Thursday, August 31, 2006

திரு.சத்தியமூர்த்தி

இவர் தீரர் சத்தியமூர்த்தியில்லை,EB சத்தியமூர்த்தி.நான் பார்த்த மனிதர்களில் அதுவும் அரசாங்கம் சார்ந்த ஒரு நிருவனத்தில் பணிபுரிந்த சிறந்த மனிதர்

சுமாரான உயரம்,தமிழருக்கே உரித்தான நிறம்,நீண்ட 45 டிகிரி மூக்கு,பரந்த நெற்றி,பல நேரங்களில் கையில் சிகரெட்.பார்பதற்கு மிக சாதாரனத் தோற்றம்.

இவர் எங்கள் Siteக்கு வருவதற்கு முன்பு பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு inchrge க இருந்தார்.அவருக்கென்ற ஒரு அலுவலகமும் பக்கத்தில் இருந்தது.Site யில் இருக்கும் அலுவலகங்கள் எல்லாமே கீத்துக்கொட்டகையாக் இருக்கும் இல்லாவிட்டால் பிளைவுட்டில் 3 பக்கம் மூடிய ஒரு ரூமாக இருக்கும்.

இந்த மாதிரி நிலையில் பல தடவை அவரை அந்த கொட்டகையில் பார்த்திருந்தாலும் அவரிடம் பேசியதில்லை.ஏனென்றால் அவர் நிலையில் இருக்கும் பலர் பேசும்விதம் அறிந்ததால் முடிந்தவரை தவிர்த்துவிடுவேன்.

Clent-ஒப்பந்தக்காரர்களுக்கு இடையில் எப்போதுமே ஒரு கோடு இருக்கும் அதை நாம் மீறக்கூடாது.இவருடைய குணம் தெரியாததால் நானும் பழகவில்லை.

இந்த மாதிரி பெரிய Projectஇல் வேலை செய்யும் போது பக்கத்து ஒப்பந்தககாரர்களிடம் நல்ல பழக்கம் வைத்துக்கொள்ளவேண்டும்.இது நமக்கு எதாவது பிரச்சனை வரும் போது அவர்களிடம் இருந்து உதவி பெற்றுக்கொள்ளலாம்.நாமும் உதவலாம்.

ஒரு தடவை கான்கீரிட் போட்டுக்கொண்டு இருக்கும் போது அதை Vibrate செய்யும் ஒரு கருவி ரிப்பேர் ஆகிவிட்டது.வேறு யாரிடமும் இல்லாததால் அவரிடம் போக வேண்டியிருந்தது.தனது ஒப்பந்தக்காரரை கூப்பிட்டு உடனே உதவச்சொன்னார்,அதே சமயத்தில் அதை ஒழுங்காக திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார் இல்லாவிட்டால் அதற்கான பணத்தை கொடுக்கவேண்டும் என்று சொன்னார்.இப்படி தான் எங்கள் அறிமுகம் ஆனது.

எங்களுடைய Siteக்கு மாற்றல் ஆவதற்கு முன்பே என்னை பல தடவை அவருடைய இடத்தில் இருந்தே கண்காணித்து இருந்திருக்கார்.அதனால் என்னுடைய வேலை செய்யும் முறையை அறிந்திருந்தார்.இங்கு வந்தவுடன் பல விஷயங்கள் என்னுடன் பேசி வேலை எப்படி குறிப்பிட்ட நேரத்துக்கு முடிக்கலாம் என்று idea கொடுப்பார்.அதில் எங்கள் சார்பில் உள்ள கஷ்டத்தை சொன்னால் அதையும் யோசித்து தேவையான மாறுதல்கள் செய்து வேலையை தள்ளிக்கொண்டிருப்பார்.ஒப்பந்தக்காரர்களுக்கு ஒரு இன்ஜினீயர் உதவுவது என்பது பெரும் குற்றமாக கருதப்பட்டு வந்தது.இப்படிபட்டவர்கள் மத்தியில் வேலை சீக்கிரம் முடிய ஒப்பந்தக்காரர்களுக்கு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உதவுவதில் தவறேதும் இல்லை என்ற கருத்து இவரிடம் இருந்தது.

மற்றவர்களுக்கும் இவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இது தான்.அதை ஒரு நாள் அவரிடமே கேட்டேன்.நீங்கள் மட்டும் எப்படி எங்களுக்கு உதவுகிறீர்கள் என்று?

வெங்கடேசா,நான் லிபியாவில் வேலை பார்த்தவன்.அங்கு இருந்த முதலாளி ஒரு நாள் வந்து இன்னும் ஒரு வாரத்தில் இங்கு ஒரு கட்டிடம் வேண்டும்,நீ என்ன செய்வாயோ ஏது செய்வாயோ தெரியாது,உனக்கு வேண்டிய ஆட்களையும் மெசின்களையும் வாங்கிக்கொள் என்றாராம்.

தனக்கு வேண்டிய ஆட்களை வைத்துக்கொண்டு ஒரு வாரத்தில் முடித்துக்காண்பித்தாராம்.அதனால் எனக்கு ஒப்பந்தக்காரர்கள் எப்படி செய்வார்கள் என்று தெரியும் அதே சமயத்தில் அவர்களுக்கு என்ன உதவி செய்தால் வேலை ஓடும் என்று தெரியும்-என்றார்.

இவருடைய எண்ணம் முழுவதும் வேலையை சுற்றியே இருந்ததால் பல விஷயங்கள் சுமூகமாக போனது.அதே சமயத்தில் தன்னுடன் வேலைசெய்யும் சக பொறியாளர்களையும் சம்மந்தப்படுத்தி அவர்களுடைய சம்மத்தையும் வாங்கிவிடுவார்.அதனால் வேலை என்று வரும் போது எல்லாருக்கும் எப்படி பண்ணப்போகிறோம் என்று தெரிந்துவிடும்-பிரச்சனை அடிபட்டு போய்விடும்.

மொத்தத்தில் ஒரு PR ஆக இருந்து அந்த Project முடிய முக்கிய காரணமாக இருந்தார்.இது வரை அவர் வேலையை பற்றி இனி அவருடைய இன்னொரு உலகத்தைப்பற்றி பார்ப்போம்.

ஒரு நல்ல மனிதருக்கு இன்னொரு பதிவையும் போடுவோம்.

மேலும் தொடரும் அடுத்த பதிவில்.

Friday, August 25, 2006

மேட்டூர் அனுபவங்கள்-இரண்டு

முதல் அனுபவும் இங்கு

பல வித மீட்டீங்,பெரிய மனிதர்களின் வருகை என்று ஒரு மாதம் ஓடிவிட்டது இன்னும் முடிவு தெரியவில்லை.கட்டுமானத்துறையில் ஒரு மாதம் என்பது மிகப்பெரிய காலம் அதுவுமின்றி பணவிரயம்.இப்படியே போயிற்று அந்த மாதம் முழுவதும்.கடைசியாக எங்கள் கம்பெனி 11 மீட்டரில் இருந்து 24 மீட்டர் உயரத்துக்கு இடைப்பட்ட கான்கிரீட்டை உடைத்து திரும்ப போடப்போவதாக சொல்லி அதற்கு வேண்டிய பணிகளை செய்யத்தொடங்கினார்கள்.

அதை எப்படி செய்தார்கள் என்று சொன்னால் பலருக்கு புரியாது என்பதால் அதை அப்படியே தாண்டிப் போகிறேன்.

ஆமாம் இந்த மாதிரி முடிவுக்கு ஏன் வந்தார்கள் அதற்கு யார் உதவினார்கள் என்று பார்ப்போமா?

ஒருவர் மீது ஒருவர் சேறடித்துக்கொண்டிருந்தால் எதுவும் நடக்கப்போவதில்லை அது மட்டுமில்லாமல் வேலை முடியவில்லை என்றால் பழி கம்பெனிமீது தான் வந்து விழும்.இதனால் கிடைக்க இருக்கும் வருங்கால பணியும் தடைப்படும்.

ஆமாம் இப்படி செய்வதால் உங்களுக்கு இழப்பு தானே?

நிச்சயமாக,ஆனால் தற்காலிகமானது.

சின்ன மீன் போட்டு பெரிய மீன் பிடிப்பது போன்றது.இந்த யுக்தி எல்லா சமயங்களிலும் சரியான முடிவாக இருக்காது.சில சமயம் இப்படி வருகிற இழப்புகளை அடுத்த வேலையில் ஈடுகட்டவும் முடியும் அல்லது ஏற்படுத்திக்கொடுப்பார்கள்.அதெல்லாம் என்னுடைய நிலைக்கு அப்பாற்பட்டதால் இது ஒரு வித அநுமானம் தான்.

இப்படி செய்வதால் பல நன்மைகள்,தற்போது இருக்கும் அதிகாரிகள் தங்கள் உயரதிகாரர்களிடம் போய் நின்று இதற்கு விளக்கம் அளிக்க தேவையில்லை.
வேலையும் தொடங்கும்.

முடியும் நேரம் சிறிது காலதாமதம் னாலும் அதை தகுந்த முறையில் நீட்டிக்கொடுப்பார்கள்.அப்ப எனக்கு நீ கை கொடுத்தாய் இப்போது நான் கொடுக்கிறேன்.

கால அவகாசத்தை நீட்டிப்பதால் "liquidated damages " கட்ட வேண்டியதிலிருந்து தப்பிக்கலாம்.

இப்படி பல அனுகூலங்கள் இருந்ததால் மேற்சொன்ன முடிவுக்கு வந்திருப்பார்கள்.

இந்த Slipform இருக்கே அதற்கு மேலே மட்டும் தான் போகத்தெரியும் கீழே வரத்தெரியாது.மொத்தமாக பிரித்துதான் எடுக்கவேண்டும்.
பிரித்து பிறகு அந்த உயரத்தில் பூட்ட வேண்டுமானால் மிகவும் கஷ்டம் அதனால் கீழே இருந்து 24 மீட்டர் உயரத்துக்கு பைப் சாரம் போட்டு Slipform ஐ தாங்கிப்பிடித்தோம்.
கான்கீரிட்டை உடைத்து மீண்டும் கம்பி கட்டி கான்கிரீட் போட 2 மாத காலங்கள் எடுத்தது.

எங்கள் உயரதிகாரிகள் முகங்கள் இந்த கால இழப்பை எப்படி சரிகட்டுவது என்ற கவலை மொத்தமாக குடிகொண்டிருந்தது.

அப்போது EBயின் EE (Excutive Engineer) க இருந்தவர் பெயர் சரியாக ஞாபகம் வரவில்லை.கொஞ்சம் தடிமனானவர்.நல்ல மனிதர்.வேலை நல்ல விதமாக முடியவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்.ஆனாலும் தன்கீழ் வேலைசெய்யும் அதிகாரிகளையும் அனுசரித்து போகவேண்டிய கட்டாயத்தால் அவ்வப்போது அவரும் கையை கட்டிக்கொள்ள வேண்டியிருந்தது.அதாவது குத்தகைகாரர்களுக்கு உதவ நினைத்தாலும் முடியாத நிலமையில் இருந்தார்.

இந்த மாதிரி சமயத்தில் தான் இந்த மனிதர் எங்கள் siteக்கு மாற்றலில் வந்தார்.வருவதற்க்கு முன்பே பலர் இவரைப்பற்றி பலர் சொல்லியுள்ளார்கள்.மிகுந்த கண்டிப்புள்ளவர்..அப்படி இப்படி என்று.கை சுத்தம் உள்ள ஆள் என்று.

"கை சுத்தம் உள்ள ஆள்"-அது போதும் எங்களுக்கு..

லார்சன் & டூப்ரோவுக்கு கைசுத்தம் உள்ள ஆட்கள் என்றால் கவலை இருக்காது ஏனென்றால் நாங்கள் செய்வதில் ஏதும் மறைக்க இருக்காது.பணத்தை சேமிக்க குறுக்கு வழியில் போவதை விரும்பாத எங்கள் மேலதிகாரிகளின் பண்புகள் எங்களுக்கு ஊட்டப்பட்டதால்,வேலையில் சுத்தம் இருக்கும்.வரைபடத்தில் போடப்பட்டுள்ள கம்பிகள் மற்றும் தேவையான உருதியுடன் உள்ள சிமிண்ட்க்கு உத்திரவாதம்.மொத்ததில் நிம்மதியாக போய் தூங்கமுடியும்.அதனால் தான் இவர்கள் ஒப்பந்தங்கள் பெரிய பெரிய நிறுவனங்களில் இருந்து கிடைத்துக்கொண்டு இருக்கிறது.

அந்த நல்ல மனிதர் பெயர் தான் "திரு.சத்யமூர்த்தி"

இவரைப்பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்போம்.

Thursday, August 24, 2006

"C" சிரிப்பு

சமீபத்தில் ஆர்குட்யில் பார்த்துக்கொண்டு இருக்கும் போது இது கண்ணில் பட்டது.நீங்களூம் அனுபவிங்க :-)))))

ஆர்குடில் பார்க்க நேர்ந்த கேள்வி சிவப்பில் இருப்பது -மற்றவை அனைத்தும் அனானியாக வந்த பதில்கள்.

hi all can any body tell me c++ source code plz give me link.

 ????????????????? ??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
 மோசமான வார்த்தை kaha kaha se aa jaate ho...

C++ is a language, which is nothing but a set of specifications, that describes what are the keywords, syntax and how it behaves. There is no source code for c++, as it is not something that can be implemented.
All you can implement is a compiler that adheres to the specs.

Wednesday, August 23, 2006

மேட்டூர் அனுபவங்கள் (1)

வாழ்வின் வசந்த காலத்துக்குள் போவதுக்கு முன்பு கட்டுமானத்துறையில் நேர்ந்த சில நிகழ்வுகளை பார்த்துவிடுவோம்.

கட்டுமானத்துறையில் மிக அதிகமான விபத்துகளை ஏற்படுத்தக்கூடியதாக இந்த இரண்டு இடங்களை குறிப்பிட்டுள்ளார்கள்
1) பாய்லர் எரெக்ஸன்
2) சிமினி கட்டுவது

முதலில் சொன்ன இடத்தில் பல தளங்களில் மேலும் கீழும் நடக்கும் அதனால் ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் விபத்து மற்ற இடங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.இதே தான் சிமினி கட்டும் முறையிலும்.

இந்த பிராஜட் 24 மாதம் என்பது மிக குருகிய கால வேலை அவகாசம்,அதனால் ஒரு நாளை இழப்பது கூட மிக முக்கியமாக கருதப்பட்டது.
வேலையும் ஆரம்பிக்கப்பட்டது 3 மாதங்களுக்குள் நில கீழ் வேலையில் இருந்து மேலே வந்துவிட்டோம்.முதலில் சொன்னமாதிரி Slipform வேலை தொடங்கி இரவு பகலாக நடந்துகொண்டிருந்தது.கொஞ்சம் கொஞ்சமாக மேலே போய்கொண்டிருந்தோம்.

அப்போது ஒரு நாள்...

போட்டுக்கொண்டிருந்த கான்கீரிட்யில் பிரச்சனை வந்தது.ஆதாவது கலவை இயந்திரத்தில் கலந்து மேலே வந்து போட்டு கொஞ்ச நேரத்தில் இறுக ரம்பித்தது.இதனால் 5 மணி நேரத்துக்கு மேல் ஆன கான்கிரீட் அந்த சாரத்துடன் ஒட்டிக்கொண்டு மேலே வந்தது.இந்த மாதிரி பிரச்சனை வந்த சமயத்தில் எங்களுடைய மேலதிகாரிகளிடமும் சொல்லியும் காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்தனர்.

இதற்கு மேலும் கான்கிரீட் போட்டால் 220 மீட்டர் போகமுடியாது என்று தெரிந்ததால் நானும் சக நண்பர்களும் கான்கிரீட்டை நிருத்திவிட்டோம்.
அப்புறம் என்ன??

Electricity Board கொடுத்த சிமின்ட் மீது நாங்கள் புகார் செய்தோம்.அதை பல பரிசோதனைகள் மூலம் நிரூபித்தும் காண்பித்தோம்.அதற்கு அவர்கள் நாங்கள் கொடுத்ததை நீங்கள் சரியாக பராமரிக்கவில்லை என்றும் சிமின்ட் கொடுத்தவுடனேயே சொல்லவில்லை என்றும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்துக்கொண்டோம்.
வேலை நின்றுவிட்டது.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இந்த மாதிரி அரசாங்கம் சார்ந்த வேலைகளை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.எதுவும் நடக்காத பட்சத்தில் யாரும் எதுவும் கண்டுகொள்ள மாட்டார்கள் அப்படி ஏதாவது இந்த மாதிரி நடந்தால் 99% அது உங்கள் தலை மீது தான் விழும்.Arbitration அது இது என்று போகலாம் அதற்காகும் செலவு, நேரத்தை பார்தால் எப்படியாவது வேலையை முடித்துவிட்டு போனால் போதும் என்றிருக்கும்.

லார்சன் & டூப்ரோ போன்ற கம்பெனிகளுக்கு இது ஒரு வித தன்மானப்பிரச்சனை.அதுவும் இல்லாமல் பிரச்சனை இவ்வளவு தூரம் ஏன்/யார் வளர விட்டார்கள்? என்று பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கவேண்டும், கம்பெனி பேர் கெடாமல் இருக்கவேண்டும் என்பதால் முழுவதுமாக விசாரனை செய்ய உத்தரவு வந்தது.

நடந்தது என்ன?

அடுத்த பதிவில்..

Monday, August 21, 2006

டெல்லி 2 மேட்டூர்

3 மாத அலுவலகப்பணி முடியும் தருவாயில் அவ்வப்போது கிடைக்கும் Off மற்றும் விடுமுறைகளில் ஒவ்வொரு இடமாக சுற்றிப்பார்த்தேன்.
டெல்லியில் சித்தி இருந்தார்கள் அதனால் இந்தமாதிரி சமயங்களில் அவர்கள் பையனை கூட்டிக்கொண்டு சுத்த ஆரம்பித்தேன்.எனக்கு அவ்வளவாக இந்தி தெரியாததால் அவன் தான் எனக்கு சப்போட்.

குதுப்மினார்- சில வருடங்களுக்கு முன்பு நடந்த நெரிசல் விபத்துக்கு பிறகு மேலே போக அநுமதியில்லாததால் பக்கத்தில் போய் பார்த்துவிட்டு வந்தேன்.

ரோஸ் தோட்டம்:கலரில்,அளவில் என்று விதம் விதமாக எவ்வளவு அமைக்கப்பட்டிருந்தது.காண கண் கோடி வேண்டும்.பிப்ரவரி மாதங்களில் நடக்கும்.

ஜந்தர் மந்தர்:வான்வெளி சாஸ்திரத்தைப்பற்றியது.விருப்பம் உள்ளவர்கள் போய் பார்கலாம்.

மிச்சத்தை இங்கே போய் பாருங்க
சில நாட்கள் சேர்ந்தார் போல் விடுமுறை கிடைத்ததால் ஹரித்துவார்,ரிஷிகேஸ் என்று போய் வந்தோம்.மற்றொருமுறை ஆக்ரா,தாஜ்மகால் என்று அந்த பக்கத்தையும் அளந்துவிட்டு வந்தோம்.

சித்தப்பா கொஞ்சம் பெரிய இடத்தில் இருந்ததால் அவரின் உதவியுடன் பாராளுமன்றம் செல்ல அனுமதிகிடைத்து அதையும் போய் பார்த்தேன்.அவ்வப்போது வந்து விழும் ங்கிலத்துக்கு நடுவே மொத்தமாக ஹிந்தியில் தான் பேசினார்கள்.என்னுடைய ஹிந்தி புலமையில் என்ன பேசுகிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.

இப்படி அப்படி என்று ஒரு வழியாக 3 மாதங்களை கழித்தபின்பு டெல்லியை விட்டு கிளம்பினேன்.சென்னை அலுவலகத்தில் report செய்யச்சொன்னதால் சென்னை வந்தேன்.
சென்னை வந்ததும்,என்னை அடுத்த வேலைக்காக மேட்டூர்க்கு போகச்சொன்னார்கள்.வேலை மேட்டூர் அணையில் இல்லை அதற்கு பக்கத்தில் உள்ள Thermal Power Stationயில்.எங்களுடைய Clientபொதுபணித்துறையின் மறு பக்கமாக விளங்கும் தமிழ்நாடு மின்துறை கழகம்.இவர்கள் அவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்பதை பல சமயங்களில் நிரூபித்தார்கள்.அவர்களிடையேயும் சில நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்தது.அதை பிறகு பார்ப்போம்.

இங்கு எங்களுக்கு 2 வேலைகள் இருந்தன,
1) கூலிங் டவர் (அதாவது மின்சாரம் தயாரிக்க உதவும் போது சில மெசின்களை குளிர்விக்க இந்த தண்ணீர் உதவும்)
2) 220 மீட்டர் உயரத்துக்கு ஒரு சிமினி.அப்போதைக்கு இது தான் முதன் முதலில் கட்டப்பட இருக்கின்ற உயரமான சிமினி.கட்டுமான ஒப்பந்தம் 24 மாதங்கள் மட்டுமே.

ஏற்கனவே எனக்கு அனுபவம் இருந்த்தால் என்னை இதில் போட்டார்கள்.
வாழ்வின் வசந்த காலங்கள் இங்கிருந்து தான் தொடங்கின...

மீதி அடுத்த பதிவில்..

Thursday, August 17, 2006

கைமேல் பலன்

காலை அலுவலகத்துக்கு போகும் போது ரயில் மற்றும் பஸ்ஸில் செல்லும் போது முடிந்தவரை ஏதாவது ஒரு புத்தகத்தில் மூழ்கிவிடுவேன்.

இப்போது மூழ்கிக்கொண்டிருப்பது "C" யில்.

அவனவன் மூட்டைகட்டி வைத்தை இப்போது படிக்கிறாயா? என்கிறீர்களா.சும்மா ஒரு முயற்சிதான்.பார்ப்போம் எதுவரை போக முடிகிறது என்று.

கதை இதைப்பற்றி அல்ல.

3 வருடங்களுக்கு முன்பு..

ஒரு புத்தகம் கிடைத்தது.மலேசிய எழுத்தாளர் எழுதியது.அவர் எழுதியிருந்தது "வர்மக்கலை"யைப் பற்றி.

தற்காப்பின் அவசியத்தைப்பற்றி எழுதிவிட்டு அவசியம் இல்லாமல் இந்த கலையை யார் மீதும் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுரையெல்லாம் கொடுத்திருந்தார்.

அதற்குப்பிறகு அதை யாரிடம் கற்கவேண்டும்,எப்படி பழகவேண்டும் என்றெல்லாம் விபரமாக இருந்தது.

புகைவண்டியில் இருந்து இறங்கி பஸ்ஸ¤க்குள் ஏறினேன்.உட்கார இடம் கிடைத்தால்,மீதியையும் படிக்க ரம்பித்தேன்.

கொஞ்சம் படித்த பிறகு,என்னடா இது இதுவும் ஒரு வித வன்முறையே என்று தோனியதால் ஒரு அசுவாரசியத்துடன் பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்தேன்.ஒரு சமயத்தில்,இது நமக்கு சரிப்பட்டு வராது என்று மூடி மடிமேல் வைத்திருந்தேன்.இறங்குவதற்க்கு இன்னும் 10 நிமிடங்கள் இருந்ததால் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

சிங்கப்பூரில் பஸ்ஸிலோ டிரெயினிலோ யாரும் மற்றொருவருடன் அதுவும் புதியவர்களுடன் சுலபமாக பேசமாட்டார்கள்.நீ தனி நான் தனி.அது நம்மாளாக இருந்தாலும்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் என் மடிமீது இருந்த புஸ்தகத்தைப் பார்த்து "நான் பார்கலாமா?" என்றார்.

"தாராளமாக"

அவர் பார்பதற்கு மலாய்காரர் மாதிரி இருந்தார்.நான் கொடுத்ததோ தமிழ் புத்தகம்.இவர் எப்படி தமிழ் படிப்பார் என்று குழப்பத்துடன் இருந்தேன்.

சில பக்கங்களை பார்த்துவிட்டு..

"What they have shown here are all correct"-என்றார்.

அவர் பார்த்தது வெறும் படங்களை மாத்திரம் தான்.

"இதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா?"

"சின்ன வயதில் கற்றுக்கொண்டேன்,இப்போது விட்டுவிட்டேன்" என்றார்.

பேச்சு இதைச்சுற்றியே வளர்ந்து கொண்டிருந்தது.

இறங்குவதற்க்கு 2 ஸ்டாப்பிங் இருக்கும் போது..

"வெறும் ஒரு விரலால் நமது எதிரியை மடக்கிவிடலாம்"-பார்கிறாயா ஒரு Sampleஐ என்று ஒரு விரலால்

முழங்கைக்கும் மணிக்கட்டுக்கும் நடுவில் ஒரு தொடல்,முழங்கைக்கும் தோள் மூட்டுக்கு நடுவில் ஒரு தொடல்... அவ்வளவு தான்

ஒரு சில வினாடிகள் மின்சாரத்தை தொட்ட உணர்வு.

இப்படி நான் பட்ட அனுபவத்தை அப்படியே விட்டிருக்கலாம் அதை எனது அலுவலக நண்பர்களிடம் கூறிய போது அவர்கள் நம்ப மறுத்தனர்.

"சரி உன் கையை காட்டு"

எனக்கு கொடுத்த அதே பஞ்சை அவர்களுக்கும் கொடுத்தேன்.

மறுநாள் வந்து...

டேய் என்னடா பண்ண?? கை விரு விருன்னு இருக்கு என்றார்கள்.

படித்தவுடன்(முடிக்கவில்லை) கிடைத்த அனுபவம் இது.

பின் குறிப்பு:

இந்த கலையில் ஒருவனை 48 மணி நேரத்துக்கு உறைய வைக்க முடியும் என்று போட்டிருந்தார்கள்.சிலவற்றிற்கு அடி வாங்கியவர்களை ஒரு குறிப்பிட்ட நபரை தொடர்பு கொண்டு அதை விடுவிக்க முயற்சிக்கலாம் என்றும் போட்டிருந்தார்கள்.

"களவும் கற்று மற"-வேண்டுமானால் தெரிந்து தெளிந்துவிடுங்கள்.

Wednesday, August 16, 2006

ஆட்டம்

இதற்கு முந்தைய பதிவில் சிமினி பற்றியும் அதை கட்டும் முறைப்பற்றியும் எழுதியிருந்தேன். இங்கு

இது கட்டும் வேலை ஆரம்பித்துவிட்டால் 24 மணிநேரமும், வாரம் முழுவதும் நடக்கும்.
ஒரு நாளுக்கு 2 அல்லது 3 மீட்டர் என்ற கணக்குப்படி ஏறிக்கொண்டு இருக்கும்.

அப்படி போய் கொண்டிருக்கும் போது ஒரு நாள் நாள் நான் இரவுப்பணியில் இருந்தேன். நாங்கள் இருந்த உயரம் சுமார் 74 மீட்டர். ஜனவரி மாதம் என்பதால் ஜெர்கின்ஸ் மற்றும் கம்பளி ஆடைகளை போட்டுக்கொண்டு கைகளுக்கு உறையும் அணிந்துகொண்டுதான் வேலைக்கு வருவோம். கீழேயே குளிர் தாங்கமுடியாது அதுவும் 74 மீட்டர் மேலே கேட்கவேண்டாம். எதுவும் தாக்கு பிடிக்கமுடியாது.வேறு வழி இல்லாததால் கட்டிடத்தின் மேலேயே இருந்தோம்.

எப்போதும் போல் தான் வேலை ஆரம்பித்தது. சுமார் 9 மணிவாக்கில் மழை வருவதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து லேசாக தூர ஆரம்பித்தது. இதெல்லாம் கட்டுமானத்துறையில் சகஜம் என்பதால் நாங்கள் எங்கள் வேலையை தொடர்ந்து செய்துகொண்டிருந்தோம்.மணி 10 வாக்கில் மழையின் வேகம் அதிகரித்தது அதோடு காற்றும் வீசத்தொடங்கியது.

முதலில் ஒன்றும் தெரியவில்லை, இதற்கிடையில் பல புதியதாக வேலையில் சேர்ந்தவர்கள் நாங்கள் நிற்கும் இடம் ஆடுகிறது என்று புகார் செய்யத்தொடங்கினார்கள்.கொஞ்ச நேரத்தில் அதை நாங்களும் உணர ஆரம்பித்தோம்.காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க சிமினியின் ஆட்டமும் அதிகரித்தது. இந்த மாதிரி சமயங்களில் மேல கீழே போகும் லிப்ட்டும் ஓட்டக்கூடாது. கீழே வர வேறு வழி கிடையாது அதனால் பயத்துடன் மேலேயே இருந்தோம்.
நிலமை சற்றும் மேம்படுவதற்கான அறிகுறி தெரியாததால் கான்கீரீட் போடுவதை நிறுத்த முடிவுசெய்தோம்.

ஆமாம் இதென்ன பயப்படக்கூடிய சமாச்சாரமா?

ஆமாங்க!!

நாங்க நிற்கிற,வேலை செய்கிற இடம் அத்தனையும் கீழே போட்டுள்ள கான்கீரீட் பலத்தில் உள்ளது.அது சரியாக இறுகாத சமயங்களில் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் போகக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.

சிமினின் ஆட்டம் அதிகமாக இருந்ததாலும் கீழே போட்ட கான்கீரீட் இறுகாததாலும் வேலையை நிறுத்த முடிவுசெய்தோம்.காற்று நாங்கள் போட்டிருந்த பிளாஸ்டிக் தடுப்புகளை கிழித்துக்கொண்டு போக ரம்பித்ததால் வேலையை நிறுத்துவதைத்தவிர வேறு வழியில்லாமல் போயிற்று.

காற்றின் வேகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஏதாவது ஒன்று நேர்ந்தால் மரம் முறிந்து விழுந்த மாதிரி ஆகிவிடும்.நான் கேள்விப்பட்டவரை இந்த மாதிரி எங்கும் நடந்ததில்லை.

வேலையைதான் நிறுத்திவிட்டோமே என்று உடனே வீட்டுக்கு போகமுடியாது.போட்ட கான்கீரீட் பக்கத்தில் உள்ள ஸ்டீல் பிளேட்டுடன் இறுகிக்கொள்ளாமல் இருக்க 1 மணிக்கு ஒரு முறை பிளாட்பாரத்தை உயர்த்த வேண்டும்.அதற்கு சில ஆட்களும் ஒரு மேற்பார்வையாளரும் அங்கேயே இருக்க வேண்டியதாகிவிட்டது.

இவர்கள் நிலமைதான் கொடுமை,மன தைரியம் இல்லாதவர்கள் பாடு மிகக்கஷ்டம்.

நல்ல வேளை நாங்கள் நினைத்த மாதிரி அந்த காற்று / மழை எங்களை அவ்வளவாக தினறடிக்காமல் காலை 2 மணிபோல் நின்றுவிட்டது.கட்டிடத்துக்கும் எந்த சேதமும் இல்லை.அந்த ஆட்டத்தை இன்று நினைத்தாலும் ஒருவித பயம் ஆட்கொள்ளும்.

இதாவது கட்டிடத்தின் உள்ளே,மேட்டூரில் 187 மீட்டர் உயரத்தில் கட்டிடத்துக்கு வெளியே காற்றுப்புயலில் மாட்டியதை வேறொரு சமயத்தில் சொல்கிறேன்.

Monday, August 14, 2006

காந்தி மகான் சமாதி

Photobucket - Video and Image Hosting

நான் இருந்த 3 மாதங்களில் தினமும் மதியம் சாப்பாட்டுக்கு பிறகு போய் உட்காரும் இடம் இதுதான்.பலவித மனிதர்கள்,வெளிநாட்டவர்கள் வரும் இடம் இது.பலர் ஜெர்கினை கயட்டிவிட்டு சூரிய குளியல் செய்வார்கள்.அப்படி செய்பவர்களை காப்பாளர்கள் வந்து நயமாக இது தூங்கு இடம் இல்லை இங்கிருந்து போய்விடுங்கள் என்று அனுப்பிவிடுவார்கள்.

நாங்கள் வேலை செய்ய வேண்டிய இடம் "ராஜ்காட்"(காந்தி மகானின் சமாதி உள்ள இடம்)க்கு வெகு அருகாமையில் இருந்த ஒரு பவர் ஸ்டேசன் உள்ளே.அதை மேம்படுத்துவதற்காக புதிதாக ஒரு சிமினி(புகை போக்கி) 110 மீட்டர் உயரத்தில் கட்ட இருந்தார்கள்.அதற்கு "Slip Form"(இதைப்பற்றி இங்கே எழுதியிருந்தேன்)முறையில் கட்ட இருந்தார்கள்.

முதலில் நான் எழுதிய முறை கீழிருந்து மேல் வரை ஒரே விட்டம் உடையது ஆனால் புகைப்போக்கி என்பது கீழிருந்து மேலே போகப்போக அதன் விட்டம் குறையும்.கட்டி முடிந்த பிறகு மேலே நின்றால் தென்னை/பனை மரத்தின் மேல் நிற்கிற மாதிரி ஆடிக்கொண்டே இருக்கும்.நிஜமாகங்க! கான்கிரீட் கூட ஆடும்.அந்த உயரத்தில் எப்போதுமே நில நடுக்கம் இருக்கிற மாதிரித்தான் இருக்கும்.

(From Google Earth View)

கொஞ்சம் தைரியம் இல்லாதவர்கள் இதில் வேலை செய்யாமல் இருப்பது நலம்.இந்த ஆட்டங்கள் மெது மெதுவாக ஆரம்பிப்பதால் எங்களுக்கு அவ்வளவாக தெரியாது.தெரியும் போது பழக்கமாகியிருக்கும்.

இவ்வளவு சொல்கிறமே நாங்களே ஒரிரவு கான்கீரீட் நிறுத்த வேண்டி வந்தது.

அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Friday, August 11, 2006

குளியல்

எப்படியெல்லாம் உடம்பை சூடு படுத்த முடியும் என்று யோசித்து தண்டால், பஸ்கி எடுத்தாலும்..ஹ¥கும் அதையும் மீறி குளிர் வாட்டியது.

சரி குளியல் அறைக்குள் வந்தாகிவிட்டது,குளிக்காமல் திரும்ப போனால் மானத்தை வாங்கிவிடுவார்கள். என்ன செய்யலாம் என்று யோசிக்க யோசிக்க, உடம்பு வேகமாக தாளம் போட ஆரம்பித்தது.

பச்சை தண்ணீரை எடுத்து கையை முதலில் நனைத்தேன்.பிறகு கால் அதற்கு பிறகு..
மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு அப்படியே தலையோடு உடம்பையும் நனைத்தேன்.உடம்பு அப்படியே விரைத்து போனேன்.மூச்சுவிடுவதற்கு மிக கஷ்டமாக இருந்தது.சமாளித்து சீக்கிரமாக குளித்துவிட்டு வெளியில் வந்தேன்.

முதல் நாள் வேலை என்பதால் அவ்வளவாக செய்ய ஒன்றும் இல்லை.அதனால் சாயங்காலம் நேரத்தோடு கிளம்பி "பாலிகா பஸார்"போய் ஒரு ஜெர்கின்ஸ்ம் கையுரையும் வாங்கிப்போட்ட பிறகு தான் உடம்பு ஒரு நிலமைக்கு வந்தது.
கொஞ்ச நாள் கழித்து சில நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது இதை அவர்களிடமும் சொன்னேன்.அவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு "நல்லா ஏமாந்தாய்" என்றார்கள்.

ஒன்றும் புரியவில்லை.நான் எப்படி "குளிப்பதில்" ஏமாந்தேன் என்று??

எனக்கு முன்பு குளித்த நபரின் பராக்கிரமம் கொஞ்ச நாளில் வெளிய தெரிய ஆரம்பித்ததால் அப்படி சொன்னார்களாம்.
ஆதாவது உள்ளே போய் குளிப்பதாய் தண்ணீரை கீழே கொட்டிவிட்டு,ஆ ஊ என்று சத்தம் போட்டு விட்டு அவன் மூஞ்சியை துடைத்துக்கொண்டு வந்திருப்பான்.அதை நம்பி நீயும் போய் குளித்துவிட்டு வந்திருக்காய்-என்றார்கள்.

நம்ப கஷ்டமாக இருந்தாலும்...நடந்திருக்க வாய்ப்பு அதிகமா இருந்தது.ஏனென்றால் அவருடைய குணம் அந்த மாதிரி.

அந்த மாதிரி அனுபவிக்கவிட்டால் இந்த மாதிரி ஒரு பதிவை போட முடியுமா?

அடுத்த பதிவில் நாங்கள் வேலை செய்த இடத்தை பற்றி பார்கலாம்.

நமது தேசத்தின் மிக முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று.

Thursday, August 10, 2006

டெல்லி விஜயம்

ஹிந்தி தெரியுமா??

11வது முடித்துவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நேரத்தில், சும்மா இருக்கவேண்டாம் என்று அப்பா தொலைதூர கல்வியில் இலவசமாக கிடைக்கும் பாடங்களை வாங்கி படிக்கச்சொன்னார்.ஒரளவு கற்றுக்கொண்டேன் ஆனால் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்காததால் கண்ணை கட்டி காட்டில் விட்ட கதை தான்.கத்துகொண்டால் போயிற்று.

சீக்லேங்கே.கொய் தக்லிப் நஹி ஹை. (கத்துண்டா போயிற்று-கஷ்டம் ஒன்றும் இல்லை)

ஒரு நல்ல நாள் பார்த்து நானும் மற்றொரு நண்பனும் சேர்ந்து விஜயவாடவிலிருந்து டெல்லிக்கு கிளம்பினோம்.டிசம்பர் முதல் வாரம் என நினைக்கிறேன்.20 மணி நேரம் கழித்து ஹஸ்ரத் நிஜாமுதினில் இறங்கினோம்.என்னடா டெல்லி என்று சொல்லிவிட்டு இங்கு இறங்குகிறார்கள் என்று என்னுடன் வந்தவனிடம் கேட்டேன்.இங்கிருந்து நாம் போகவேண்டிய அலுவலகம் கிட்ட அதனால் இங்கு இறங்கினால் நல்லது என்றான்.எங்களைப்போல் பலரும் இங்கு தான் இறங்கினார்கள்.விஜயவாடா ஏறிய போது தெரியாத குளிர் கீழே இறங்கியவுடன் பல் தந்தி அடிக்க,உடம்பு வெடவெடக்க போர்வையை சுற்றிக்கொண்டு டேக்ஸி பிடித்து ஒரு ஓட்டலுக்கு போய் இறங்கினோம்.

காலை 6.30 மணி, 8 மணிக்கு அலுவலகம் போக வேண்டும் என்பதால் குளிக்க போகலாம் என்று முதலில் ஒருவன் போனான்.அப்போது தான் தெரிந்தது உள்ளே வென்னீர் வராது என்று.எங்கெங்கோ அலைந்து விஜாரித்தபிறகு தான் தெரிந்தது 8.30 மணிக்கு மேல்தான் வென்னீர் கிடைக்கும் என.என்ன செய்வது என்று தெரியவில்லை.

முதலில் குளியல் அறைக்கு போனவன் திரும்ப "வேறு வழியில்லை நான் பச்சை தண்ணியிலே குளித்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு,உள்ளே போய் 20 நிமிடங்களுக்கு பிறகு புத்தம் புதியவனாக வந்தான்.

எப்படிடா இந்த குளிரில் குளித்தாய்? என்றேன்.

முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும் மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு தண்ணீரை ஊற்றிக்கொள் பிறகு சரியாகவிடும் என்றான்.
அவன் சொல்வதை நம்பி போய் ஆடையை களைந்தால்....சகலமும் நடுங்க ஆரம்பித்தது.சரி முதலில் பல் விளக்கிவிடலாம் என்று கொஞ்சம் தண்ணீரை பிடித்து வாய் கொப்பளிக்கும் முன்பே தாடை இரண்டும் உறைந்துவிட்டது.இந்த அனுபவம் புத்தம் புதியது.இந்த அளவுக்கு குளிரை இதற்கு முன்பு அனுபவித்ததில்லையாதலால் கொஞ்சம் கஷ்டப்படேன்.எப்படியோ பல் தேய்த்துவிட்டேன்.அடுத்து குளியல்..

குளிக்க முடிந்ததா? இல்லையா?

வாங்க அடுத்த பதிவுக்கு

Tuesday, August 08, 2006

விஜயவாடா

சென்னை வாசம் முடிவுக்கு வந்தது.

கிடைத்தது மாற்றல் ஆந்திராவுக்கு.இந்த முறை அவ்வளவு கடினமாக இல்லை.தெலுங்கில் தேர்ச்சி இதற்கு பெரிதும் கை கொடுத்தது.

இந்த முறை விஜயவாடா பக்கத்தில் உள்ள ஆள் அரவம் அற்ற ஒரு கிராமத்தில் வேலை.

இதுவும் ஒரு சிமின்ட் தொழிற்சாலை.முன்னமே சொன்னமாதிரியான அமைப்பு.ஆனால் இந்த முறையும் நிறைய இளைஞர்களும் இருந்தார்கள்-ஒரு கிரிக்கெட் டீம் அமையும் அளவுக்கு.இந்த Site யில் தான் அபூர்வமாக இந்த மாதிரி அமைந்தது.அப்படியே கிரிக்கெட் டீம் அமைத்து,எங்கள் விக்கெட் பாதுகாவளரின்(வாஞ்சிநாதன்) 4 முன் பற்களை தானம் கொடுத்து உள்ளூர் குழுவையும் ஜெயித்தோம்.அதை பின்னால் பார்ப்போம்.வேலை முடிந்தபிறகு நாங்கள் இருபிரிவுகளாக பிரிந்து வாலிபாலும் விளையாடினோம்.சில சமயம் மாலை 7 மணிக்கு ஆரம்பித்து 10 மணிவரை போகும்.இவையாவும் நான் பார்த்த சில வசந்த கால நிகழ்வுகள்.

இந்த Projectயின் தலைவர் எனது போன Siteயில் இருந்தவரே என்பதால் அவ்வளவாக பிரச்சனையில்லை.இங்கு சுமார் 21/2 வருடங்கள் வேலைப்பார்த்தேன்.சுற்று வட்டாரத்தில் பார்க்க அவ்வளவு சுவாரஸ்யமான இடங்கள் இல்லாததால் வெளியில் சுற்றுவதற்கு வேலையில்லாமல் போய்விட்டது.அப்படியும் பார்த்த சில இடங்கள் விஜயவாடா-கனகதுர்கா கோயில்,சிறிய குன்றின் மேல் உள்ளது.

Photobucket - Video and Image Hosting

அடுத்தது-பானக நரசிம்மர் கோயில் உள்ள மங்களகிரிஆங்கிலத்திலேயே அழகாக இருக்கிறதால்...தமிழில் மாற்றாமல் விட்டுவிட்டேன்.
Photobucket - Video and Image Hosting

Location: Mangalagiri, 12-km South Of VijayawadaPresiding Deity: LordNarasimhaUnique Feature: The Deity Accepts Only Half The Quantity Of The Panaka(Jaggery Dissolved In Water) Offered By Devotees, Irrespective Of The QuantityOffered.Also Known As: Panakala Narasimha Swami TempleA Unique FeatureThe renowned temple of Lord Narasimha, one of the 'Nine Avatars'of Vishnu, is located on the Hillock at Mangalagiri, 12-km south of Vijayawada.The Unique feature of this temple, according to the devout is the fact that thedeity accepts only half of the quantity of the 'Panakam' (jaggery dissolved inwater) offered by the devotees, irrespective of the quantity offered.Thejaggery water is actually poured into the mouth of the Lord, and Lord Narayanashows that he has fully satisfied himself, when half of water is thrown back asa 'Prasada' to the devotees. While the jaggery water is being poured into themouth of the Lord a gurgling sound is clearly audible as ifthe Lord is actually drinking it, and the sound becomes shriller and shriller,as and when the Lord is drinking, till at last the sound stops, and the balanceof the jaggery water is thrown out. This phenomenon happens not once in a day,but once for every pilgrim who visits the temple. In addition, in spite of thefact that so much of jaggery and jaggery water is thrown out, there is not asingle ant seen near the bill. It is on account of this special characteristicthat the temple has acquired the name of Panakala Narasimha Swami temple.ThePeculiarities About The TempleThe two peculiarities of the temple are that theoffering of jaggery water is made, and that too directly into the mouth of theLord, and secondly that there is no other idol in the temple except that ofLord Narasimha Swami, whose face alone is sculptured in the hill itself.Thistemple dates back to the Reddi chiefs of the 14th century. The mountainMangalagiri itself appears inan elephant's shape and the temple is situated just at the mouth. There are fourentrance 'Gopuras' leading to the temple. The main shrine in the middle of thecompound is on a raised terrace facing eastwards. There is a small Garudashrine in the front. Mangalagiri has a hill with a cave, which attracts crowdsfor its sanctity. At the foot of the steps, leading up the hill, is a columnwith inscriptions giving an account of the capture of the Kondavidu fort by theVijaynagara Empire. This column is called the victory pillar. The temple withits imposing gopuram in the south and the sacred Lord Narasimha Swami at thetop is still attracting pilgrims in large numbers. It is one of the most sacredspots in Andhra and is noted both for its sanctity as well as for its historicalimportance. At the foot of the hill is the ancient 'Rajya Lakshmi NarasimhaSwami' temple, with an imposing Raja Gopuram, supposedly the tallest in AndhraPradesh.FESTIVALSThe important festivals of this temple are the Brahmotsavam,which lasts for twelve days in March and the other usual festivals like the'Vaikunta Ekadashi Day, Sriramanavami, 'Hanuman Jayanthi', 'Narasimha Jayanthi'etc.
HOW TO GET THERERail: The nearest railway station is Mangalagiri on theGuntur - Vijayawada line.Road: To visit the temple, the better course would beto get down either at Vijayawada or at Guntur and take bus connections.
WHERE TOSTAYThere are three choultries of this temple in addition to a local fundchoultry, a Madhava choultry, a Vysya choultry and a Brahman choultry. Thepilgrims are given all facilities for a comfortable stay here. Since it isclose by to Vijayawada and Guntur, one can always stay at either of the places.

இந்த Project முடிந்தவுடன் அடுத்த வேலை தயாராக இல்லாததால் வேறு சின்ன வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தேன்.இப்படிப்பட்ட சமயத்தில் என்னுடைய Boss கூப்பிட்டு "டெல்லியில் ஒரு சிமினி கட்டுகிறார்கள் அதற்கு Trainee ஆக போகிறாயா?"என்றார்.

3 மாதமாக சரியான வேலையில்லாமல் காலை 11 மணிக்கே வேலைமுடிந்த மாதிரி ரூம்முக்கு வந்து கொண்டிருந்த காலத்தில் இதைக்கேட்டவுடன் தயக்கமே இல்லாமல் ok சொல்லிவிட்டேன்.டெல்லிய பார்த்தமாதிரி இருக்கும் Trainingயில் கலந்து கொண்டமாதிரி இருக்கும்.3 மாதம் தானே.புறப்பட்டுவிட்டேன்.

ஆமாம் ஹிந்தி தெரியுமா???

Saturday, August 05, 2006

பூஜ்ஜியத்துக்கு கீழே!!

"அப்பா இன்னிக்கு பள்ளியில் ஒரு புது எண் சொல்லிக்கொடுத்தார்கள்"
அப்படியா?என்ன அது.

"நாமெல்லாம் பூஜ்யம் தானே கடைசி என்று நினைத்துக்கொண்டு இருக்கோம்?"

ஆமாம்

"கிடையாது பூஜ்யத்துக்கு கீழே மைனஸ் ஒன்று,இரண்டு....என்று உள்ளதாம்"உங்களுக்கு தெரியுமா?

ஆமாம் தெரியும்.எல்லாவற்றிலும் மைனஸ் 1,2 இருக்கும்-என்றேன்.நான் 8 டாவதோ 9 தாவதோ படித்ததை 4வது படிக்கும் மகன் என்னுடம் கேட்டான்.
கேட்டுவிட்டு போய்விட்டான்.

பல நாட்கள் கடந்தபிறகு ஒரு நாள்..

நான் எனது துணிகளுக்கு இஸ்திரி போட்டுக்கொண்டு இருந்தேன்.பக்கத்தில் சில ஆப்பிள் பழங்கள் இருந்தது.வந்தவன் பேசாமல் அங்கிருந்த ஆப்பிளை உருட்டிய படி

"அப்பா"

உம் என்ன?

"அன்னிக்கு நீங்க சொன்னீங்க எல்லாவற்றிலும் மைனஸ் 1,2, இருக்கும்" என்று?

ஆமாம் அதுக்கென்ன இப்போ?.

"இந்த ஆப்பிளுக்கு" எங்க இருக்கு மைனஸ் 1?

அப்படிப்போடு-கொஞ்சம் அசந்துட்டேன்.என்ன பதில் சொல்வது.யோசித்துக்கொண்டே...
இருக்கு! நீ யோசித்து சொல் பார்கலாம் என்றேன். (வாய்தா வாங்கினேன்)அந்த சமயத்தில் விடை எனக்கும் தெரியாது.

கொஞ்ச நேரம் கழித்து

"எனக்கு தெரியலை" நீயே சொல்லு.-என்றான்.

திடிரென்று ஒரு யோஜனை தோன்றியது.நான் சொன்ன விடை இது தான்.
இந்த ஆப்பிளுக்கு முன்பு அது என்ன?பூ வாக இருந்திருக்கும்,அதற்கு முன்பு மொட்டாக இருந்திருக்கும்.நீ ஆப்பிளை பூஜ்ஜியமாக்கினால் பூ தான் மைனஸ் ஒன்று என்றேன்.

அப்ப மொட்டு பூஜ்ஜியமானால்.....?எது மைனஸ் ஒன்று?

மவனே?எனக்கே செக்கா?(Check)
தண்டு,இலை அப்படியே போய் வேர் வரை போகலாம் என்றேன்.

இந்த காலத்து பஸங்கள்....என்னத்தை சொல்ல?

வேலை வாங்கும் போது கூட இந்த மாதிரி கேள்விகளை எதிர் கொண்டதில்லை.

போடுங்க உங்க குட்டீஸ் உங்களை அசர வைத்த நிகழ்வுகளை.

Wednesday, August 02, 2006

வயதே தெரியாவிட்டால்?

இன்று காலை இங்குள்ள வானொலி ஒலி 96.8 ஒரு குட்டிக்கதை / கருத்து ஒன்று கேட்டேன்.
அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு.

எப்போதும்,காலை 7 மணி செய்திக்கு முன்பு திருமதி.கீதா ஒரு குட்டிக்கதை சொல்வார்.

அவர் இன்று சொன்னது இது தான்.KFC யின் பராக்கிரமங்களை சொல்லிவிட்டு அவர் எங்கோ படித்தாக இதைச்சொன்னார்.

"வயதே தெரியாவிட்டால் உன்னுடைய வயதை எவ்வளவாக வைத்துக்கொள்வாய்??"

பார்பதற்கும் படிப்பதற்க்கும் சுலபமாக தெரிந்தாலும் இதில் ஒரு பெரிய உட்கருத்து இருப்பதாக தெரிகிறது.

எனக்கு இப்படி தோனுது. "நல்ல,இளமையான எண்ணங்களே உங்களை இளமையாக காட்டும்".

நீங்க என்ன நினைக்கிறீங்க?

Tuesday, August 01, 2006

ராமாவரம்-சென்னை

மறைமலை நகர் Site அவ்வளவாக எனக்கு பேர் கொடுக்கவில்லை.அதுவும் அங்கிருந்த Resident Engineerக்கும் எனக்கும் ஒத்துப்போகாத நிலையில் நான் மாற்றப்பட்டேன்.அதற்கு பக்கத்தில் இருந்தே குழி பறித்தார்கள் என்னுடன் வேலைப்பார்த்த பெருந்தகைகள்.
மறப்போம் மன்னிப்போம்.
எனது அடுத்த Site, எங்கள் தலமையகம் அப்போது அமைந்திருந்த சென்னை ராமாவரம் தோட்டத்திற்கு பக்கத்தில் உள்ள L&T Mcnil லின் உள்ளே ஒரு Moulding Shop தொழிற்சாலை.
இந்த Siteயின் Resident Engineer-திரு N.V.Ramu அவர்கள்.பழுத்த அனுபவசாலி.ஒவ்வொருவரையும் அளந்து "ஆடிக்கறக்கரை மாட்டை...." மாதிரி எல்லோரிடமும் வேலை வாங்குவதில் வல்லவர்.இவரிடம் உள்ள மிகச்சிறந்த குணம்,நாம் வேலைப்பார்பதே நமக்கு தெரியாது.எங்க அடிச்சா எது நகரும் என்று தெரிந்து வைத்திருப்பவர்.இப்படி இருந்ததால் நாம் அனாவசியமாக போய் குத்தகைகாரரிடம் சத்தம்போட அவசியம் இல்லை.
இதுவும் மற்ற தொழிற்சாலைப் போல தூண்களும் மேலே Slabம் தான்.இதன் மொத்த கட்டிடத்தை தாங்குவதற்கு ஏதுவான நிலம் இல்லாததால் Bore Piling என்ற முறைப்படி நிலத்தில் சுமார் 20~30 மீட்டை ஆழத்திற்க்கு ஓட்டைப்போட்டு (900 - 1200 dia) அதனுள் கம்பி இறக்கி பிறகு கான்கீரிட் போடுவார்காள்.இதன் மேல் தான் மொத்த கட்டிடமும் எழுப்பப்படும்.பின் வரும் படங்களை பார்க்கவும்.ஏதோ கொஞ்சம் புரியும் என நினைக்கிறேன்.
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting

கட்டிடத்தின் மேல் தளம் பல பிரிவுகளாக (Pre-Cast) கீழேயே தளம் போட்டு பிறகு பாரம் தூக்கி மூலம் மேலே வைக்கும்படியாக Design செய்யப்பட்டிருந்தது.
படங்களை பார்க்கவும்ஆமாம் இப்படி செய்வதால் என்ன நன்மை?
நேரம் தான்.
கீழ்தளம் வேலை நடந்துகொண்டிருக்கும் போதே மேல் தள வேலைகளையும் ஆரம்பித்து விட முடியும்.அதிக ஆட்கள் தேவைப்படாது.அது மட்டுமில்லாமல் கான்கீரிடும் தரமாக இருக்கும்.பாதுக்காப்பானது.
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
இந்த Projectம் சிறியதானதால் 1 வருட காலத்துக்குள் மீண்டும் பணி மாற்றம் வந்தது.
இந்த பணி மாற்றங்கள் தான் கட்டுமானத்துறையின் மிகப்பெரிய சாபம்.குடும்பம் என்ற கட்டுக்கோப்பு சுத்தமாக கலைந்துவிட வாய்ப்பு அதிகம்.பிரம்மச்சாரிகள் அல்லது வேறு வேலை செய்யத்தெரியாதவர்களுக்கு மட்டுமே இந்த வாழ்கை ஒத்துவரும்.பொண்டாட்டிக்கு இந்த துறைப்பற்றி எதுவும் தெரியாமல் இருந்து, ஒத்துப்போகாவிட்டால் ரெண்டு பக்கமும் இடி தான்.என்னுடைய பல நண்பர்கள் அவஸ்தை படுவதை நான் பார்த்துள்ளதால் சொல்கிறேன்.விரைவு உணவகம்,புது சினிமா அதெல்லாம் உங்கள் வேலையிடம் நகரத்துக்கு பக்கத்தில் இருந்தால் ஒருவேளை முடியும்.
ஞாயிறு விடுமுறை?
அதிர்ஷ்டம் இருந்தால்!!
சரி உனக்கு ஒரு பக்கம் இடியா?ரெண்டு பக்கமும் இடியா?
அதை வேறொரு சமயத்தில் சொல்கிறேன். :-))
கல்யாணம் ஆன புதிதில் மற்றும் குழந்தை படிப்பு ஆரம்பிக்கும் வரை பிரச்சனை தெரியாது.படிப்பு என்று ஆரம்பிக்கும் போது, 1 வருடத்திற்கு 1 இடம் என்று மாறும் போது புது இடம் மற்றும் மொழி மாற்றம் அவர்களை மட்டும் இல்லாமல் நம்மையும் சேர்த்து வாட்டும்.
எனக்கு அந்த பிரச்சனை இந்த சமயத்தில் இல்லாததால் என்னுடைய ஒரே பெட்டியை தயார் பண்ண ஆரம்பித்தேன்.
வாங்க அடுத்த பதிவுக்கு.