# LED Tester
# Backlight Tester
# மின்னனுவியல்
எச்சரிக்கை : High Voltage. Don't try when you are not sure of . Shocking Hazard prevails.
இந்த மாதிரி ஒரு கருவியை நாமே செய்து பார்க்கவேண்டும் என்ற ஆவல் சுமார் 3 வாரங்களாக உள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. தேவைப்படும் சாமான்கள் என்னவோ சில தான் என்றாலும் அது கை வசம் இல்லாததால் அதை வாங்குவதற்கான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இதற்கிடையில் YouTube யில் இருக்கும் பல வீடியோக்களை பார்த்து என்னுடைய புரிதலை மேம்படுத்திக்கொண்டிருந்தேன் .
இது எதற்கு என்றால் , முக்கியமாக LED Lights (Including LED back light) வேலை செய்கிறதா இல்லையா என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம் . இதற்கான Ready Made சாதனம் உள்ளது அது சுமார் ரூ 800 யில் இருந்து இருக்கிறது. பணம் கொடுத்து அப்படியே உபயோகிப்பது என்பது ஒருபுறம் இருந்தாலும் அதை நாமே செய்து அதை பரிசோதிக்கும் போது ஏற்படும் ஆனந்தம் ஒருபுறம் இருந்தாலும் அதன் வேலைத் தன்மை மேலும் பல புரிதலுக்கு வழிகளுக்கு வழிவிடக்கூடும் என்பதால் அதன் வழியே போனேன் .
தேவையான சாமான்களின் பட்டியலுடன் வடபழனி மெர்சிக்கு போனேன் . ஒரு சில சாமான்கள் கிடைக்கவில்லை. கிடைத்தவற்றை மட்டும் வாங்கிக்கொண்டு வந்தேன்.
கீழே உள்ள மாதிரி செய்து பரிசோதித்தேன் முதலில் 42 v கொடுத்தாலும் பிறகு ஏனோ வேலை செய்யவில்லை. பல முறை ஏதோ மாற்றி பார்த்தாலும் வெற்றி கிட்டவில்லை .
Input 230V (AC) அதுவே Output = input*1.414 (DC) கிடைக்கவேண்டும் ஆனால் கிடைக்கவில்லை . Input கொடுத்துவிட்டு Bridge Rectifier இல் கிடைக்கும் வோல்ட்ஜ் பார்த்தால் அங்கு பிரச்சனை இருப்பது தெரிந்தது. ஒரு IN4007 வேலை செய்யவில்லை. அதை மாற்றிய பிறகும் வெற்றி கிட்டவில்லை. Capacitor மாற்றி பார்த்தேன் , ஹுகும் .. எங்கோ தப்பு, என்னவென்று தெரியவில்லை .