Monday, September 03, 2007

பல் மருத்துவர்

கொஞ்ச வருடங்களாக பல் மீது கரிசனத்தினால் ஒரு வருடத்துக்கு ஒரு முறையாவது போய் அவரை பார்த்துவிட்டு வருவது வழக்கம்.அதுவும் நிறுவனம் பணம் கொடுத்துவிடும் என்பதால் தவறாமல் போய் விடுவேன்.நிறுவனம் முழுவதும் கொடுக்காது வருடத்துக்கு 100 வெள்ளி மட்டும் தான் அதற்கு மேல் போனால் நாம் தான் கொடுக்கவேண்டும்.

போன வருடம் போன போது மருத்துவர் முதலில் பல்லைப் பார்த்துவிட்டு "ஏற்கனவே செய்த அடைப்பு நன்றாக இல்லை அதை எடுத்துவிட்டு புதிதாக போடலாமா?" என்றார்.

'தாராளமாக"

மேலும் பார்த்துவிட்டு வலது பக்கமும் சிறிதாக உள்ளது அதை இப்போதே அடைத்துவிட்டால் நல்லது என்றார்.

"சரி"

சுமார் 20~25 நிமிடங்கள் பல்லை சுத்தம் செய்து எங்கெங்கு அடைப்பு தேவைப்படுகிறதோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கும் போது

"மேலும் ஒரு ஓட்டை இருக்கு" அதையும் அடைத்திடவா? கூட ஒரு 50 வெள்ளி ஆகும். என்று கேட்டார்.

ஏற்கனவே வாயில் பைப் (தண்ணீரை உரிஞ்ச) பேச கூட முடியாததால் தலையை ஆட்டுவது மட்டுமே வழி என்பதால் தலையை ஆட்டினேன்.

எல்லாம் முடிந்த பிறகு பில் வந்த போது தான் உறைத்தது.மொத்தம் 170 வெள்ளி. இது ஒரு டெக்னிக்காக உபயோகப்படுத்துகிறார்கள் போலும்.சில பல் மருத்துவர்கள் உங்கள் நிறுவனம் ஆண்டுக்கு எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று கேட்டு சிகிச்சை செய்கிறார்கள்.



அது நடந்தது போன ஆண்டு.இந்த ஆண்டு..

போன வாரம் ஆரம்பத்தில் இங்குள்ள ஒரு பல் மருத்துவமனையில் முன் பதிவு செய்துகொண்டேன்.சிகிச்சைக்கு 2 நாட்கள் முன்பும் சிகிச்சை அன்றும் மருத்துவமனையில் இருந்து கூப்பிட்டு ஞாபகப்படுத்தினார்கள்.

சிகிச்சை நாளில் மருத்துவர் பார்த்துவிட்டு,சுத்தப்படுத்திவிட்டு ,ஏதோ flourasent போடுகிறேன் என்றார்.

சரி என்றேன்.

வெறும் 10~15 நிமிடங்கள் தான்.பற்களின் சில இடங்களில் மட்டுமே சுத்தம் செய்து விட்டு ஏதோ ரப்பர் மாதிரி ஒன்றை கடிக்கச்சொன்னார் அதில் இருந்த ஃப்ளோரசன்ட் வாய் உள்ளே ஓடியது.சில நிமிடங்கள் வாயில் வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு துப்பிட சொன்னார்.

அவ்வளவு தான் சிகிச்சை.

பில்: 97 வெள்ளி.

நான் எதிர்பார்க்கவில்லை,இப்படியும், ஒரு பல் மருத்துவர் சேவை இருக்கும் என்று.

சின்னதாக சொன்னா


"சாயங்கால கொள்ளை"

4 comments:

வெங்கட்ராமன் said...

டாக்டரு எந்த ஊருன்னு விசாரிச்சீங்களா. . . ?

வடுவூர் குமார் said...

இந்தூரு தாங்க.

நாகை சிவா said...

நாகைக்கு வாங்க குமார்... நம்ம பிரண்ட் கிளினிக் வச்சு இருக்கான்.. தரமான சிகிச்சை குறைந்த பணத்தில் செய்து விடலாம்....

பணம் கூட வாங்க மாட்டேன், இருந்தாலும் மரியாதைக்கு நம்ம கொடுத்திடலாம்...

சென்னையில் கூட விரைவில் நம் நண்பர்கள் இருவர் பல் மருத்துவம் முடிக்க இருக்கிறார்கள்... ஒன்னும் பிரச்சனை இல்லை வாங்க உங்க பல்ல ஒரு வழி பண்ணிடலாம்...

வடுவூர் குமார் said...

நாகைக்கு வாங்க என்று கூப்பிட்டவுடன்,அந்த மார்க்கேட்டில் ஒரு சீன பல் மருத்துவர் இருப்பார்,ஞாபகம் வந்தது.1970 களில் அங்கு எப்படி கடை அமைத்து தங்கிவிட்டார் என்று தெரியவில்லை.
பாவம் உங்கள் நண்பர்கள் பிழைத்துப்போகட்டும்,முடிந்தால் இந்த பதிவை படித்து மேம்படுத்திக்கொள்ளட்டும், பீஸை. :-))