ஏற்கனவே, மின்னணு துறையில் ஏற்பட்ட விருப்பத்தால் சில பல முயற்சிகளும் அதனால் கிடைத்த வெற்றி தோல்விகளை சொல்லியிருந்தேன். அந்த வரிசையில் இந்த அஜந்தா கடிகாரமும் ஒன்று.என்னிடம் வந்த போது அதில் நேரம் காண்பித்தாலும் அதை சரியான நேரத்துக்கு மாற்ற முடியவில்லை.பிரச்சனை அது மட்டுமே. சரியான நேரத்துக்கு மாற்ற முடியாவிட்டால் கடிகாரம் இருந்து என்ன பிரயோஜனம்?உரிமையாளர் என் மீது நம்பிக்கை வைத்து பார்க்கச்சொன்னார்.
ஏற்கனவே இதே மாதிரி ஒரு கடிகாரத்தில் கையை வைத்திருந்த அனுபவம் இருந்ததால் இதை பிரிப்பதில் பிரச்சனை ஒன்றும் இல்லாதிருந்தது.மேம்போக்காக PCB ஐ நோட்டமிட்டபோது பெரிதாக எதுவும் கண்ணில் படவில்லை.வரக்கூடிய மின்சாரம் அதன் அளவில் வந்துகொண்டிருந்தது.வேறு ஏதாவது தெரிகிறதா என்று பார்த்த போது முன்று கரும்புகை வீச்சு தெரிந்தது.படம் கிழே.

கரும்புகை பிரச்சனையின் விளிம்பை காண்பித்தது ஆனால் இது தான் காரணமா என்பது முழுவதுமாக சொல்லமுடியாது என்பதால் உரிமையாளருக்கு பொதுத் துறப்பு ஒன்று போட்டேன். இதை மாற்றினால் ஒருவேளை கடிகாரம் உயிர்த்தெழ்லாம் என்றேன்.
வெறும் 1500 ரூ கடிகாரத்தை சந்தையில் ரிப்பேருக்கு கொடுத்தால் பெரிதாக எதுவும் பார்த்துவிட முடியாது, அதனாலேயே பலரும் இதை செய்ய மாட்டார்கள்.
"சும்மா தானே கிடக்குது முயலுங்கள் வந்தால் வரட்டும்" என்று அனுமதி கிடைத்தது.வடபழனி மெர்சி கடை தான் எங்களுகெல்லாம் அடைக்கலம். நல்ல வேளை கேட்ட Voltage Regulator 78L05 கிடைத்தது. எனக்கு வேண்டியது என்னவோ 3 தான் ஆனால் 5 ஆக வாங்கினேன். ரூ 5 / ஒன்று.
இது பழையது.
PCB யில் இருந்து பழையதை எடுத்து போட்டுவிட்டு புதியதை நிறுவினேன். மின்சாரம் கொடுக்கும் வரை பதபதைப்பு தான்.சரியாக வேலை செய்யுமா அல்லது புஸ் என்று புகை காக்குமா என்று தெரியாது அல்லவா?
வேலை முடிந்ததும் கரும்புகையை அகற்றிவிட்டு..
மின்சாரத்தை கொடுத்தேன்.நல்ல வேளை வேறு எதுவும் பிரச்சனை கொடுக்காமல் நேரத்தை சரி செய்ய முடிந்தது.உரிமையாளருக்கும் சந்தோஷம்.