சில சமயம் பழைய கண்டுபிடிப்புகளை பற்றிய புத்தகங்களை படிக்கும்போது அந்த கண்டுபிடிப்புகளெல்லாம் ஏதோ ஒரு விபத்து தானோ என்ற சந்தேகம் வருவதுண்டு ஆனால் எனக்கு நேர்ந்தது....சத்தியமாக கண்டுபிடிப்பு அல்ல ஆனால் நிச்சயமாக ஒரு விபத்து தான்.
சிங்கையில் இருந்த போது அப்போது தான் வந்த DVD Recorder மீது கண் விழுந்து வாங்கினேன்.சுமார் 549 வெள்ளி என்று நினைக்கிறேன்.நம்ம பழைய கேசட் எல்லாம் Fungus வந்து பள் இளிக்கும் கால கட்டத்தில் இது ஒரு நல்ல மாற்றாக இருக்கும் என்று நம்பி வாங்கினேன்.
சென்னைக்கு வந்த பிறகும் அதன் மூலம் தொலைக்காட்சி நிகழ்வுகளை சேமித்து பின் பார்த்துக்கொண்டிருந்தோம்.நடுவில் இந்த Set-up Box வந்ததும்,நிறைய சேனல்கள் வாழ்கையை ஆக்கிரமித்ததும் நேற்றைய நிகழ்வு இன்று Bore அடிக்க ஆரம்பித்ததால் இந்த Recorder க்கு வேலை இல்லாமல் தேமே என்று தூங்கிக்கொண்டிருந்தது.எப்போதோ வருகிற DVD/VCD க்கு பார்பதற்கு வேறு வழி இருந்ததால் இதை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டேன்.திடிரென்று ஞானோதோயம் வந்து ஒரு நாள் ஒரு வட்டை போட்டு பார்க்கலாம் என்று On செய்து Eject Button ஐ அழுத்தினால் உள்ளிருக்கும் சிறிய மோட்டார் வேலை செய்யும் சத்தம் கேட்கிறது ஆனால் வட்டு டிரே வெளியே வர மறுத்தது. “Blocked" என்ற பிழையுடன் நின்று போனது.நமது கணினியில் இருக்கும் Tray கீழே இருக்கும் சிறிய துளை இதில் இல்லை அதனால் Tray ஐ வெளியே கொண்டு வர வழியே இல்லாமலிருந்தது.நம் ஆண்டவர் கூகிளில் தேடினால் என்னைப் போல் பலருக்கு இந்த பிரச்சனை இருப்பது தெரிந்தது.பல வழிகள் சொல்லப்பட்டிருந்தது.அதில் ஒன்று “Tray க்கு கீழே ஒரு Lock இருக்கு அதை பேப்பர் கட்டர் கத்தியை கொண்டு விலக்கிவிட்டால் Tray வந்து விடும்” என்று போட்டிருந்தது. பல தடவை செய்தும் ப்லன் இல்லை.மற்றொரு நாள் இன்னொரு ஐடியா சொல்லியிருந்ததை செயல்படுத்தினேன்,ஆதாவது Power Button ஐ அழுத்திக்கொண்டு மெயின் Power Switch On செய்வது- இதுவும் பலனளிக்கவில்லை.
இந்த பிரச்சனையை சில நாள் ஆரப்போட்டுவிட்டு Paper Cutter முறையை செயல்படுத்திய போது Tray வெளியே வந்தது.பல முறை Eject - Close- Eject போட்டு முயன்ற பிறகு எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைத்து மூடிவிட்டேன்.ஆனால் சில நாட்களிலேயே அப்பிரச்சனை மீண்டும் வந்தது.Tray Moving Parts களில் கொஞ்சம் எண்ணெய் போட்டு வைத்தேன் அதற்கும் சரியாகவில்லை, சரி பீராய்சுடவேண்டியது தான் என்று Screw Driver மூலம் முயற்சித்தேன் ஆனால் அதில் உள்ள Screws எல்லாம் வேறு மாதிரி இருந்தது.சாதரணமான Star/flat Driver மூலம் கழற்ற முடியாத்தாக இருந்தது.பல கடைகளில் ஏறி இறங்கினாலும் கிடைக்க மறுத்தது.மற்றொரு நாள் வேறொறு Screw Driver மூலம் முயன்ற போது வெற்றி கிடைத்தது ஆனாலும் DVD Tray கழற்றுகிற மாதிரி இல்லாத்தால் அம்முயற்சியை கைவிட்டேன்.
கடைசியாக ஒரு வட்டை Tray உள்ளேயே வைத்து மூடி திறந்த போது Tray சொல் பேச்சை கேட்க ஆரம்பித்தது அதனால் எப்போதும் அதனுள் ஒரு வட்டு இருப்பதை உறுதிபடுத்திவிட்டால் மூடி திறப்பதில் பிரச்சனை இருக்காது என்று தெரிகிறது.
என்னைப்போல் யாருக்காவது இதே மாதிரி பிரச்ச்னை இருந்தால் சல்லிக்காசு கொடுக்காமல் முயன்று பார்த்து வெற்றி தோல்வியை பகிர்ந்துகொள்ளலாம் அதற்கு பிறகு நான் Patent Register செய்யலாம் என்றுள்ளேன். :-)