Showing posts with label மஸ்கட். Show all posts
Showing posts with label மஸ்கட். Show all posts

Sunday, September 12, 2010

நிலவும் வீனஸும்.

மஸ்கட் எப்போதுமே வானவியலுக்கு ஏற்ற இடமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.நகர வெளிச்சத்தை தாண்டிப்போனால் வெரும் கண்களுக்கு வானத்தில் இருக்கும் நட்சத்திரம் விருந்தே படைக்கும்.

கீழ்கண்ட படங்களை பாருங்கள்...அலைபேசியில் பேசியில் எடுத்தது.நிலவும் வீனஸும் அருகருகே!!
முதல் படம் குரூம் பூங்காவிற்கு முன் எடுத்தது.




Friday, September 10, 2010

புதிய தொழிற்நுட்பம்-Hollw Core Slab.

போன பதிவில் ஆசிய கடற்கரை விளையாட்டு கட்டிடங்களை பற்றிய விளகங்களை சொல்கிறேன் சொல்லியிருந்தேன்.

மிக அதிக உயரமான கட்டிடமே ஐந்து மாடி தான்.ஒரு ஹோட்டல்,விளையாட்டாளர்கள் தங்கும் இடம்,பத்திரிக்கையாளர்கள் இருக்கும் இடம் மற்றொரு கட்டிடத்தில் உணவகம் மற்றும் கடைத்தொகுதி இருக்கிறது.வரும் நவம்பரில் விளையாட்டுகள் தொடங்கக்கூடும்.

விளையாட்டாளர்கள் தங்கும் கட்டிடத்தை தான் முதலில் பார்த்தேன்,நண்பர் அதில் செய்யப்பட்ட வேலைகளும் அதை எங்கிருந்து வரவழைத்தார்கள் அதன் சாதக பாதகங்களை விவரித்துக்கொண்டு இருக்கும் போது மேற் கூரையை பார்த்தேன்.அதன் Finishing அருமையாக இருக்கிறதே என்றேன்.
ஓ! அதுவா? இது தான் Hollow Core Slab என்றார்.இதை துபாயில் பல நிறுவனங்கள் செங்கல் மாதிரி போட்டு விற்கிறார்கள் என்றார்.ஆச்சரியமாக இருந்தது.நான் பார்த்த கூரை சுமார் 8.50 மீட்டர் நீளம்.இவ்வளவு Span இருக்கும் ஒரு இடத்தில் கான்கிரீட் கூரை போடனும் என்றால் நடுவில் ஒரு Beam வேண்டும் இல்லையென்றால் சிலாப் அதிக கணம் உள்ளதாக போடனும்.அதிக கணம் என்றால் அதற்கு தகுந்த கம்பி போடனும்.எந்த பொறியாளரும் அந்த அளவுக்கு போகமாட்டார்கள் ஏனென்றால் செலவு பிடிக்கக்கூடியது அதோடில்லாமல் அது சரியான கட்டுமான வேலையாக இருக்காது.
இவ்வளவு பெரிய Span யில் நடுவே ஒரு Beam கூட இல்லாமல் இருக்கும் இந்த Slab கணம் எவ்வளவு என்று கேட்டேன், அதற்கு 200 மி.மீட்டர் தான் என்றார் அதோடு இதன் உள்ளே வெறும் 8 அல்லது 9 கம்பிகள் மட்டுமே இருக்கிறது என்ற குண்டையும் போட்டார்.என்னால் நம்பவே முடியவில்லை. Slab அளவு 8.50 x1.2x0.2 மீட்டர், இதற்கு கம்பி வெறும் 9 தான்.படத்தை பாருங்கள்.தூணின் இரு பக்கத்திலும் Beam போட்டுவிட்டு அதன் மேல் இந்த Slab ஐ வைத்தால் முடிந்தது கூரை.

சில படங்கள் இணையத்தில் சுட்டவை..



நன்றி: கான்கிரீட் டெக்.



நன்றி:பிரிகாஸ்ட் ஒர்க்ஸ்



இதன் அனுகூலங்கள்.

1.Building கட்டுமானம் ஆரம்பிப்பதற்கு முன்பே இந்த வேலையை ஆரம்பித்துவிடலாம்.(Parellel Working), இதனால் நேரம் மிச்சமாகும்.
2.அருமையான Finishing அதனால் மேற்பூச்சு என்ற வேலையே இல்லை.
3.கம்பி கிடையாது அதனால் கம்பி வேலை என்று சொல்லப்படுகிற Bar Bending வேலை இருக்காது.
4.வேண்டிய அளவுக்கு செய்துகொள்ளலாம் என்பதால் நம் தேவைக்கு ஏற்ற அளவில் கிடைக்கும்.
5.Erection அல்லது பொருத்தும் வேலை மிகவும் சுலபம் அதோடில்லாமல் குறுகிய காலத்தில் விரைவாக முடிக்கமுடியும்.
6.Form Work அல்லது செண்டரிங் என்ற வேலையே கிடையாது.
7.சிலாபின் மத்தியில் ஓட்டை இருப்பதால் மேலும் கீழும் Thermal Insulation கிடைக்கும்.
இன்னும் நிறைய இருக்கு.

பிரதிகூலங்கள்
அனுகூலங்கள் என்று இருந்தால் அதற்கு பிரதி என்று ஒன்று இருக்கும் அல்லவா!
1.இதை மேல் தூக்கிவைக்க பாரம் தூக்கி வேணும்.சென்னை மாதிரி குருகிய சாலையில் பாரம் தூக்கி நிறுத்த முடியாது.Tower Crane மூலம் இவ்வவளவு பாரம் தூக்க முடியுமா என்று தெரியவில்லை.
2.பெரிய பெரிய தொழிற்சாலைகளில் கடைசி நேர வேலையாக சில சமயம் துளை போட வேண்டிவரும் அது இதில் கஷ்டம்.
3.Slab களுக்கு இடையே உள்ள ஜாயிண்டை மூட தனி தொழிற்நுட்பம் தேவை.
4.Slab அளவுகளை நினைத்த நேரத்துக்கு மாற்ற முடியாது.
இன்னும் இருக்கலாம் அவ்விடத்தில் வேலை செய்தால் புரிபடும்.

கீழே உள்ள படங்கள்...முதலில் உள்ள படத்தில் சிகப்பு வட்டம் போட்டு காட்டியிருப்பது தான் கம்பியின் அளவு 4~6 MM இருக்கக்கூடும்.



மற்றொரு படம் அந்த சைட்டில் எடுத்தது.

இதில் சிலாபின் Finish ஐ பார்க்கலாம்,இதில் மேற்பூச்சு இல்லை.அதோடு மின்சார பைப்புகள் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு எப்படி போகிறது என்றும் பார்க்கலாம்.



இதன் மூலம் எனக்கும்/உங்களுக்கும் பல விஷயங்களை தெரிந்துகொள்ள உதவிய என் நண்பனுக்கு நன்றி.

Thursday, September 09, 2010

ஆசிய கடற்கரை விளையாட்டு-மஸ்கட்.

எல்லோர் வாழ்வில் இப்படி ஒரு முறையாவது நடந்திருக்கும் அல்லது நடக்கும்.என்னுடைய வாழ்விலும் இது சில முறை நடந்திருக்கு. நினைப்பதெல்லாம் நடக்குபோது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மோசமான எண்ணங்களும் நடந்திடுமோ என்று தோன்றும்,அதாங்க நீங்க ஏதாவது நினைத்திக்கொண்டு இருப்பீங்க அது உடனே நடப்பதற்கான சாத்திய கூருகள் நடக்க ஆரம்பித்துவிடும்.ஆங்கிலத்தில் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”என்பதை ”டெலிபதி”என்று சொல்வார்கள் ஆனால் இந்த மாதிரி நினைப்பு நடப்பதை என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.


ஒரு முறை என் அம்மாவுடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது இன்று விசேஷமான நாள் முடிந்தால் கோவிலுக்கு போய்விட்டு வா- என்றார்.இங்கு என்ன கோவில் நடந்து போகக்கூடிய தூரத்திலா இருக்கு என்று நினைத்துக்கொண்டு,கம்பெனி வண்டி ஃபிரியாக இருந்தால் போகிறேன் இல்லை யாராவது நண்பர்கள் வண்டி கொண்டுவந்தால் அவர்களிடம் கேட்கிறேன் என்று சொல்லி வைத்தேன்.இது நடந்தது காலை மணி 7. நண்பனிடம் இருந்து ஒரு அழைப்பு,என்ன Program இன்று என்று கேட்டார்.வழக்கம் போல் ஒன்றும் இல்லை வீட்டில் தான் இருக்கேன் என்றேன்.சரி ஒரு 10 மணி போல் வருகிறேன் கிருஷ்ணன் கோவிலுக்கு போகலாமா என்றார்??!! ஆச்சரியம். அவன் தயவில் அன்று கோவில் தரிசனம் கிடைத்தது.

என்னுடைய ஒப்பந்த நாள் வரும் 14ம் தேதியோடு முடிவதால் ஒரேடியாக ஊருக்கு கிளம்புவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யும் போது இவ்வளவு நாள் இங்கிருந்தோம் கூடியவரை பல இடங்களை பார்த்திருந்தாலும் ஒரு கட்டுமான இடத்துக்கு உள்ளே போய் பார்க்கமுடியவில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.25 வருடங்களுக்கு பிறகு சந்தித்த நண்பன் அதே வேலையில் இருந்தாலும் அவனிடம் கேட்பதற்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது.கிளம்புவதற்கு முதல் வாரம் வேண்டுமென்றால் கேட்கலாம் என்று நினைத்திருந்தேன்.
L&T-ECC நிறுவனம் என்னுடைய தாய் நிறுவனம் மாதிரி,நான் இங்கு கற்றது இன்று வரை எனக்கு சோறு போடுகிறது.புதிய புதிய தொழிற்நுட்பங்கள்,வித்தியாசமான வேலைகள் என்று அறியும் ஆர்வம் உள்ளவர்களுக்கு தீனி போடும் செமத்தியான இடம் அது.என்ன தான் மலேசியா/சிங்கப்பூர்/துபாய்/மஸ்கட் என்று பல ஊர்களில் கட்டுமான தொழிற்நுட்பங்களை பார்த்திருந்தாலும் 15 வருடங்களுக்கு பிறகு என்னுடைய தாய் நிறுவனத்தில் எப்படி வேலை நடக்குது என்று பார்க்க ஆவலாக இருந்தது.சில வேலைகள் வெளி ஆட்களுக்கு நுழைய தடை இருக்கும் அந்த வகையில் இந்த வேலை இருந்தால் என்னால் உள்ளே போக வேண்டுகோள் கூட வைக்கமுடியாது.இப்படி எண்ணங்கள் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது.

என்னதான் Gtalk யில் அவன் பெயரில் Available என்று வந்தாலும் அவசியமில்லாமல் அவனும் கூப்பிடமாட்டான் நானும் கூப்பிடமாட்டேன்.இரண்டு வாரங்களுக்கு முன்பு கூப்பிட்டு இந்த வார கடைசியில் முடிந்தால் சந்திக்கலாம் என்றான்.சரி என்றேன் ஆனால் அந்த வாரம் அவனுக்கு வேலை வர அவனால் வரமுடியவில்லை.மறுவாரம் கூப்பிட்டு என்னுடைய வேலை நிலவரங்களை கேட்டுவிட்டு வியாழன் இரவு ஏதோ ஒரு இடம் சொல்லி அங்கு கொஞ்சம் வேலை இருக்கு அங்கு தங்கிவிட்டு மறுநாள் site ஐ சுற்றிப்பார்க்கலாம் என்றார்.ஆச்ச்சரியமோ ஆச்சரியம் நான் கேட்கமாலே நான் நினைத்தது நடக்கவிருந்தது.

வியாழன் இரவு சுமார் 7 மணிக்கு வந்தான் இருவரும் கிளம்பி Seeb (Airport) வழியாக President Palace இருக்கும் இடத்தையும் கடந்து போய்கொண்டிருந்தோம்.Mussanah என்ற இடம் வந்தது அது வரை வண்டி 100 ~ 110 கி.மீ வேகத்தில் வழுக்கிக்கொண்டு போய்க்கொண்டிருந்தது.கிட்டத்தட்ட 105 கி.மீ வந்தவுடன் ஒரு சிறிய கிராமம் போல் இருந்த இடத்தில் ஒரு வில்லாவில் இவர்களுக்காக இடம் ஒதுக்கியிருந்தார்கள் அங்கு தங்கினோம்.ECC முறைப்படி ஒரு Mess ம் இருந்தது.பழைய கதைகளை பேசிவிட்டு சுமார் 11 மணிக்கு படுத்தோம்.



காலை எழுந்து சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி Site க்கு போனோம். தங்கியிருக்கும் இடத்துக்கும் Site க்கும் சிறிது தூரம் தான் இருந்தாலும் மகிழுந்துவில் தான் போகனும்.நடுநடுவே சில இடங்களில் வீடுகள் கட்டுமானம் நடந்துகொண்டிருந்தது மற்ற படி பொட்டக்காடு தான்.ஒரு துருக்கிஸ் நிறுவனம் தன்னுடைய பேச்சிங் பிளாண்ட் மற்றும் 400 டிப்பர் வகை வாகனங்களை அங்கு நிறுத்திவைத்திருந்தது.ஒரு வேளை வரப்போகும் வேலைக்காக இப்போதே அடுக்க ஆரம்பித்துவிட்டார்களா என்ற யோசனையில் இதற்கான Over Heads என்னவாகும் என்ற நினைப்பும் வந்தது.துபாய் விழுந்ததில் வந்தவையாக கூட இருக்கலாம்.

ECC யில் ஒரு காலத்தில் ஆதாவது நான் வேலை செய்ய ஆரம்பித்திருக்கும் காலத்தில் சிறிய பெரிய விபத்துகள் நிகழத்தொடங்கிய காலம்(1982) அதனால் விபத்துக்கு இழப்பீடு செய்யும் போது காப்பீடு நிறுவனம் இதே நிலை தொடர்ந்தால் அதிக சந்தா கட்டவேண்டும் என்று நிர்பந்திக்க ஆரம்பித்தது அதனால் இவர்களுக்கு சந்தா அதிகமாக கட்டாமல் இருக்கவும் மார்க்கட்டில் கம்பெனி பெயர் நிலை நிருத்தவும் பாதுகாப்புக்கு செலவு செய்வது என்று முடிவெடுத்தார்கள்.என்னுடைய முதல் வேலை இடத்தில் 60 பேருக்கு மேல் இருந்தால் Site இல் 20 ஹெல்மட் தான் இருக்கும்.பெரிய தலைகள் கட்டாயமாக போட்டிருப்பார்கள்.கட்டிடங்கள் அதிக உயரம் எழும்ப எழும்ப சின்ன சின்ன கற்கள் மூலம் காயம் ஏற்படுவதை கண்டு எல்லோருக்கும் ஹெல்மட் கிடைத்தது.வேலையாட்கள் வரை அதை கொண்டு வர பல ஆண்டுகள் பிடித்தது.சித்தாள்கள் தலையில் திண்டு வைப்பதால் ஹெல்மட் என்பது அவர்களுக்கு ஒத்துவராதது என்று ஒதுக்கிவிட்டார்கள்.அப்போதெல்லாம் விபத்து என்று வரும் கேஸ்கள் காலில் ஆணி குத்திவிடுவது தான் அதிகம்.இப்படியெல்லாம் இருந்த நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை நுழைவாயிலில் மாட்டியிருக்கும் பலகை உங்கள் பாதுகாப்பு உங்கள் குடும்பத்துக்கும் பாதுகாப்பு என்று சொல்லி நச் என்று அனைவரது மண்டையில் ஏற்றியிருக்கிறார்கள்.இப்படி நச் என்ற பலகை மாட்டினால் வேலை செய்யும் இடம் பாதுகாப்பாகிவிடுமா? நிச்சயம் முடியாது.வேலை செய்பவர்கள் மற்றும் வேலை வாங்குபவர்கள் இருவரும் சேர்ந்து உழைத்தால் விபத்தே நிகழாமல் ஒரு வேலையை முடிக்கலாம் என்று சொல்லாமல் சொல்லியது மற்றொரு அறிவிப்பு பலகை,அது தான் அவர்களின் 10 மில்லியன் வேலை நேரம்.இமாலய சாதனை என்றே சொல்ல வேண்டும்.நிஜமாக பாதுகாப்புக்காக இவர்கள் உழைக்கிறார்களா? அதற்காக என்னென்ன செய்கிறார்கள் என்பதை பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது.இதையெல்லாம் நான் பார்க்கிறேன் எனபதை நான் என் நண்பனிடம் சொல்லவில்லை இப்படி இங்கு எழுதி அவர்கள் அனைவரையும் பாராட்டிவிடலாம் என்று விட்டுவிட்டேன்.



நான் பார்த்த வரை

1.ஒழுங்கான வேலை Platform.ஏறுவதற்கு ஏணி,நின்று வேலை பார்ப்பதற்கு சரியான பலகை,கைப்பிடி பைப்புகள்(சரியான உயரத்துக்கு),Toe Board(சாமான்கள் கீழே விழாமல் இருக்க) & மிக முக்கியமாக அந்த Platform வேலை செய்ய ஏற்றது தான் என்ற சான்றிதழ் வழங்கி அதை அதில் மாட்டியும் வைத்துள்ளார்கள்.
2.தற்காலிக ஓட்டைகளை சுற்று கைப்பிடி போட்டு அதன் மேல் பாகத்தை கனமான மூடி போட்டு மூடி வைத்துள்ளார்கள்.



3.ஏணி படிகளில் உள்ள தற்காலிக கைப்பிடி பைபுகளின் முனையில் பிளாஸ்டிக் குப்பி போட்டு மூடி வைத்துள்ளார்கள் இதன் மூலம் கூர்மையான பாகத்தால கையில் அடிபடாமல் இருக்கும்.
சொல்ல வேண்டுமென்றால் இது போல் பலவற்றை சொல்லலாம்.இதைப்படிக்கும் கட்டுமானத்துறை நண்பர்கள் வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் சேர வேண்டிய நிறுவனம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

இப்படியெல்லாம் இருக்கும் இடம் தான் ஆசியன் கடற்கரை விளையாட்டுக்காக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டிடங்கள்.

மற்றவை அடுத்த பதிவில்.

Thursday, September 02, 2010

Footing- அஸ்திவாரம்

அஸ்திவாரங்களில் பல வகைகள் இருந்தாலும் பல கட்டிடங்கள் இந்த மாதிரி Footing போட்டு அதன் மீது தூண் எழுப்பி தான் செய்கிறார்கள்.நாங்கள் இப்போது இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் ஒரு மசூதியை இடித்துவிட்டு புதிதாக கட்டுகிறார்கள் அவ்வப்போது மெது நடை போகும் போது எட்டிப்பார்த்துவிட்டு போவேன் அதிலிருந்து சில படங்கள் கீழே.

கான்கிரீட்டை பாதுகாக்க ஏதோ கருப்பு கலர் பெய்ண்ட் அடித்து இருக்கிறார்கள்.படத்தின் மீது சொடுக்கி பெரிதுபடுத்தி பார்த்தால் இன்னும் பல விபரங்கள் தெரியும்.

கீழே உள்ள படம் துபாயில் எடுத்தது,இந்த மாதிரி Footing தரை முழுவதும் வருமாறு இருக்கும் அதன் மீது தூண்கள் வரும்.இப்படி Footing போடுவதால் அதையே கார் நிறுத்தும் இடமாகவும் உபயோகிக்க முடியும்.



இப்படம் இணையத்தில் கிடைத்தது.என்னை பொருத்தவரை மோசமான உதாரணம்.தூண்,அஸ்திவாரத்தின் நடுவில் இல்லாதது ஒரு பெரும் குறையல்ல ஆனால் இதில் மண்ணை தோண்டுவதற்கு பதில் தோண்டிய மண்ணுக்காக அஸ்திவாரம் போடப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.



மசூதியின் அஸ்திவாரம்.



இன்னும் அருகே..

Saturday, July 24, 2010

கிரானைட்

கட்டுமானத்துறையில் கிரானைட் புகுந்து பல வருடங்களாகிவிட்டது.முதன் முதலில் வழுவழுப்பான தரை என்ற நியதியில் உள்ளே வந்து அதன் பிறகு பெரிய பெரிய கட்டிடங்களின் வெளிப்பகுதி அலங்கரிப்புக்காக பெரிய சட்டத்துடன் இணைத்து உபயோகித்தார்கள்.தற்போது வெளிப்புற அலங்கரிப்புக்கு கிரானைட்டை விட கண்ணாடியில் பல அனுகூலங்கள் இருப்பதால் பலரும் கண்ணாடியையே விரும்புகிறார்கள்.கான்கிரீட்டை விட பளபளப்புக்கு கிரானைட் உகந்ததாக இருப்பதால் பலரும் விரும்புகிறார்கள்.சுத்தம் செய்வது மிக எளிதாக இருப்பதால் பன்னாட்டு விமான நிலையங்களில் மக்கள் குழுமும் இடம் என்று அடையாளம் காண்பிக்கப்படும் இடங்களில் இது புழக்கத்தில் உள்ளது.

தரைக்கு இக்கற்களை பதிக்கும் போது பரப்பும் தளத்தில் சிமிண்ட் பரப்பி அதன் மேல் இக்கற்களை பதிப்பார்கள்.சரியான லெவலில் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை செய்திருப்பார்கள்,இதுவே நெடுக்கில் கிரானைட் கற்களை வைக்க என்ன செய்கிறார்கள்? விளக்கப்படங்கள் கீழே.

நான் தங்கியிருக்கும் பக்கத்தில் உள்ள Qurm Beach யில் நடைபாதைக்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உட்கார்ந்து கடலழகை பார்க்க வசதி செய்துள்ளார்கள்.அது இப்போது வெறும் கான்கிரீட் போடப்பட்டு அப்படியே உள்ளது.நிறைய காசு இருக்கோ என்னவோ அதையெல்லாம் கிரானைட் போட்டு அலங்காரப்படுத்த அரசாங்கம் உத்தரவு போட்டு ஒரு குத்தகைக்காரர் வேலை தொடங்கியுள்ளார்.வெய்யில் காலத்தில் சூரியன் மறைந்ததும் சுமார் 1 மணி நேரம் அந்த வெப்பம் இந்த கிரானைட் சிலாப் மீது உட்காரவிடாமல் பண்ணும் மற்றபடி குளிர் காலத்தில் அவ்வளவு பிரச்சனை இருக்காது.

கற்கள் வேண்டிய அளவில் வெட்டப்பட்டே வரும் தேவையென்றால் உரிய உபகரனங்கள் மூலம் நம்மாலும் வெட்டிக்கொள்ளமுடியும்.வேலைக்கு தகுந்த மாதிரி அதன் Thickness இருக்கும்.

தகுந்த உயரத்தில் அல்லது இடத்தில் வைத்து அதன் நேர் தன்மையை சரிசெய்துக்கொண்டு படத்தில் உள்ள மாதிரி சிறிய ஸ்குரு மற்றும் இருகும் தண்மை கொண்ட கெமிகல் மூலம் அதை நிலை நிறுத்துவார்கள்.கான்கிரீட் மற்றும் இந்த சிலாபுக்கு இடைப்பட்ட பாகத்தை தேவையென்றால் சிமிண்ட் கலவை மூலம் நிரப்பிவிடுவார்கள்.

Alignment with Thread



ஸ்குரூ மற்றும் கெமிகல் மூலம் நிலை நிருத்தப்படுகிறது.





வேலை என்னவோ சுலபமாக தெரிந்தாலும் சில இடங்களில் கலர் மாற்றம் ஏற்பட்டால் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.கிரானைட்டிலும் நகாசு வேலை செய்து வித்தைகாட்டுகிறார்கள்,இந்த மாதிரி வித்தைகளை மத்திய கிழக்கில் அதிகமாக பார்க்கலாம்.

Wednesday, July 07, 2010

பெரிய மசூதி

மஸ்கட் சுற்றிப்பார்க்க வந்தால் தவறாமல் பலர் செல்லும் இடம் இந்த மசூதி.அவ்வப்போது விமான நிலையத்தை நோக்கி போகும் போது அல்லது அங்கிருந்து வரும் போதோ கண்ணை கவரக்கூடிய கட்டிடம் இது.கிட்டத்தட்ட 7 மாதம் ஆகிவிட்டாலும் உள்ளே போய் பார்க்கனும் என்று தோன்றவில்லை.சமீபத்தில் குடும்பம் கோடை விடுமுறைக்கு வந்திருந்தார்கள்,மஸ்கட் சுற்றி பார்க்கும் இடங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டதால் அதைப்பார்க்க கிளம்பினோம்.அதற்கு முன்பு இணையத்தில் அங்கு போவதற்கு விபரங்கள் தேடிய போது இஸ்லாம் மதத்தில் இல்லாதவர்களுக்கு சுற்றிப்பார்க்க சனி முதல் புதன் வரை தான் போட்டிருந்தது,அங்கு போன போது வியாழன் அன்றும் பார்க்கலாம் என்று போட்டிருந்தது.மிக முக்கியமாக பெண்கள் கை,கால் முதலியவற்றை மூடிக்கொள்ளவேண்டும் அப்படி இல்லாதவர்களுக்கு பக்கத்தில் உள்ள கடையில் பிரத்யோக உடை 4 ரியாலுக்கு கொடுக்கிறார்கள்.
கட்டிடம் வெளிப்புறம் முழுவதும் மரங்களை வைத்து ஒரு தோட்டம் மாதிரி செய்துள்ளார்கள்.
மீதி விபரங்கள் படமே சொல்லும்.



















Wednesday, May 19, 2010

Thursday, April 29, 2010

எதற்கு இது?

பல மாதங்களாக அலுவலக கண்ணாடி வழியாக இந்தபடிகளை பார்த்திருந்தாலும் பெரிதாக ஒரு எண்ணமும் வரவில்லை ஆனால் ஒரு நாள் ஒருவர் கையில் ஏதோ கருவிகளை வைத்துக்கொண்டு அந்த மொட்டை மாடியில் இருந்து சுவர் வழியாக காலை மாற்றிப்போட்டு இந்த படிகளை உபயோகித்து கிழிறங்கி வந்தார்,அதன் பிறகு தான் எதற்கு இப்படிப்பட்ட ஒரு மாடிப்படி என்ற யோஜனை வந்தது. உங்களுக்கு ஏதாவது தோனுதா?

Wednesday, April 21, 2010

மூன்று மணி நேர சொர்க்கம்.

நேற்று மஸ்கட்டில் இருந்து துபாய் வந்து சென்னைக்கு திரும்பும் நேரத்தில் இச்செய்தியை கல்ப் நீயூஸில் படிக்க நேர்ந்தது.இதே மாதிரி செய்திகள் பல முறை செய்திதாள்களில் வந்திருந்தாலும் இது சமீபத்தியது என்பதில் உள்ள ஆர்வம் அவ்வளவு தான்.மூன்று வயது குழந்தை இவ்வளவு பேசுமா? எனபதெல்லாம் லண்டனுக்கு தான் போய் விஜாரிக்கனும்.:-)

மூன்று மணிநேரம் இதய துடிப்பு இல்லாமல் மூளைக்கு எப்படி இரத்தம் போயிருக்கும்? இரத்தம் இல்லாமல் மூளை எப்படி உயிர் பிழைத்திருந்தது? போன்ற கேள்விகள் எழத்தான் செய்கிறது.



நன்றி:கல்ப் நியூஸ்

Friday, March 26, 2010

மஸ்கட் பேரீட்சங்காய்

சற்று முன் எடுத்தது,கையில் காய்கறி பை இருந்தாலும் பார்த்த உடனே எடுக்கனும் என்று தோன்றியது.இது பழுக்க இன்னும் எவ்வளவு நாள் ஆகும் என்று தெரியவில்லை.போன வருடம் இந்த சமயத்தில் தான் துபாயை விட்டு வெளியேற வேண்டியதால் அங்கு சுவைக்கமுடியவில்லை,இங்காவது முடிகிறதா என்று பார்ப்போம்.



பின்புலத்தில் சேட்டன் சாய் கடை.

Wednesday, March 24, 2010

ப‌ரிசு தின‌ம்

ச‌க‌ தொழிலாள‌ ந‌ண்ப‌ர் அன்புத்தொல்லையாக‌ அவ்வ‌ப்போது வெளியில் போக‌ கூப்பிட்டாலும் பெரும்பாலான‌ நேர‌ங்க‌ளில் அதை த‌விர்த்துவிடுவேன் இருந்தாலும் சில‌ ச‌ம‌ய‌ம் வேறு வ‌ழியில்லாம‌ல் போக‌ வேண்டிவ‌ந்துவிடுகிற‌து.ஒரு நாள் தான் லுலு க‌டைத்தொகுதிக்கு போவ‌தாக‌வும் நீயும் வாயேன் என்றார்.அப்போது அரிசி வாங்க‌ வேண்டிய‌ நேர‌ம் அத்தோடு லுலுவில் காய்க‌றிக‌ள் கொஞ்ச‌ம் ஃப்ரிர‌ஸ்ஸாக‌ இருக்கும் என்ப‌தால் ஒத்துக்கொண்டு போனேன்.மூவ‌ரும் அவ‌ர‌வ‌ர்க்கு வேண்டிய‌தை வாங்கிக்கொண்டு திரும்பினோம்.

போன‌ வார‌ம் ஒரு நாள் ஸ்க‌ந்த‌ப் போக‌லாம் என்றார் அதுவும் இர‌வில்.இர‌வில் அங்கு போய் என்ன‌ பார்க்க‌ப்போகிறீர்க‌ள் அதுவும் க‌ட‌ற்க‌ரையை த‌விர‌ அங்கு ஒன்றும் இல்லையே என்றேன்.அப்போதைக்கு அந்த‌ ப‌ய‌ண‌ம் த‌ள்ளிப்போட‌ப்ப‌ட்ட‌து.

நேற்று திரும்ப‌வும் ஸ்க‌ந்த‌(Qantab) ப‌ய‌ண‌ம் ப‌ற்றி பேச்சு வ‌ந்த‌து,எப்போது போக‌ப்போகிறீர்க‌ள் என்றேன்.வேலை முடிந்து வீட்டுக்கு வ‌ந்து பிற‌கு போக‌லாம் என்றார்.போவ‌த‌ற்கு ம‌ட்டுமே 20 நிமிட‌ங்க‌ளுக்கு மேலாகும் அதுவும் வீட்டுக்கு போய்விட்டு போனால் சூரிய‌ன் ம‌றைந்த‌ பிற‌கு தான் அங்கு போ சேர‌ முடியும் என்றேன்.
அப்ப‌டியென்றால் வேலை முடிந்த‌ உட‌னே நேர‌டியாக‌ கிள‌ம்பிவிட‌லாம் என்றார்,ச‌ரி போக‌லாம் என்று மாலை 6 ம‌ணிக்கு கிள‌ம்பினோம்.முத்ரா வ‌ரை போய் அங்கு வ‌ண்டியை நிறுத்திவிட்டு ஒரு 5 நிமிட‌ம் இருங்க‌ள் நான் போய் தொழுதுவிட்டு வ‌ருகிறேன் என்று போனார்.வித்தியாச‌மான‌ கோண‌த்தில் முத்ரா ப‌ட‌ங்க‌ள்.ம‌லை மீது ஒரு சிறிய‌ கோட்டை கூட‌ உள்ள‌து.




அங்கிருந்து கிள‌ம்பி ஸ்க‌ந்த‌ நோக்கி போனோம்,அப்போதே கொஞ்ச‌ம் இருட்டிவிட்ட‌து இத‌ற்கு மேல் அங்கு போய் என்ன‌ பார்க்க‌ப்போகிறேன் என்ப‌தே என் நினைவாக‌ இருந்த‌து,இத‌ற்கிடையில் ந‌டுவில் ஓரிட‌த்தில் நிறுத்தி கேக் ம‌ற்றும் பான‌ங்க‌ளை வாங்கிக்கொண்டு வ‌ந்தார்.செல‌வு செய்ய‌விட‌வில்லை.தொட‌ர்ந்த‌ ப‌ய‌ண‌ம் ஸ்க‌ந்த‌ப் வ‌ந்த‌ போது ந‌ன்றாக‌ இருட்டிவிட்ட‌து.ஏதோ ஒரு சாலை க‌ட‌ல்வ‌ரை வ‌ந்து முடிந்திருந்த‌து.அப்ப‌டியே வ‌ண்டியை நிறுத்திவிட்டு க‌ட‌ற்க‌ரையை நோக்கி ந‌ட‌ந்தோம்.நிலா வெளிச்ச‌ம் கொஞ்ச‌மாக‌ இருந்த‌து ம‌ற்ற‌ப‌டி யாரோ நான்கு தொழிலாள்ர்க‌ள் பாய்விரித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்க‌ள்.

க‌ட‌ற்க‌ரை நோக்கி நின்ற‌ போது....வாவ்!! என்னை அறியாம‌லே உள்ள‌ம் குதூக‌லித்த‌து.இருண்ட‌ வான‌ம்,வ‌ட‌க்கு நோக்கி க‌ட‌ல்..ந‌ட்ட‌ ந‌டுவே சிறிய‌ க‌ர‌டி என்று அழைக்க‌ப்ப‌டுகிற‌ Ursa Miநொர் ந‌ட்ச‌த்திர‌ கூட்ட‌ம் தென்ப‌ட்ட‌து.வால் போன்ற‌ ப‌குதியில் ந‌டுவில் இருக்கும் ந‌ட்ச‌த்திர‌த்தின் துணை ந‌ட்ச‌த்திர‌மும் தெரிந்த‌து.இது அனைத்தையும் என் தாத்தா என‌க்கு காண்பித்த‌ நாக‌ப்ப‌ட்டின‌ முற்ற‌ம் தான் ஞாப‌க‌த்துக்கு வ‌ந்த‌து.Polaris என்ற‌ழைக்க‌ப்ப‌டும் ந‌ட்ச‌த்திர‌ம் க‌ட‌ல்ம‌ட்ட‌த்தில் இருந்து 10 டிகிரி கோண‌த்தில் இருந்த‌து.




அன்னாந்து பார்த்தால் இதுவ‌ரை காண‌க்கிடைக்காத‌ ந‌ட்ச‌த்திர‌ கூட்ட‌ங்க‌ள் வெறும் க‌ண்க‌ளுக்கு பெரும் விருந்தாக‌ இருந்த‌து.என்னுடைய‌ ஆர்வ‌த்தை பார்த்த‌ சிரியா ந‌ண்ப‌ர் த‌ன்னிட‌ம் இருக்கும் சில‌ நெகிழிக‌ளை கொண்டுவ‌ந்து கொடுத்து ப‌டுத்துக்கொண்டு பார் என்றார்.

த‌லைக்கு மேல் தெரிந்த‌ செவ்வாய் செங்க‌திர்க‌ளை வீசிக்கொண்டிருந்த‌து அத்தோடு ப‌ல‌ ப‌ல ந‌ட்ச‌த்திர‌ தொகுதிக‌ள் வான‌த்தை பிர‌ம்மாண்ட‌மாக்கிகொண்டிருந்த‌து.ந‌க‌ர‌ங்க‌ளில் செய‌ற்கை ஒளியில் இம்மாதிரியான‌ காட்சிக‌ளை நாம் காண‌முடியாது.நிர்மால்ய‌மான‌ வான‌ம் ம‌ற்றும் செய‌ற்கை ஒளியில்லாம‌ல் இருக்கும் இட‌ங்க‌ளை தேர்ந்தெடுத்து வான‌த்தை பார்த்தால் கிடைக்கும் ஆன‌ந்த‌ம் சொல்லில் அட‌ங்காது.கையில் தொலைநோக்கி எதுவும் இல்லாத‌து மிக‌ பெரிய‌ இழ‌ப்பாக‌ தெரிந்த‌து.ஒன்றுமே பார்க்க‌ முடியாது என்று வ‌ந்த‌ என‌க்கு மிக‌ப்பெரிய‌ ப‌ரிசாக‌ ந‌ட்ச‌த்திர‌ வான‌ம் பார்க்க‌ கிடைத்த‌து.

க‌ட‌ற்க‌ரையில் ப‌டுத்துக்கொண்டிருக்கும் போதே ஏதோ பேச்சு திசைமாறி Religion ப‌க்க‌ம் போய் அது தீவிர‌மாக‌ போகும் முன்பே அங்கிருந்து கிள‌ம்பிவிட்டோம்.இத‌ன் விளைவை அடுத்த‌ ப‌திவில் பார்க்க‌லாம்.


வ‌ரும் வ‌ழியில் அங்குள்ள‌ ஒரு Resort உள்ளே போய் பார்த்துவிட்டு அத‌ன் பிற‌கு Diving Centre என்ற‌ இட‌த்துக்கும் போய்விட்டு வ‌ந்தோம்.

Monday, March 22, 2010

புதிய‌வ‌ர்

எங்க‌ள் வீட்டில் 3 அறை.க‌ழிவ‌றையுட‌ன் இருக்கும் அறையில் முத‌லில் ஒரு த‌மிழ‌ர் இருந்தார் இப்போது ஒரு ம‌லேசிய‌ர் இருக்கார்.இர‌ண்டாவ‌து அறையில் நான்.மூன்றாவ‌து அறை ஒரு பிலிபினோவுக்காக‌ ஒதுக்க‌ப்ப‌ட்ட‌து ஆனால் என்ன‌ கார‌ண‌மோ அவ‌ன் இங்கு கொஞ்ச‌ நாள் ம‌ட்டும் த‌ங்கிவிட்டு போய்விட்டான்.அவ‌ன் போன‌ பிற‌கு அந்த‌ அறை சும்மாவாக‌வே தூசிக‌ளை சேமித்துக்கொண்டிருந்த‌து.இப்ப‌டிப்ப‌ட்ட‌ ச‌ம‌ய‌த்தில் வேறு ஒரு புது வேலைக்காக‌ துபாய் ம‌ற்றும் அபுதாபியில் இருந்த‌ சில‌ ஊழிய‌ர்க‌ளை இங்கு கொண்டு வ‌ந்த‌து நிர்வாக‌ம்.புதிதாக‌ வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு முத‌லில் ஹோட்ட‌லில் த‌ங்க‌வைப்ப‌தாக‌ முடிவு செய்திருந்தார்க‌ள் அத‌ன் பிற‌கு ஒரு நாள் வாட‌கை 33 ரியால் என்ப‌தை க‌ண‌க்கு போட்டு சும்மா இருந்த‌ இந்த‌ அறைக்கு அந்த‌ பாக்கிஸ்தானியை மாற்றிவிட்டார்க‌ள்.இந்த‌ வீடு எடுக்கும் போதே நான் வெஜிடேரிய‌ன் என்ப‌தால் என்னை முன்னிருத்தியே ம‌ற்ற‌வ‌ர்க‌ளை தேர்வுசெய்தார்க‌ள் ஆனால் இப்போது இருக்கும் "த‌ல‌" அதையெல்லாம் காற்றில் ப‌ற‌க்க‌விட்டுவிட்டு எங்க‌ளை ஒரு வார்த்தை கூட‌ கேட்காம‌ல் மூன்றாம‌வ‌ரை இங்கு மாற்றிவிட்டார்.

பாவ‌ம் அந்த‌ பாக்கிஸ்தானி உள்ளே ச‌மைக்க‌ இட‌ம் இல்லாம‌ல் வெளியில் போய் சாப்பிட‌வேண்டிய‌ நில‌மைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டிருந்தார்.இத‌ற்கிடையில் பாக்கிஸ்தானியின் ஒப்ப‌ந்த‌ப்ப‌டி ஒரு வார‌த்தில் வேறு வீடு பார்த்துக்கொள்ள‌ வேண்டும் என்றும் அத‌ன் பிற‌கு ஒரு சிரியா நாட்டுக்கார‌ர் ஒரு மாத‌த்துக்காக‌ அங்கு வ‌ருகிறார் என்று ம‌றைமுக‌மாக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌து.நேரிடையாக‌ சொல்ல‌ப்ப‌டாத‌து வ‌ருத்த‌த்தை த‌ந்தாலும் இன்னும் 6 மாத‌ம் தான் இருக்கு எத‌ற்கு ச‌ண்டை போட‌ வேண்டும் என்று விட்டுவிட்டேன்.

சிரியாகார‌ர் தான் வ‌ரும் போது ம‌னைவியுட‌ன் த‌ன் ம‌கிழுந்துவில் ஷார்ஜாவில் இருந்து வ‌ந்திருந்தார்.ம‌ஸ்க‌ட் முழுவ‌தும் ம‌னைவியுட‌ன் சுற்றிப்பார்க்க‌ வ‌ச‌தியாக‌ ஒரு வார‌ம் வெளியில் த‌ங்கியிருந்தார்.ம‌னைவி கிள‌ம்புவ‌த‌ற்கு முன்பு தான் த‌ங்க‌ப்போகும் அறைக்கு அழைத்து வ‌ந்து காண்பித்தார்.

இந்த‌ சிரியாக்கார‌ரை ஒரே ஒரு முறை துபாயில் வேலை செய்யும் போது பார்த்திருந்தாலும் அவ்வ‌ள‌வாக‌ பேசிய‌தில்லை.ந‌ல்ல‌ எட்டு க‌ட்டை குர‌ல் வ‌ள‌ம்,ப‌க்க‌த்தில் இருப்ப‌வ‌ருட‌ன் பேசினாலே இர‌ண்டு வீடு த‌ள்ளி இருப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ கேட்க‌லாம்.எளிமையாக‌ இருப்ப‌வ‌ர்- தான் காபி போட்ட‌ GASக்கு கூட‌ காசு கொடுத்துவிடுகிறேன் என்று சொல்ப‌வ‌ர்.இஸ்லாம் ம‌ற்றும் அவ‌ருடைய‌ க‌ட‌வுள் ப‌ராக்கிர‌ம‌ங்க‌ளை நான் ஹெட் போன் போட்டு ப‌ட‌ம் பார்த்துக்கொண்டிருந்தாலும் சொல்வார்.அவ்வ‌ப்போது த‌ருமி ப‌திவுக‌ள் ஞாப‌க‌ம் வ‌ந்தாலும் அவ‌ர் சொல்வ‌தை பொருமையுட‌ன் கேட்டுக்கொண்டிருப்பேன்.

அவ‌ர் வாழ்கை முறை வித்தியாச‌மாக‌ இருந்த‌து.மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய‌வுட‌ன் தூக்க‌ம் அத‌ன் பிற‌கு இர‌வு 9 ம‌ணிக்கு எழுந்து மெது ந‌டை ஓட்ட‌ம் அத‌னால் வ‌ந்த‌ வேர்வையை நீக்க‌ குளிய‌ல்,குளித்த‌தால் வ‌ந்த‌ சுறு சுறுப்பால் 11 ம‌ணிக்கு மேல் சாப்பாடு,சாப்பிட்ட‌தால் தூக்க‌ம் வ‌ராம‌ல் 2 ம‌ணி வ‌ரை தொலைக்காட்சி.இவ்வ‌ள‌வும் முடிந்த‌பிற‌கு தூங்கி காலை 7 அல்ல‌து 7.30 ம‌ணிக்கு எழுந்து அலுவ‌ல‌க‌த்துக்கு 8.30 வ‌ருவார்.ஏன் இப்ப‌டி என்ற‌ கேட்ட‌ ஒரு நாள்,என்னுடைய‌ நேர‌ப்ப‌டி இர‌வு 10.30 தூங்கி விடிய‌ற்காலை 3 ம‌ணிக்கெல்லாம் முழிப்பு வ‌ந்த‌தாக‌ சொன்னார்.

ஒவ்வொரு நாளும் அலுவ‌ல‌க‌ம் முடிந்த‌ பிற‌கு என்னிட‌ம் வ‌ந்து சாமான்க‌ள் வாங்க‌ என்கேயாவ‌து போக‌னுமா? என்று அன்புத்தொல்லை ப‌ண்ணுவார்.நானும் "ஒன்றும் இல்லை" இப்போது என்று சொல்லி த‌ப்பித்து வ‌ந்தேன்.ஒரு நாள் ச‌ரி போய் தான் பார்க்க‌லாம் என்று என்னுடைய‌ இர‌வு சாப்பாடு 8 ம‌ணிக்கு முடித்துவிட்டு அவ‌ருட‌ன் 8.30 வெளியில் கிள‌ம்பினேன்.ம‌கிழுந்து ஓட்டுவ‌து என்றால் அவ்வ‌ள‌வு இஷ்ட‌ம் போல் அவ‌ருக்கு.எங்கு போக‌லாம் என்றார்?உங்க‌ளுக்கு என்ன‌ வாங்க‌வேண்டுமோ அங்கேயே போக‌லாம் என்றேன்.

வ‌ண்டி 100 ~120 கிமீட்ட‌ர் வேகத்தில் வ‌ழுக்கிக்கொண்டு போய்கொண்டிருந்த‌து.40 கி மீட்ட‌ர் தள்ளி உள்ள‌ சீஃப் என்று சொல்ல‌க்கூடிய‌ விமான‌ நிலைய‌த்தையும் தாண்டி போய்கொண்டிருந்த்து.வ‌ழி நெடுகே ந‌ம்மூர் ம‌க்க‌ள் சொல்வ‌து போல் ந‌ம்மூரில் ப‌டித்து அமெரிக்க‌ர்க‌ளுக்கு வேலை செய்வ‌து,அங்கு ந‌ல்ல‌ பெரிய‌ ப‌த‌விக‌ளில் இருப்ப‌து ம‌ற்றும் ப‌ண‌ம் சேர்த்த‌ பிற‌கு சொந்த‌ நாட்டுக்கு திரும்பி வ‌ந்து இங்குள்ள‌ அர‌சிய‌ல் நிலையை க‌ண்டு வெம்பி வெடிப்ப‌து என்று வ‌ரிசையாக‌ சொல்லிக்கொண்டு வ‌ந்தார்.ஆச்ச‌ரிய‌மான‌ ஒற்றுமை என்னை திகைக்க‌வைத்த‌து.சீஃப் க்கு பக்க‌த்தில் உள்ள‌ சிட்டி சென்ட‌ருக்கு போய் 6 ரியாலுக்கு சாமான் வாங்கிவிட்டு திரும்ப‌ ஒரு 45 கிமீட்ட‌ர் ஓட்டி வீடு வ‌ந்து சேரும் போது ம‌ணி 10.30.ச‌ரியாக‌ நான் தூங்கும் நேர‌த்துக்கு கொண்டுவ‌ந்து விட்டார்.என்ன‌தான் பெட்ரோல் விலை குறைவு என்றாலும் வெறும் 6 ரியாலுக்காக‌ சுமார் 90 கி மீட்ட‌ர் ஓட்டிப்போய் கொண்டுவிட்டார்.நேர‌த்தை போக்க‌ பேச‌வேண்டும் அதை யாராவ‌து கேட்க‌வேண்டும் அத்தோடு வ‌ண்டி ஓட்ட‌வேண்டும் என்று காசு கூட‌ வீணாக்குவ‌தை ப‌ற்றி க‌வ‌லைப்ப‌டாம‌ல் இய‌ற்கையையும் அசுத்த‌ப்ப‌டுத்திகிறார்க‌ளே என்று வ‌ருத்த‌மாக‌ இருந்த‌து.ம‌ற்றொரு முறை இதை அனும‌திக்க‌க்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

வார‌ இறுதி விடுமுறை இங்கு இர‌ண்டு நாட்க‌ள்.என்னிட‌மும் அந்த‌ ம‌லேசிய‌ரிட‌மும் வாக‌ன‌ம் இல்லாத்தால் வெளியிட‌ம் போக‌ பொது முறையை ம‌ட்டுமே ந‌ம்பி இருக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் ஆனால் ந‌ம்ம‌ சிரியாகார‌ருக்கு ம‌கிழுந்து இருக்கு,குடும்ப‌ம் ஷார்ஜாவில் இருக்கு அத்தோடு இர‌ண்டு தேச‌த்துக்கு போய் வ‌ர‌ விசா கெடுபிடி அவ்வ‌ள‌வாக‌ கிடையாது.இந்த‌ கார‌ண‌ங்க‌ளாலேயே வார‌ இறுதி நாட்க‌ளில் குடும்ப‌த்தை க‌ண்டு வ‌ர‌ சுமார் 1000 கிமீட்ட‌ர் வ‌ண்டி ஓட்டுகிறார்.இப்ப‌டி போய் வ‌ருவ‌தால் சாத‌ர‌ண‌ நாட்க‌ளில் அவ‌ரால் சும்மா இருக்க‌ முடிவ‌தில்லையோ என்ன‌வோ!!

அத‌ன் பிற‌கு ப‌ல‌ முறை வெளியில் போக‌ கேட்டாலும் அவ‌ர் ம‌ன‌ம் நோகாம‌ல் வேறு வேலை இருப்ப‌தாக‌ சொல்லிவிடுவேன்.

நினைப்ப‌தெல்லாம் எங்கு ந‌ட‌க்குது? மீதி அடுத்த‌ ப‌திவில்.

Friday, March 05, 2010

சுத்தமான காத்து

ஒவ்வொரு தேசத்துக்கும் தனித்தனியே விதிமுறைகள்,வேலை செய்ய வந்துவிட்டால் வேறு வழியின்றி அனுசரித்து தான் போக வேண்டும்.இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இங்கு இணைய இணைப்புக்கு (Nawras) 48 மணி நேரத்துக்கு இரண்டு ரியால் வசூலிக்கிறார்கள்.மிக அதிகபட்சமாக நீங்கள் 2 ஜிபி வரை உபயோகிக்கலாம்.இந்த இணைய இணைப்பில் பலான/அனுமதிகப்படாத பக்கங்கள் என்று அவர்கள் நிர்ணயத்திர்கிற பக்கங்களை பார்க்க முடியாது.வேறு வழி மூலம் பார்க்கலாம் என்றாலும் விதியை அனுசரிப்பது நல்லது என்பதால் அந்த வழி முறையை சொல்லவில்லை.சரி,பிள்ளைகளை காப்பாற்ற தேவையான வழி என்பதால் அதில் குறை காணமுடியாது ஆனால் இந்த VOIP என்று சொல்லப்படுகிற இணையம் மூலம் தொலைப்பேசி முறையை மூடி வைத்துள்ளார்கள்.இது UAE யிலும் நடைமுறையில் உள்ளது.இதை தடை செய்ய பிள்ளையார் சுழி போட்டது Skype என்று ஓரிடத்தில் படித்தேன் ஆதாவது இந்த மென்பொருள் மூலம் செலுத்தப்படும் பாக்கெட்கள் அவ்வளவு பாதுகாப்பாக இல்லாத்தாலும் மற்றும் கட்டமைப்பை சேதப்படுத்தும் முறையில் இருப்பதால் இதை தடை செய்துவிட்டார்கள் என்று.கணினியில் ஒன்று போனால் என்ன அதே போல் 100 இருக்கே என்ன செய்வது என்று யோசித்து எல்லாவற்றையும் மூடிவிட்டார்கள்.பக்கத்து நாடுகளில் உள்ள முறையை அப்படியே காப்பி அடிக்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது.

ஆமாம் இப்படி VOIP ஐ மூடுவதால் அப்படி என்ன பெரிதாக சாதிக்கப்போகிறார்கள் என்று முதலில் தோனினாலும் இதன் உள்ள இருக்கும் சூட்சமம் அதன் வீரியம் அதனால் இங்குள்ள தொலை தொடர்பு துறை சந்திக்க நேரிடும் இழப்புகள் என்று ஒன்றன் பின் ஒன்றாக தொடர்கிறது.இந்த காரணத்தையாவது ஓரளவு ஒத்துக்கொள்ளலாம் அதைவிட்டு இணையத்துக்கு பணம் கட்டிய பிறது கணினி - கணினி தொடர்பில் செய்யப்படும் குரலுக்கும் ஆப்பு வைக்கிறார்கள்.உதாரணமாக MSN,Yahoo மற்றும் Gtalk மூலம் நண்பர்களுக்கிடையே செய்யப்படும் ஆடியோவையும் அவ்வப்போது மூடிவிடுகிறர்கள்.

வீட்டில் திறந்தால் 2 ரியால் கொடுக்கவேண்டி வரும் என்று Internet Cafe க்கு போன வாரம் போனேன்.35 நிமிடங்களாக Hello வை தவிர ஒன்றும் பேசவில்லை,தெண்டமே என்று 300 பைசா கொடுத்துவிட்டு வந்தேன்.நேற்று காலை வீட்டில் இருந்து மனைவியுடன் பேச முற்படும் போதும் இதே பிரச்சனை ஆனால் நகர்படத்தில் பிரச்சனையில்லை.நகர்படம் போக வர இருக்கும் பேண்ட் விட்த் ஆடியோவுக்கு இல்லை என்றால் என்ன அர்த்தம்?அ தை மூடியிருக்கிறார்கள் என்றே தெரிகிறது.அதன் பிறகு கூகிளில் தேடிய போது மேற்சொன்ன பல விபரங்கள் வந்துவிழுந்தது.இப்படி கெடுபிடி இருப்பதாலே பல Internet cafe யில் மலிவு விலையில் தொலைபேசி அழைப்புகளை கள்ளத்தனமாக செய்கிறார்கள்.

காலையில் செய்ய முடியாத குரல் வழி பேச்சு மாலையில் கிடைத்தது - என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள முடியவில்லை.

வழக்கம் போல் மாலையில் பக்கத்தில் இருக்கும் கடற்கரைக்கு மெது நடை போகும் போது சில அருமையான காட்சிகள் காண கிடைத்தது அது அப்படியே கீழே போட்டிருக்கேன்.

சூரியன் தண்ணீரை தொடும் வரை காணக்கிடைத்தால் காற்றும் வளி மண்டலமும் தூசு இல்லாமல் இருக்கு என்று வைத்துக்கோள்ளலாம்.









கடைசி படத்தில் நம்மக்கள் மூவர் நின்று ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.படத்தை பெரிதாக்கி பார்க்க அதன் மீது சொடுக்குங்கள்.
அனைத்தும் சோனி எரிக்ஸன் w880i எடுத்தது.

Thursday, February 18, 2010

தொப்பை தள்ளுது.

போன வாரம் முழுவதும் அடை சாப்பிடனும் போல உணர்வு அதற்காக அதை தேடி உணவகம் போகவும் அலுப்பு,சரி இட்லி தான் போன பதிவில் போட்டாச்சே அதே மாதிரி தானே இதுவும் இருக்கப்போகிறது என்று கூகிளிடம் தேடினேன்.ஒரு பதிவில் இருந்தது மிக சுலபமாக இருந்தது,ஆதாவது கடலை மாவையும் கோதுமை மாவையும் 2:1 என்ற விகிதத்தில் கலந்து கொஞ்ச நேரம் ஊற வைத்து தேவையான உப சாமான்களை போட்டு செய்திடலாம் என்றிருந்தது.இவ்வளவு சுலபமாக இருக்கே என்று கடை கடையாக கடலை மாவுக்காக தேடிய போது தெரிந்தது இங்கு கடலைமாவாக கிடைக்காது என்று.அரை மனதுடன் அரை கிலோ கடலை பருப்பை வாங்கினேன்.இதையெல்லாம் மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னேன்,அவர்கள் இதைவிட இப்படி செய்து பாருங்கள் இன்னும் நன்றாக வரும் என்று சொன்னார்.

புழுங்கல் அரிசி - 1 பங்கு
கடலை பருப்பு(கொஞ்சம் அதிகமாக இருக்கட்டும்),உளுத்தம் பருப்பு & துவரம் பருப்பு - 0.5 பங்கு

இவை இரண்டையும் தனித்தனியே கொஞ்ச நெரம் ஊற வைத்துவிட்டு கொஞ்சம் காய்ந்த மிளகாயுடன் கிரைண்டரில் அரைத்து தேவையான உப பொடிகளை பொட்டுக்கொள்ளவும்.எப்போது அடை வார்க்க வேண்டுமோ அதற்கு முன்பு சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை & பச்சை மிளகாய் & கொத்தமல்லியை பொடி செய்து போட்டு கலக்கிவிடவும்.மாவுடன் மிக முக்கியமாக கொஞ்சம் நல்ல எண்ணெய் சேர்த்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள்.புழுங்கல் அரிசியை தேடியபோது தான் தெரிந்தது அது வீட்டில் இலை என்று அதற்காக கவலைப்படாமல் பச்சரிசியை உபயோகித்தேன்.

அவ்வளவு தான்.

இப்படியெல்லாம் செய்து Non-Stick Pan யில் போட்டு கரண்டி கொண்டு திருப்பலாம் என்று பார்க்கும் போது அப்படியே தன்னாலேயே வழுக்கிக்கொண்டு வந்துவிட்டது.எப்படி இருக்கு என்று பார்க்க...



சரி அதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா?

இந்த படத்தை அலைபேசியில் எடுத்துவிட்டு பதிவில் இணைக்கலாம் என்று கணினியுடன் இணைத்த போது Screen அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சாக ஆரம்பித்தது.கணினியில் இருந்து விடுப்பித்து மின்கலத்தை எடுத்து நானும் என்னனென்வோ முயற்சிக்க இயங்க மறுத்தது அலை பேசி.போச்சு போச்சு என்று நினைத்துக்கொண்டு அதை எங்கு கொடுக்கலாம் என்று யோசிக்கும் போது ரூவி தான் ஞாபகம் வந்தது.அங்கு தான் இந்த மாதிரி வேலைகளை செய்ய பல கடைகள் பார்த்த ஞாபகம்.

சாயங்காலம் நடைபயிற்சி போகும் போது அப்படியே இவ்வேலையையும் முடித்துவிடலாம் என்றெண்ணி Qurm Park பக்கம் போனேன்,அங்கு தான் வாடகை மகிழுந்து கிடைக்கும்.வந்த ஓட்டுனரிடம் எவ்வளவு என்று கேட்டேன்,400 பைசா என்றார்,சரி என்று உள்ளே அமர்ந்தேன்.மேலும் சிலரும் நான் போகும் இடத்துக்கு போக ஏறியவர்கள் பேரம் பேசி 300 காசுக்கு பயணித்தார்கள்.

Ruwi இந்த இடம் சிங்கை சிரங்கூன் சாலையோடு ஒப்பிடலாம்.தொழிலாளர் கூட்டம் அதோடு பல விதமான கடைகள் என்று ஓய்வு நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.இது வரை இங்கு மகிழுந்துவில் மட்டுமே சென்றதால் பல சாலைகளில் உள்ள கடைகள் கண்ணில் படாமல் இருந்தன.சரி வந்த வேலையை பார்ப்போம் என்று சில கடைகளில் அலைபேசியை காண்பித்து ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டேன்.ஒரு கடையில் ஹமிரியா(இடம்) சென்றால் முடியும் என்றார்கள்,சிலர் முடியாது என்றார்கள்.சோனி எரிக்‌ஷன் என்றாலே ஒரு மாதிரி விலகிவிடுகிறார்கள்.

ஒரே ஒரு கடையில் மத்திரம் Soft Reset செய்து பார்ப்போம் சரியானால் 3 ரியால் கொடுங்கள் என்றார். சரி என்றேன்.என்னென்வோ முயற்சித்தும் சரியாகவில்லை அலைபேசியை திறந்து பார்த்து தான் முடியுமா?முடியாதா என்று சொல்லமுடியும் என்று சொன்னார்கள்.அதற்கு எவ்வளவு ஆகும் என்றேன்.சரியாக சொல்லமுடியாது எப்படியும் 6 முதல் 7 வரை ஆகலாம் என்றார்.சரி என்று ஒத்துக்கொண்டு அலைபேசியை கொடுத்துவிட்டு வந்தேன்.அதில் வைத்திருந்த கடவு சொல் மற்றும் மேலும் பல விபரங்கள் கிடைக்குமா என்று தெரியவில்லை எனக்கு கிடைக்காவிட்டாலும் அவர்களுக்கு கிடைக்காமல் இருந்தாலே பெரிய தொந்தரவு இருக்காது.

நேரம் அதிகமாக இருந்ததால் ரூவியை சுற்ற ஆரம்பித்தேன்.புதிதாக திறந்திருக்கும் Mars என்னும் கடை தொகுதியில் சுற்றிய பிறகு பக்கத்தில் உள்ள KM கடைதொகுதிக்குள் போனேன்.இங்கு ஓரிரு முறை சென்றிருப்பதால் என்னென்ன சாமான்கள் எங்கு இருக்கும் என்பது தெரிந்திருந்தது.புழுங்கல் அரிசியை தேடிய போது தஞ்சை புழுங்கல் இட்லி அரிசி என்று போட்டே விற்கிறார்கள்.இரண்டு பாக்கெட்டுகள் வாங்கிக்கொண்டேன்.

இந்த கடைத்தொகுதியில் எப்போதுமே பணம் கட்டும் இடத்தில் கூட்டம் நின்று கொண்டிருக்கும்.நபர்கள் குறைவாக இருக்கும் வரிசையை கண்டுபிடித்து நின்றேன்.நின்ற கொஞ்ச நேரத்துக்கெல்ல்லாம் என் பின்னால் ஏதோ உரசுவது போல் இருந்தது.கொஞ்சம் முன்னே போனேன்,இம்முறையும் உரசல் தொடர்ந்தது.திரும்பிப்பார்த்தால் ஒரு இந்தியர் மலையாள சேட்டன் தொப்பை யால் என்னை முட்டிக்கொண்டிருந்தார்.எனக்கு சிறிய கோபம் வந்தாலும் அதையும் மீறி பயங்கர சிரிப்பு தான் வந்தது ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு தான் சிங்கை செய்தித்தாளில் இப்பிரச்சனையை அலசியிருந்தார்கள்,ஆதாவது அங்கு ATM வரிசையில் நிற்கும் போது தேவையான இடவெளி விட்டு சிலர் நிற்பதில்லை என்றும் பக்கத்தில் இருப்பவர்கள் மேல் ஈஷிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் போட்டிருந்தார்கள்.இதில் முதலிடம் பங்களாதேசிகளுக்கும் அடுத்து நம் மக்களும் இருந்தார்கள்.அதுவும் நம் ஊரில் இருந்து வரும் டூரிஸ்டுகள் கூட வரிசையில் நிற்கும் போது இப்படித்தான் இட்டித்துக்கொண்டு நிற்பதை பல முறை பார்த்திருக்கேன்.இதெல்லாம் மனதில் ஓடியதால் என்னை ஒட்டிக்கொண்டு நிற்பவர் மீது கோபம் வராமல் சிரிப்பு தான் வந்தது.

Thursday, February 11, 2010

இட்லி

சிங்கையில் இருந்தவரை இட்லி/தோசைக்கு அவ்வளவாக பிரச்ச்னையில்லாமல் இருந்தது.மனைவி கூட இருந்த வரை அவர்கள் முறையில் கிரைண்டரில் போட்டு அரைத்து செய்துவிடுவார்கள்.தனி வாழ்கையின் போது ரெடிமேடாக கிடைக்கும் மாவில் தேவையான அளவு உப்பை போட்டு வைத்துவிட்டால் ஒரு வாரத்துக்கு கவலையில்லாமல் இருக்கலாம் ஆனால் இந்த மாவில் முதல் இரண்டு நாள் தான் இட்லி வரும் அதன் பிறகு தோசையாகவும்,ஊத்தப்பமாகவும் சாப்பிட்டு தீர்க்கனும்.ரொம்ப அலுத்துப்போச்சு என்றால் இருக்கவே இருக்கு சிரங்கூன் சாலை உணவகங்கள்.

மஸ்கட் வந்த நாள் முதலாக இந்த இட்லி/தோசைக்கு ரூவி(இடப்பெயர்) க்கு தான் போகவேண்டி வரும் அதோடு இங்கு கிரைண்டர் இல்லாமல் இருந்தது.கொஞ்ச நாளில் சில கடைகளில் உள்ள தோசைப்பொடி என்ற மாவை வாங்கி 18 மணி நேரம் ஊரவைத்து போட்டு பார்த்தோம்,சரியாக வரவில்லை அதன் பிறகு Ready to Eat மாதிரியான மாவுகளை வாங்கிப்பார்த்தோம்,வயிற்றில் கேஸ் தான் உருவானது-சுவை கிடைக்கவில்லை.என்னுடன் தங்கி இருக்கும் நண்பர் இந்த மாவுகள் உள்ளூர் சூழ்நிலைக்கு பொங்காததால் தான் இட்லி சரியாக வரமாட்டேன் என்கிறது என்று மாவில் ஈஸ்ட் கலக்க ஆரம்பித்தார்,வந்தது வினை-எனக்கு.ஈஸ்ட் போட்ட மாவு பாத்திரத்தை மறு நாள் திறந்தால் அப்படியே வாந்தி எடுக்கவேண்டிய அளவுக்கு துர்நாற்றம் வந்தது அன்றிலிருந்து அந்த பக்கமே போவதில்லை ஆனால் என் நண்பரோ அந்த பிரச்சனை ஏதுமில்லாமல் தொடர்ந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது,அவருக்கு மூக்கில் ஏதும் பிரச்சனையோ என்ற அளவுக்கு சந்தேகம் வந்தது.இதற்கு முன்னால் லிபியாவிலும் இதையே செய்ததாக சொன்னவுடன் சந்தேகம் தீர்ந்தது.வாசம் அவருக்கு பழகிவிட்டது.நம் நண்பருக்கோ காலை இட்லி இல்லாமல் ஒன்றும் முடியாது என்பதால் பழகிவிட்டார் போலும்.

நடுவில் ஊருக்கு சென்று வந்த போது இட்லி மாவு அரைக்க நம் நண்பர் மிக்ஸி ஒன்றை வாங்கி வந்தார் அதன் பிறகு அரிசியை இரவு முழுவதும் ஊற வைத்து அரைத்து ஈஸ்ட் போட்டு மூடி வைத்துவிடுவார்.ஒரு முறை என்னிடம் அந்த மாவை வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளுங்கள் உங்களுக்காகவும் தான் அரைத்து வைத்துள்ளேன் என்றார்.வேறு வழியில்லாமல் என்னுடைய “வாச” பிரச்சனையை சொல்லி இனி எனக்க்காக சேர்த்து அரைக்கவேண்டாம் என்று பதுவுசாக சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.வெகு நாட்களாக அவர் அரைத்தும் ஏனோ இட்லி சொல்லிக்கொள்ளும் மாதிரி வரவில்லை,தோசையும் கொஞ்சம் பிரச்சனையாகத்தான் இருந்தது.இந்த பிரச்சனைக்கு நம் நண்பருடைய குணாதிசியம் கூட காரணம் ஆதாவது தான் பிடித்திருக்கும் முயலுக்கு 3 கால் என்பது தான்.இதை சில நிகழ்வுகள் மூலம் தெரிந்துகொண்ட நான் பல விஷயங்களில் தலையிடாமல் வேடிக்கை பார்பதுண்டு.பல முறை வீட்டுக்கு தேவையான சாமான்கள் வாங்க போகும் போது இந்த இட்லி பிரச்சனை பற்றி பேச்சு எழும் அதுவும் அரிசி தேர்வு செய்யும் போது. நானும் பல முறை புழுங்கல் அரிசியில் முயலுங்கள் அதில் தான் இட்லி சரியாக வரும் என்று சொல்லியும் எங்கேயோ எப்போதோ தவறாக புரிந்துகொண்டு பச்சரியையை வாங்கி முட்டி மோதிக்கொண்டிருந்தார்.இப்படிப்பட சமயத்தில் ஒருமுறை புழுங்கல் அரிசி வாங்கினார்,எதற்கு என்ற கேட்டபோது அவர் வீட்டில் சொன்னார்களாம் அதில் தான் சரியாக வரும் என்று.வந்தார் வழிக்கு,ஆனால் ஈஸ்டை மட்டும் விடவில்லை.

இந்த மாவு பொங்கும் வழிக்கு என் மனைவி சொன்ன சில வழிமுறைகளை செயல்படுத்த வழியில்லாத்தாலும் சில மனம் இல்லாத்தாலும் ஈஸ்ட் வெற்றிபெற்றுக்கொண்டு வந்தது.ஒரு நாள் என்ன தோனியது என்று தெரியவில்லை எனக்கு,மனைவி சொன்ன கணக்கு படி 4 பங்கு அரிசி ஒரு பங்கு உளுந்து தனித்தனியாக ஊற வைத்திருந்தேன்.அன்றிரவு மனைவியுடன் Chat செய்துகொண்டிருக்கும் போது அவ்விஷயத்தை சொல்லி முதல் முறையாக ஊரப்போட்ட விஷயத்தை சொன்னேன்,அதோடு மறு நாள் காலை அரைத்தால் போதுமா? என்று கேட்டேன்.

ஏங்க என்ன அரிசியை புளிக்கவா வைக்கப்போகிறீர்கள்,ஊரவைக்க 2 மணி நேரம் போதும்,புளிக்கதான் நேரமாகும் என்றார்கள்.இது கூட தெரியாமல் இவ்வளவு நாள் இட்லி சாப்பிட்டிருக்கேன்!! என்று நொந்து கொண்டு அரைத்துவைத்தேன் அதோடு சொன்ன மாதிரி கையால் (இது தான் பாயிண்ட்) நன்றாக இரண்டு மாவையும்,தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைத்துவிட்டேன்.

மறு நாள் திறந்து பார்த்த போது ஓரளவு மட்டுமே புளித்து இருந்தது அதோடு அளவாகவும் பொங்கியிருந்தது, அப்படியே மீண்டும் கிளறி விட்டு Fridge உள்ளே வைத்துவிட்டேன்.

எப்போதுமே இரவில் மட்டுமே டிபன் சாப்பிடும் அன்றிரவு நான் செய்த இட்லி சாப்பிட்டேன்.உப்பு சரியாக இருந்தது,பதம் ஓரளவு சுமாராக இருந்தது.உளுந்து கொஞ்சம் குறைவாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.நான் வெறும் கையால் கலந்ததாலா அல்லது ஈஸ்ட் சேர்க்காத மாவு என்பதால் என்னவோ என் நண்பர் அதை முயற்சித்துக்கூட பார்க்காமல் மறு நாளே ஒரு வாரத்துக்கு தேவையான ஈஸ்ட் கலந்த மாவு அரைத்திருந்தார்.

இந்த வாரத்துக்கு தேவையான செய்முறையை மனைவியிடம் வாங்கிவிட்டேன்,செய்த பிறகு சொல்கிறேன்.நேற்று வரை இந்த மாதிரி சமையல் கலை பற்றி ஒரு பதிவு எழுதுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

Friday, January 29, 2010

படியில் ஒரு நிலா.

வியாழக்கிழமை விடுமுறையை எப்படியோ டிவி மற்றும் கடற்கரைக்கு போய் ஓட்டியாகிவிட்டது.காலை 10 மணிக்கு பார்த்த அதே டெண்டுல்கர் மாலை 4 மணிக்கு வந்து வெறுப்பேத்தினார்.டேப்பை நேரத்து Programme பண்ணிவிட்டு விட்டு போய்விடுவார்கள் போலும்.
மாலை 4.30 மணிக்கு கிளம்பி கடற்கரை பக்கம் போனேன்.வழக்கத்து மாறாக அலை அதிகமாக இருந்தது தெரிந்தது அதோடு ஏறு அலையாக இருந்ததால் தண்ணீரும் கரை வரை வரும் போல் இருந்தது.



மறு நாள் வெள்ளி, சாயங்காலம் வரை வீட்டிலேயே பொழுது போக்கிவிட்டு வெளியில் போனால் சூரிய பகவான் இப்படி வரவேற்றார்.



அப்படியே மெதுவாக Qurm பூங்கா வரை போய்விட்டு அங்கிருந்து பார்த்தால் நம் சந்திர பகவான் அழகாக மேலெழும்பி காட்சி தந்தார்.அதை பார்த்ததும் இளையராஜா,வைரமுத்து மற்றும் ரகுமானும் வந்து போனார்கள்.



அப்படியே மேலும் கொஞ்ச தூரம் சுற்றிவிட்டு அங்கிருக்கும் அரங்கத்து படிகளில் ஏறினால் நிலா பெண் இப்படி காட்சி கொடுத்தாள்.நல்ல கேமிராவாக இருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

Friday, January 15, 2010

இதுவரை யாருமே போடாத....

கூகிளில் “மஸ்கட்” என்று தட்டச்சு போட்டு தேடினால் பதிவர்கள் ஓரிருவர் மட்டுமே மாட்டினார்கள் அதுவும் ஒரு வருடத்துக்கு முன்பு எழுதிய பதிவுடன்.இதுவரை எவ்வளவோ படம் போட்டிருந்தாலும் எனக்கு தெரிந்த வரை இதை கண்டுபிடித்து வலை ஏற்றியது முதன் முதலாக நானாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். :-)

உலக நிலையில் வழக்கொழிந்து போய்கொண்டிருக்கும் இப்பெட்டி ஒரு மூலையில் இருந்தது அத்துடன் இது லெட்டர் பாக்ஸ் என்று எழுதியிருந்ததை பார்த்தவுடன் தான் இதை வேறு வேலைக்கும் மக்கள் உபயோகித்திருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

தேடினாலும் கிடைக்காத படம் (இனி கிடைக்கும்)

Qurm பூங்கா

வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்கா- ரோஸ் கார்டன் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.எப்போது போனாலும் மத்திய பகுதியில் ஏரி மாதிரி இருக்கும் இடத்தை சுற்றி முடிந்ததும் கொஞ்சம் இளைப்பாறி விட்டு வந்துவிடுவேன்.போன வாரம் போன போது எப்போது போகும் வழியை விட்டுவிட்டு வெளிப்பக்கம் போகலாம் என்று நினைத்து வழி மாறினேன்.உள்ளழகு ஒரு விதம் என்றால் வெளியழகு வேறு விதம்.பல இடங்களில் புல் வெளிகள் மனதை கொள்ளைகொள்கின்றன.அப்படியே மேலும் கொஞ்ச தூரம் நடந்தால் செயற்கையாக ஒரு அரண் அமைத்து அதிலிருந்து நீர் வீழ்ச்சி மாதிரி அமைத்துள்ளார்கள்.கீழே விழும் தண்ணீரில் பெருமளவு நுரை காணப்பட்டது ஏனென்று தெரியவில்லை.இப்போது கொஞ்சம் குளிர் இருப்பதால் அதற்கேற்றவாறு பல மலர்களை வைத்து மேலும் அழகூட்டியுள்ளார்கள்.

மற்றவைகளை படங்கள் பேசட்டும்.





மஸ்கட்டில் இருந்து யாருமே இல்லையா?

கடந்த 4 ஆண்டுகலாக பல பதிவுகளை பல நாடுகளில் இருந்து எழுதியவர்களை படித்திருக்கேன் ஆனால் இன்று வரை மஸ்கட்டில் இருந்து வந்த எந்த பதிவையும் படித்த ஞாபகம் இல்லை.சரி இங்கு தமிழரே இல்லையோ என்னவோ என்று அபத்தமாக நினைக்கவில்லை.Ruwi பக்கம் போனால் சிங்கை சிரங்கூன் சாலை போல் தமிழ் வார்த்தைகளை கேட்கமுடியும் மற்றபடி எங்காவது கூட்டம் இருந்தால் தமிழ் வார்த்தைகளை கேட்கமுடியும்.

நேற்று பொங்கலுக்கு எங்கு போவது என்று தெரியவில்லை.MTR Ready to eat பொங்கல் வேறு அடிக்கடி கண்ணில்பட்டுக் கொண்டிருந்தது இருந்தாலும் அதை பண்ணி சாப்பிடுவதில் அவ்வளவு இஷ்டம் இல்லை.எப்படியோ சாயங்காலம் வரை வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்துவிட்டு பிறகு கிளம்பி கடற்கரை பக்கம் போனேன்.வழக்கத்தை விட கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது தண்ணீரும் மேல் எழும்பி வந்துகொண்டிருந்தது.ஒவ்வொரு குடும்பமும் காற்றாடியை வைத்துக்கொண்டு அவற்றை மேலெழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

மஸ்கட்டில் பொங்கல் சிறப்பு கீழே உள்ள படம் தான்.




சூரியன் மறையும் அழகு

Thursday, January 14, 2010

இதெல்லாம் படமா?

என்னுடைய பல பதிவுகளில் மஸ்கட்டின் அழகான கடற்கரையும் சாலைகளையும் படம் பிடித்து போட்டுள்ளேன் ஆனால் ஓமனின் பெரும் பகுதிகள் எப்படி இருக்கும் தெரியுமா?கீழே பாருங்கள்.என்னுடைய நண்பர் ஒருவர் மஸ்கட்டில் இருந்து சலாலா (நம் பதிவர் மின்னல் ) இருக்கும் இடத்துக்கு போகும் வழியில் எடுத்தது.இவ்வளவு இடம் அனாமத்தா கிடைக்கும் போது துபாய் மாதிரி வானத்தை தொடும் அளவுக்கு கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது இவர்களுக்கு.இன்றும் மஸ்கட்டில் மிக உயரமான மாடி 10 மாடிகள் தான் என்றால் நம்ம முடியுமா?

சிறிய வகை செடிகள் மட்டுமே வளருகிறது.



பெரும்பாலான நிலப்பகுதி இப்படி தான் இருக்கு.



அங்கங்கு தென்படும் “தனிமையான” வீடுகள்.



கடற்கரையில் இருக்கும் Seagulls.



மீனவர் பிடித்து போட்டிருக்கும் துருகை