வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அதற்கு பிறகு குப்பையில் போடுவேன்.
இது குப்பைக்குத் தான் போகப்போகிறது என்று முதல் முறையாக வந்தபோது நினைத்தேன்.
இதற்கு முன்பு இதை பிரித்ததில்லை அதனால் அதன் வேலைப்பாடு தெரியாமல் இருந்தது.இதை கொடுத்தவர்கள் வேலை செய்கிறது ஆனால் சுவிச்சு தானாக off ஆகமாட்டேன் என்கிறது என்கிறார்கள்.ஒவ்வொரு பாகமாக பிரித்து போட்டு சுவிட்சு பக்கம் வந்தேன்.வேலைப்பாடு புரிந்தவுடன் அதன் பிரச்னை என்னவென்று கண்டுபிடிக்க கொஞ்சம் நேரமானது .ஆதாவது தண்ணீர் கொதிநிலையில் வரும் ஆவி மேலெழும்பி சுவிச்சுவில் உள்ள trigger மூலம் off ஆகிறது .இதில் சுவிட்சும் அதன் மேல் இருக்கும் நெகிழி குப்பியும் சரியாக இணையவில்லை அதோடு வெகு நாள் பயன்பாட்டால் தேய்ந்து இனி ஒன்றும் செய்யமுடியாத நிலையில் இருந்தது .திரும்ப கொடுத்துவிட்டேன்.
இரண்டு வாரம் கழித்து ஏதோ தோன்றியது மறுபடியும் கேட்டு வாங்கி வந்தேன்.குறுக்கு வழியில் அந்த சுவிச்சையும் அதன் மேல் உள்ள நெகிழி யையும் இணைத்துவிட்டால் வேலை முடிந்துவிடும் என்று நினைத்து சுவிட்சு இணையும் இடத்தில் ஓட்டை போட்டு ஒரு சிறிய நெகிழியை இணைக்க முயற்சித்தேன் .Quick Fix போடும் போது அது சுவிச்சுக்கு உள்ளே இறங்கி பாழாக்கிவிட்டது .சரி, வேறு சுவிட்சு கிடைக்குமா என்று அலைந்ததில் அலைச்சல் தான் மிஞ்சியது .எங்கெங்கோ தேடிய பிறகு கடைசியாக Parrys இல் கேட்டுப்பார்க்கலாம் என்று போனேன்.இங்கு ஏதாவது ஒரு கடையில் ஒரு விவரம் வேண்டுமென்றால் அங்கு கிடைக்கும் என்ற விவரம் சொல்லமாட்டார்கள்.(தெரிந்தாலும்).நான் போன கடையில் இதை பார்த்தவுடன், இப்படியே ஒரு 15 கடை தள்ளி போய் கேட்டுப்பாருங்கள் என்றார் .அப்படியே போய் கடையை கண்டுபிடித்து கேட்டேன் ,சிறிது நேரத்திலேயே எடுத்து கொடுத்தார் .ரூ 150 எனவும், உத்திரவாதம் எதுவும் கிடையாது ,திரும்ப பெற்றுக்கொள்ளப்படாது என்று சொல்லிக்கொடுத்தார்.
எல்லாம் சரியாக அமைந்து குப்பை தொட்டிக்கு போக வேண்டிய கெட்டில் இப்போது உயிர்பிழைத்துள்ளது.