Thursday, May 18, 2006

வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்-2

முதல் வருடப்படிப்பில் 2 ஆசிரியர்களைப் பார்த்தோம்...

3.திரு.கோவிந்தராஜு:இவர் தான் பாலிடெக்னிக் முதல்வர்.முதல்வருடம் ஆதலால் இவருடன் பழகும் வாய்ப்பு குறைவு.ஆனால் இவர்மூலம் தான் நம் வாழ்க்கை தடம் மாறப்போகிறது என்று அப்போது தெரியாது.
தடிமனான கண்ணாடி,மிக ஒடிசலான தேகம்.நிறைய சிகரெட் பிடிப்பார் என நினைக்கிறேன்.
சில சமயம் Mechanical Engineering யில் வகுப்பு எடுப்பார்.

4.திரு.PT Master-பெயர் சரியாகத் தெரியவில்லை.
Mr.Kanakaraj Master என்று நினைக்கிறேன். மிகவும் நல்ல மனிதர்.எங்களை நன்றாக விளையாடத் தூண்டி அதற்கு வேண்டியவற்றை வாங்கிக்கொடுத்தார்.அதன் மூலம் என்னால் 3 வருடமும் Cricketயில் "Inter Polytechnic Tournament" யில் கலந்துகொள்ள முடிந்தது.3ம் வருடம் நான் தான் Captain.முதல் ஆட்டத்திலே மகா மோசமாகத் தோற்றோம்.அதைப்பிறகு பார்ப்போம்.

இவர்களைத் தவிர Physics,English எடுத்த ஆசிரியர்கள் பெயர் நினைவில் வரவில்லை.மன்னிக்கவும்.

நான் படித்த சமயத்தில் முதல் வருடம் 2 semester ஆக இருந்தது.2 வது வருடத்தில் நமக்கு வேண்டிய/பிடித்த course எடுத்து படிக்கலாம்.

அந்த சமயத்தில் அங்கு Civil,Electrical & Mechanical என்று 3 courses மட்டும் தான் இருந்தது.Mechanicalக்கு மட்டும் போட்டோ போட்டி அதனால் அதைப்படிக்க விரும்புவோர் Meritயில் வரவேண்டும்.அதுவும் முதல் 31 இடங்களில் வருபவருக்கு மட்டும் தான்.ஆனால் நான் வாங்கிய Marks, என்னை 32வது இடத்திற்கு தள்ளியிருந்தது.இங்குதான் பிரச்சனை ஆரம்பித்தது.

எனக்கோ Mechanical மீது தீராத காதல்,எப்படியும் Seat வாங்கிவிட நானே பல ஆசிரியர்கள் மூலம் முயற்சித்துக் கொண்டு இருந்தேன்.

சில Canditates BE க்கு செல்வதால் அந்த இடம் எனக்கு கிடைக்கலாம் என்றார்கள்.

நாட்கள் சென்றன,Mechanical இல் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்துகொண்டே வந்தது.இதற்கிடையில் சிலர் BE சீட் கிடைத்து போயினர்.இந்த விஷயம் தெரிந்து Head of the Department-Mechanical யிடம் போய் கேட்டேன்.அதற்கு அவர் "நீ வேண்டுமானால் உன் அப்பாவை அழைத்துக்கொண்டு Principalஐ பார்" என்றார்.

இது என்ன புது தலைவலி என்று நினைத்துக்கொண்டு...வீட்டில் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தேன்.ஏனென்றால் அப்பாவிடம் சொல்ல பயம்.ஒழுங்காக படித்திருந்தால் இந்த தொல்லை வந்திருக்காது என்று சொல்லித் திட்டுவார்.

கடைசியாக ஒருவாறு மனதை திடப்படித்துக்கொண்டு வீட்டில் அம்மாவிடம் சொன்னேன்,அது அப்பாவிடம் போய்.. வழக்கம் போல் அர்ச்சனைதான்.
அவர் பங்குக்கு ஒரு நாள் இழுத்தடித்துவிட்டு Ploytechnic வந்தார்.

Principal Room

பரஸ்பரம் குசலம் விஸாரனை முடிந்த பிறகு எனது அப்பா தான் ஆரம்பித்தார்.

"என் பையன் Mechanical படிக்க ஆசைபடுகிறான்,நீங்கள் தான் பார்த்து அவனுக்கு seat கொடுக்கவேண்டும்"

seat எல்லாம் முடித்துவிட்டதே?

BEக்கு போனவர்கள் சீட் காலியாக இருக்குமே,அதில் கொடுக்கலாமே? என்றார்.

அப்படியெல்லாம் கொடுக்கமுடியாது என்று சொல்லி அதற்கான காரணத்தையும் சொன்னார்.

வாழ்கையில் முதல் இடி விழுந்தது.

இந்த மாதிரி இடிகள் தொடரப்போவது தெரியாமல் சிலையாக நின்றேன்.

அப்படி என்ன சொல்லிவிட்டார்........அடுத்த பதிப்பில் காணலாம்.

9 comments:

நாகை சிவா said...

வாங்க! வாங்க! வடவூர் குமார்!
யாருனு தெரியுதா.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
அது என்னாங்க மடவிளாகம் பெயர் வச்சி இருக்கிங்க. ஏதும் காரணம் உள்ளது. தொடர்ந்து விஜயம் செய்வேன்,
அன்புடன்
நாகை சிவா

கசி said...

அருமையான பதிவு.

வடுவூர் குமார் said...

நன்றி சிவா.தங்கள் புகைப்படம் வெளிச்சம் குறைவாக இருப்பதால் கண்டுபிடிக்க கஷ்டமாக உள்ளது.ஏதேனும் உதவிக்குறிப்பு?!

மடவிளாகப் பாசம் தான்.

வடுவூர் குமார் said...

காசி அவர்களே- சந்திப்பதில் மகிழ்ச்சி.நன்றி.

நாகை சிவா said...

உதவி குறிப்பு, விரைவில். ஆனால் இங்கு இல்லை

dondu(#11168674346665545885) said...

காசி பெயரில் பின்னூட்டமிட்டிருப்பது உண்மையான காசி அல்ல. எலிக்குட்டியை அந்த டிஸ்ப்ளே பெயரில் வைத்துப் பார்த்தால் உண்மை புரியும். ஆபாசமான பின்னுட்டம் இல்லாவிடினும் அதை நீக்கவும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அந்த புரொபைலை பார்த்தால் மனிதர் எவ்வளவு வக்கிரம் பிடித்தவர் எனத் தெரியும்.

என் டிஸ்ப்ளே பெயரில் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால் என்னுடைய பிளாக்கர் எண் 4800161 தெரிய வேண்டும். உங்கள் பதிவில் போட்டோ எனேபிள் செய்யப்பட்டிருந்தால் என் போட்டோவும் வரவேண்டும்.

இரண்டு சோதனைகளும் ஒன்றாக வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அது உண்மையான டோண்டு இட்டப் பின்னூட்டமாகும். போட்டோக்கள் உங்கள் பதிவில் எனேபிள் செய்யப்படவில்லையென்றால் அதை முதலில் செய்வது நலம்.

நீங்கள் தமிழ்மணத்துக்கு புதிதாகையால் இவ்வளவு விவரமாகக் கூற வேண்டியிருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வடுவூர் குமார் said...

நன்றி திரு ராகவன்
நீங்கள் சொன்ன மாதிரி செய்துவிட்டேன்.

Vijayashankar said...

Nice enna alaigal!

Do thy neighbor says- your chosen profession! (well I am from a family of distant relatives, who are engineers, totalling at least 10 in number in India and Abroad - USA, Norway, Germany, Hong Kong, UAE, Saudi Arabia and Muscat).

In 1986, when I got a medical seat in Stanley Medical, I couldnt resist, but my interest in the technology won - moving to PSG Tech. (Thanks to Sujatha Rangarajan's Siliconil Chillu Puratchi - for my computer interests).

வடுவூர் குமார் said...

நன்றி விஜய் அவர்களே.