Tuesday, September 18, 2007

நீ ட்யூப் லைட்டா?

நீ எல்லாம் ட்யூப் லைட்டாடா?

இனி சற்று மந்தமாக நடந்துகொள்பவர்களை இப்படியெல்லாம் திட்ட முடியாது என்று நினைக்கிறேன்.

இந்த பழைய குழல் விளக்கில் பல நண்மைகள் உள்ளன.குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் கொடுக்கக்கூடியது,அவ்வளவாக நிழல் விழாது.. என்று பல.




அமெரிக்காவில் மட்டும் ஒரு வருடத்துக்கு அரை பில்லியன் குழல் விளக்குகள் தூக்கி எரியப்படுகின்றன என்றால் இதன் உபயோகத்தின் அளவு தெரிகிறது.

விலை மற்ற விளக்குகளை காட்டிலும் குறைவாக இருப்பதால் வசதி குறைந்த மக்களும் வாங்கும் நிலையில் உள்ளது,அதனாலே என்னவோ கோவிலுக்கும் உபயம் பண்ணமுடிகிறது.அப்படியே அதன் மேல் உபயதாரர் என்று பெயரையும் எழுத முடிகிறது.

இவ்வளவு முன்னுரை எதுக்கு தெரியுமா? இன்னும் கொஞ்ச வருடங்களில் இது இருந்த இடத்தை LED (Light Emitting Diaode) முறை சாப்பிட்டு ஏப்பம் விடபோகிறதாம்.

இப்படி வரப்போகிற விளக்கின் அருமை பெருமைகளை பார்ப்போமா?

10 வருட வாழ்கை
அளவு குறைந்த மின்சார உபயோகிப்பு
மறு சுழற்ச்சியில் வரும் பொருட்கள் மூலம் தயாரிப்பு.
குளிர் கால சூழ்நிலைக்கு ஏற்றது.
அதோடில்லாமல் இப்போது இருக்கும் குழல் விளக்கு இருக்கும் இடத்திலேயே பொருத்தக்கூடிய வசதி என்று பல காரணங்களை சொல்லியுள்ளார்கள்.

மேலாதிக்க விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும்.

வவ்வாலில் காற்றில் இருந்து தண்ணீருக்காக தேடும் போது கிடைத்தது.

Monday, September 17, 2007

பார்க்கலாமா? வேண்டாமா?

இன்று தமிழில் வலைப்பதியும் அன்பர்களில் பலர் இந்த ஆண்டில் பிறந்திருக்க வாய்ப்பில்லை,விதிவிலக்கு உள்ளது. அப்படியே பிறந்திருந்தாலும,இதெல்லாம் ஞாபகம் இருந்திருக்காது.்

கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்.நம் முன்னோர்கள்் வாழ்ந்த வாழ்கையை.

Saturday, September 15, 2007

தவிக்குது தயங்குது.

எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு ஆசை இருந்தது,ஆதாவது ஒரு திறந்த இதய அறுவை சிகிச்சை நேரடியாக பார்க்கவேண்டும் என்பது.

நமது VSK ஐயா இதைப்பற்றிய பதிவு போட்ட போது, இன்னும் ஆர்வம் அதிகமாயிற்று.இன்று மெகாவீடியோ வில் தேடு என்று போட்ட போது சிக்கிய வீடியோ இது.பார்த்து மகிழுங்கள்.

அதில் ஏதோ வெள்ளையாக வைக்கிறார்கள் என்னவென்று தெரியவில்லை.பேஸ் மேக்கராக இருக்கலாமோ என்னவோ?




இதை பார்க்கும் போது இளையராஜா இசை போட்ட ஒரு பாட்டு தான் ஞாபகத்துக்கு வந்தது.படத்துடன் இப்பாடலை கேட்டுப் பாருங்கள்.

தவிக்குது தயங்குது ஒரு மனது..
தினம் தினம் தூங்காமலே..

பாட்டு போடலாம் என்று பார்த்தால் கிடைக்கமாட்டேன் என்கிறது.

கானாபிரபா... இந்த பாடல் இருக்கா? (கொடுத்துவிட்டார்,கானாபிரபா- மிக்க நன்றி)

Get this widget | Share | Track details


இந்த இசையில் பாருங்கள் இதயம் துடிக்கும் ரிதம் இருக்கும்.அதான் இளையராஜா.

Thursday, September 13, 2007

உருட்டுப் பந்து

அதாங்க Bowling,

இது கிரிக்கெட் அல்ல, underarm bowling மாதிரி உள்ள விளையாட்டு.இதைப்பற்றி நான் முதலில் கேள்விப் பட்டது மலேசியாவில் தான்.அங்கிருந்த ஒரு கிளைன்ட் பொறியாளர் ஒரு நாள் என்னிடம் நாம் பௌளிங் விளையாட போகலாமா ? என்று கேட்டுவிட்டு, எப்படி பௌலிங் பண்ணுவது என்று தெரியுமா? என்று கேட்டு நிறுத்தினார்.

நான் கிரிக்கெட்டில் பௌலிங் போடுவது போல் செய்துகாண்பிக்க... சிரித்து மகிழ்ந்தார்கள்.
அப்போது போக முடியவில்லை,அதற்குப்பிறகும் அதை விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.அவ்வப்போது ஏதாவது படத்தில் காண்பிப்பார்கள்.அதோடு சரி என்னுடைய அறிவு இந்த விளையாட்டை பற்றி.

இந்த பின்னனியில் 3 மாதங்களுக்கு முன்பு எங்கள் கம்பெனியில் உருட்டுப்பந்து போட்டி வைக்கப்போகிறோம்,பெயர் கொடுப்பவர்கள் கொடுக்கலாம் என்று சொன்னார்கள்.பொதுவாகவே நான் இந்த மாதிரி எந்த விளையாட்டுக்கும் போவதில்லை.முதல் காரணம் இரவு வீடு திரும்ப வெகு நேரம் ஆவது அடுத்து மரக்கறி உணவு கிடைப்பதில் உள்ள பிரச்சனை.இவற்றை விட மறுநாள் காலை செய்யவேண்டிய வேலைகளில் சுணக்கம் ஏற்படுவது.என்னை மாதிரி பல பேர் செய்வதால் என்னவோ இம்முறை கட்டாயப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.வேறு வழியில்லாமல் என் பெயரும் கொடுக்கப்பட்டது.

நேற்று இரவு நடந்த போட்டிக்கு போகும் முன்பே இந்த விளையாட்டை பற்றிய ஒரு சில விஷயங்களை தெரிந்துகொண்டேன்.

அலுவலகத்தில்,பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நண்பரிடன் கார் இருந்ததால் போகும் போது என்னுடன் வந்து விடு என்றார்.அலுவலக கூட்டத்தில் சிக்காமல் இருக்க மாலை சுமார் 5.15 க்கும் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டோம்.அதற்கு முன் மனைவிக்கு தொலைபேசி இன்று இரவு சேட்டிங் வரமுடியாது என்று சொன்னேன்.இந்த மாதிரி ஏதோ ஒரு காரணம் சொல்லி சென்னை போனதை ஞாபகம் வைத்துக்கொண்டு அங்கு வரப்போகிறீர்களா என்று கேட்டார்.

நாங்கள் விளையாடப்போகும் இடம் புக்கிட் மேரா என்ற இடத்தில் உள்ள சாபரா கிளப்.சும்மா இழைத்து வைத்துள்ளார்கள்.தரைக்கு கீழே கார் நிறுத்தும் இடம்,முதல் மாடியில் நீச்சல் குளம்,இரண்டாம் மாடியில் பௌளிங் சென்டர் மற்றும் சில அறைகள,் பல பயண்பாட்டுக்காக இருந்தது.

பௌளிங் செனட்ரில் உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய வரவேற்பறை போல் இருந்தது.மொத்த இடமும் குளிரூட்டப் பட்டு இருந்தது. வேர்வை வரவே வாய்ப்பு இல்லை.என் நண்பர் ஒருவர் ரொம்ப குளிருதில்ல? என்றார். எனக்கு அப்படி தெரியவில்லை.

நான் போன போது ஒரு சிலர் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.எங்கள் நிறுவனத்துக்கு என்று ஒரு குறிப்பிட்ட லேன்கள் ஒதுக்கியிருந்தார்கள்.என் குழுவில் இருக்கவேண்டிய ஒருவர் வராததால் வேறு ஒருவரை போட்டிருந்தார்கள்.

எங்கள் நிறுவனத்தில் இருந்த ஒருவர் தாங்கள் விளையாட வேண்டிய இடத்தில் வெவ்வேறு கலரில் உள்ள பந்துகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள்."ஏன் அப்படி வைக்கிறார்கள்?" என்று ஒருவரிடம் கேட்ட போது,அந்த பந்தின் எடையும் அதன் துவாரம் கை விரல் அளவுக்கு தகுந்த மாதிரி இருப்பது நல்லது என்பதால் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி எடுத்து வைத்துக்கொன்டிருக்கிறார்கள் என்று விளக்கம் தந்தார்.



என்னுடைய விரல்/எடை க்கு தேவையானதை எடுத்துவைத்துக்கொண்டிருக்கும் போது, பௌலின் போடும் இடத்துக்கு போவதற்கு முன்னால் அந்த கிளப்பில் உள்ள ஷூவை உபயோகபடுத்த வேண்டும் என்றார்கள்.இது தான் அந்த ஷூ.வழ வழப்பான தரைக்கு அது கொஞ்சம் பிடிப்பு கொடுக்கும் என்று நினைத்தேன்.அப்படி ஒன்றும் இல்லை.



இந்த முன்னேற்பாடுகள் நடந்துகொன்டிருக்கும் போதே எங்கள் உயர் அதிகாரிகள் பக்கத்தில் உள்ள ஒரு லேனில் பயிற்சி செய்ய ஆரம்பித்தார்கள்.எனக்கும் ஆசை தொற்றிக்கொள்ள "நானும் முயலலாமா?" என்றேன்.

"தாராளமாக" என்றார்கள்.

முதல் பந்து வீசிய போது கையில் இருந்து கொஞ்சம் உயரத்தில் இருந்து விழுந்தது போல் சத்தம் கொடுத்து உருண்டோடி இடது பக்கத்தில் இருக்கும் பின்னை அடித்தது.போடுவதற்கு முன்பு கால் கொஞ்சம் வழுக்கியமாதிரி இருந்தது. சிறிது நேரத்தில் அதன் நேர்த்தி பிடிபட்டது. பந்தின் எடை அதிகமாக இருப்பதால் கையில் எங்கோ ஒருவித வலி ஏற்படுபவது போல் தோன்றியது ஆனால் சில நிமிடங்களில் காணாமல் போனது.

போட்டி ஆரம்பிக்கும் போது,ஆட்டம் ஓரளவு பிடிபட்டது.டிவி திறையில் யார் எந்த லேனில் விளையாடவேண்டும் எனபதையும் & ஆட்ட முடிவுகளையும் காண்பிக்கிறது.போட்ட பந்து திருப்ப நாம் இருக்கும் இடத்துக்கே வருகிறது.கை ஈரம் காய ஒருசின்ன துவாரம் வழியாக காற்று வந்துகொண்டிருக்கிறது. சிலர் பவுடர்களையும் கையில் போட்டுக் கொள்கிறார்கள்.

போட்ட பந்து இங்கு தான் திரும்பி வரும்.



4 ஆட்டம்.2 வீச்சுக்குள் எல்லா பின்களையும் வீழ்ந்த முடிந்ததை பார்த்த எங்கள் தலைவர் "நிஜமாகவே சொல்லு! இது தான் முதல் தடவையா? " என்றார்.எப்படி முடிந்தது என்று கேட்கிறீர்களா? பதிலுக்கு கடைசி வரை வாருங்கள்.

4 பேர் உள்ள எங்கள் குழூ ஒவ்வொரு கேமில் முன்னேறி கடைசி கேமில் 573 பாயிண்ட்ஸ் எடுத்தோம்.கீழே எங்கள் குழு. என்னை படம் எடுக்கும் போதா மின்கலம் தீர்ந்துபோகவேண்டும்?வெளிர் பச்சை நிற சட்டையில் ் போடுபவரும் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களும் தான் எங்கள் குழு.



7.30 மணிக்கு ஆரம்பித்து 9.30 மணிக்கு முடித்தோம்.மற்றவர்கள் முடிக்க நேரம் ஆனதால் சிறிது நேரம் மற்றவர்களின் ஆட்டத்தை காணும் போது மேலும் சில விஷயங்கள் புரிபட்டது. அதுவும் பெண்கள் எடையில் சிறிய பந்துகள் மூலம் வேகம் குறைந்த அளவில் வீசி அத்தனை பின்களையும் வீழ்த்திய போது ஆச்சரியமாக இருந்தது.

அங்கிருந்து வீட்டுக்கு வர சுமார் 1.30 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் எனபதால் என் சக ஊழியரிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.வீடு வந்து சேரும் போது இரவு 11.

மறு நாள் காலை அலுவலகத்துக்கு வந்து மேசையின் மீது பையை வைக்கும் போது பார்த்தால் அழகான ஒரு பின்... கீழே உள்ள மாதிரி. ஆதாவது எங்கள் குழுவுக்கு மூன்றாவது பரிசாம்.

இந்த விளையாட்டு ஒன்றும் பெரிய விளையாட்டு அல்ல,நீங்கள் கோலி குண்டு ஆடியிருந்தால்.
நம்ம வலைப்பதிவர் ஹரிஹரன் எழுதிய(இதை அங்கு துழாவி கண்டுபிடிக்கவே வெகு நேரம் ஆனது-லாக் &போந்தா) பதிவு இங்கு.

பலர் ஆச்சரியப்பட்டு கேட்கும் போது நான் சொன்ன பதில் "I used to play marbles during my early days,I used that technic".





கிடைத்த பரிசு.

இதனால் சொல்வது என்னவென்றால் கோலி குண்டு விளையாட தெரிந்தால் உருட்டுப்பந்து விளையாடிவிடலாம்.கொஞ்சம் தெம்பாக இருப்பது நலம். என் நண்பரும் இதே மாதிரி முதல் தடவை வந்து உருட்டும் போது கொஞ்சம் பயந்துவிட்டேன் "எங்கே பந்து அவரையும் தூக்கிட்டு போயிட போகுதே!!" என்று.

Tuesday, September 04, 2007

முடிஞ்சா...

கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்





எப்படியெல்லாம் ஓட வேண்டியிருக்கிறது??

Monday, September 03, 2007

கனவுகள்

திருமதி வல்லி சிம்ஹன்,என்னுடைய கனவுகளை போடச்சொல்லி கேட்டிருந்தாங்க.அப்புறம் தான் தோனிற்று எனக்கு ஏதாவது கனவு இருக்கா? என்று.

இனிமேல் தான் யோசிக்கனும்.

என்னுடைய கனவுகள் எதுவே பெரிதானதாக இல்லை.நான் கிடைப்பதை வைத்து சந்தோஷப்படுவதால் பெரிதாக ஆசைப்படுவதுமில்லை.சின்ன வயதில் நல்ல ஆடை உடுத்த வேண்டும் பேண்டு போட வேண்டும் என்று ஆனால் அப்படி ஏதும் உடனடியாக நிகழாமல் போனதால் நாளடைவில் இருப்பதை கொண்டு வாழ கற்றுக்கொண்டேன்.

எனது கனவுகள் தூங்கும் போது வருவதில்லை,முழித்துகொண்டு இருக்கும் போதே இருக்கும்.

அவற்றில் சில.

முதலாவதாக கணினி மென்பொருள் பற்றி படித்து ஒரு பட்டப்படிப்பு வாங்க வேண்டும் என்பது.(தேவையா/முடியுமா என்பது பற்றிய கேள்விகள் இருக்கிறது)

இரண்டாவதாக கார் வாங்கவேண்டும். (அடையக்கூடியது தான் - ஊருக்கு போன பிறகு)

தொழில் செய்ய வேண்டும்- நேர்மையாக, எளியவர்களுக்கு குறைந்த விலையில் வீடு கட்டி தர வேண்டும்.(மா.சிவகுமாரின் வேண்டுகோள் இது)

80 வயது வரை உடல் நலத்துடன் இருக்கவேண்டும்.ஏனென்றால் அது வரை தான் வாழ்கைக்கு தேவையான பொருளாதாரத்தை சேர்க்க நினைத்துள்ளேன்.

நல்ல தகப்பன் - என்று என் மகன் சொல்ல வேண்டும்.

இவையெல்லாம் தான் தற்போது ஞாபகத்துக்கு வந்தது.

நான் அழைக்க விரும்பும் சிலர்

முடிந்த போது போடுங்கள், நண்பர்களே.

1.வவ்வால்

2.தென்றல்

3.கோவி.கண்ணன்

4.CVR

5.நா.கண்ணன்.

பல் மருத்துவர்

கொஞ்ச வருடங்களாக பல் மீது கரிசனத்தினால் ஒரு வருடத்துக்கு ஒரு முறையாவது போய் அவரை பார்த்துவிட்டு வருவது வழக்கம்.அதுவும் நிறுவனம் பணம் கொடுத்துவிடும் என்பதால் தவறாமல் போய் விடுவேன்.நிறுவனம் முழுவதும் கொடுக்காது வருடத்துக்கு 100 வெள்ளி மட்டும் தான் அதற்கு மேல் போனால் நாம் தான் கொடுக்கவேண்டும்.

போன வருடம் போன போது மருத்துவர் முதலில் பல்லைப் பார்த்துவிட்டு "ஏற்கனவே செய்த அடைப்பு நன்றாக இல்லை அதை எடுத்துவிட்டு புதிதாக போடலாமா?" என்றார்.

'தாராளமாக"

மேலும் பார்த்துவிட்டு வலது பக்கமும் சிறிதாக உள்ளது அதை இப்போதே அடைத்துவிட்டால் நல்லது என்றார்.

"சரி"

சுமார் 20~25 நிமிடங்கள் பல்லை சுத்தம் செய்து எங்கெங்கு அடைப்பு தேவைப்படுகிறதோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கும் போது

"மேலும் ஒரு ஓட்டை இருக்கு" அதையும் அடைத்திடவா? கூட ஒரு 50 வெள்ளி ஆகும். என்று கேட்டார்.

ஏற்கனவே வாயில் பைப் (தண்ணீரை உரிஞ்ச) பேச கூட முடியாததால் தலையை ஆட்டுவது மட்டுமே வழி என்பதால் தலையை ஆட்டினேன்.

எல்லாம் முடிந்த பிறகு பில் வந்த போது தான் உறைத்தது.மொத்தம் 170 வெள்ளி. இது ஒரு டெக்னிக்காக உபயோகப்படுத்துகிறார்கள் போலும்.சில பல் மருத்துவர்கள் உங்கள் நிறுவனம் ஆண்டுக்கு எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று கேட்டு சிகிச்சை செய்கிறார்கள்.



அது நடந்தது போன ஆண்டு.இந்த ஆண்டு..

போன வாரம் ஆரம்பத்தில் இங்குள்ள ஒரு பல் மருத்துவமனையில் முன் பதிவு செய்துகொண்டேன்.சிகிச்சைக்கு 2 நாட்கள் முன்பும் சிகிச்சை அன்றும் மருத்துவமனையில் இருந்து கூப்பிட்டு ஞாபகப்படுத்தினார்கள்.

சிகிச்சை நாளில் மருத்துவர் பார்த்துவிட்டு,சுத்தப்படுத்திவிட்டு ,ஏதோ flourasent போடுகிறேன் என்றார்.

சரி என்றேன்.

வெறும் 10~15 நிமிடங்கள் தான்.பற்களின் சில இடங்களில் மட்டுமே சுத்தம் செய்து விட்டு ஏதோ ரப்பர் மாதிரி ஒன்றை கடிக்கச்சொன்னார் அதில் இருந்த ஃப்ளோரசன்ட் வாய் உள்ளே ஓடியது.சில நிமிடங்கள் வாயில் வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு துப்பிட சொன்னார்.

அவ்வளவு தான் சிகிச்சை.

பில்: 97 வெள்ளி.

நான் எதிர்பார்க்கவில்லை,இப்படியும், ஒரு பல் மருத்துவர் சேவை இருக்கும் என்று.

சின்னதாக சொன்னா


"சாயங்கால கொள்ளை"