இத்தனை நாட்கள் கணினியில் பெரிய குப்பை கொட்டாவிட்டாலும், மென்பொருளைப் பற்றிய ஆரம்ப அறிவை கொண்டு பார்க்கும் போது இந்த இந்திய வரி செலுத்தும் மென்பொருள் கூட பரவாயில்லை எனலாம். XML/Java என்ற இரு முகப்பு பக்கங்களை கொடுத்து அதன் மூலம் எளிதாகி இருக்கிறார்கள்.நம்மில் பெரும்பாலும் சம்பளம் மற்றும் அதற்கான Form 16 மூலம் செய்வோம்.இம்முறை வங்கி கணக்கெல்லாம் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள்.சரி, மறைக்க ஒன்றும் இல்லாதபட்சத்தில் கொடுப்பதில் பெரிதாக குழப்பம் ஏற்படவில்லை.
இந்த வருடத்துக்கான சமர்பித்தலை செய்து முடித்த இரண்டு வாரங்களில் ஈமெயில் ஒரு காரணத்தை காட்டி அந்த தவறை சரி செய்யுவும் என்று சொல்லியிருந்தார்கள்.சரி என்று அவர்கள் சொன்ன தவறை சரி செய்து மறுபடியும் ஜாவா மூலம் அனைத்து விவரங்களையும் மறுபடியும் உள்ளிட்டு புதிய xml கோபை தயார் செய்துவைத்துக்கொண்டேன்.
தேவையான விபரங்களை கொடுத்துவிட்டு வருமான வரி இணையபக்கத்தில் நுழைந்த உடனே எச்சரிக்கை வரி பிளிங் ஆகிக்கொண்டிருந்தது. வரிசைக்கிரமாக தேவையான உள்ளீடுகளை கொடுத்தவுடன் அடுத்த பக்கம் போனது அதில் நோட்டீஸ் வந்த விவரங்களை கொடுக்க வேண்டும்.இதில் தான் எனக்கு சந்தேகம். என்னுடைய Pan card , Capcha மற்றும் பிறந்த நாள் மூலம் நுழைய அனுமதித்தவுடன் எதற்காக அந்த நோட்டீஸ் தேதி மற்றும் பெற்றுக்கொண்ட தேதியை கட்டாயமாக்குகிறார்கள்? சரி கட்டாயமாக்கிவிட்டார்கள் அதாவது வேலை செய்கிறதா என்று பார்த்தால் ஒவ்வொரு முறையும் பிழை செய்தியோடு நின்றுவிடுகிறது.இதை அவர்களுடன் தொலைபேசியில் கேட்ட போது சொன்ன கும்சா முறையும் ஒத்துழைக்கவில்லை.
படம் பார்க்க.
இந்த Communication Date & Receipt Date, இதை கட்டாயமாக்கி என்ன சாதிக்கப்போகிறார்கள்? இவை இரண்டும் இல்லாவிட்டால் குடியா முழுகிப்போகிவிடும்.என்னுடைய கோப்பு தான் என்பதற்கான ஆதாரங்களை கொடுத்த பின்னும் தேதிகளின் மூலம் செக் செய்வது என்ன முறையோ?
மென்பொருள் தயாரிப்பில் இருக்கும் நண்பர்கள் விளக்கினால் இன்னும் புரிந்துகொள்வேன்.