Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Thursday, April 09, 2009

வாலி பால்

முன்பெல்லாம் கிடைக்கும் சிறு இடத்தில் தொழிலாளர்கள் தங்களுக்கு விளையாட்டை விளையாடுவார்கள் அதுவும் வெள்ளிக்கிழமை மதியத்திலிருந்து.இரண்டு நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது இந்த விளையாட்டை காணமுடிந்தது,அதை நீங்களும் பார்க்க....



வேலையில்லாவிட்டாலும் உற்சாகமாக நேரத்தை விளையாட்டில் செலவிடுகின்றனர் போலும்.

Thursday, February 12, 2009

விடுமுறை விளையாட்டு

இரண்டு வாரங்களுக்கு முன்பு சிட்டி சென்டர் கடைதொகுதி நோக்கி நடந்து போய்கொண்டிருக்கும் போது இந்த விளையாட்டை பார்த்தேன்.விளையாடுபவர்கள் பாக்கிஸ்தான் உழைப்பாளிகள் என்று நினைக்கிறேன்.

விளையாட்டு என்னவோ வாலிபால் போன்று இருந்தாலும் சில வித்தியாசங்கள் கண்ணில் பட்டது.

பந்தின் அளவு சிறியது.

வாலி பாலில் ஒரு பக்கத்தில் பந்து வந்த பிறகு அதிக அளவாக 3 முறை தொடலாம்,இதில் ஒரே முறை தான்.

ரொம்ப நேரம் நின்று கவனிக்காத்தால் முழுவிபரமும் தெரியவில்லை.

Saturday, February 23, 2008

ஸ்ரீகாந்த்- சென்னை சூப்பர் கிங்க்

தடலாடி விளையாட்டு என்றால் கிரிக்கெட்டில் சில காலங்களுக்கு முன்பு நம்ம ஸ்ரீகாந்த் மட்டுமே ஞாபகம் வரும்.இன்றும், இவர் அடித்த ஸ்கொயர் கட் -மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக ( உலகக்கோப்பை என்று நினைக்கிறேன்) அடித்தது தான் ஞாபகம் வரும்,அடுத்த பந்திலேயே நடு குச்சி ஆட்டம் போட்டது என்பது வேறு விஷயம்.

அந்த பந்து பேட்டில் பட்டது தான் தெரியும் சும்மா செம ஸ்பீடில் பவுண்டிரிக்கு போனது.

அப்படிப்பட்ட ஸ்ரீகாந்த் போட்ட ஆட்டத்தை கீழே பார்ககவும்.பட்டாசுனா,நம்மாளுக்கு பயம் போல்!! :-))



நன்றி: வசந்தம் சென்ரல்

Wednesday, December 05, 2007

ஜாபர் இரட்டை சதம்

நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் ஜாபரின் ஆட்டத்தை கீழே காணலாம்.




நன்றி: சன் தொலைக்காட்சி.

Tuesday, December 04, 2007

வாலிபால்

பல விளையாட்டுகளுக்கு உலகக்கோப்பை இருக்கும் போது வாலிபாலுக்கு மட்டும் என்ன குறைச்சல்? அதுவும் நடந்துகொன்டிருக்கிறது ஆனால் வெளிச்சம் தான் கிடைக்கவில்லை.

நான் இருந்த நாகை மடவிளாகத்தில் கோடை விடுமுறையில் தெருவின் குறுக்கே வலை கட்டி எங்கள் சீனியர்கள் இந்த விளையாட்டை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.விவரமாக பின்னொரு பதிவில் சொல்கிறேன்.

அப்போது நாங்கள் ஆடிய ஆட்டத்துக்கும் இப்போது ஆடடுகிற ஆட்டத்துக்கும் நிறைய முன்னேற்றம் வந்துவிட்டது. சர்வீஸ் ஒன்றே போதும் .கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்.



ஒரு காலத்தில் நாகையில் இருந்து "சலீம்" என்பவர் தமிழகத்துக்காக இவ்விளையாட்டில் ஒரு முத்திரை பதித்தவர்.

நன்றி: வச்ந்தம் சென்ரல்

Monday, November 19, 2007

இந்தியா-பாகிஸ்தான்.

இது நான்காவது ஒரு நாள் போட்டியின் சில காட்சிகள்.
டெண்டுல்கர் ஆட்டமும் யுவராஜ் ஆட்டமும் அருமையாக இருந்தது.



நன்றி: மக்கள் தொலைகாட்சி

Thursday, September 13, 2007

உருட்டுப் பந்து

அதாங்க Bowling,

இது கிரிக்கெட் அல்ல, underarm bowling மாதிரி உள்ள விளையாட்டு.இதைப்பற்றி நான் முதலில் கேள்விப் பட்டது மலேசியாவில் தான்.அங்கிருந்த ஒரு கிளைன்ட் பொறியாளர் ஒரு நாள் என்னிடம் நாம் பௌளிங் விளையாட போகலாமா ? என்று கேட்டுவிட்டு, எப்படி பௌலிங் பண்ணுவது என்று தெரியுமா? என்று கேட்டு நிறுத்தினார்.

நான் கிரிக்கெட்டில் பௌலிங் போடுவது போல் செய்துகாண்பிக்க... சிரித்து மகிழ்ந்தார்கள்.
அப்போது போக முடியவில்லை,அதற்குப்பிறகும் அதை விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.அவ்வப்போது ஏதாவது படத்தில் காண்பிப்பார்கள்.அதோடு சரி என்னுடைய அறிவு இந்த விளையாட்டை பற்றி.

இந்த பின்னனியில் 3 மாதங்களுக்கு முன்பு எங்கள் கம்பெனியில் உருட்டுப்பந்து போட்டி வைக்கப்போகிறோம்,பெயர் கொடுப்பவர்கள் கொடுக்கலாம் என்று சொன்னார்கள்.பொதுவாகவே நான் இந்த மாதிரி எந்த விளையாட்டுக்கும் போவதில்லை.முதல் காரணம் இரவு வீடு திரும்ப வெகு நேரம் ஆவது அடுத்து மரக்கறி உணவு கிடைப்பதில் உள்ள பிரச்சனை.இவற்றை விட மறுநாள் காலை செய்யவேண்டிய வேலைகளில் சுணக்கம் ஏற்படுவது.என்னை மாதிரி பல பேர் செய்வதால் என்னவோ இம்முறை கட்டாயப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.வேறு வழியில்லாமல் என் பெயரும் கொடுக்கப்பட்டது.

நேற்று இரவு நடந்த போட்டிக்கு போகும் முன்பே இந்த விளையாட்டை பற்றிய ஒரு சில விஷயங்களை தெரிந்துகொண்டேன்.

அலுவலகத்தில்,பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நண்பரிடன் கார் இருந்ததால் போகும் போது என்னுடன் வந்து விடு என்றார்.அலுவலக கூட்டத்தில் சிக்காமல் இருக்க மாலை சுமார் 5.15 க்கும் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டோம்.அதற்கு முன் மனைவிக்கு தொலைபேசி இன்று இரவு சேட்டிங் வரமுடியாது என்று சொன்னேன்.இந்த மாதிரி ஏதோ ஒரு காரணம் சொல்லி சென்னை போனதை ஞாபகம் வைத்துக்கொண்டு அங்கு வரப்போகிறீர்களா என்று கேட்டார்.

நாங்கள் விளையாடப்போகும் இடம் புக்கிட் மேரா என்ற இடத்தில் உள்ள சாபரா கிளப்.சும்மா இழைத்து வைத்துள்ளார்கள்.தரைக்கு கீழே கார் நிறுத்தும் இடம்,முதல் மாடியில் நீச்சல் குளம்,இரண்டாம் மாடியில் பௌளிங் சென்டர் மற்றும் சில அறைகள,் பல பயண்பாட்டுக்காக இருந்தது.

பௌளிங் செனட்ரில் உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய வரவேற்பறை போல் இருந்தது.மொத்த இடமும் குளிரூட்டப் பட்டு இருந்தது. வேர்வை வரவே வாய்ப்பு இல்லை.என் நண்பர் ஒருவர் ரொம்ப குளிருதில்ல? என்றார். எனக்கு அப்படி தெரியவில்லை.

நான் போன போது ஒரு சிலர் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.எங்கள் நிறுவனத்துக்கு என்று ஒரு குறிப்பிட்ட லேன்கள் ஒதுக்கியிருந்தார்கள்.என் குழுவில் இருக்கவேண்டிய ஒருவர் வராததால் வேறு ஒருவரை போட்டிருந்தார்கள்.

எங்கள் நிறுவனத்தில் இருந்த ஒருவர் தாங்கள் விளையாட வேண்டிய இடத்தில் வெவ்வேறு கலரில் உள்ள பந்துகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள்."ஏன் அப்படி வைக்கிறார்கள்?" என்று ஒருவரிடம் கேட்ட போது,அந்த பந்தின் எடையும் அதன் துவாரம் கை விரல் அளவுக்கு தகுந்த மாதிரி இருப்பது நல்லது என்பதால் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி எடுத்து வைத்துக்கொன்டிருக்கிறார்கள் என்று விளக்கம் தந்தார்.



என்னுடைய விரல்/எடை க்கு தேவையானதை எடுத்துவைத்துக்கொண்டிருக்கும் போது, பௌலின் போடும் இடத்துக்கு போவதற்கு முன்னால் அந்த கிளப்பில் உள்ள ஷூவை உபயோகபடுத்த வேண்டும் என்றார்கள்.இது தான் அந்த ஷூ.வழ வழப்பான தரைக்கு அது கொஞ்சம் பிடிப்பு கொடுக்கும் என்று நினைத்தேன்.அப்படி ஒன்றும் இல்லை.



இந்த முன்னேற்பாடுகள் நடந்துகொன்டிருக்கும் போதே எங்கள் உயர் அதிகாரிகள் பக்கத்தில் உள்ள ஒரு லேனில் பயிற்சி செய்ய ஆரம்பித்தார்கள்.எனக்கும் ஆசை தொற்றிக்கொள்ள "நானும் முயலலாமா?" என்றேன்.

"தாராளமாக" என்றார்கள்.

முதல் பந்து வீசிய போது கையில் இருந்து கொஞ்சம் உயரத்தில் இருந்து விழுந்தது போல் சத்தம் கொடுத்து உருண்டோடி இடது பக்கத்தில் இருக்கும் பின்னை அடித்தது.போடுவதற்கு முன்பு கால் கொஞ்சம் வழுக்கியமாதிரி இருந்தது. சிறிது நேரத்தில் அதன் நேர்த்தி பிடிபட்டது. பந்தின் எடை அதிகமாக இருப்பதால் கையில் எங்கோ ஒருவித வலி ஏற்படுபவது போல் தோன்றியது ஆனால் சில நிமிடங்களில் காணாமல் போனது.

போட்டி ஆரம்பிக்கும் போது,ஆட்டம் ஓரளவு பிடிபட்டது.டிவி திறையில் யார் எந்த லேனில் விளையாடவேண்டும் எனபதையும் & ஆட்ட முடிவுகளையும் காண்பிக்கிறது.போட்ட பந்து திருப்ப நாம் இருக்கும் இடத்துக்கே வருகிறது.கை ஈரம் காய ஒருசின்ன துவாரம் வழியாக காற்று வந்துகொண்டிருக்கிறது. சிலர் பவுடர்களையும் கையில் போட்டுக் கொள்கிறார்கள்.

போட்ட பந்து இங்கு தான் திரும்பி வரும்.



4 ஆட்டம்.2 வீச்சுக்குள் எல்லா பின்களையும் வீழ்ந்த முடிந்ததை பார்த்த எங்கள் தலைவர் "நிஜமாகவே சொல்லு! இது தான் முதல் தடவையா? " என்றார்.எப்படி முடிந்தது என்று கேட்கிறீர்களா? பதிலுக்கு கடைசி வரை வாருங்கள்.

4 பேர் உள்ள எங்கள் குழூ ஒவ்வொரு கேமில் முன்னேறி கடைசி கேமில் 573 பாயிண்ட்ஸ் எடுத்தோம்.கீழே எங்கள் குழு. என்னை படம் எடுக்கும் போதா மின்கலம் தீர்ந்துபோகவேண்டும்?வெளிர் பச்சை நிற சட்டையில் ் போடுபவரும் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களும் தான் எங்கள் குழு.



7.30 மணிக்கு ஆரம்பித்து 9.30 மணிக்கு முடித்தோம்.மற்றவர்கள் முடிக்க நேரம் ஆனதால் சிறிது நேரம் மற்றவர்களின் ஆட்டத்தை காணும் போது மேலும் சில விஷயங்கள் புரிபட்டது. அதுவும் பெண்கள் எடையில் சிறிய பந்துகள் மூலம் வேகம் குறைந்த அளவில் வீசி அத்தனை பின்களையும் வீழ்த்திய போது ஆச்சரியமாக இருந்தது.

அங்கிருந்து வீட்டுக்கு வர சுமார் 1.30 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் எனபதால் என் சக ஊழியரிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.வீடு வந்து சேரும் போது இரவு 11.

மறு நாள் காலை அலுவலகத்துக்கு வந்து மேசையின் மீது பையை வைக்கும் போது பார்த்தால் அழகான ஒரு பின்... கீழே உள்ள மாதிரி. ஆதாவது எங்கள் குழுவுக்கு மூன்றாவது பரிசாம்.

இந்த விளையாட்டு ஒன்றும் பெரிய விளையாட்டு அல்ல,நீங்கள் கோலி குண்டு ஆடியிருந்தால்.
நம்ம வலைப்பதிவர் ஹரிஹரன் எழுதிய(இதை அங்கு துழாவி கண்டுபிடிக்கவே வெகு நேரம் ஆனது-லாக் &போந்தா) பதிவு இங்கு.

பலர் ஆச்சரியப்பட்டு கேட்கும் போது நான் சொன்ன பதில் "I used to play marbles during my early days,I used that technic".





கிடைத்த பரிசு.

இதனால் சொல்வது என்னவென்றால் கோலி குண்டு விளையாட தெரிந்தால் உருட்டுப்பந்து விளையாடிவிடலாம்.கொஞ்சம் தெம்பாக இருப்பது நலம். என் நண்பரும் இதே மாதிரி முதல் தடவை வந்து உருட்டும் போது கொஞ்சம் பயந்துவிட்டேன் "எங்கே பந்து அவரையும் தூக்கிட்டு போயிட போகுதே!!" என்று.

Thursday, April 05, 2007

CVR யின் கடத்தல்

நமது சிவியாரின் "பார்க்காத அதிசியங்கள்" பதிவு எப்படி தெரிகிறது பாருங்கள்.



தமிழ் மணத்தையே கடத்திவிட்டாரா?:-)))

இதைச் சொல்ல பின்னூட்டம் கூட தெரியவில்லை,அதனால் இப்படி ஒரு பதிவு.

CVR கோபித்துக்கொள்ளாதீர்கள்.

Wednesday, February 21, 2007

கிரிக்கெட்

இணைய இணைப்பில் வேகம் வந்தவுடன் என்ன செய்வது என்ற யோஜனையுடன் கிரிக்கெட் மேச் ஏதாவது கிடைக்குமா? என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.
அப்போது மாட்டியது இந்த பக்கம்.
இதில் பல வீடியோக்கள் கிடைக்கிறது,அதில் சமீபத்தில் நடந்த ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவுக்கு இடையில் நடந்த மேட்சும் இருக்கு.
இதை தரவிரக்கம் செய்ய நீங்கள் ரிஜிஸ்டர் செய்துகொள்ளவேண்டும்.
வீடியோ தரம் கொஞ்சம் கம்மி தான்.கிரிக்கெட் மீது காதல் உள்ளவர்களுக்கு இதெல்லாம் பொருட்டாக இருக்காது.
போய் பாருங்கள்