தற்போது சந்தையில் இப்படிப்பட்ட ஒலி பெருக்கி கிடைக்கிறது.இதன் அளவோ வெறும் கட்டை விரல் அளவில் தான் உள்ளது ஆனால் இது கொடுக்கும் ஒலி அளவை கேட்கும் பொது ஆச்சரியமாக உள்ளது.ஏற்கனவே பரிட்சார்த்த முறையில் ஒன்று வாங்கி அதை தூக்கி எரிய வேண்டிய நிலையில் இருந்த வானொலி ஒலிப்பானுடன் இணைத்து இன்றுவரை மடிக்கனினிக்காக உபயோகித்து வருகிறேன்.சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் கவலைப்படும் அளவுக்கு இல்லாததால், ஓடிக்கொண்டு இருக்கிறது.
அந்த Audio Amplifier இது தான். PAM 8403. இதன் விலை ரூ 90.
மின்னணுவியல் தெரிந்தவர்களுக்கு இதில் கொடுக்க வேண்டிய இணைப்புகள் ஜுஜுபி வேலை.அதாவது கிழே வலது புறத்தில் 5 வோல்ட் மின்சாரம் கொடுக்க வேண்டும்.இடது புறம் ஆடியோ பிளஸ்,கிரவுண்ட் மற்றும் மைனஸ்.மேற்புறத்தில் ஸ்பீக்கருக்கான இணைப்புகள்.அதிகபட்சமாக 3W ஸ்பீக்கர் வரை வேலை செய்யுமாம்.
எங்க வீட்டு தொலைகாட்சிக்கு முன்னாடி ஒரு கண்ணாடி கதவு இருக்கு. இது கொஞ்சம் பழைய மாடல் என்றாலும் நிறைய தூசி உள்ளே போகாமல் இருக்கும் என்பதால் அதை கழற்றாமல் விட்டுவிட்டோம்.ஒரு பிரச்சனைக்கு தீர்வு கண்டால் வேறு பிரச்சனை வராமலா இருக்கும்? விட்டுக்கார அம்மணி, சில சேனல்களில் வரும் சத்தம் சரியாகவே இல்லை என்றும்,ஏதாவது வழி இருக்கா என்று பார்க்குமாறு சொல்லியிருந்தார்.ஒரே வழி, கண்ணாடி கதவை தூக்கவேண்டியது தான் என்று சொல்லிக்கொண்டு இருந்தேன்.அதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லாததால் அப்படியே ஓடிக்கொண்டு இருந்தது.இதற்கிடையில் பல நாட்களாக உபயோகப்படுத்தாமல் இருந்த Hi-Fi கண்ணை உறுத்திக்கொண்டு இருந்தது.ஓரளவு மனதில் ஓடிய எண்ணங்களை வைத்து வேலையை ஆரம்பித்தேன்.
டிவி யில் இருந்து ஆடியோ வெளியேறும் வழியில் இருந்து ஆடியோ சமிக்கைகளை எடுக்க வேண்டியது அதை இந்த Module வழியாக பெருக்கி ஸ்பீக்கருக்கு கொடுக்கணும். ஸ்பீக்கரை வெளியில் வைத்துவிடவேண்டும், அவ்வளவு தான்.5 வோல்ட்க்கு ஏதாவது ஒரு கைப்பேசி அடாப்டரை உபயோகித்துக்கொள்ளவேண்டும். முடிந்தது.
முதலில் RCA port இல் இருந்து சமிக்கைகளை எடுத்து ஸ்பீக்கருக்கு கொடுத்து பார்த்தபோது வெறும் "டூர் " என்ற சப்தம் மட்டுமே வந்தது.ஒவ்வொன்றையும் சரி பார்த்த பொது கேபிள் இணைப்பில் ஏதோ பிரச்சனை என்பது புரிந்தது.சரி இதை இப்போது டிவியில் இணைக்கவேண்டாம், முதலில் கைப்பேசியில் இணைப்போம் என்று முடிவு செய்து அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்தேன்.கைப்பேசியில் போட்ட பாட்டு அட்டகாசமாக ஓடியது.RCA கேபிளின் இணைப்புகளை இணையத்தில் தேடி படித்த பொது நான் செய்த தவறு தெரிந்தது.கிழே உள்ள படத்தில் இருக்கும் கேபிள் என்னிடம் இருந்ததால் வேலை சுலபமாக முடிந்தது.
இந்த பெட்டி சும்மாக கிடந்ததால் அதனுள் Module ஐ வைத்து மூடிவிட்டேன்.வெப்பம் வரக்கூடிய சாத்திய கூறுகள் இல்லாததால் பெட்டி ஒரு பிரச்சனையாக இருக்காது.
எல்லாம் முடிந்து இணைப்புகளை கொடுத்து டிவி செட்டிங்கில் ஆடியோவை வெளி கனெக்ஷனுக்கு மாற்றிவிட்டால் முடிந்தது வேலை.
ஆடியோ இப்போது சும்மா "கும்" என்று இருக்கு.

No comments:
Post a Comment