்பருடைய மனைவிக்கு வருத்தம் வந்தது.செ! நமக்கு கிடைக்கவில்லையே என்று.
சிறிது நேரத்தில் நடந்ததை மறந்துவிட்டு வீட்டுக்கு வந்து சமையல் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.கொஞ்ச நேரம் கழித்து ஏதோ வேலையாக பூஜை அறைக்கு போனால் அங்கு இருக்கும் பாபா படத்தில் இருந்து விபூதி விழுந்து கிடந்தது.அவருக்கு ஆச்சிரியமான ஆச்சரியம்,.நம் மனதில் நினைத்தை எப்படியோ கண்டுகொண்டு வீட்டுக்கே வந்து கொடுத்துவிட்டார் என வியந்தார்.
இத்தனைக்கும் அவர்கள் இருவரும் பெரிய பக்தர்கள் கிடையாது.நான் பாபாவை விமர்சித்த போது, முழுவதும் தெரியாமல் யாரையும் குறை சொல்லாதே என்று என்னை திருத்திய நண்பன் அவன்.இதே கதை உலகில் பல இடங்களில் பல மாதிரி நடைபெற்றுள்ளது.
இந்த உலகத்தில் நடக்கும் சில இந்த மாதிரி விஷயங்கள் பாபாவை போட்டிக்கு அழைத்த கோவூர் கண்ணன் மற்றும் பலரும் விளக்கம் சொல்லாமல் விட்டு விட்டார்கள். இல்லை என் கண்ணில் படவில்லையோ என்னவோ??
மொத்தத்தில் நாம் புரிந்துகொள்ள நிறைய இருக்கு இந்த உலகத்தில் என்று மட்டும் தெரிகிறது.
இது நான் கேள்விப்பட்டது தான்,இணையத்தில் பார்த்தால் வெவ்வேறு தேசங்களில் உள்ளவர்கள் ஏதேதோ எழுதியிருக்கிறார்கள்.நம்புவதும் நம்பாமல் இருப்பதும் தனி மனித உரிமை.
நம்ப மாட்டேன் சொல்பவர்களை நம்ப வைப்பது என்னுடைய வேலையில்லை,ஆனால் நம்பிக்கை உள்ளவர்களை ஏளனம் செய்வதற்கு நமக்கு உரிமை இல்லை என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விழைகிறேன்.
உன்னால் YouTubeஐ நம்பமுடிகிறது என்றால் அவர்களால் பாபாவை நம்பமுடிகிறது.சிம்பிள் லாஜிக்.
நம்மில் சில வலைப்பதிவர்கள் அவர் கொலைகாரர் என்று இங்கு நீதி கொடுத்திருப்பதை பார்க்கவும்.
அது ஒரு பக்கம்,மற்றொருவரின் பக்கம் இங்கே!! கொஞ்சம் மோசமானது.
மேல் கொடுத்த சுட்டியில் சொல்லிய மாதிரி நான் வேலை செய்யும் போதே கேள்விப்பட்டேன்.
இது மற்றொருவரின் நம்பிக்கை.
நம்பவும் முடியவில்லை,நம்பாமலும் இருக்க முடியவில்லை.
சரி,இதையெல்லாம்,அவரவர் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
இங்கு என்னுடைய பணி முடிவடையும் நேரத்தில் அடுத்த வேலை இடத்துக்கான ஊகங்கள் வர ஆரம்பித்தன.
ஊகங்கள் வரத்தொடங்கினாலும் எதுவும் முடிவாகத நிலையில் சென்னை அலுவலகத்திக்கு போகுமாறு பணிக்கப்பட்டேன்.
அடுத்த பதிவை சென்னையில் தொடங்குவோம்.
Friday, March 16, 2007
கருடப்பார்வை
சிறிது நேரத்தில் எல்லாம் முடிந்து மென்பொருளையும் நிறுவிய பிறகு நம் தேசத்துக்கு போய் நமக்கு தெரிந்த சில படங்களை சேமித்தேன்.அது உங்களுக்கு கழுகு பார்வையில்.
இது கோயம்பேடு சந்தை
இது பூந்தமல்லி சாலையில் உள்ள என்னுடைய பழைய கம்பெனி,லார்சன் & டூப்ரோ மற்றும் அதற்கு எதிர் உள்ள அட்கோவும்
கொஞ்சம் உற்றுப்பார்தால் நமது எம்.ஜி.ஆர், தோட்டமும், சிவாஜி தோட்டமும் தெரியும்.
வலிமையான கணினி மற்றும் இணைய தொடர்பு இருந்தால் இப்படி பல இடங்களை பார்க்கலாம்.
முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்,ஒரு குறிப்பிட்ட இடம் தெரிந்தால் அப்படியே நுல் பிடித்துக்கொண்டு போய் நமக்கு தேவையான இடங்களை பார்க்கலாம்.
முயலுங்கள் நண்பர்களே.
Thursday, March 15, 2007
பத்ரி சேஷாத்ரி- சிங்கையில்
அதில் இப்போது பர பரப்பாக பேசப்படுகின்ற உலகக்கோப்பை கிரிகெட் பற்றி அலசப்பட்டது.
பலருக்கிடையே நமது சக வலைப்பதிப்பாளரான் "திரு.பத்ரி சேஷாத்ரின்" பேட்டியும் இடைப்பெற்றது.
இதன் போட் காஸ்ட் அவர்கள் வலைப்பதிவில் கிடைக்குமா என்று தேடியதில் கிடைகாததால்,இந்த சின்ன தகவல் மட்டுமே.
Dome
இந்த மருத்துவமனை கட்டுமானத்தில் கொஞ்சம் கஷ்டம் கொடுத்த வேலை என்றால் அது மத்தியில் உள்ள கூம்பு வடிவமான டோம் (Dome) தான்.
எப்போதுமே கட்டுமானத்துறையில் சதுரமாகவோ,செவ்வகமாகவோ இருந்தால் பிரச்சனை இருக்காது.வளைவுகள் வந்தால் கொஞ்சம் கஷ்டப்படுத்தும்.வளைவுகள் என்றாலே கஷ்டம் தானே!!
அதுவும் இந்த டோம் முப்பரிமானத்திலும்,ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு அளவுகள் கொண்டதாக இருந்ததால் சாரம் அடிக்கும் பணி மிக கடுமையாக இருந்தது.
அப்போது கம்பெனியில் ஆட்டோ கேட் சமாச்சாரம் எல்லாம் இல்லாததால்,மிகவும் கஷ்டப்பட்டோம்.
இதனை மேற்பார்வை செய்தவர்,திரு மீனாட்சி சுந்தரம் எனபவர்,உடம்பு மெலிந்தவர்,சிகரெட் பழக்கம் உள்ளவர்.அவருக்கு இந்த வேலையில் உதவ திரு ரமேஷ் பாபு என்பவர் வந்திருந்தார்.அவர் தான் எவ்வளவு இடைவெளியில் சாரம் போடவேண்டும்,எப்படி அதை செதுக்கவேண்டும் என்று பட்டியல் போட்டு கொடுத்தார்.
அப்படி எல்லா விபரங்களும் கொடுத்தும்,பல குத்தகைகாரர்களை விட்டும் இந்த பணியை மருத்துவமனையை திறக்கும் தேதிக்குள் முடிக்கமுடியாது போலிருந்தது.இரவு பகல் என வேலை நடந்தாலும் ஏதோ ஒரு சுணக்கம் அங்கு குடி கொண்டிருந்தது.
இந்த சமயத்தில் என் வேலை ஒரளவு முடிந்து வேறு வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தேன்.அப்போது ஒரு நாள்,என்னுடைய மேல் அதிகாரி என்னை கூப்பிட்டு,அந்த டோமில் போய் பார்,அவர்களுக்கு உதவிக்கு ஆள் தேவைப்படுகிறது,மீனாட்சி சுந்தரத்தால் முழுவதுமாக மேற்பார்வையிட முடியவில்லையாம் என்றார்.
ஒருவர் மேற்பார்வை செய்துகொண்டிருக்கும் ஒரு வேலையில் மற்றொருவர் போய் பார்பதும் ,தலையிடுவதும் பின்னால் பிரச்சனையை கொடுக்கும் என்பதால் அரை மனதுடன் ஒப்புக்கொண்டேன்.
இதில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்று அறிய,நேரடியாக மீனாட்சியிடம் போய்,"பாஸ் இங்கு வரச்சொன்னார் , உனக்கும் எதுவும் பிரச்சனையில்லையே?" என்றேன்.
நிச்சயமாக இல்லை,நான் தான் என்னால் முடியவில்லை என்று சொல்லி ஆள் கேட்டேன் என்றான்.
சரி என்று சாரம் மட்டும் பண்ணிக்கொண்டிருந்த அந்த மேல் பகுதிக்கு போய் வெறுமனே வேடிக்கை பார்த்து அங்கிருக்கும் தொழிலாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். இப்படி செய்வதால் ஒரு நன்மை,அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உள்ள சிரமம் தெரியும்.அதை பாதி நிவர்த்தி செய்தாலே போதும் வேலை கொஞ்சம் வேகமாக நடைபெரும்.
அப்போது மேலே வந்த மீனாட்சியிடம்,இந்த வேலையை எப்படி பிளான் பண்ணியுள்ளீர்கள் என்றேன்?
மொத்த வேலையையும் 8 பாகமாக பிரித்திருக்கோம்.முட்டு கொடுத்திருக்கும் சாரத்துக்கு ஒரே பக்க அழுத்தம் வராமல் இருக்க எதிரெதிர் பக்கங்களில் கான்கிரீட் போடலாம் என்றுள்ளேன் என்றார்.
அன்றிருந்த நிலமையில் இன்னும் 1 மாதம் ஆனால் கூட முதல் பகுதியை கான்கிரீட் போட முடியாது போல் இருந்தது.
இப்படியே ஒரு வாரம் போனதும்,அந்த வேலையின் பிளானருடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கும் இந்த வேலையை குறிப்பிட்ட தினத்தில் முடிக்கமுடியுமா என்ற சந்தேகம் இருந்தது.
அப்போது நான் அவரிடம் என் ஐயப்பாட்டை வைத்தேன்.
இது நாள் வரை நான் கான்கிரீட்டை கீழே இருந்து மேல் நோக்கி தான் போட உத்தேசித்திருந்தோம்.கீழ் பகுதியில் சார வேலை முடியவில்லை,அதற்கு பிறகு கம்பி கட்டி, கான்கிரீட் போட வேண்டும்.இப்போது எல்லா வேலைகளும் கீழ் பகுதியை நம்பியே இருக்கு.
இதற்கு மாற்றாக,நாம் மொத்த வேலையையும் 16 பாகங்களாக பிரித்து,மேல் பகுதியை மட்டும் கான்கிரீட் போடுவோம் அதற்குள் கீழ் பாக வேலை முடிந்திருக்கும் அதையும் தொடர்ந்து முடித்துவிடலாம் என்றேன்.
இதிலும் சில பிரச்சனைகளை எதிர்பார்த்து அதை அவரிடமும் சொல்லி தகுந்த இஞ்னியரிடம் மறு உறுதிப்படுத்தச்சொன்னேன்.ஏனென்றால் கான்கிரீரட்டை மேலிருந்து போடும் போது அதன் மொத்த எடையையும் அதை தாங்கிக்கொண்டிருக்கும் சாரம் உறுதியாக இருக்கவேண்டும்.இல்லாவிட்டால் மொத்தமும் முடியும் முன்பே தரையில் இருக்கும்.
அதை Confirm செய்துகொண்ட பிறகு கான்கிரீட்டை மேலிருந்து கீழ் கொண்டு வந்தோம்.வேலையையும் திறப்பு விழாவுக்கு முன்பே முடித்துவிட்டோம்.
அந்த மகிழ்சியில் எங்கள் அக்கால Regional Manager, இன்னாள் தலைமை அதிகாரி அனுப்பிய கடிதம் கீழே உள்ளது.
Tuesday, March 13, 2007
புட்டபர்த்தி மருத்துவமனை
Sathya Sai Hospital, Puttaparthi, 1957
Inaugurated 20 October 1957, on the hill behind Prasanthi Nilayam
Some of you may ask why there should be a Hospital at all, here! Why should not Baba cure diseases by an exercise of His Will, that is the question. Well, for one thing, this Hospital is not My only Hospital. Hanumantha Rao has a Hospital in Madras where disabled children are treated and trained to be useful and self- respecting individuals. That too is My Hospital. In fact, all hospitals everywhere are Mine. I visit them all. Why, all those who call out from their hearts for succour, in whatever language, from whatever clime, whether from hospitals or homes, are Mine. Do not confine Me to these few acres round the Prasanthi Nilayam. Wherever a person craving for Prasanthi lives and prays, there a Prasanthi Nilayam exists.
நன்றி:http://www.saiaustralia.org.au/medical/hospitals.html (மேலும் பல நல்ல தகவல்கள் இதில் உள்ளது)
இது புது மருத்துவமனையைப்பற்றியது.
Two Super Speciality hospitals built by SSB are considered by his followers as an expression of SSB's love and compassion to all people in the world. Free medical care from those hospitals is seen as a clear sign of Divine promise of a better future for all the needy and suffering people.
The first Super Speciality hospital in Puttaparthi was built by the firm Larsen & Tubro in 1991 and was constructed for 5 months. SSB's followers believe that it was SSB's divine intervention that got this hospital erected so fast and consider it as a miracle. Sai Baba himself emphasizes this moment: "Work on the hospital began in May after my return from Kodaikanal. Within five months from May to November, work has been done which would have taken five years". (23.11.1991. Sathya Sai Speaks, v.XXIV, p.310) It is still unclear what caused the construction to be finished so quickly. According to Sai Baba it must have been the enthusiasm of the workers: "The firm Larsen & Tubro are known for their big constructions in India and abroad. But nowhere else was such enthusiasm and zeal displayed by the workers engaged in the construction as in this Hospital. Even the smallest worker did the work of ten persons with zeal and joy. All workers performed their job with enthusiasm and devotion". (23.11.1991. Sathya Sai Speaks, v.XXIV, p.310).
நன்றி:http://home.no.net/anir/Sai/enigma/hospital.htm
இந்த புட்டபர்த்தி மருத்துவமனைக்கு பல தேசங்களில் பலரிடம் இருந்து பலவிதமான Information பெறப்பட்டு செய்யப்பட்டது.
பிரிட்டீஸ் நிறுவனம் கட்டுமானத்துறையில் இருந்து பின் வாங்கியதும்,அதில் சில வேலைகளை எங்கள் டிசைன் நிர்வாகம் எடுத்துக்கொண்டது.அப்படியும் பல சமயம் தேவையான விபரங்களுக்காக காத்திருக்கவேண்டியிருந்தது.
என்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த இடங்கள் கீழே உள்ள படத்தில் கோடிட்டு காண்பித்துள்ளேன்.
இது வலது பக்கக்கோணம்
எனக்கு ஏற்பட்ட வேடிக்கையான அனுபவம் இது.
ஒரு தடவை என்னுடைய அலுவலகத்தில் நான் மற்றும் சில நண்பர்கள் வரைப்படத்தை வைத்துக்கொண்டு ஏதோ விவாதித்துக்கொண்டிருந்தோம்.
அப்போது பாபா தன் காரை கொஞ்சம் தூரத்தில் நிறுத்திவிட்டு நடந்து வந்துகொண்டிருந்தார்.அவருக்கும் பின்னால் சில சீடர்கள் மட்டுமே.
இதைப்பார்த்த சில வேலை ஆட்கள் அவரிடம் வந்து ஆசீர்வாதம் வாங்க முயற்சித்து கொண்டிருந்தனர்.இதை கவனித்து, என் நண்பன் என்னிடம் சொன்னான்.அதற்குள் மண்டையில் ஒரு எண்ணம்,இவர் நம் பக்கம் வந்தாலும் இவரை நாம் கை கூப்பி வணங்கக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன்.அவர் என் எதிரி கிடையாது,இருந்தாலும் அப்போது அவர் செய்பவைகளில் முறன்பட்டு நின்றேன்.
அதற்குள் அவர் நான் இருக்கும் அறையின் பக்கமாக வந்துகொண்டிருந்தார்.
சரி என்று நானும் அலுவலகத்தை விட்டு வெளியேறி என்னதான் நடக்கிறது என்று சற்று தொலைவில் நின்று கவனித்தேன்.
சுற்றும் முற்றும் பார்த்த பிறகு என் பக்கம் திரும்பி ஒரு பார்வை,அவரை எப்போது கை கூப்பி வணங்கினேன் என்று தெரியவில்லை.கை கூப்பிய படி இருந்தது.
இதெல்லாம் என் அளவில் ஜு ஜு பி.
படித்த பண்பாளர்கள் எப்படி அளக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை "safaya" சுட்டில் கொடுத்துள்ளேன்.
சில நாட்கள் அவர் பக்தர்கள் என்று கூறிக்கொண்டு பல தேசத்து பிரஜைகளும் வந்து இன்று மதியம் எங்கள் செலவில் உங்களுக்கு இலவசசாப்பாடு என்று சொல்லிப்போடுவார்கள்.
இதெல்லாம் எங்கள் கம்பெனியில் வேலைசெய்பவர்களுக்கு புது அனுபவம்.நாங்கள் எப்போதும் வெளி ஆட்களை வேலைசெய்யும் இடத்துக்குள் அனுமதிக்கமாட்டோம்.
இங்கு சொல்லவும் முடியவில்லை,மெல்லவும் முடியவில்லை.
இந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாகியின் அனுபவத்தை கீழே காணலாம்.
செந்தழல் ரவி இதைப்பற்றி இங்கு எழுதியிருந்தார்.
நான் கேட்ட சில அனுபவங்கள் அடுத்த பதிவில்.
Wednesday, March 07, 2007
Dehydration
வேலை ஆரம்பிக்கும் போது முழுமையான வரைப்படம் கைக்கு வரவில்லை.இருப்பதை வைத்து எங்கெங்கு செய்ய முடியுமோ அதை செய்து வந்தோம்.
இந்த கட்டிடத்தின் மேற்பார்வைக்காக லண்டனில் இருந்து ஒரு பொறியாளர் வரவழைக்கப்பட்டது,அவரின் கெடுபிடிகள் அதிகமாக இருந்ததாலோ என்னவோ,அவர் திரும்ப போய்விட்டார்.மேற்பார்வை முழுவதும் எங்கள் இன்ஜினியர்களிடம் கொடுக்கப்பட்டது.எங்கள் கம்பெனியில் (லார்சன் அண்ட் டூப்ரோ- இ சி சி)சுமார் 60 பேரும்,அதை தவிர குத்தகைக்காரர்களும் வேலை ஆட்களும் இருந்தார்கள்.இப்போது இருக்கும் இடத்துக்கு எதிராக ஒரு இடத்தில் கொஞ்ச பேர் தங்குவதற்கு மெஸ்ஸ¤டன் கூடிய இடம் கட்டப்பட்டது.
தங்கள் மனைவியுடன் இருப்பவர்கள் கொஞ்ச பேர் புட்டபர்த்தியிலும்,கொஞ்ச பேர் "கொத்தச்செருவு" என்ற இடத்திலும் தங்கவைக்கப்பட்டனர்.இங்கும் இட நெருக்கடி ஏற்பட தர்மாவரத்திலும் வீடு பார்த்தார்கள்.
இந்த கொத்தச்செருவு,சென்னையில் இருந்து பஸ்ஸில் வரும் போது புட்டபர்த்திக்கு திரும்பும் ஒரு சாலையில் உள்ளது.2 கோவில்கள்,ஞாயிறு சந்தை,காய்ந்த காய்கறிகள் கிடைக்கும் இடம்.மிகவும் சிறிய ஊர்.தூசிக்கு பஞ்சமே கிடையாது.பத்து தடவை ஹாப் ஸ்டெப் ஜம் செய்தால் ஊரை விட்டு வெளியே வந்துவிடலாம்.
நான் வந்த சமயம் அவ்வளவு ஸ்டாப் வராததால் எனக்கு கொத்தச்செருவிலேயே வீடு கிடைத்தது.பக்கத்தில் இருந்த இன்னொரு வீடு மற்றொரு இன்ஜினியருக்கு கொடுக்கப்பட்டது.
பக்கத்துவீட்டில் தங்கியிருந்த இன்ஜினியருக்கு அப்போது தான் குழந்தை பிறந்து 2~3 மாதங்கள் இருக்கும்,அழைத்து வந்த நேரம் வெப்பம் அதிகமாக இருந்ததால் மிகவும் தினறியது.இரண்டு நாட்களில் ஜுரம் வந்து உடலில் தண்ணீர் குறைபாடு ஏற்பட்டு,பிரிந்து போனது.தனது குழந்தையை கூட்டி வந்த 1 வாரத்துக்குள் எல்லாம் முடிந்துவிட்டது.சோகத்தில் ஆழ்ந்தோம்.வெளிநாட்டில்/மாநிலத்தில் இருந்து வருபவர்கள் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்,அதை குழந்தைகள் செய்ய மறுப்பார்கள்,அதன் வினைதான் மேல் சொன்னது.குழந்தை கொஞ்சம் குண்டாக இருந்தால் பிழைத்துக்கொள்ளும்,மற்றபடி கஷ்டம் தான்.
இப்படிப்பட்ட சமயத்தில் எங்கள் குழந்தைக்கும் அம்மை போட்டியது,அதே டிஹைடிறேசன் வந்து அவனும் ஒரு அறையில் படுத்துக்கொண்டிருந்தான்.மருத்துவரிடம் காட்டி தேவையான மருந்துகளை கொடுத்துவிட்டு,நானும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம்.மேற்கொண்டு என்ன நடக்குமோ என்று.மற்ற மாநிலத்தில் இருந்துவரும் இளம் குழந்தைகளுக்கு முதலில் இங்குள்ள வெப்பம் மற்றும் சீதோஷ்ணநிலை அவ்வளவாக ஒத்துப்போவதில்லை.
சரியான மருத்துவமனை கிடையாது.வீடு தான் மருத்துவமனை,மருத்துவர் கொடுக்கும் மருத்துகளை பார்க்கும் போது அச்சம் ஏற்படுவது தவிர்க்கமுடியாது.பஞ்சகச்சம் கட்டிய மருத்துவர் வேஷ்டியை பார்க்கும் போதே ஏதேதோ தோனும்.இருந்தாலும் அவர் தான் அந்த ஊருக்கு ஆபத்தாண்டவர்.
இந்த சூழ்நிலையில் என் பையனின் நிலை என்னாகுமே என்று கவலை ஏற்பட்டது.திரும்பவும் ஊருக்கே திரும்ப அனுப்பிவிடலாமா என்று ஏகப்பட்ட குழப்பம்.மருத்துவரும் இன்னும் 2 நாட்கள் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்.
நிறைய தண்ணீர் மற்றும் இளநீர் கொடுத்து காப்பாற்றிவிட்டோம்.கூச்சம் இல்லாமல் சொல்கிறேன்,இந்த நிலையில் மனைவியின் பங்கு மிக மிக அதிகம்.
பக்கத்துவீட்டு குழந்தை இறந்து,நம் வீட்டிலும் குழந்தை இப்படி கிடக்கும் போது எப்படியிருக்கும்?வேதனை தான்.
குழந்தையை பறிகொடுத்த அவர் மாற்றல் வாங்கிக்கொண்டு வேறு இடத்துக்கு போய்விட்டார்.
கொஞ்சம் வழிமாறிவிட்டேன்,திரும்ப மருத்துவமனை கட்டுமானத்துக்குள் போவோம்.
அடுத்த பதிவில்.