வீட்டுக்கார அம்மணிக்கு இரண்டு ஆசை, அதில் ஒன்று தான் வீட்டுக்கு ஒரு ஊஞ்சல் மாட்டனும் என்று.முதல் வீடு 19 வருடத்துக்கு முன்பு கட்டியது என்பதால் கொக்கியெல்லாம் வைக்காமல் கட்டிவிட்டார்கள். அப்படியே கொக்கி இருந்தாலும் ஊஞ்சல் போட்டா அவ்வளவு தான் வீட்டை அடைத்துவிடும்.
சரி இப்போது இருக்கும் வீட்டுக்காவது போடலாம் என்று பார்த்தால் எல்லாம் முடிவு எடுக்கும் முன்பே கூரை கான்கிரீட் முடிந்துவிட்டிருந்தது.கான்கிரீட் முடிந்தால் என்ன கட்டுமானத்துறையில் இருப்பவர்களுக்கு வேறு வழி தெரியாதா என்ன. இந்த மாதிரி சமயங்களில் ஓரிரு தொழிற்நுட்பங்கள் உள்ளன.எல்லாம் காசுக்கேற்ற பணியாரம் தான்.Parrys இல் போனல் ரூ 3500 - 4000 க்குள் கொக்கி போட்டு கொடுப்பார்கள்.சிறிய ஊஞ்சலுக்கு அந்த அளவுக்கு தேவையில்லை ஏனென்றால் மிஞ்சிப்போனால் 3 பேர் உட்காரக்கூடியது. 3x100 கிலோ அவ்வளவு தான்.
இதைப்பற்றி மச்சினரிடம் பேசிக்கொண்டிருந்த போது,அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை நானே ஆள் அனுப்பி போடச்சொல்கிறேன் என்றார்.நாள் குறித்து அன்று வந்தார்கள்.தேவையான உபகரணத்தோடு இரண்டு ஓட்டை போட்டு Anchor Bolt என்று சொல்லக்கூடிய போல்டை அடித்து ஏற்றி மறையை முடிக்கினார்கள்.
டிரில்லிங் செய்யும் முன்பு கூரையின் உள்ளே போட்டிருக்கும் கரண்ட் பைப்பை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஊஞ்சலுக்கு பூண் ஏற்றுகிறார்கள்.
சுமார் 2 மணி நேரத்தில் ரெடி.